ஆனாலும் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸுங்க – 1

”சேச்சே.. ரொம்ப ஸ்ட்ரெஸ் சார், எப்படி மேனேஜ் பண்றதுன்னே தெரியல்லை”

 ”என்ன ஸ்ட்ரெஸ்ஸுன்னு சொல்லுங்க, என்னால ஹெல்ப் பண்ண முடியுமான்னு பாக்கறேன்”

 “ம்ம்க்கும், என்ன சொல்லப் போறீங்க, யாராவது சைக்காலஜி டாக்டர் கிட்ட கவுன்ஸல்லிங் பண்ணிக்கம்பீங்க, இல்லைன்னா யோகா பண்ணும்பீங்க, எல்லாம் டிரை பண்ணியாச்சு”

 “முதல்ல, அப்படி ஸ்ட்ரெஸ் வர்ர மாதிரி என்ன பிரச்சினை உங்களுக்கு? அதைச் சொல்லுங்க. யோகாவா டாக்டரான்னெல்லாம் அப்புறம் பார்க்கலாம்”

 “அதெல்லாம் வாய்ல சொல்லிப் புரிய வைக்க முடியாது சார்”

 “அதுக்காக படம் வரைஞ்சா காமிப்பீங்க, பரவாயில்லை, ஏதோ சுமாராப் புரிஞ்சிக்கிறேன். சொல்லுங்க”

 “சும்ம்ம்மா இந்த மீட்டர், ரீடிங், கார்டு, கம்ப்யூட்டர், எண்ட்ரி, பணம், பாக்கி சில்றைன்னு ரொம்ப எரிச்சலா இருக்கு.. ச்ச்சத்”

 “அதையெல்லாம் இழுத்துப் போட்டுகிட்டு நீங்க ஏன் பண்ணிகிட்டு இருக்கீங்க. அதுக்குண்டான கிளார்க்கைப் பாக்க சொல்லிட்டு நீங்க பாட்டுக்க உங்க உங்க வேலையைப் பார்க்க வேண்டியதுதானே?”

 “நாந்தாங்க அந்தக் கிளார்க்கு”

 ”ஓ.. அப்படியா, உங்க வேலைதானா?”

 “என் வேலைதான் சார். அதுக்குன்னு ஆஃபீஸ்ல நுழையறப்பவே அம்பது பேர் கியூவில நின்னா எப்படி இருக்கும். கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கக் கூட முடியல்லை”

“அதானே, போனதுமே வேலைன்னா கடுப்பாத்தான் இருக்கும். உட்கார்ந்து, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு, ஒரு டீ கீ சாப்ட்டுட்டு…… ஆமாம், எத்தனை மணிக்கு டியூட்டி ஆரம்பம்?”

“ஒன்பது மணிக்கு”

“ஒரு ஒன்பதரை, பத்துக்கு ஆரம்பிச்சா போதாதா?”

“அதுவரைக்கும் கியூவில நிக்கிறவன் சும்மா இருப்பானா?”

“அதெப்புடி இருப்பான். வேலையத்த பசங்க, ஏதோ மலையைப் பேர்க்கிற வேலையை விட்டுட்டு வந்த மாதிரி பறப்பானுகளே?”

“கரெக்ட்டா சொன்னீங்க. நேத்துப் பாருங்க, மணி ஒன்பதரை கூட ஆகல்லை. கவுண்ட்டரை லொட்டு லொட்டுன்னு தட்டறான் ஒருத்தன்”

“ஒன்பதரை கூட ஆகாமயே?”

“ஆமாம் சார்”

“ஒரு அரை மணி காத்திருக்க முடியல்லை பாருங்க இவனுகளால… சும்மாவா விட்டீங்க?”

“பிடிச்சி செம டோஸ் விட்டு பின்னால போய் நில்லுன்னு சொல்லிட்டேன்”

“அப்பத்தான் புத்தி வரும் இவனுகளுக்கு. அதென்ன அவ்வளவு பொறுமையில்லாத்தனம்!”

“ஒவ்வொருத்தனும் மூணு கார்டு நாலு கார்டு கொண்டு வர்ராங்க”

“பக்கத்து வீடு, எதிர் வீடுன்னு எல்லார்தையும் கலெக்ட் பன்ணிக் கொண்டு வந்துடறானுகளோ?”

“அட அதெல்லாம் இல்லை சார். கீழே ஒரு கனெக்‌ஷன், மாடிக்கு ஒண்ணு, அவுட் ஹவுசுக்கு ஒண்ணு, சிங்கிள் ஃபேஸ் ஒண்ணுன்னு எல்லாம் அவங்க வீட்டுதாவே இருக்கும்”

“ஒரே ஒரு சிங்கிள் ஃபேஸ் கனெக்‌ஷன் வாங்கிகிட்டு ரெண்டு ஃபேன் நாலஞ்சு லைட்டுன்னு சிம்ப்பிளா இருந்துட்டுப் போறதை விட்டுட்டு, மாடிக்கு தனியா அவுட் ஹவுசுக்கு தனியா… ஏந்தான் இப்படி பிரச்சினை பண்றாங்களோ.. சேச்சே ரொம்ப டென்ஷன்.. அப்புறம்?”

“சிலர் ரீடிங் எடுக்காமயே வந்துடறாங்க”

“ஓ.. எல்லாரும் அவங்கவங்க மீட்டர் ரீடிங்கை அவங்களே எடுத்துகிட்டு வந்துடுவாங்களா?”

“அட இல்லைங்க, சில பேர் வீட்ல ரீடிங் எடுக்காம விட்டுடறாங்க”

“யாரு?”

“எங்க ஆளுகதான்”

“சரி.. வேறே என்ன டென்ஷன்?”

