சிவபெருமானுக்கு அரைக் கண்தான்

”சினிமாப் பாட்டுல இருந்து ஒரு விடுகதை போடறேன், விடை சொல்றியா?”

 ”என்ன கேக்கப் போறே, இளநீர் காய்க்கும் கொடி எதுன்னா?”

 “அட, இந்தக் கேள்வி கவர்ச்சியா இருக்கே.. எந்தப் பாட்டுல இது?”

 “’இது என்ன கூத்து அதிசயமோ, இளநீர் காய்க்கும் கொடி இதுவோ’ ந்னு புதியவன் படத்துல ஒரு பாட்டு. இந்தக் கவர்ச்சி விடுகதை சினிமாக் கவிஞர்களைப் பலகாலமா தொந்தரவு பண்ணிகிட்டு இருக்கு. இடுப்பைப் பார்த்தேன் பிரம்மன் கஞ்சன், நிமிர்ந்து பார்த்தால் அவன் வள்ளல்ன்னு வேறொரு பாட்டு.”

 “கரெக்ட்டுதான். வெறும் கவர்ச்சி மட்டும் இல்லாம கவித்துவமும் சேர்ந்த விடுகதையும் இருக்கு இது மாதிரி”

 “எது அந்தப் பாட்டு?”

 “இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல, மழை மேகம் குடை பிடிக்கும் குளிர்நிலவும் அல்ல, இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ந்னு வர்ர வரிகள் கூட விடுகதைதான். வாலி எழுதினதுன்னு நினைக்கிறேன்.”

 “அவரே இன்னொரு பாட்டில காதலன் பெண்ணிடம் தேடுவது, காதலி கண்களை மூடுவது அது எது? ந்னு விடுகதை போட்டிருக்கார். நீ போட வந்த விடுகதை என்னன்னு சொல்லவே இல்லையே?”

 “அது ரொம்ப ஸில்லி. அதுல கவர்ச்சியும் இல்லை பெரிய கவித்துவமும் இல்லை. ஆனா கொஞ்சம் குசும்பு மட்டும் இருக்கு”

 “இதுவே ஒரு விடுகதை மாதிரி இருக்கு. பாட்டைச் சொல்லு”

“கமலா கல்யாணி, வசந்தா வந்தாளாம் மூணும் மூணு பொண்ணுங்க. பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூணுக்கும் நாலரைக் கண்ணுங்க.. அதான் பாட்டு”

 ”அது சரி. எனக்கு ஒண்ணரைக் கண் பத்தி ரொம்ப நாளா ஒரு சந்தேகம்”

 “என்னது?”

 “ரெண்டு கண்ணால பார்த்தா ஒரு பொருள்தான் தெரியுது. ஒன்றரைக் கண்ணால பார்த்தா ரெண்டு பொருள் தெரியுதே எப்படி?”

 “ஏன், ஒன்றரைக் கண்ணுக்கு ரெண்டு பொருள்ன்னா, ரெண்டு கண்ணுக்கு பழிக்குப் பழி ஒன்றரை பொருள்தான் தெரியணும்ங்கிறியா?”

 “ஈக்வேஷன் சரியா இல்லையே. ஒண்றைக்கு ரெண்டுன்னா ரெண்டுக்கு டூ பாயிண்ட் சிக்ஸ் சிக்ஸ் பொருள் தெரியணும்”

 ”அப்டியெல்லாம் நேர் விகிதத்தில ஏத்திகிட்டு போக முடியாது. அப்ப சிவபெருமானுக்கு நாலு பொருளா தெரியும்?”

 “ஏன் சிவபெருமானுக்கு மூணு கண்ணா?”

 “இது தெரியாதா? நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமேன்னு ஏ.பி.நாகராஜன்.. சாரி நக்கீரர் சேலஞ்ச் பண்ணது தெரியாதா?”

