ஒரு சுஜாதா கதையின் அனாட்டமி

சில வருடங்களுக்கு முன் மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு கதை கொஞ்சம் சிந்தனையைத் தூண்டும் தன்மையுடையது.

 திருடன் ஒருவனை ஒரு போலீஸ் அதிகாரி மிதி மிதியென்று மிதித்துக் கொண்டிருப்பார். ஒரு சமூக ஆர்வலர் குறுக்கிட்டு ’குற்றங்களை தண்டிக்க சட்டம் இருக்கிறது, நீ எப்படி அவனைச் சவட்டலாம்?’ என்று கண்டிப்பார்.

 ’அவன் என்ன தப்பு செய்தான் என்று தெரியுமா?’ என்பார் அதிகாரி.

 சமூக ஆர்வலர் விடை சொல்வதில்லை.

 ‘அரைப் பவுன் தோட்டைத் திருடியிருக்கிறான்’

 ‘பூ.. ஆஃப்டர் ஆல் திருட்டுத்தானே, அதுவும் பிசாத்து அரைப் பவுன் தோடுதானே?’

 ‘ஆமாம், ஆனால் எப்படித் திருடினான் என்று பாருங்கள்’ என்று மேசை இழுப்பறையிலிருந்து கருரத்தம் கட்டிய காதோடு சேர்ந்த ஒரு தோட்டைக் காட்டுவார்.

 ‘இது ஒரு எழுபது வயதுப் பாட்டியின் காது’ என்பார்.

 அரைப் பவுன் தோடு திருடினால் என்ன தண்டனையோ அதுவே இதற்கும் போதுமா? ‘போதும்’ என்று சொல்பவர்கள் வாருங்கள்.

 கழற்றி வைத்திருக்கும் போது திருடுவதும், காதை அறுத்துத் திருடுவதும், இரண்டுமே திருட்டுத்தான். ஒரே தண்டனை போதும் என்பது உங்கள் வாதம். இந்த வாதம் ஏற்கப்பட்டால், அறுபட்டது கழுத்தாக இருந்தாலும் திருட்டுக்கான இந்தச் சமநீதி காக்கப்படும் அபாயம் இருக்கிறது. உடனே இல்லாவிட்டாலும் மெல்ல மெல்ல வந்துவிடும் சாத்தியக் கூறுகள் அதிகம். மாற்றங்கள் தவிர்க்கப் படமுடியாதவை.

என் பள்ளிக் காலத்தில் ஏ சர்ட்டிஃபிகேட் தரப்பட்ட படங்களை இன்றைக்குப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. இன்றைய யு சர்ட்டிஃபிகேட் படங்கள் பலவற்றில் அன்று ஆபாசம் என்று உணரப்பட்ட விஷயங்கள் சர்வ சாதாரணமாகக் காட்டப்படுகின்றன. சமூகத்துக்கு எதிரானது என்று நினைக்கப்பட்ட விஷயங்கள் ‘ஆண்ட்டி ஹீரோ’ சப்ஜெக்ட் என்கிற பெயரில் சொல்லப்படுகின்றன. அவன் நல்லவனா, கெட்டவனா என்று தாங்களே கேள்வி கேட்டு தெரியாது என்கிற மழுப்பலான பதில்கள் சொல்வது சென்சார் போர்டைத் திருப்திப் படுத்தப் போதுமானதாக இருக்கிறன.

 மிதமிஞ்சிப் போனால், யு-ஏ என்று ஒரு ரெண்டுங்கெட்டான் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். அதாவது, தப்பான விஷயங்களை, பெரியவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்த்தால் கெடுதல் இல்லை என்று அர்த்தமாகிறது.(அதைப் பெரியவர்கள் அருகிலில்லாத போது முயன்று பார்ப்பதை யார் தடுப்பது என்று கேட்பவர்கள் பத்தாம்பசலிகள்)

 இதெல்லாம் தப்பு, ரைட்டு என்று தரம் பிரித்துப் பார்க்க முடியாதவை, பார்ப்பதில் பிரயோஜனமும் இல்லை. மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சட்டம் போட்டுத் தடுத்தாலும் அவை நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். ஆகவே காதை அறுப்பதும் கழுத்தை அறுப்பதும் ஒரே விதத்தில் எதிர்கொள்ளப்பட வேண்டியவை என்கிற நிலைக்குப் போக மாட்டோம் என்று நம்புவது அறியாமை. அந்த நிலைக்குப் போக எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியாமல் இருப்பதுதான் அறியாமை.

