காமராஜர் என்னும் உலக அதிசயம்

நடிக்க வந்தவர்கள் எல்லோரும் சிவாஜியிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாட வந்தவர்கள் எல்லோரும் எஸ்.பி.பி யிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல டைரக்டர்கள் எல்லோரும் பாலச்சந்தரிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத வந்தவர்கள் எல்லாரும் சுஜாதாவிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 அரசியலுக்கு வருகிறவர்கள் யாருமே ஏன் பெருந்தலைவர் காமராஜரிடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை?

 நாடே பேசும் அந்தத் தலைவர், முதலமைச்சராகவும், அகில இந்தியத் தலைவராகவும் பல வருஷங்கள் இருந்தவர். இறந்து போகிற போது வாடகை வீட்டில்தான் இருந்தார். ஐந்து வருஷம் மந்திரியாக இருந்தவர்கள் எத்தனை வீடு (ஐ மீன் ஹெளஸ்) வைத்திருக்கிறார்கள்?

 இறக்கும் போது இருநூற்றுச் சொச்சம் ரூபாய்தான் வைத்திருந்தார். மந்திரியான முதல் வருஷமே வெள்ளையிலேயே சில கோடிகள் சேர்த்துவிடுகிறார்கள் மஹானுபாவன்கள். கறுப்பில் எவ்வளவோ! காமராஜர் ஆள்தான் கறுப்பே ஒழிய பணம் வெளுப்பில் கூட அவரிடம் இருந்ததில்லை!

 சீனியர்கள் கட்சிப் பணிக்கு வரவேண்டும் என்று நேரு (அவரே அதைச் செய்யாத போதும்) சொன்னதும் படாரென்று ராஜினாமா செய்தாரே? இன்றைக்கு உதைத்து உருட்டி விட்டாலும் ஓடி வந்து நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொல்கிறார்கள்.

 எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் கர்வம் வந்தால் அம்பேல். நாங்கள் படுத்துக் கொண்டே ஜெயிப்போம் என்று முதன்முதலில் கர்வமாக அவர் பேசிய போது டாக்டர் மத்தியாஸ் ஜெயித்தார்.

 அட இதையாவது கற்றுக் கொண்டார்களா? ம்ம்ஹூம், என்ன ஆணவம், என்ன பேச்சு…..

 ரிப்பீட் ஆகிற விஷயங்களைத்தான் விஞ்ஞானம் ஏற்கிறது. அப்படி ஆகாததெல்லாம் ஒண்டர். அந்த வகையில் பார்த்தால் காமராஜர் ஒரு அதிசயம். அடுத்த முறை தாஜ்மஹாலுக்கு பதில் காமராஜரை நாம் சிபாரிசு செய்யலாம்.

38 comments

 1. அன்பின் ஜவகர் – உண்மை உண்மை – க்ர்ம வீரர் காமராஜைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை – உண்மை. கல்விக்கண்ணை அனைவர்க்கும் திறந்தவர் அவர். சத்துணவுத் திட்டத்தின் முன்னோடி. நெ.து.சுந்தரவடிவ்வேலுடன் சேர்ந்து கல்வித்துறையினை முன்னேற்றியவர். அவருக்குப் பின்னர் – – 1967க்குப் பிறகு இன்று வரை தமிழகத்தில் முதல்வராவதற்கு காங்கிரஸில் யாரேனும் முயல்கிறார்களா ? முயற்சி எடுக்கிறார்களா ? அவரை நினைத்தாவது பார்க்கிறார்களா ? தகவல் ப்கைர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. மக்கள் பெருந்தலைவரை பற்றி எவ்வளோவோ சொல்லலாம் …கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவு எனும் சிந்தனைக்கே அவரை உலக அதிசயமாக போற்ற வேண்டும் …

 3. அவர் சார்ந்த சமூக மக்களுக்குக் கொஞ்சம் அதிக கரிசனம் காட்டினார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெரிய தவறொன்றும் இல்லை என்பது என் கருத்து (நாம் தமிழர், நாம் இந்தியர், நாம் திராவிடர்/ஆரியர் என்பதை எல்லாம் விட இந்த வகையில் ஒன்றான மக்களிடம் பல ஒற்றுமைகளையும், பண்பாடு, பழக்கவழக்கம், நாணய அளவு, வட்டார வழக்கு, பேச்சு, தொழில் போன்றவற்றுள் பொதுத்தன்மையையும் அதிகம் என்பது என் கட்சி).

