திருக்குறள் என்னும் திங்கிங் டூல்

”அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்ன்னா என்ன சார்?”

 “இதுக்கு நான் உடனே பதில் சொல்ல மாட்டேன்”

 “ஏன், உங்களுக்கே தெரியாதா?”

 “அப்படி இல்லை. ஒரு விஷயம் என்னன்னு விளக்கிச் சொல்லணும்ன்னா உன் வழியிலயே போய் சொன்னாத்தான் ஈஸியாப் புரியும். முதல்ல அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்ன்னா உனக்கு என்ன ஐடியா இருக்குன்னு சொல்லு. அதைத் திருத்தியோ, கூட்டியோ, குறைச்சியோ சொல்றது எனக்கும் ஈஸி, உனக்கும் நல்லாப் புரியும்”

 “எனக்கு ஒரு இழவு ஐடியாவும் இல்லை. இருந்தா உங்களை ஏன் கேட்கப் போறேன். இருந்தா அதுதான் கரெக்ட்டுன்னு நினைச்சிகிட்டுப் போயிருக்க மாட்டேனா?”

 “அதைக் கேட்கிறப்போ மனசில ஒரு பிக்சர் வருமில்லே? உனக்கு என்ன பிக்சர் வருது?”

 “ஒரு ஆள் உட்கார்ர மாதிரி பெரிய அட்டைப் பொட்டி ஒண்ணு இருக்கு. அதுக்குப் பக்கத்துல உட்கார்ந்து ஒருத்தன் யோசிக்கிற மாதிரி பிக்சர் வருது”

 “அவ்வளவுதான். யு காட் தி பாயிண்ட்”

 “என்னது, அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்ன்னா அட்டைப் பொட்டிக்கு பக்கத்தில உட்கார்ந்து யோசிக்கிறதுதானா? உலகத்திலேயே ரொம்ப இன்னவேட்டிவ் ஆட்கள் எல்லாம் பேக்கிங் செக்‌ஷண்லதான் இருப்பாங்களா அப்ப?”

 “ஒரு பாக்ஸுக்குள்ள உட்கார்ந்து இருக்கும் போது உன்னுடைய வியூ ரொம்பச் சின்னதா இருக்கும். ஒரு ஆறடிக்கு நாலடி எல்லைதான் அது. வெளியே வந்தா மொத்த உலகமும் உன் பார்வைல இருக்கும்.”

“கொஞ்சம் புரியுது”

 “அதாவது எதை எடுத்தாலும் ஒரு கண்டிஷண்ட் தின்கிங்தான் நமக்கு இருக்கு. அதிலேர்ந்து வெளியில வந்தாத்தான் புதுமைகள் செய்ய முடியும். முன்னேற்றங்கள் அடைய முடியும். உதாரணத்துக்கு சொல்லணும்ன்னா ஆட்டுக்கல்லுக்கு மிஷின் கண்டுபிடிக்கும் போது கல்லைத்தான் சுத்த விட்டாங்க, குழவியை இல்லை. ஏன்னா, அப்படிப் பண்ணாத்தான் மாவைத் திரும்பத் திரும்ப குழிக்குள் போக வைக்க இன்னொரு மோட்டார் வைக்க வேண்டியதில்லை.”

 “ஆஹா, ஐடியா நல்லா இருக்கே. எப்படி சார் அந்த மாதிரி திங்கிங்கை வளர்த்துக்கிறது?”

 “நான் ஒரு திருக்குறள் சொல்றேன். அதுக்கு அர்த்தம் சொல்றியா?”

 “அதுதான் அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங்கா?”

 “அவசரப்படாதே. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு ந்னு ஒரு குறள் இருக்கு”

 “இருக்கா? நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”

 “அதுக்கு என்ன அர்த்தம்?”

 “இதுல என்ன சார் பெரிய அர்த்தம், சாவுங்கிறது உறக்கம் மாதிரி, பிறப்பு உறங்கி முழிக்கிற மாதிரின்னு அர்த்தம்”

 “இதுல என்ன கருத்து?”

 “பிறப்பும் சாவும் தூக்கமும் முழிப்பதும் போல ரொம்பச் சாதாரணமான விஷயங்கள். மாறி மாறி நடந்துகிட்டுத்தான் இருக்கும். வாழ்க்கை நிரந்தரமில்லை”

 “அதாவது, நிலையாமைங்கிற அதிகாரத்தில் சொன்னதால இந்த அர்த்தம் சொல்றே?”

