அது அவ்வளவு சிம்ப்பிள் இல்லைங்க!

நண்பரின் வீட்டுக்குள் போனபோது அவர் தலையை ஆட்டிக் கொண்டும், த்ஸொ..த்ஸொ என்று சப்தம் செய்து கொண்டும் கண்ணில் கரகரவென்று கண்ணீர் விட்டபடியும் இருந்தார்.

 “ரொம்ப ஃபீல் பண்ணாதே விஜய் டிவி கோபி பத்தி பலபேருக்கு அப்படித்தான் ஐடியா இருக்கு” என்றேன்.

 என்னை நிமிர்ந்து பார்த்து ‘என்ன சொன்னே?’ என்கிற மாதிரி கை ஜாடையில் கேட்டார். அப்போதுதான் கவனித்தேன். காதில் இயர் ஃபோன் மாட்டியிருந்தார். எடுத்து என் காதில் மாட்டி, “கேளு” என்றார்.

 ஏஸுதாஸின் ‘மனதில் உறுதி வேண்டும்’ பாட்டு.

 “பிரமாதமான பாட்டு. பாரதியார் பாட்டுன்னாலே தேசபக்திப்பாட்டு, கண்ணம்மா பாட்டு, பராசக்தி பாட்டு இதெல்லாம்தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். இந்த மாதிரி சிந்தனையைத் தூண்டற பாட்டுக்கள் பாலச்சந்தருக்குத்தான் ஞாபகம் வரும். அதைப் பிரபலமாக்க இளையராஜாவால்தான் முடியும்”

 “சிந்தனை?”

 “யெஸ்… இந்தப் பாட்டில ஒரு விசேஷம் இருக்கு. பாட்டோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?”

 “பாரதி பாட்டுக்கு அர்த்தம் தெரியறதில என்னைக்குக் கஷ்டம் இருந்திருக்கு. எளிமையான வார்த்தைகள்ள கவிதை எழுதறதுதானே அவரோட சிறப்பே”

 “இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுமா?”

 “மனதில் உறுதி, வாக்கில் இனிமை, நல்ல நினைவு, பெண் விடுதலைன்னு உயர்ந்த விஷயங்களைச் சொல்லியிருக்கார். இது புரிய கோனார் நோட்ஸோ, பரிமேலழகர் உரையோ தேவையில்லையே… ஏன் திரும்பத் திரும்ப அதையே கேட்கிறே?”

 “ம்ம்ஹூம். அப்படி டிஸ்க்ரீட்டா அர்த்தம் பார்க்கக் கூடாது இதுக்கு”

 “பின்னே?”

 ”ஒவ்வொரு செட்டாப் பாக்கணும்”

 “எப்படி?”

 “மனதில் உறுதி வேண்டும் என்கிறதையும், வாக்கினிலே இனிமை வேண்டும் என்பதையும் சேர்த்துப் பொருள் பார்க்கணும்”

 ”அறம் செய்ய விரும்புவையும், ஆறுவது சினத்தையும் ஒண்ணாச் சேர்ப்பது போலத்தான் அது இருக்கும்”

 “இல்லை. உறுதியா இருக்கிறது என்கிறதைச் சரியாப் புரிஞ்சிக்காதவங்க இருக்காங்க. நோ.. நோ நான் அதுல உறுதியா இருக்கேன். என்னை மாத்த எந்தக் கொம்பனாலயும் முடியாது. ஐயம் வெரி ஸ்ட்ரிக்ட் ந்னு பல்லைக் கடிச்சிகிட்டு சொல்றவங்களைப் பார்த்திருப்பே.

