ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸுங்க – 2

”சார், நீங்க ஏதோ கிண்டல் பண்றீங்க மாதிரித் தெரியுது”

 “ஆமாம்”

 “என் பிழைப்பு உங்களுக்குக் கிண்டலா இருக்கா?”

 “உங்களுக்கு இருக்கிறது ஸ்ட்ரெஸ் இல்லை, ஃபெடீக், அலுப்பு. ஃபெடீகுக்கும் ஸ்ட்ரெஸ்ஸுக்கும் வித்யாசம் இருக்கு”

 “என்ன வித்யாசம்?”

 “ஃபெட்டீக் என்கிறது ஒரே வேலையை, ஒரே மாதிரி நூற்றுக் கணக்கான முறைகள் செய்யறதால வர்ர மன உளைச்சல்”

 “சரி, அது வராம இருக்கணும்ன்னா என்ன பண்ணனும்?”

 “ரொட்டீனா செய்யற எந்த வேலையும் செய்யறப்போ இயந்திரம் மாதிரி கை மட்டும்தான் அதைப் பண்ணிகிட்டு இருக்கும், ஆனா மனசு வேறே எங்கயோ இருக்கும், காது எதையோ கேட்கும், வாய் எதையோ பேசிகிட்டு இருக்கும் சரிதானா?”

 “ரொம்ப சரி”

 “முதல்ல இதை மாத்தணும்”

 “எப்படி?”

 “பிளஞ்ச் இண்ட்டு பிரசண்ட். செய்யற வேலையில் ஐம்புலன்களும் ஒன்றணும். கண்ணு, காது, மூக்கு, வாய் எல்லாமே நீங்க செய்யற வேலைலதான் இருக்கணும்”

 “கேக்கறதுக்கு நல்லா இருக்கு, இந்தப் புண்ணாக்கு கார்டையும், கம்ப்யூட்டரையும், ரூபா நோட்டையும் விட்டா இந்த மஹாபெரிய வேலைல என்ன இருக்கு. இதுல போய் ஐம்புலன், ஆறு புலன்னு லெக்ச்சர் அடிக்கிறீங்க”

 “ஏன், கார்டைக் கொண்டு வர்ர ஆளு? அவரும் ஒரு அங்கம்தானே? உங்க ஏரியாவில, நீங்க டீல் பண்ற சப்ஸ்கிரைபெர்ஸ் ஒரு எழுநூறு பேர் இருப்பாங்கள்ள?”

 “ஆமாம்”

 “அதுல எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்?”

 “………………………………………………………….”

 “அவங்க முகத்தையே நீங்க பார்க்கிறதில்லை”

 “…………………………………………………………”

 “நிமிர்ந்து பாருங்க. ஒரு ஸ்மைல் பண்ணுங்க. என்ன செந்தில் சார் தீபாவளி பர்ச்சேஸ் ஆச்சான்னு கேட்டுகிட்டே எண்ட்ரியை ஆரம்பியுங்க. அவரும் சந்தோஷமா பதில் சொல்வாரு”

 “சொல்வாரு சொல்வாரு. சர்த்தான் வேலையைப் பாருய்யான்னு சொன்னா?”

 “அப்படிச் சொல்றவங்களும் இருக்கலாம். அதுக்காக நாம யாரைப் பார்த்துமே ஸ்மைல் பண்ணக் கூடாதுன்னு அர்த்தமில்லை”

 “ம்ம்ம்ம்ம்”

 “வழக்கமான யூனிட்ஸை விடக் குறைவா இருந்தா, என்ன சார் ஊருக்குப் போயிருந்தீங்க போலிருக்கேன்னு கேளுங்க. அதிகமா இருந்தா விருந்தாளிங்க ஜாஸ்தி போலிருக்குன்னு சொல்லுங்க, இந்த மாதிரி ரெகக்நிஷனை எல்லாம் அவங்களும் ரசிப்பாங்க. சில பேரைப் பார்த்து ஸ்மைல் மட்டும் பண்ணுங்க. வர்ரவங்கள்ள போலீஸ்காரங்க வீட்டுக்காரங்க இருக்கலாம், டெலிஃபோன்ஸ்ல வொர்க் பண்றவங்க இருக்கலாம், டாக்டர் வீடு இருக்கலாம், ஸ்கூல் வாத்யாருங்க இருக்கலாம் ஒரு ஸ்மைல் ரெண்டொரு வார்த்தைல நட்பாக்கி வெச்சிகிட்டா எவ்வளவோ சாதிச்சிக்கலாம். நான் உங்க இடத்தில இருந்தா முனிஸிபல் சேர்மேன் போஸ்ட்டுக்கே நிற்கிற அளவு இன்ஃப்ளுயன்ஸை உண்டாக்கிகிட்டு இருப்பேன்”

 “ஓ.. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா!”

 “இன்னும் கூட இருக்கு”

 “இதையெல்லாம் டிரை பண்ணாலே ஜாலியா இருக்கும் போலிருக்கே! சரி, அப்ப ஸ்ட்ரேஸ்ஸுன்னா என்ன?”

 “அதை நாளைக்குப் பாக்கலாம்”

 (தொடரும்)

Advertisements

8 comments

  1. சின்ன புன்னகை செய்யும் வித்தைகளை அழகாக கோடு போட்டு காட்டிவிட்டீர்கள் …. இதிலென்ன பிரச்சனைன்னா, கூட வேலை செய்பவர்கள் … இப்படியெல்லாம் வெளியாளுகளோட பேசக் கூடாதுன்னு உள் வேலைகள் செய்து தடுப்பார்கள் ..( பெரியாளு ஆய்டுவானொன்னு புகைச்சலில் ) . இதையும்ம் சமாளிச்சு தான் மேல வரவேண்டும் .. நல்ல தொடர் …மக்கள் தொடர்புக்கு அருமையான மேலாண்மை ..

  2. ஒருவரை CONDEMN பண்ணுவது மிகவும் சுலபமானது. இதை நேரடியாக கூறுவதால் உறவில் முறிவுகள் ஏற்படுகின்றன. ஆனால் உங்களின் எழுத்து நடை, தவறு செய்பவரையே யோசிக்கச் செய்து தன்னுடைய தவறை உணர்ந்து திருத்திக்கொள்ள ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது. KEEP IT UP!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s