  காமராஜர், அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர். – மூவருமே அவரவர் வழிகளில் மிகச்சிறந்த மனிதர்கள் என்பதில் எவருக்கேனும் ஐயமுண்டோ?

  1. ராமனாதன், அண்ணாதுரை பொதுமக்களுக்கு செய்த நன்மைகள் குறித்து கொஞ்சம் எழுதுங்கள். நானும் வாசகர்களும் தெரிந்து கொள்கிறோம்

 4. திரு ராமநாதனின் கருத்து சரியல்ல. அவர் நாடார்களுக்கு என்று எதுவும் செய்யவில்லை. 1962 இல் நான் மாணவன். நாடார் மக்களுக்கு பிற்பட்ட சாதி சலுகை தருவார் என்று நினைத்திருந்தோம். அந்த வருடம் தான் எல்லோருக்கும் இலவச கல்வி சட்டம் வந்தது.
  அற்புதமான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி திரு ஜவஹர்.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
  மீண்டும், அவர் ஒரு இந்தியன், தமிழர் – நாடார் மட்டும் அல்ல ( அவர் தன்னை நாடார் மட்டும் என்று நினைத்ததும் இல்லை).

 5. // காமராஜர் ஒரு அதிசயம். அடுத்த முறை தாஜ்மஹாலுக்கு பதில் காமராஜரை நாம் சிபாரிசு செய்யலாம்//

  ஏகப்பட்ட காமராஜ்கள் உருவாகாததால்தானே அவர் அதிசயமாக இருக்கிறார்… எனவே நீங்கள் சொல்லும் நிலை வராமலிருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை..!

 6. ===>அரசியலுக்கு வருகிறவர்கள் யாருமே ஏன் பெருந்தலைவர் காமராஜரிடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை?<=== அடுத்து அரசியலுக்கு வந்தவர்கள் எல்லோரும்.. அவரை பற்றி அவதூறு சொல்லி, எதிர்த்து அரசியல் நடத்தி வாய்ச்சொல்லில் வீரராய் வந்தவர்கள் எனும்போது எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? (இப்போது காங்கிரஸே கூட ஓட்டுக்குத்தான் அவர் பெயரை உபயோகப்படுத்துகிறது..அவர் கடைசிகாலத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டது வேறு விஷயம்). இதில் அரசியல்வாதிகளை குற்றம்சொல்லி பிரயோசனம் இல்லை..(சந்தர்ப்பம் கிடைக்கும்வரை எல்லோரும் யோக்கியர்களே). மக்களைத்தான் சொல்லவேண்டும். மீண்டும் மீண்டும் (பேச்சில் அடுக்குமொழியில் மயங்காமல்) பெருந்தலைவரை தேர்ந்தெடுத்திருப்பார்களேயானால், இப்படி இருந்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்கிற ஒரு (எழுதப்படாத) விதி இருந்திருக்கும்.. அடுத்துவருபவரும் காமராஜர் அடியொற்றி இரு(ந்திரு)ப்பர்..

 7. எங்கேயோ படித்தது ! I would say best example of Art of Problem Solving!


  காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், “”ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,” என்றார்.

  யோசனையில் ஆழ்ந்த காமராஜர், “”கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,” என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,” என உத்தரவிட்டார்.
  தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, “”பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,” என்றார். கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.
  காமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம், என்றார்.”

 8. I remember reading about Trichy BHEL factory. Nehru was Prime Minister of India, who was in search of place for BHEL factory. During discussion with Kamaraj he had mentioned about this. Kamaraj asked what was pre-requirement to get that. Nehru replied Place should be close to Clean Stream Water(Kaveri River), Close to Railway Station and Land with strong rocks surface. Next day Kamaraj took Nehru to Thiruverumbur. Rest become BHEL….

 9. அண்மையில் ‘அண்ணாந்து பார்’ என்ற சொக்கனின் புத்தகம் படித்தேன். அண்ணா யார் என்று உண்மையாகத்தெரிந்து கொண்டேன். கடைசி அத்தியாயத்தில் (அவர் மரணம் பற்றியது) கண்ணீர் அரும்பியது உண்மை. அண்ணாவைப்பற்றி அதிகம் தெரியாதோர் அதைப்படித்திட பரிந்துரைப்பேன்.

  மொழிப்போராட்டம், சமுதாயச் சீர்த்திருத்தம், தன்னலமற்ற தலைமைப்பண்பு, முடிந்தவரை அனைவரையும் அரவணைத்து செல்லுதல், பேச்சுத்திறமை ஆகியன அண்ணாவைப்பற்றி எனக்குப்பிடித்த சிலவை.