 “ஆக்சுவலா சிவ பெருமானுக்கு அரைக் கண்தான்”

 “என்ன இது ஈ இஸ் ஈக்வல் டு எம் ஸி ஸ்கொயர் மாதிரி புது ஈக்வேஷன் ஏதாவது சொல்லப் போறியா?”

 “கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனா அவ்வளவு காம்ப்ளிகேட்டட் ஈக்வேஷன் இல்லை. ரொம்ப சிம்ப்பிள்”

 ”எப்படி? சொல்லு?”

 “சிவனுக்கு இடப்பாகத்தில யார் இருக்காங்க?”

 “உமைக்கு இடப்பாகத்தைத் தந்து பெண்களுக்கு சம உரிமை….”

 “ஸ்டாப். அப்படி சம உரிமை தந்தப்போ இடது கண்ணும், நெற்றிக் கண்ல பாதியும் போச்சா?”

 “சரி, பாக்கி ஒண்ணரைக் கண் இருக்கே?”

 “அதுலயும் வலக் கண் கண்ணப்ப நாயனார் கொடுத்ததாச்சே. அப்ப மீதி எவ்வளவு?”

 “அடக் கடவுளே. நீ என் இப்படி இருக்கே? ஏன் இந்தக் கொலைவெறிச் சிந்தனை?”

 “மன்னிக்கவும். இது என் சிந்தனை இல்லை. சொக்கநாதப் புலவருடையது”

 “சுஜாதாவின் ராகவேனியம் கதைல செந்தில்நாதப் புலவர்ன்னு ஒருத்தர் வந்து இளநீர், நாமக்கட்டி, திரிபலை எல்லாம் போட்டு சரக்கு காய்ச்சி ஏமாத்துவாரு. இவர் யார் சொக்கநாதப் புலவர்?”

 “இவர் நிஜமாவே புலவர்தான்

 முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவார்

அக்கண்ணற் குள்ளதரைக் கண்ணே-மிக்க

உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்

றமையு மிதனாலென் றறி

 அப்டீன்னு ஒரு வெண்பா எழுதியிருக்கார்”

 “ஐய்யோ.. அழுக்கு அரதைப் பழசு புஸ்தகங்கள்ள எதையாவது படிச்சிடறே. படிச்சிட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை. உடனே விடுகதை போட வேறே வந்துடறே.. முடியல”

 “கரெக்ட் இன்னும் முடியல்ல.. வேற ஒரு பாட்டுல மான், மான் ந்னு வான் நிலா பாட்டு மாதிரி…..”

 “ஹோல்டான்… இன்னைக்கு இவ்ளோ போதும்”

 “சரி, பிழைச்சிப் போ”

Advertisements

12 comments

  1. ரெண்டு கண்ணோட படிக்க ஆரம்பிச்சேன். போகப் போக ஒன்றரை ஆகி, ஒண்ணாகி அரைக்கண்ணில் மட்டும் முடித்தேன். மயங்கி/கிறங்கி விட்டேன்னு சொல்ல வந்தேன்!

  2. சிவனுக்கு கண் கிடையாது… இன்னும் கொஞ்சம் உங்க வழியிலயே யோசிச்சீங்கன்னா புரிஞ்சிரும்.

    நாணமோ பாட்டு கண்ணதாசன் எழுதினதுனு படிச்சிருக்கேன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நிறைய சுவாரசியமான sidenotes உண்டு. கண்ணதாசனுக்கும் எம்ஜிஆருக்கும் அடிக்கடி வரும் தகாராறு போல் ஒன்று வர, வாலியை பாடல்கள் அத்தனையும் எழுதச் சொன்னாராம் எம்ஜிஆர். இந்தப் பாட்டும் இன்னொரு பாட்டும் வாலி எழுதியது எம்ஜிஆருக்கு பிடிக்காமல் போனதால் கண்ணதாசனை வரச்சொல்லி பாட்டு எழுதச்சொன்னாராம்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s