எல்லாமே தப்பு, சரியாப் புரிஞ்சிக்கங்க

ரொம்ப அதிகாலை.

 போட் கிளப் ரோடில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் நண்பர்.

 “என்னடா, இவ்வளவு காலைல? பால் வாங்கவா?”

 “பாத்தாத் தெரியல்லையா? மார்னிங் வாக்குக்காக வந்தேன்”

 அப்போதுதான் பார்த்தேன். பந்தாவாக ஒரு டிராக் சூட்டும் டீ ஷர்ட்டும் போட்டிருந்தான். சட்டைப் பையில் மொபைல். காதில் இயர் ஃபோன்.

 “டிரஸ்ஸு பொருத்தமாத்தான் இருக்கு. ஆனா நீ நடக்கிற ஸ்பீடு ஜானவாசத்துல தட்டு தூக்கிகிட்டுப் போற பொண்கள் மாதிரி இருக்கு”

 “அதுக்காக, நாய் துரத்தற மாதிரி ஓடணுமா?”

 “வேணாம், அட்லீஸ்ட் நாய் துரத்தப் போறதை அவாய்ட் பண்ற மாதிரி வேகமா நடந்தா போதும்”

 “மெல்ல நடந்தா பிரயோஜனம் இல்லையா?”

 “பிரயோஜனம் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். பிரிஸ்க்கா நடந்தா அரைமணி போதும். வாக்கிங்கோட தாத்பர்யமே உடம்பில இருக்கிற சர்க்கரையையும், கொலஸ்ட்ராலையும் பர்ன் பண்றதுதான். இப்படி நோகாம நுங்கு தின்னா எதுவும் குறையாது, தொப்பை கூடக் குறையல்லை பார். அது குறைஞ்சாத்தான் கொலஸ்ட்ரால் குறையும்”

 “ஜிம்மியின் லிவர்க்யூர் விளம்பரம் மாதிரி வயிறு ஒட்டி இருக்கே. இதுவும் நல்லா இல்லை”

 “கேக்கணும்ன்னு நினைச்சேன். பீச் ரோடுல கூடப் பார்த்தேன். ஏன் வாக்கிங் போறவங்க எல்லாரும் காதுல இயர் ஃபோன் மாட்டிக்கிறீங்க? அது கழண்டு விழுந்துடுமோங்கிற பயத்திலயே வேகமா நடக்க முடியாது”

 “மத்தவங்க எப்படியோ, நான் காலைல நல்ல இசை கேட்டுகிட்டுத்தான் நடப்பேன்”

 ”நல்ல இசையெல்லாம் கேட்டா ஃபாஸ்ட்டா நடக்க முடியாது. நா கம்போஸ் பண்ண பாட்டு ரெண்டை லோட் பண்ணிக்கோ. ஓடிடலாமான்னு இருக்கும். இவ்வளவு செடி கொடி இருக்கிற ஏரியாவில ஏன் வாக் பண்றே, பீச் ரோடு கிட்டதான, அங்க போக வேண்டியதுதானே?”

 “செடி கொடி இருக்கிற ஏரியாவிலதான் நிறைய ஓஸோன் கிடைக்கும்”

 “தப்பு”

 “என்ன தப்பு?”

 “செடி கொடியிலர்ந்து வர்ரது ஓஸோன் இல்லை. அது ஆக்ஸிஜன்”

 “சரி அப்படியே இருக்கட்டும். அது நல்லதுதானே?”

 “செடி கொடிகள் சூரிய வெளிச்சம் வந்த பிறகுதான் ஆக்ஸிஜன் வெளியிட ஆரம்பிக்கும். ஃபோட்டோஸிந்தஸிஸின் கழிவுதான் ஆக்ஸிஜன். இந்த அஞ்சரை மணி காலைல சேன்ஸே கிடையாது”

 “சரி, அதிகாலைல ஓஸோன் ரிச்சா இருக்கும்ன்னு சொல்றாங்களே, அது கரெக்ட்தானே?”