  காரணமின்றி இந்தியா டடே, இந்தியாவைத் தன் திறமையால் செதுக்கிய 100 சிற்பிகள் என்ற பட்டத்தை அண்ணாவுக்கு கொடுத்திருக்காது.

  அவர் ஆற்றிய தொண்டுகளன்றி வேறெதுவும் அவரது இறுதி ஊர்வலத்துக்கு ஒன்றரை கோடி மக்களை பங்கேற்கச் செய்திருக்காது. இன்றைய வரையில் உலகில் வேறு எவருக்கும் இவ்வளவு பேர் இறுதி அஞ்சலி செலுத்தக் குவிந்ததில்லை.

 10. மன்னிக்கவும் ஜவஹர், இந்தத் தொனிக்கு இதற்கு மேல் பதிலளிக்க எனக்கு விருப்பமில்லை.

  மாற்றுக்கருத்தை அறிய விரும்பும் தொனி, பதில் சொல்லினும் அதனில் உள்ள ஒட்டைகளுக்குக் காத்துக்கொண்டிருக்கும் தொனி – இவ்விரண்டின் வித்தியாசம் அறிவது எளிது.

  1. ராமனாதன், அண்ணாதுரை செய்த சமூக சீர்திருத்தங்கள் சிலவற்றைச் சொல்லுங்கள், நானும் வாசகர்களும் தெரிந்து கொள்கிறோம். சொன்ன பிறகுதான் மாற்றுக் கருத்து இருந்தா யாராவது சொல்ல முடியும்

   1. அரிசி, தமிழ் மற்றும் தமிழனை வைத்து அரசியல் செய்த முதல் திராவிடன். அன்றே இலவச ஏக்கர் நிலம் வாக்குறுதியை (மட்டும்) குடுத்தவர். ஒன்று நிச்சயம்..மூன்று லட்சியம் … இல்லையேல் சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் எனச்சொல்லி ஆட்சிக்கு வந்து இவரைப்பற்றி மீதியை கணிப்பதற்க்கு கூட அவகாசம் கொடுக்காமல் குறுகிய காலத்தில் மறைந்தவர். – இதைத்தான கேட்டீங்க..?

 11. நல்ல பதிவு.
  காமராஜிடம் எந்த தலைவரும் நல்ல விஷயங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை.
  ராமனாதனின் தேடுதல் தொடரும் – அண்ணா அவர்கள் சமூகத்துக்கோ, தமிழுக்கோ கூட
  (கம்பரசம் தவிர) பெரிதாகச் செய்யவில்லை என்றே தோன்றுகிறது. இரண்டு ஆண்டுகளே அவர் பதவியில் இருந்தார்; ஐந்து ஆண்டுகள் இருந்து இருந்தால் சாதனைப் பட்டியல் இருக்கலாம். குதிரைப் பந்தயம் ஒழித்தது அவர் என நினைக்கிறேன்.

 12. காமராஜரைப்பற்றித் தேவரின் தொண்டர்களிடம் கேளுங்கள். அவர்கள் பலபதிவுகளும் நூல்களும் எழுதியிருக்கிறார்கள். அது காமராஜின் இருண்ட பக்கத்தைக் காட்டும். காமராஜர் தன் ஜாதிக்காக எதுவும் செய்யவில்லை என்பதை அவர்கள் பொய்யெனக் காட்டியிருக்கிறார்கள்.

  காமராஜர் தென்மாவட்ட நாடார்களின் குருதெய்வம். அங்கு போய் கேட்டுக் கொள்ளலாம். அவரை அவர் ஜாதித்தலைவராகவே பார்க்கிறார்கள். பாரதியாரை பார்ப்பனர்கள தங்கள் ஜாதிநாயகனாகப் பார்ப்பது போல ! காமராஜ், பாரதியார் இவர்களின் குற்றங்களல்ல. பார‌தியார் தான‌றிஞ்சு எதையும் செய்ய‌வில்லை. அவ‌ர் உயிருட‌ன் இருன்த‌ போது அவ‌ரை என்த‌ ஜாதிவெறிபிடித்த‌ பார்ப்பானும் நெருங்க‌ முடிய‌வில்லை. செத்த பிறகுதான் பாப்புகளுக்கு தைரியம் வந்து அவரை ஜாதி நாய‌க‌னாக்கி விட்டார்க‌ள். ஆனால் காம‌ராஜ் தென்மாவ‌ட்ட‌ வ‌ருகையில் நாடார்க‌ள் புடை சூழ‌த்தான் வ‌ல‌ம் வ‌ருவார். பொன்னை நாடார் பொருளை நாடார் எங்க‌ள் காம‌ராஜ் நாடார்.

