ஹைக்கூ வாங்கலையோ ஹைக்கூ

மழைக்கு ஒதுங்கியதில்லை

எங்கள் பள்ளியில்

கூரை இல்லை

 

மழையில் நிற்கிறாய்

பொறாமை

மழைத்துளி மேல்

 

முதலீட்டைத் தின்றால்தான்

விற்பனை தொடரும்

இட்லிக் கடை

 

மெளசுக்கு மவுசு கணிணியில்

மெளசால் ரவுசு

கழனியில்

 

மின்னல் கண்டதும் இடிப்பது

வானத்தில் மட்டுமா

பஸ்ஸிலும்தான்

Advertisements

23 comments

  1. என்றோ ஒரு நாள் விகடனில் படித்த சுஜாதாவின் ஹைக்கூ அறிமுக கட்டுரையில் ஹைக்கூ இலக்கணம் பற்றி அவர் சொல்லியிருந்ததில் முக்கியமானது – படித்தவுடன் அந்த சொற்களின் மூலம் நம் மனதில் விரியும் நேரடியான காட்சிப்படிமம் மற்றும் சற்று யோசித்தால் கிடைக்கும் அதை தாண்டிய அனுபவம். அந்த படிவமோ அனுபவமோ, உங்களது இந்த பதிவில் இருக்கும் – உரைநடை கவிதை/ குறுங்கவிதை/ சிறுகவிதை – களில் ”எனக்கு” கிடைக்கவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  2. மின்னல் என்றதும் வடிவேலின் ‘வாம்மா, மின்னல்!!’ என்ற நகைச்சுவைக் காட்சி நினைவில் வந்தது, அந்தம்மா அப்படியே 3 அல்லது 4 முறை வந்துபோனால் மின்னல் வந்ததோ இல்லையோ வடிவேலுவுக்கு இடி தலையில் இறங்கியது போலாகிவிடும். ஏதோ தங்கள் வரிகளையும் அந்தக் காட்சியையும் இணைத்துப் பார்த்தேன், அம்புட்டுத்தேன்!!

    1. நன்றி எஸ்.ஆர்.கே சார். ஹைக்கூவுக்கு நிறைய லட்சணங்கள் உண்டு. ஆண்ட்டி கிளைமாக்ஸ் என்பது நான் விரும்பும் லட்சணம்!

  3. எல்லாமே சூப்பர். நன்றியும் வாழ்த்துகளும். இதோ என் பங்குக்கு ஒன்று – முந்தானை விலக
    முகம் திருப்புகிறது
    மேசை மின்விசிறி.
    அன்புடன் புதுவை ஜெயராஜ்

  4. எல்லாமே சூப்பர். நன்றியும் வாழ்த்துகளும்.
    இதோ என் பங்குக்கு ஒன்று :-
    ” முந்தானை விலக
    முகம் திருப்புகிறது
    மேசை மின்விசிறி .”
    அன்புடன் புதுவை ஜெயராஜ்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s