எங்கேயும் எப்போதும் (சினிமா விமர்சனம்)

ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். படம் முடிந்ததும் எனக்குக் கைதட்ட வேண்டும் போல் இருந்தது. நான் கையைத் தூக்குமுன் மற்ற ரசிகர்கள் படபடவென்று தட்டியே விட்டார்கள். (நாள் 27.09.2011, இடம் ஐநாக்ஸ். பனிரெண்டு நாற்பது மணி ஷோ)

 தமிழ் சினிமாவுக்கு இது ஒரு புதுக் கோணம். படமே ஒரு விபத்தின் அனாட்டமிதான். பிரயாணிகளில் இரண்டு ஜோடிகளின் ஃப்ளாஷ் பேக்தான் படம். எளிமையான ஆனால் படு சுவாரஸ்யமான திரைக்கதை. இப்படி இரண்டு ஜோடிகள் வருகிற போது ஒரு ஜோடி ஒரு மாற்றுக் குறைவாக இருப்பதுண்டு, ஆனால் இந்தப் படத்தில் இரண்டு ஜோடிகளின் கதைகளுமே ஒன்றையொன்று மிஞ்சுகின்றன. நடிப்பில் அஞ்சலிக்கு அரைமார்க் அதிகம் தந்தே ஆக வேண்டும் மற்றவர்களை விட! அடேயப்பா முகம் திரும்பி இருக்கும் போது கூட முதுகும் இடுப்பும் நடிக்கின்றன அவருக்கு.

 குறிப்பாக, “காதலிக்க ஆரம்பிச்சாச்சுன்னா அடிக்கடி லீவ் போடணும், பர்மிஷண் போடணும், பொய் சொல்லணும், செலவு பண்ணனும், கோர்ட், கேஸு, தகறாரு எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே மாடிப்படி இறங்கும் காட்சியில் கலக்கியிருக்கிறார்.

 காதலிக்கப் போகிறவனின் ரத்தத்தைப் பரிசோதனை செய்து ஆரோக்யத்தை உறுதிப் படுத்திக் கொள்ளும் ராட்சஸத்தனம் ரசனையாக இருக்கிறது! அதில் சமூகத்துக்கும் மெசேஜ் வைத்திருக்கிறார் டைரக்டர்.

 நடிப்பில் அடுத்த பரிசு ஜெய் க்கு, ”இவளுகளும் நம்பளை மாதிரிதானா.. கலர் டிரெஸ் போட்டுகிட்டு வந்து ஆஃபீஸ்லதான் யூனிஃபார்மா” என்று வியக்கிற காட்சி ஒரு உதாரணம். அதற்கப்புறம்தான் அநன்யா.

 ஒரு கிராமத்துப் பெண்ணாக வெகுளித்தனத்தை வெகு சிறப்பாகக் காட்டியிருக்கிறார் அநன்யா. பக்கத்துப் பெண்ணின் உள்ளாடை தெரிகிற போது தருகிற ரியாக்‌ஷன் ரசனை.

 டைரக்டர் சரவணன் மேல் வரிசையில் ஒரு தனி இடம் பிடிக்கப் போவது உறுதி.

 சத்யாவின் (புதுசு?) இசையில் பாடல்கள் காட்சிக்கு வெகு பொருத்தமாக இருக்கின்றன. பாட்டை தனியாகக் கேட்டால் இவ்வளவு ரசனையாக இருக்குமா தெரியவில்லை.

விபத்தை இவ்வளவு விவரமாகக் காட்டியிருக்க வேண்டுமா?

 ‘அந்த’ ப் பாத்திரத்தின் மரணம் அவசியமா? பிழைத்துக் கண் திறந்து புன்னகைக்க வைத்திருக்கலாமோ?

Advertisements

20 comments

 1. மதுரை திரையரங்குகளிலும் கைத்தட்டல்கள்! உங்கள் விமர்சனம் நன்று! சில கதாபாத்திரங்கள் இறந்ததை என்னாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை! கொஞ்சம் கண்ணீர் விட்டேன்!

 2. தன் குழந்தையை ஐந்து வயதுக்கு அப்புறம் முதல் முதலில் பார்க்கப் போகும் தந்தையை கொன்றதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.

 3. //நான் கையைத் தூக்குமுன் மற்ற ரசிகர்கள் படபடவென்று தட்டியே விட்டார்கள். (நாள் 27.09.2011, இடம் ஐநாக்ஸ். பனிரெண்டு நாற்பது மணி ஷோ)//

  இங்கு குரோம்பேட்டை வெற்றி தியேட்டரிலும் செகன்ட் ஷோ படம் முடிந்ததும் கை தட்டல்கள். (நாள்:25/09/11)

 4. // ‘அந்த’ ப் பாத்திரத்தின் மரணம் அவசியமா? பிழைத்துக் கண் திறந்து புன்னகைக்க வைத்திருக்கலாமோ//

  பாத்துட்டுச் சொல்றேங்க….எல்லா பதிவர்களுமே பாராட்டறீங்க…பார்த்துதான் ஆவணும் போல…!

 5. படம் நல்ல இருக்கு , ஆனா உங்கள்(பதிவர்கள்) விமர்சனம் மொநோட்டனௌஸ் !!
  அஞ்சலியின் அதிகாரத்தை கொஞ்சம் underplay பண்ணிருக்கலாம், Anyway good effort by new bee.
  அடுத்த படத்தை பார்த்துட்டு rating கொடுங்க சார்.

 6. பிரயாணி என்பதை நான் பிரியாணி என்று வாசித்து கொஞ்ச நேரம் குழம்பி விட்டேன். ஏன் சார் ஏன் ? பயணி என்று அழகான வார்த்தை இருக்க ஏன் இந்த கொலைவெறி. பசி நேரத்தில் பிரியாணிய ஞாபகபடுத்திட்டீங்களே..

  மற்ற படி விமர்சனம் அருமை. படமும் மிக அருமை. இன்னும் டீட்டைலா எழுத நிறைய விஷயம் உண்டு.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s