 “ஓஸோன் எப்பவுமே இருக்கு. அதிகாலைல அது டிஸிண்டக்ரேட் ஆகி பழையபடி ஆக்ஸிஜனா மாறும்”

 “புரியல்லை”

 “ஓஸோன்ங்கிறது மூணு ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்த ஒரு அன்ஸ்டேபிள் காம்பவுண்ட். சூரிய ஒளியில இருக்கிற அல்ட்ரா வயலட் ரேய்ஸ் வெளியில இருக்கிற ஆக்ஸிஜனை இரண்டிரண்டு ஆக்ஸிஜன் அணுக்கலாப் பிரிக்குது. இப்படிப் பிரிக்கப்பட்ட அணுக்கள் அன்ஸ்டேபிளாவும், ரியாக்‌ஷணுக்கு அஃப்ஃபினிட்டியோடவும் இருக்கிறதால ஆக்ஸிஜன் மாலிக்யூல்களோட இணைஞ்சி ஒரு அன்ஸ்டேபிள் காம்பவுண்ட் உருவாகுது. அதுதான் ஓஸோன். அல்ட்ர வயலட் ஃபில்ட்டரா இது செயல்படுது”

 “நமக்கு ஸ்வாசிக்கவும் நிறைய ஆக்ஸிஜன் கிடைக்குமில்லே?”

 “இல்லை, அதிகாலைல டிஸிண்டக்ரேட் ஆகி பழையபடி ஆக்ஸிஜனா மாறிகிட்டு இருக்கும். அப்படி டிஸிண்டக்ரேட் ஆகிற ஓஸோனை சுவாசிச்சா உடம்பின் சுவாச அமைப்பு பாதிக்கப்படுது. ஆஸ்த்மா மாதிரி வியாதிகள் ஏற்படலாம்”

 “ஓஸோன் நல்லதில்லைங்கிறே?”

 “சுவாசிக்கக் கூடாதுங்கிறேன்”

 “எனக்கென்னமோ நீ சொல்றது தப்புன்னு தோணுது”

 “அப்படித் தப்பா இருந்தா நம்ம பிளாக் வாசகர்கள் சும்மா இருக்க மாட்டாங்க. உடனடியா ஆதரத்தோட பின்னூட்டம் போட்டு நம்பளை ஒருவழி பண்ணிடுவாங்க”

 “அதான் ஆகப் போகுது”

 “ஓக்கே வெயிட் பண்ணலாம்”

Advertisements

16 comments

  1. டாக்டரிடம் அத் தின்னாதே இத தின்னாதே என்று சொல்ற மாதிறில இருக்கு நீங்க சொல்றத பாத்த வாக்கிங் போகிறவங்கலா போகம இருக்க சொல்விங்க போல… எது எப்படியோ படிக்க ஹாஸ்யமா இருக்கு…

  2. டாக்டரிடம் போனல் அத்த தின்னாதே இத்த தின்னாதே என்று சொல்ற மாதிறில இருக்கு, நீங்க சொல்றத பாத்த வாக்கிங் போகிறவங்கலா போகம இருக்க சொல்விங்க போல… எது எப்படியோ படிக்க ஹாஸ்யமா இருக்கு…

  3. மார்கழி மாசம் விடிகாலையில் கோலம் போடுவதே, ஹோஸோன் படலம் கீழே இறங்குவதால், முழு பயனும் அடைவதற்கே என்றும் நம்ம “பாய்”கள் காலை நேரத்தில் தொழுவதற்காக பள்ளிக்குச் செல்வதும் மேற்சொன்ன காரணத்திற்காகத்தான் என்று யாரோ சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்.
    ஆனால் உங்கள் விளக்கம் வித்தியாசமாக உள்ளதே!
    மேலும் விவரிக்கவும்

  4. நீங்க சொல்றது சரி தான் ozone is a disinfecting agent. Water purified by ozone அப்படினு label ஒட்டி இருக்கும். நம்ப ஆளுங்க அத வேற மாதிரி புரிஞ்சுக்கிட்டு walk போறாங்க.

  5. சின்ன வயசுல காலைல எழுந்து படிச்சா சீக்கிரம் மண்டைல ஏறும்னு சொலுவாங்க, அதுக்கு காரணம் ஹோஸோன் இருக்கும் , பிரம்ம முஹூர்த்தம் இந்த மாரி நிறைய காரணங்கள் சொன்னாங்க. நீங்க சொல்றது நேர் மாறா இருக்கே. சற்று விளக்கவும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s