 என் பிணத்து மேல ஏறித்தான் நீ போகணும் அதுக்கு ந்னு சொல்றவங்களைப் பார்த்திருப்பே. மீறிப் பண்ணா கொலை பண்ணிடுவேன்னு சொல்றவங்களைப் பார்த்திருப்பே. இப்படி உறுதியை நோகடிக்கிற சொற்களைப் பயன்படுத்தி வெளியிட வேண்டியதில்லை. மனத்தளவில் உறுதியா இருந்தாப் போதும். வார்த்தைகளின் இனிமை உறுதியை எந்த விதத்திலும் கெடுத்துடாது. இதைச் சொல்லத்தான் மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்ன்னு சொன்னார்”

 “சரியா இருக்கிற மாதிரித்தான் இருக்கு. அடுத்த வரிக்கு உன் லாஜிக் சரியா இருக்கா பார்க்கலாம். நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் அதுக்குச் சொல்லு”

 “அதுவும் ஒரு ஜதையா அர்த்தம் பார்க்க வேண்டியதுதான். ஆர்டர் மட்டும் உல்ட்டா பண்ணிக்கணும். எதுகைக்காகத் தலைகீழா சொல்லியிருக்கார். நெருங்கின பொருள் கைப்பட வேண்டும், நினைவு நல்லது வேண்டும்ன்னு மாத்திக்க. நெருங்கினன்னா மனசுக்கு நெருக்கமான அதாவது பிடிச்ச எதையும் அடைந்தாக வேண்டும், ஆனா கெட்ட எண்ணம் கூடாது. அதாவது தப்பான ஆசைகள் கூடாது, ஆசைப்பட்டதை அடைய அடுத்தவனைக் கவிழ்க்கிற மாதிரியான வழிமுறைகள் கூடாதுன்னு அர்த்தம்”

 ”அட! இந்த ஆங்கிள்ள அந்தப் பாட்டை நான் பார்த்ததே இல்லையே. இரு முழுசா ஒருதரம் இந்த ஐடியாவோடப் பார்க்கிறேன்”

 “ம்ம்ம். டிரை பண்ணு அது ஒரு சுவாரஸ்யமான சிந்தனையா இருக்கும். எங்கேயாவது ஸ்டக் ஆனா எனக்கு ஃபோன் பண்ணு”

Advertisements

19 comments

  1. அண்ணாத்தே
    அடுத்த பதிவுலே
    ஏன் ரெண்டு காதுலே ரெண்டு ஓட்டெகீது
    ஏன் ஒரு மூக்குலே ரெண்டு ரெண்டு ஓட்டெகீது
    ஏன் ஒரே வாய்லே ஒரே ஒரு ஓட்டெகீது
    அப்டீனு போடுபா.
    எனக்கு அந்த வொண்மே தெரிஞ்சாகணும் நைனா.
    நீ அல்லாத்தயும் டிஃப்ஃபரன்ட்டாவே சொல்ரேபா.
    அனாலும் கரீட்டவே சொல்ரேபா

  2. # “ரொம்ப ஃபீல் பண்ணாதே விஜய் டிவி கோபி பத்தி பலபேருக்கு அப்படித்தான் ஐடியா இருக்கு” என்றேன்.# எப்படி? இதுக்கு வேற போஸ்ட் எதுவும் பாக்கணுமா?

    ..நிற்க..உங்களது அனைத்து சிறந்த பதிவுகளையும் புன்னகையில்லாமல் படித்து முடித்தேன்…அஞ்சே நிமிஷத்தில ஹிந்தி கத்துக்குங்க வைத்தவிர… அதைப்படிக்கும்போது சிரித்து சிறிது கண்ணில் நீர் வந்து விட்டது.

  3. # “ரொம்ப ஃபீல் பண்ணாதே விஜய் டிவி கோபி பத்தி பலபேருக்கு அப்படித்தான் ஐடியா இருக்கு” என்றேன்.# எப்படி? இதுக்கு வேற போஸ்ட் எதுவும் பாக்கணுமா?

    ..நிற்க..உங்களது அனைத்து சிறந்த பதிவுகளையும் புன்னகையில்லாமல் படித்து முடித்தேன்…அஞ்சே நிமிஷத்தில ஹிந்தி கத்துக்குங்க வைத்தவிர… அதைப்படிக்கும்போது சிரித்து சிரித்து கண்ணில் நீர் வந்து விட்டது.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s