கட்டாததை எப்படி அவிழ்ப்பது?

ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ராஜஸ்தான் பாலைவனம் வழியே தங்கள் ஒட்டகங்களுடன் போய்க்கொண்டிருந்தனர். சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியதால் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு தங்க முற்பட்டார்கள். ஒட்டகங்களைத் தரையில் கழியை அடித்து கயிற்றால் கட்டிக் கொண்டு வந்த போது கடைசி ஒட்டகத்திற்கு கயிறு, கழி இரண்டும் இல்லை.

ஒட்டகத்தைக் கட்டாமல் விட முடியாது. தொலைந்து போனால் தேடிப்பிடிப்பது இயலாத காரியம். செய்வதறியாது தவித்தார்கள்.

வழிப்போக்கர் ஒருவர் அவ்வூர்ப் பெரியவர் ஒருவர் பெயரைச் சொல்லி, எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வும் உண்டு என்று சொல்லி அவரிடம் அந்த நாடோடிகளை அனுப்பி வைத்தார்.

பிரச்சினையைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பெரியவர் யோசனையோடு தாடியை நீவிக் கொண்டார். பிறகு, “சரி, கயிறு இல்லாவிட்டால் பரவாயில்லை. அந்த ஒட்டகத்துக்குப் பக்கத்தில் போய் அதைக் கட்டி வைப்பது போல் பாவனை செய்யுங்கள்” என்றார்.

பெரியவர் ஏதோ உளறுகிறார்கள் என்று நினைத்தாலும் அவர் சொன்னதைச் செய்து பார்ப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை அவர்களுக்கு. அவர் சொன்னது போலவே பாவனை செய்து விட்டுப் படுக்கப் போய்விட்டார்கள்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குறிப்பிட்ட அந்த ஒட்டகத்தைத் தேடிப் போனார்கள். ஆச்சரியம்! அந்த இடத்திலிருந்து நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது!

சந்தோஷமாகக் கட்டியிருந்த ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, கூடாரங்களையும் கழற்றிக் கொண்டு புறப்படத் தயாரானபோது மறுபடியும் பிரச்சினை.

கட்டப்பட்டதாக பாவ்லா காட்டப்பட்ட ஒட்டகம் நகர மறுத்தது. அடித்தாலும் உதைத்தாலும், தள்ளினாலும் அங்கேயே நின்றது. மறுபடியும் அதே பெரியவரிடம் போனார்கள்.

 “அதை அவிழ்த்து விட்டீர்களா இல்லையா?” என்று கேட்டார்.

பெரியவருக்கு மூளை கீளை பிசகிவிட்டதா என்று சந்தேகப்பட்ட நாடோடிகள், “அதைத்தான் கட்டவே இல்லையே?” என்றார்கள்.

“கட்டினது மாதிரி பாவனைதானே காட்டச் சொன்னீர்கள். அதைத்தான் செய்தோம்”

 “அப்போ அவிழ்த்த மாதிரி பாவனை செய்யுங்கள்”

“ஏன்? நாங்கள்தான் கட்டவே இல்லையே?”

 “சொன்னதைச் செய்யுங்கள்”

அவிழ்த்த மாதிரி பாவனை செய்ததும் ஒட்டகம் நடக்க ஆரம்பித்தது.

இது சுரேஷ் பத்மனாபன் எழுதிய On cloud 9 என்கிற ஆங்கில நூலில் அவர் பயன்படுத்தியிருக்கும் கதை. எந்தக் கருத்தை வலியுறுத்த அவர் இதைச் சொன்னார் என்று ஊகிக்க முடியுமா?

15,000 க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றிருக்கும் இந்த நூல் தமிழில் வர இருக்கிறது. அதில் இதற்கு விடை இருக்கிறது. தமிழ்ப்பதிப்பின் ஆசிரியர் யார் தெரியுமா?