  காமராஜின் பெரிய சாதனை இந்து, கிருத்துவ நாடார்களையும், ஏழை பனையேறி நாடார், சிவகாசி, விருதுநகர் பணக்கார நாடார் அனைவரையும் இணைத்து அவர்களெல்லோருக்கும் தன்னிகரில்லா ஒரே ஜாதித்தலைவனாக விளங்கியது. எப்படி இந்த நாடார்களுக்கு இவ்வளவு கடுமையான ஜாதிப்பற்று வருகிறது என்பது தெரியவில்லை. ‘எங்க‌ள் காம‌ராஜ் நாடார்’ என்றுதான் தேர்த‌ல் சுவ‌ரொட்டிக‌ள் இருக்கும் அப்போது. விருதுந‌க‌ரின் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌ பின், நாக‌ர்கோயிலில் நிற்க‌ நாடார்க‌ளே அழைப்பு விடுத்து, அதை மாபெரும் வெற்றியாக்க‌ வேண்டும் என‌ப் பாடுப‌ட்ட‌க் கால‌த்தில் நான் அங்கே சிறுவ‌ன். ஜாதிவோட்டுக்க‌ளினால் ல‌ட்ச‌ம் ஓட்டுக‌ளுக்கு மேல் வாங்கினார் நாடார் குல‌த்த‌லைவ‌ன் காம‌ராஜ‌ர்

  காம‌ராஜைப் பார்ப்ப‌ன‌ர்க‌ள் போற்ற‌க்கார‌ண‌ம் பார்ப்ப‌ன எதிர்ப்பு க‌ழ‌க‌ங்க‌ளால் ஊதி ஊதிப்பெருசாக்கொண்டிருன்த காலகட்டத்தில் காம‌ராஜ‌ அவ‌ர‌க‌ள் ப‌க்க‌ம் சாயாமல், பார்ப்பன‌ர‌க‌ளைத் த‌ம் ப‌க்க‌ம் வைத்துக்கொண்டார். ஆர் வியை வ‌ள‌ர்த்து அர‌சிய‌லில் ஆளாக்கி விட்ட‌த‌ற்கு பார்ப்பன‌ர்க‌ள் என்றுமே காம‌ராஜை ந‌ன்றியுட‌ன் பார்ப்பார்க‌ள். அன்த‌ விசுவாச‌ம் ஜ‌வ‌ஹ‌ரின் எழுத்துக்க‌ளில் ராம‌நாத‌னிட‌ம் வைக்கும் நையாண்டிக்கேள்விக‌ளிலும் தெரிகிற‌து. ஆர் வி, த‌ன் குருவுக்கு டெல்லியிலேயும் பாராளும‌ன்றத்திலேயும் சிலை எடுத்தார். ஜ‌வ‌ஹ‌ர் ப‌திவிலே ப‌ல்ல‌வி பாடுகிறார்.

  1. குணசேகரன், நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. என்னுடைய பதிவுக்கும் ஜாதிக்கும் சம்பந்தம் இல்லை. காமராஜரிடம் மாற்றுக் கருத்து இருந்தால் அதை ஜாதியை சம்பந்தப்படுத்தாமலே சொல்லலாமே?

 13. காமராஜரோடு அண்ணாவை ஒப்பிடுவதே தவறு! இருவருமே சிறந்தவர்கள் தான்! ஆனால் காமராஜர் அப்பழுக்கற்ற தியாக சீலர்!

 14. குணசேகரன், ஒரு சிறிய விளக்கம். நான் அறிந்தவரையில் பாரதியாரை எந்த ஒரு பார்ப்பனரும் அவர் வாழ்ந்த காலத்திலும் சரி, பிற்காலத்திலும் சரி, தற்காலத்திலும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடியதாகத் தெரியவில்லை. மற்ற சமூகங்களில் ஒருவரின் மகத்தான சாதனைகளை அல்லது எழுத்தாளர்களாய் இருந்தால் சாதனையாளரையோ அல்லது அவர்தம் வாழ்னாளுக்குப் பின் அவரது உருவாக்கங்களை ‘எங்க ஆளுய்யா இவரு, எங்க ஆள் எழுதியதய்யா இது’ என்று போற்றுவார்கள். பாரதி விஷயத்தில் பார்ப்பனர் யாரும் அப்படிக் கொண்டாடியதாக நான் படித்ததில்லை, அவர் வாழ்ந்த வீட்டைக் கூட பிற்கால அரசுகள் (திராவிட) தான் பராமரிக்கத் தலைப்பட்டன.