 “நான் மட்டுமில்லை. திருக்குறள் உரை எழுதின எல்லாருமே இதைத்தான் சொல்றாங்க”

 “சரி, இது இல்லை அர்த்தம். இதுக்கு வேறே அர்த்தம் சொல்லித்தான் ஆகணும்ன்னு வெச்சிக்க. மறுபிறவின்னு ஒண்ணு கிடையவே கிடையாது, அப்ப என்ன சொல்வே?”

 “கஷ்டம்தான்”

 “கஷ்டம்தான், அவுட் அஃப் பாக்ஸ் திங்கிங் ஈஸி இல்லை. பிறப்பு, இறப்பு, மறுபிறவி எல்லாத்தையும் மறந்துடணும். அந்த வரையரைகளைக் கடந்து வெளியில வா”

 “ம்ம்ம்ம்… கொஞ்சம் ரிமோட்டா இருக்கும் பரவாயில்லையா?”

 “எவ்வளவு ரிமோட்டா இருக்கோ அவ்வளவு இன்னவேட்டிவ்”

 “இப்ப ரோட்ல ஏதோ யோசனையா போய்கிட்டு இருக்கோம். பின்னால ஒரு கார் இடிக்கிற மாதிரி வருது. வந்து பிரேக் போடறான். நமக்கு உயிரே போய்ட்டு வருது. ‘யோவ்.. என்ன தூங்கிகிட்டே நடக்கிறியா? போய்ச் சேர்ந்திருப்பேடா’ ந்னு சொல்றான். நாமே சரியான சமயத்தில பார்த்து சடக்குன்னு விலகியிருந்தா அப்பா, பிழைச்சோம்டான்னு உயிர் வரும்”

 “வெரிகுட், நல்ல சிச்சுவேஷன்”

 “மரணம்ங்கிறதை உணர செத்துப் பார்க்கணும்ன்னு அவசியமில்லை. சுற்றிலும் நடக்கிறதில கவனமில்லாம தூங்கிகிட்டு இருக்கிறது மரணத்துக்கு சமமானது. சரியான சமயத்தில் முழிச்சிக்கிறது பிறப்பு மாதிரின்னு அர்த்தம்”

 “எக்ஸல்லண்ட். இதே மாதிரி எல்லாக் குறளுக்கும் சொல்வியா?”

 “சொல்வேனான்னு தெரியாது. ஆனா டிரை பண்றது நல்ல திங்கிங் எக்ஸர்சைஸா இருக்கும்ன்னு தெரியுது”

Advertisements

13 comments

 1. சார்
  பிரமாதம்.
  தூங்கிக்கினே வேலை செய்யுராப்போல பிஸியா இருக்குற என்ன டப்புன்னு முழிக்க வச்சிட்டீங்க சார்.
  பிரமாதம்.
  அருமையான விளக்கம்.
  இத்தான் சரியான பொழிப்புரை.
  மத்த சொச்சம் 1329 யும் யோசிச்சு வையங்க. PLEASE.
  காத்துக்கிட்டு இருக்கோம்.
  நன்றி.
  வணங்கி மகிழ்கிறேன்.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

 2. நேற்று பாரதி, இன்று வள்ளுவரா?
  இதே போல லியோனியுடைய பட்டி மன்றத்தில்
  (பட்டி = நாய், மன்றம் = கூட்டம். ஃ பட்டிமன்றம் = நாய்கள் கூட்டம்?, சில சமயத்தில் “பெட்டிக்கு வெளியில்” யோசித்தால் இப்படியும் புரிந்து, செருப்படி கிடைக்கும்)
  “நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளத்தாச்சி”-க்கு அர்த்தம் சொன்னது, ஞாபகத்துலே வருகிறது.

  இந்த திறமையை
  (ஐ மீன், அவுட் ஆஃப் த பாக்ஸ் தின்கிங்க், நாட் ஓரக்கண், புள்ளதாச்சி etc)
  குழந்தைகளிடம் வளர்த்தால், நிச்சயம் அவர்களின் எதிர்காலம் சிறக்கும் என்பது எனது கருத்து

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s