அன்பு டாக்டர்களே, அருமை ரெப்புகளே!

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாக் காதல் நோயாளனாக இருந்தால் மட்டுமே டாக்டர் வீட்டில் பொறுமையாகக் காத்திருக்க முடியும்.

 ஆனால் அப்படிப்பட்டவர்களுக்குக் கூட நிறைய சோதனைகள் உண்டாகின்றன. உதாரணம் : டோக்கன் சிஸ்டம் இல்லாத டாக்டர்கள் வீடு.

 இந்த மாதிரி டாக்டர்களின் கதவருகில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க முண்டுவது போல ஒரு ஆங்க்ரி மாப் எப்போதும் நிற்கிறது. கதவு திறக்கப்படும் போதெல்லாம் ஃபயர் ஆக்ஸிடெண்ட்டிலிருந்து தப்பிக்கிற மாதிரி ஒரு கூட்டம் உள்ளே போய் விழும். சில சமயம் டாக்டரே மல்லாக்க விழுகிற அளவுக்குப் போகிறது.

 டோக்கன் சிஸ்டம் இருக்கிற இடங்களில் வேறு மாதிரி பிரச்சினைகள். காலையில் வந்து டோக்கனை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுகிறார்கள். கிறுக்கன் மாதிரி ஒன்றரை மணிநேரம் கிளினிக்கில் நாம் காத்திருப்போம். அவர்கள் ஜாலியாக டிவி பார்த்துவிட்டு திருக்கழுக்குன்றம் கழுகு மாதிரி குறுக்கில் புகுந்து போவார்கள்.

 இன்னும் சிலர் எந்த பிரியாரிட்டியும் இல்லாமல் வாம்மா மின்னலு என்று டாக்டர் அழைத்தது போல விலுக் விலுக்கென்று நமக்கு முன் புகுந்து விடுவார்கள்.

 எங்கள் குரோம்பேட்டை டாக்டர் ஒருவரது கிளினிக்கில் வேறு மாதிரி கழுத்தறுப்பு.

 பகலில் பசுமாடு தெரியாத 275 வயது ஆள் ஒருத்தரை டோக்கன் தருவதற்கு வைத்திருக்கிறார். உள்ளே மூன்று பேர் மட்டுமே இருக்கும் போது 37ம் நம்பர் டோக்கன் தருவார்! ஏற்கனவே உட்கார்ந்திருப்பவர் 48ம் நம்பர் டோக்கன் வைத்திருப்பார்.

ஒரு நாளைக்குக் குறைந்தது 8000 ரூபாய் சம்பாதிக்கும் அவர் டோக்கன் தருகிற ஆளுக்கு சம்பளமாக மாசம் ஆயிரமோ ரெண்டாயிரமோ தர மூக்கால் அழுவதால், இந்த மாதிரி வீதியில் படுத்திருக்கிறவர்கள், ரயிலில் பிச்சை எடுப்பவர்கள், ஐம்புலன்களில் மூக்கு மட்டுமே வேலை செய்பவர்கள் இவர்களை மட்டுமே வேலைக்கு வைப்பார். சம்பளத்தைக் குடு என்று கேட்பதற்குள்ளாகவே அவர்களுக்கு சுவாசம் நின்று விடும். ஆகவே போட்டதைத் தின்றுவிட்டு கார்ஷெட்டில் கிழிந்த பாயில் படுத்திருப்பார்கள்.

 இது முதல் கழுத்தறுப்பு.

 அடுத்தது மஹாகனம் பொருந்திய மெடிக்கல் ரெப்புகள்.

 அவர்கள் டோக்கனும் வாங்குவதில்லை, காத்திருப்பதும் இல்லை. கதவு திறந்ததும் உள்ளே பூரும் அவர்களைப் பார்க்கும் போது தப்பான பழமொழி ஞாபகம் வரும். அவர்களோடு சண்டை போட்டுப் பாருங்கள், ம்ம்ம்ஹூம். கல்லுளி மங்கன் மாதிரி உட்கார்ந்திருப்பார்கள்.

 அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அவர்களுக்குப் பாவம் பிழைப்பு!

 நோயாளிகளை விட அவர்களுக்கு அதிக பிரியாரிட்டி தரும் டாக்டர்களைச் சொல்ல வேண்டும். காரணம் அவர்கள் தரும் ஓஸி மருந்துகள்.

 மருந்துக் கம்பெனிகள் என்ன ஐடியாவில் இந்த இலவச சாம்ப்பிள்களைத் தருகின்றனவோ, ஆனால் டாக்டர்கள் சிலர் (கவனிக்கவும், சிலர்) பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். எங்க ஊர் டாக்டர் வெறும் பிரிஸ்கிரிப்ஷன் தருவதோடு சரி. மருந்தே யாருக்கும் தருவதில்லை. ஓஸி வாங்குகிற மருந்துகளை என்னதான் செய்வாரோ! ஆனால் ஒரு நாளைக்கு நாற்பது ரெப்புகள் வருவார்கள். அவர் ஓஸி மருந்து வாங்கும் நேரத்தில் எந்தப் பேஷண்ட்டாவது செத்தாலும் அவருக்குக் கவலை இல்லை.