 15. காமராஜை ஏன் நம் அரசியல்வாதிகள் பின்பற்றவில்லை அல்லது அவரிடமிருந்து யாரும் அரசியல் வாழ்வு நெறிகளைக் கற்கவில்லை என்று கேட்டிருந்தீர்கள். நியாயமான கேள்வி. ஆனால், சிவாஜி, எஸ்பிபி, பாலசந்தர் போன்றவர்கள் ஏதோ ஒரு ரீதியில் தங்கள் ஊதியத்தை (சன்மானத்தை) பெற்றுக் கொண்டார்கள் (காலத்திற்கு ஏற்ப), அவர்களை துரோணர்களாக ஏற்றுக்கொண்டு கலை பற்றி ஏகலைவனாகக் கற்றவர்கள் பலருண்டு.

  காமராஜர் விஷயத்தில் அவர் கல்வியை இலவசமாகத் தர முற்பட்டார், தேவையானவர்களுக்கு. அவர் காலத்தில் அரசு ஊதியமும் அல்லது சன்மானமும் அந்த அளவுக்கு இருந்ததில்லை. இலவசங்கள் ஏற்கப்படும், ஆனால் அவைதரும் பாடம் கொள்ளப்படாது என்பது இந்தியனின், குறிப்பாக தமிழனின் வழிமுறையாகிவிட்டது. அதுவே ஒரு காரணமாகப்படுகிறது, காமராஜிடமிருந்து கற்க ஏதுமில்லை, தற்கால வாழ்க்கையை ஓட்ட, என்று நம் அரசியல்வியாதிகள் நினைத்தார்கள் போல.

  காந்தியின் முகம் ரூபாய் நோட்டிலும் காமராஜின் பெயர் அவ்வப்போது தேர்தல் வரும்போது ஏட்டிலும் தான் இங்கே முன்னுரிமை பெறும். நோட்டு கைமாறி விட்டால், இரண்டு தருணங்களிலுமே அவர்கள் முற்றாக மறக்கப் படுவார்கள், இதுதான் இன்றைய பாரதத்தின் மன்னிக்க முடியாத நியதி!!

 16. காமராசரிடம் இருந்து அரசியல்வாதிகள் கற்பது இருக்கட்டும்.

  பொது மக்கள் நாம் என்ன கற்றுகொண்டோம் ?

  டிவி கிரைண்டர் கொடுத்தால வோட்டு போடுகிறோம்!

  கல்வி கொடுத்தவரை தோற்கடித்தோம் அல்லவா?

 17. C. N. Annadurai ((Former Tamil Nadu Chief Minister (1967-1969)) was a great orator and writer. He sprinkled his speeches and writings with little stories (fables) to drive home his points. Here is a short story he told to drive home the irrationality of arguments for making Hindi the link language of India.)

  A man had two dogs – a big one and a small one. He wanted his dogs to go in and out of the house freely without him having to keep the house door open all the time. So he built two “trap doors” – one big trap door for the big dog and one small for the small dog. Neighbors who saw these two doors laughed at him and called him an idiot. Why put a big door and a small door? All that was needed was the big door. Both the big and the small dog could use it!

  Indian government’s arguments for making Hindi the official or link language of India are as ridiculous as the need for a big door and a small door for the big dog and the small dog. Indian government agrees that English is needed for communication with the world, and every school in India teaches English after the fifth grade. Then the Indian government says that all of us should know Hindi also in order to communicate amongst ourselves within India. I ask, “Since every school in India teaches English, why can’t it be our link language? Why do Tamils have to study English for communication with the world and Hindi for communications within India? Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!”

 18. பொன் நாடார், பொருள் நாடார் என்பது கண்ணதாசன் வரிகள் – அதற்கும் நாடார் சமுதாயத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பாரதியும், காமராஜரும் உண்மையில் ஜாதியை கடந்தவர்கள், பின்னால் வந்த மக்கள் அவர்களை ஜாதி வட்டத்தில் அடைக்க முயலுகின்றனர். இது வ உ சிக்கும் பொருந்தும்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s