Advertisements

19 comments

 1. நீங்கள் எழுதாத புத்தகத்தை – வெளியிடாத இந்த பொழுது வரை , பார்க்காத நாங்கள் – படிக்காத எங்கள் அனுபவத்தை எப்படி உணர்து, நீங்கள் தான் முழி பிதுங்காவண்ணம் மொழி பெயர்த்துள்ளீர்கள் என்பதை கண்டுபிடித்திருக்கிறோம். ? !
  அதையும் அந்த ராஜஸ்தான் பெருசுகிட்டே சொல்லவும்.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

 2. மட்டறுத்தல் சோதனை!

  //”கட்டாததை எப்படி அவிழ்ப்பது?”//

  கட்டி விட்டு அவிழ்க்க வேண்டியதுதான்!

  சம்பந்தமில்லாத ஒரு கேள்வி! சலங்கை ஒலி படத்தின் ஒரு பாடலிலும், ஹிந்தி லவ் ஸ்டோரி படப் பாடல் காட்சி ஒன்றிலும் இல்லாத வீட்டைக் கட்டி, இல்லாத பசுவிடம் பால் கறப்பார்களே ஞாபகம் இருக்கோ?

 3. \\எந்தக் கருத்தை வலியுறுத்த அவர் இதைச் சொன்னார் என்று ஊகிக்க முடியுமா?//

  To stress that we are bound by our routines.

  There was a famous caption of Emirates “When was the last time you did something for the first time”.

 4. “தூங்கறவனை எழுப்பலாம்; தூங்கற மாதிரி நடிப்பவனை என்ன செய்வது? என்று கேட்டால், எழுப்பற மாதிரி நடிக்கலாம்”னு யாரோ சொன்னது ஞாபகத்துகு வருகிறது. வாழ்த்துகள் ஜவஹர்!

   1. moralனு சொல்ல வந்தேன்.. சட்டுனு தமிழ் தோணலிங்க. ஒட்டகங்களோட நிறுத்திக்கிட்டா பாதகமில்லே. அதை மனுசங்களுக்கும் extrapolate செய்யமுடியாதுனு தோணிச்சு.

 5. கட்டணுமாம்… அப்பறம் அவுத்து விடணுமாம்… இந்த இக்கட்டிலிருந்து விடுபடணும்னா, வேளா வேளைக்கு அதுவே அட்டோமேட்டிக்கா கட்டிக்கணும், அதுவே அவுத்துக்கணும்… இது முடியும்னு தோணுது ஜவஹர்ஜி….

  1. கார்த்தி, நல்ல ஐடியா உங்களுது. திருக்குறள் ஒரு கடல். அதை மேகத்தில் முகர்ந்து வந்து உலகுக்கு மழை பெய்ய வெச்சிக்கிட்டே இர்க்கலாம்!

 6. சௌகரிய வலயம் பற்றிச் சொல்கின்ற அழகிய பதிவு. கதையை ரசித்தேன். ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நானும் இதுபற்றி ஒரு பதிவிட்டிருந்தேன். அந்தப் பதிவையும் பாருங்க. நன்றி. 🙂 http://niram.wordpress.com/2011/09/14/wednesday-variety-3-comfort-zone/

 7. சார்,
  நல்ல பகிர்வு. இந்த பதிவைப் படித்தபின் எனது கல்லூரி கால நினைவொன்று மீண்டது.
  தேனி என்றழைக்கப்படும் நண்பன் வெங்கடேசனிடம் ஒரு திங்கள் கிழமை காலையில் அதி முக்கியமாக நான் கேட்ட கேள்வி “டேய் மாப்பு, எப்படா மதுரைலேர்ந்து வந்த?”
  வெங்கடேசன் : “லேய், நான் போகலடா”.
  நான் : “டேய்….கலக்குற….எப்புட்றா போகாமயே மதுரைலேர்ந்து வந்த?#&*!?”
  வெங்கடேசன் : “லேய், @#$%^&*()!?)(*&^%$#@!:”}{[]||” (ரொம்ப நக்கலும் எகத்தாளமும் தொனிக்க ஒரு உவமானம் / டயலாக் வாங்கிக் கட்டிக்கொண்டேன்).

  பி. கு : அந்த வெங்கடேசன் தற்போது தேனி நகராட்சியில் பொறியாளராக பணியாற்றுகிறா(ர்)ன்.

  http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s