முப்பத்தைந்து வருடங்களாக பிராக்டீஸ் செய்து வரும் அவர் ஆரம்பத்தில் இப்படியெல்லாம் இல்லை.

 கண் தெரியாமல், காது கேட்காமல், எழுதும் போது கை வைப்ரேட்டர் மாதிரி ஆடுகிற இந்த வயதில்தான் இவ்வளவு பணத்தாசை.

 இது மாதிரி டாக்டரையோ, மெடிக்கல் ரெப்பையோ நான் பார்த்ததே இல்லை என்று சொல்பவர்கள் கையைத் தூக்குங்கள்?

Advertisements

18 comments

 1. நான் கையைத் தூக்கிட்டேன். !
  ஏன்னா, நான் பல டாக்டர்களைப் பாத்திருக்கேன். !
  சிலர், இது மாறி இல்லவே இல்லை.
  சரியா ?
  வரட்டா ?
  நன்றி.

 2. ச்சும்மா பின்னிட்டீங்க போங்க!! நியாயமான ஆதங்கங்கள்தான்!! நம்மில் யாருமே இதைத் தாண்டித்தான் தங்கள் நலனைப் பேணிக்கொண்டிருப்பார்கள்.

  //அவர்கள் ஜாலியாக டிவி பார்த்துவிட்டு திருக்கழுக்குன்றம் கழுகு மாதிரி குறுக்கில் புகுந்து போவார்கள்.//

  இதைப் படித்து விட்டு உங்கள் கவலை, ஆதங்கம் மீறி வாய்விட்டுச் சிரித்தேன். இல்லையா பின்னே, ‘வாய் விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும்’னு படித்திருக்கோமே!!

 3. என்னால் கையைத் தூக்க முடியாது. அப்புறம் இரண்டு தோள்பட்டைகளிலும் ஏற்படும் வலியைப் போக்கிக் கொள்ள நான் டாக்டரிடம் போக வேண்டும். நீங்கள் விவரித்திருக்கிற காட்சிகளையெல்லாம் எரிச்சலுடன் பார்த்து டென்ஷன் ஆகி கோபத்தில் உள்ளுக்குள்ளேயே கத்திக் கொண்டு உட்கார்ந்து என் முறை வரும் போது உள்ளே போனால் டாக்டர் கேட்கும் முதல் கேள்வி ரொம்ப நேரமா வெயிட் பண்ணறீங்களா? அட போங்கப்பா…

 4. அனுபவம் பொது! டோக்கன் தராத பல் டாக்டரைப் பார்க்கப் போய் அவ்வப்போது குறுக்கிட்ட அலைபேசியை அட்டென்ட் செய்ய எழுந்த போதெல்லாம் என் இடம் பறிபோனதில் வெறுத்துப் போய் வீடு வந்து விட்டேன்.

 5. “ஏற்கெனவே வந்தவன்தானே நான்…ஏன் “மட்டறுக்கக்” காத்திருக்கிறது?”
  ஸ்ரீராம்.. யார் கிட்டே டோக்கன் வாங்கினீங்க? எத்தனாவது நம்பர் கொடுத்தாரு? 🙂 அனேகமா மூக்கு மட்டும் வேலை பண்றவரை ஜவகர் வேலைக்கு வெச்சு இருப்பாரா இருக்கும்.அதனாலதான் 😀

 6. நிச்சயம் தொல்லை தான் இங்கெல்லாம். டோக்கன் இல்லாமல் தொலைபேசி மூலம் முன்கூட்டியே நம்பர் போட்டுவிடுகிறார்கள் இங்கே தில்லியில்…. அங்கே நேரடியாக சென்று காத்திருக்க, அவர்கள் சொகுசாக வந்து பார்த்து செல்கிறார்கள்…. 🙂

  நல்ல பகிர்வு… “அனுபவித்து” எழுதி இருக்கீங்க!

 7. முறைப்படுத்தல் தேவை, அதற்கு வழி இருக்கு, என்ன அதற்கு மக்கள் போராட வேண்டும், நோய் வந்தால் தான், இந்த கண்றாவியெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது, அப்புறம் மறந்து போகும் விசயமாகிவிடும். நோய் நொடியின்றி வாழ, இந்த கண்ணோளியை பாருங்கள், இலவசம் தாங்க! http://anatomictherapy.org/YoutubeTreat.html முடிந்தால் இது பற்றி ஒரு பதிவை தட்டி விடுங்கள், புண்ணியம் கிடைக்கும்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s