 கழற்றி வைத்த போது திருடுவதும், காதை அறுத்துத் திருடுவதும் வெவ்வேறு விதமாக எதிர்கொள்ள வேண்டியவை என்று நினைப்பவர்கள் இப்போது வாருங்கள்.

 உங்களிலும் சில பிரிவுகள் இருக்கும்.

காதை அறுத்தவனுக்குக் கொஞ்சம் கடுமையான தண்டனையும்,

 கிழவியின் மோவ்மெண்ட்டுகளை மோப்பமிட்டு, என்றைக்கு எந்த நேரத்தில், எந்த இடத்தில் காதை அறுப்பது உசிதம் என்று கன்ஸல்டன்ஸி கொடுத்தவன், ஒரே வீச்சில் காதை அறுக்கும் திறன் படைத்த கத்தி விற்றவன், அதற்குப் பிடி போட்டுக் கொடுத்தவன், கிழவி வரும் வரை சவுகர்யமான இடத்தில் ஒளிந்திருக்க இடம் தந்தவன், கத்தியை வீசும் போது தவறுதலாக அவர்கள் மேல் பட்டுவிடக் கூடாதே என்று மற்றவர்களை விலகி இருக்கும்படி முன்கூட்டியே எச்சரித்தவன், காதை அறுக்கும் போது கிழவி ஓடாமல் பிடித்துக் கொண்டவன், அறுத்துவிட்டு ஓடும் போது போலீஸிடமிருந்து காப்பாற்றி ஒளிய இடம் கொடுத்தவன் என்று

 பலவிதத்திலும் இந்தக் காதறுப்புக்குத் துணையாக இருந்தவர்களுக்கு தண்டனை தேவையில்லை. விசாரிக்கும் வரை கால்கடுக்க கூண்டில் நின்றதே பெரிய தண்டனை என்று நினைப்பவர்கள் உங்களில் பலர் இருக்கக் கூடும்.

 உங்கள் அம்மா அல்லது பாட்டியின் காது அறுபடும் போது உங்கள் கருத்து மாறுபடலாம். அல்லது அப்போதும் மாறாமல் குற்றவாளிகளை மன்னிக்கும் பண்பில் நீங்கள் உயர்ந்து நிற்கலாம்.

 ஆனால், எனக்கு அதில் சம்மதமில்லை.

Advertisements

17 comments

 1. வாவ்வ்வ்வ்!!!
  ஜவஹர் சார், எங்கேயோ போய்ட்டீங்க சார்!

  “….. பலவிதத்திலும் இந்தக் காதறுப்புக்குத் துணையாக இருந்தவர்களுக்கு தண்டனை தேவையில்லை. விசாரிக்கும் வரை கால்கடுக்க கூண்டில் நின்றதே பெரிய தண்டனை என்று நினைப்பவர்கள் உங்களில் பலர் இருக்கக் கூடும்….”

  முதலில் புரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்…தாமதமாக கிடைக்கும் நீதியும் அநீதியே!
  அது குற்றம் இழைக்கப்பட்டவனுக்கும், குற்றவாளிக்கும் பொருந்தும்.
  நாம் ஆயுள் தண்டனையாக கொடுப்பது 14 ஆண்டுகள். அப்படி என்றால் ஒருவனின் ஆயுள் வெரும் 14 ஆண்டுகள்தானா?
  14 ஆண்டுகள் கழித்து அவன் வெளியில் வரும் போது, அவனைச் சுற்றி இருந்த அனைத்தும் மாறிவிடுகிறது. அவனால் இப்போது எதையும் பழையமாதிரி செய்ய முடியாது. ஆனால் குற்றம் இழைக்கப்பட்டவனுக்கு எதுவும் மாறி இருக்காது. அவன் இழந்தது இழந்ததுதான்.