“வேறே எதுவுமே பண்ண முடியறதில்லை”

“ஓ.. இது அன்னியில வேறே வேலையெல்லாம் கூட இருக்கா உங்களுக்கு?”

“அட அதில்லைங்க, மதியம் மூணு மணி வரைக்கும் நகரவே முடியறதில்லை”

“அதாவது, ட்யூட்டி டைம் முழுக்க வேலை இருந்துகிட்டே இருக்கு. சும்மா இருக்க முடியல்லை?”

“ஆமாம்”

“ஆனாலும் ரொம்பத்தான் ஸ்ட்ரெஸ் உங்களுக்கு”

(தொடரும்)

Advertisements

10 comments

 1. தலைப்பிலேயே கோடிகாட்டி விட்டீர்கள், இது உடனடியாக முடியும் சமாசாரமில்லை, நம்ம சம்சார சாகரம்போல!! அதான் சார், (1) என்று அடைப்புக்குறியைச் சொன்னேன். அந்த அளவுக்கு அந்த இ.பி.ஆபீஸ் கிளார்க்குக்கு ஸ்டெரெஸ் இருக்கோ இல்லையோ இதுசம்பந்தமா யோசிச்சு யோசிச்சு நீங்கதான் யோகாவா டாக்டரோ யாகாவா முனிவரோ யாரோ ஒருவரிடம் போகலாமா வேண்டாமா, இதைப்பற்றி (2) (3) எழுதலாமா வேண்டாமா, என்று உங்களூக்கு ஒரே ஸ்டெரெஸ்தான் போங்க!!

  உங்கள் அடுத்தப் பதிவுக்காக (மி)ஸ்டெரெஸ் அருகிலில்லாத ஸ்டெரெஸ்ஸுடன் காத்திருக்கிறேன்.

 2. Welcome Back ..

  பார்த்து சார், யாராவது பதிவ படிச்சிட்டு கரண்ட் கட்டைய புடிங்கற போறாங்க..

  கடவுளை பகைத்தாலும், Government ஆபிசரை பகைக்க கூடாது.

 3. விட்டால், காலையில் எழுந்திருச்சதிலிருந்து இரவு தூங்கும்வரைக்கும் மூச்சு வாங்கவேண்டியிருக்குது என்பதற்காகவும் ஸ்ட்ரெஸ்டாயிடுச்சி என்பார்கள் போல.

 4. நல்ல பதிவு.
  இதே மாதிரி தான் ஸ்டேட் பாங்கிலும் ஆட்கள் இருப்பார்கள். ஏன் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். அதனால் கணக்கு ஆரம்பிக்க சென்றால் எடுத்த எடுப்பிலே விரட்டி விட முயற்சிப்பார்கள். ஏனென்றால் அதற்குப் பிறகு வரமாட்டார்கள் அல்லவா?
  வேலை கிடைக்கும்வரை தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிவார்கள். பின்பு வாடிக்கையாளர்கள் எல்லோரும் விரோதிகள். அவர்களால் தான் நாம் சம்பளம் வாங்குகிறோம் என்று புரிவதில்லை. இப்போது அஞ்சல் அலுவலகத்தில் சேவை பிரமாதமாக இருக்கிறது.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

 5. அவங்க சொல்றதில் என்ன தப்பு. அவங்க இடத்தில் இருந்து ஒரு நாள் இருந்து பாருங்களேன். இதை குறைக்க என்ன யோசனைகள் வைத்திருகிறீர்கள். அதை பேசுங்கள் பின்னூட்ட பெருமக்களே.

  1. மீனாட்சி மேடம், யாருமே “ஸ்ட்ரெஸ்” பத்தி பேசல இங்க. அவங்கவங்க கடமைய செய்றதுக்கே அஸ்ஸு புஸ்ஸுன்னு சொல்றவங்கள பத்தி தான் புலம்பல். மின்சாரத்துறை ஊழியர் என்பது கூட ஒரு உதாரணமே தவிர தாக்குதல் அல்ல. ஆனால் பெரும்பாலானோர் அரசுத்துறையோ, அரசு சார்ந்த துறையாகவோ இருப்பது ஒரு வேதனைக்குரிய விஷயம். இங்கு ஒருவர் சொல்வது போல், ஒவ்வொரு நாளையும் நாம் வேலை கிடைக்காதபோது இருந்த நாட்களோடு ஒப்பிட்டால் இந்த “ஸ்ட்ரெஸ்” எதுவும் வராது. உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி தேடு… எப்பேர்ப்பட்ட வரிகள்…..

 6. “சரி.. வேறே என்ன டென்ஷன்?”
  “வேறே எதுவுமே பண்ண முடியறதில்லை”
  “ஓ.. இது அன்னியில வேறே வேலையெல்லாம் கூட இருக்கா உங்களுக்கு?”
  “அட அதில்லைங்க, மதியம் மூணு மணி வரைக்கும் நகரவே முடியறதில்லை”
  “அதாவது, ட்யூட்டி டைம் முழுக்க வேலை இருந்துகிட்டே இருக்கு. சும்மா இருக்க முடியல்லை
  ========================================================
  ayya Asho….Ley….la duty hours-la break & snacks / toilet facility-yum
  EB office(toilet-ey) illamay (Hosur-la)paarthiruppeengaley!
  idhu eranndum ondra sollungal!
  Eiyarkkai Azhaippu/Ubadhai pattriyum avar solley irukkalamey!
  avargalum manidhargaley!
  Naam ellam yen last dateley mattum ondraga
  gumbalaga sernthu muttrugai-yidigirom,
  vadivelu sonnamathiri”YETHIYUM PLAN PANNANUM” Ellenna ippaithan.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s