  ஆனால் மிகவும் முக்கியமான விஷயம்…
  குற்றவாளிக்கு தன் தரப்பு ஞாயம் கூறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டியதும் முறையே! ஆனால் இந்த காதறுப்பில் தண்டனைப் பெற்றவர்களில் எல்லாமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்றல்லவா விசாரணை நடந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதுதான் மிரளவைக்கிறது. இது இத்தோடு விடவேண்டிய விஷயமல்ல… விசாரித்தவர்களை மீண்டும் விசாரித்து, விடுபட்டவர்களையும் சேர்த்து, விதிமுறைகளை மீறியவர்களையும் சேர்த்து ஞாயமான தீர்ப்பு கொடுத்து “நீதிக்கே நீதி” கிடைக்க செய்யவேண்டும்

 2. ஜவஹர் ஸார்,

  எளிமையான அதே சமயம் சிந்திக்க வைத்த பதிவு. சுஜாதாவை துணைக்கு அழைத்துக் கொண்டது brilliant. இந்தக் காதறுப்புக்கு முக்கியமானவர்கள் வெளியில் நிம்மதியாக இருக்கும்போது, துணையாக இருந்த ஒரே காரணத்துக்காக இவர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை தேவையா என்பதே கேள்வி.

 3. நண்பர் ஜவஹர்,

  இதையே சற்று மாற்றிப் பாருங்கள் –

  காதறுத்தது தோடு திருட அல்ல.

  அறுத்ததற்கு காரணம் –
  அதற்கு முன்னால் நடந்த சம்பவம்.

  அறுபட்டவர் – அறுத்தவரின்
  அக்கா, தங்கை, அம்மா – அனைவரின்
  காதும் அறுபடக் காரணமாக இருந்திருப்பார் !

  கோபம் அடங்காமல், இவரை விட்டால்
  மீண்டும் தன் குடும்பம் முழுவதும்
  காது இழக்க நேரிடும் என்று நினைத்து
  செய்திருந்தால் ?

  இப்போது மற்றும் ஒரு கோணம் –

  தன் சுற்றம் காதிழக்கக் காரணமாக
  4 பேர் இருந்தால் – அதில் மூன்று
  பேருக்கு ஒரு தண்டனையும்,
  நான்காவது பேருக்கு வேறு ஒரு தண்டனையும்
  விதிக்கக்கூடிய அதிகாரம் அவரிடமே
  இருக்குமானால் –

  பிறகு அங்கு சட்டம், நீதி, கோர்ட் எல்லாம்
  எதற்கு ?

  எல்லா சம்பவங்களிலும், பாதிக்கப்பட்டவரே
  காரணமாக இருந்தவருக்கு தண்டனை
  கொடுத்து விடலாமே !

  மன்னிக்கவும்.
  உங்களுக்கு என்று ஒரு கருத்து இருக்க
  உங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன.

  நான் – just – வேறு கோணங்களைப்
  பற்றியும் யோசிக்கிறேன்-அவ்வளவே !

  – வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்
  http://www.vimarisanam.wordpress.com

 4. ரூம் போட்டுத்தான் யோசிச்சிருக்கீங்க…

  காதறுத்தது யாருன்னே தெரியாது.

  காதறுத்த ஆயுதம் எங்க செஞ்சதுன்னே தெரியாது.

  காதறுத்தவனும் உயிரோட இல்லை.

  காதை அறுத்துட்டுவான்னு சொன்ன ஒருத்தனையும் காத்துல பறக்க விட்டுட்டாங்க.

  இதுல எவனோ ஒருத்தன் ரப்பர் வாங்குன பில் வச்சிருந்தானாம், அந்த ரப்பரை காதறுத்த கத்திக்கு கைப்பிடி போடத்தான் வாங்கினான்னு முடிவெடுத்து அவனைத் தூக்குல போடணும்னு சொல்லுவாங்களாம்.

  சரி அத்தையும் உடனே செஞ்சி முடிச்சிருந்தாலாவது காதறுத்த கடுப்புல இருக்கிறவிங்க சந்தோசமா கை கொட்டி வேடிக்கை பாத்திருக்கலாம். இந்தா அந்தான்னு 20 வருசத்துக்கு இழுப்பாய்ங்களாம். கடைசியில அவன் எதுக்கு ரப்பர் வாங்கினேங்கிறதையே மறந்திருப்பான். அவனை இப்ப தூக்குல போடுவோம்னு சொன்னா கைக்கட்டி வேடிக்கை பாக்க உங்கள மாதிரி இதயமில்லாதவிங்க இல்ல வாத்தியாரே!!!!

 5. இப்பொழுது அதை பாதகம் என்றும் அப்பாதகத்திற்கு நாங்கள் துணை போகவில்லை என்று மன்றாடி மன்னிப்பு கேட்ட பிறகு , இந்த பாட்டியின் பெரிய விட்டு மகிமை உணர்ந்த பிறகு மன்னிப்பது தெய்வீகம் .

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s