இலக்கிய எழுத்தும் வெகுஜன எழுத்தும்

பயப்பட வேண்டாம். இது சீரியஸான திறனாய்வுக் கட்டுரை அல்ல. ஆகவே இலக்கியவாதிகள் என் மேல் பாயத் தயாராக வேண்டாம்.

பிரபல பத்திரிகைகள் உங்கள் எழுத்துக்களைப் பிரசுரத்திற்கு ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டனவா? உங்களைத் தவிர யாருக்கும் (அல்லது உங்களுக்கே கூட) என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லையா? உரையாடலே இல்லாமல் வெறும் நேரேஷனாக முழ நீளப் பாராக்களாகவேதான் எழுதுவீர்களா? எழுத்தில் பொதுவாக ஒரு இறுக்கமும், கடுப்பும் தெரிகிறதா? ஒரு பாராவில் சொல்ல வேண்டியதை எண்ணூறு பக்கங்களில் எழுத உங்களால் முடியுமா? வட்டார வழக்கு என்கிற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கைநாட்டுக்கள் மட்டுமே உபயோகித்து வரும் சொல்லாட்சிகள் (அசிங்கமான வசவுகள் உட்பட) உங்களுக்குத் தெரியுமா, அதைப் புகுத்த வேண்டும் என்பதற்காகவே கதைக்குச் சம்பந்தமில்லாத சம்பவங்களை அமைக்கத் தெரியுமா?

எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் ஆம் என்றால் உங்களுக்கு மிஞ்சின இலக்கியவாதி கிடையாது.

நீங்கள் உடனடியாக, கைக்காசு செலவழிந்து நஷ்டமாகிற அளவு சொற்பமாக விற்கிற ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும். வேண்டா வெறுப்பா புள்ள பெத்து காண்டாமிருகம்ன்னு பேர் வைத்தது போல அந்தப் பத்திரிகைக்கு ஒரு பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அட்டையில் விபத்தில் நசுங்கின மாதிரி நசுங்கிய முகங்கள் கொண்ட சித்திரங்கள் வரவேண்டும். அட்டையில் வருகிற எழுத்துக்கள் எல்லாமே குழந்தை கிறுக்கின மாதிரி கோணல் மாணலாகவே இருக்க வேண்டும். பிரசுரிக்கிற கதை, கட்டுரை, கவிதை எதிலுமே ஆப்டிமிஸம் கூடாது. எல்லாமே ஒப்பாரியாக இருக்க வேண்டும். படிக்கிறவர்கள் அழுது அழுது மூக்கைச் சிந்திச் சிந்தி குரங்கு மாதிரி சிவக்க வேண்டும், அல்லது ரத்தம் கொதித்து கை நடுங்கி பல் கிட்டிக் கொள்ள வேண்டும். நகைச்சுவை உங்களுக்குப் பரம விரோதியாக இருக்க வேண்டும். உங்கள் எழுத்துக்களும் சரி நீங்களும் சரி மறந்தும் சிரித்து விடக் கூடாது.

இப்போது உங்களுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்தாகி விட்டது. இதற்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது,

சமகால எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் விமர்சனம் செய்வது, அவர்களில் அதிகப் பிராபல்யம் உள்ளவர்களை எழுத்து வியாபாரி (அல்லது எழுத்து விபச்சாரி) என்று வைவது, எல்லாவற்றிலும் கோணக் கட்சி பேசுவது, பிரபலமடைந்த, மக்களைச் சென்றடைந்த எல்லாமே குப்பை என்று எழுதுவது என்றெல்லாம் பரபரப்பைத் தருகிற எதுவானாலும் எந்த எத்திக்கும் இல்லாமல் செய்ய வேண்டும். உங்களைப் பைத்தியக்காரன், முட்டாள் என்று மக்கள் பேசப் பேச உங்கள் இலக்கிய அந்தஸ்து அதிகமாகிக் கொண்டே போகும்.

உங்கள் எழுத்துக்கள் நிறைய பிரசுரம் ஆகி, நிறையப் பேர் படித்து, உங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் நீங்கள் வெகுஜன எழுத்தாளர். குட்டிக் கரணம் அடித்தாலும் உங்கள் எழுத்துக்கள் இலக்கியத்தில் சேராது.

Advertisements

22 comments

 1. புரிந்து கொண்டேன்.
  உங்கள் ஆத்திரம், உங்கள் கடும் வார்த்தைகள், மிகவும் நியாயமானதே.
  தெளிவாகத் தொகுத்து எழுதி வைத்தமைக்கு வந்தனமு.
  நன்றி.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

 2. எது இலக்கியம், எது ஜனரஞ்சகம்…? – ரொம்ப சிம்பிளா சொல்லப்போனா – எனக்கு புரிஞ்சது ஜனரஞ்சகம், புரியாதது இலக்கியம் 🙂 சினிமா பாட்டுல ‘ஆ’னு ஆலாபனை வந்தாலே எனக்கு ‘கிளாசிக்’, வரலேன்னா ‘ஜனரஞ்சகம்’, புரிஞ்சிருக்குமே?!

  -MCE

 3. ஆமா
  ஆமா
  ஆமா
  அட, வரிசையா இன்னும் ஆமா..
  என் மனசுல இருந்தது அப்படியே எழுதியிருக்கீங்களே?

  உடனடியாக ஒரு இலக்கியப் பத்திரிகை தொடங்கப் போகிறேன். மொதல்ல வையப் போறது ஜெயமோகனை, அடுத்தது

 4. //இப்போது உங்களுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்தாகி விட்டது//
  //உங்களைப் பைத்தியக்காரன், முட்டாள் என்று மக்கள் பேசப் பேச உங்கள் இலக்கிய அந்தஸ்து அதிகமாகிக் கொண்டே போகும்.//

 5. //அதன் அட்டையில் விபத்தில் நசுங்கின மாதிரி நசுங்கிய முகங்கள் கொண்ட சித்திரங்கள் வரவேண்டும்.// :))))) நீங்கள் அக்மார்க் வெகுஜன எழுத்தாளர் என்பதை இந்த கட்டுரை உணர்த்துகிறது.

 6. அட்டகாசம்! தூள் பறத்திட்டீங்க. 🙂

  சார்! பார்த்து… நாளு பேர் சேர்ந்து உங்களைக் கோதாவுல இறக்கி விட்டுடப்போறாங்க..

  இலக்கியக் கொசுக்கள் கடிச்சா ஹிம்சை ஜாஸ்தி.

  :-)))))

 7. நண்பர் ஜவஹர்,

  கவலையே படாதீர்கள் –
  தமிழ் “அதையும்” தாங்கும் !

  “இதையும்” தாங்கும் !!
  “வேறு எதையும்” கூட தாங்கும் !!!

  உங்களுக்கு தெரியாததா –
  தமிழர்கள் “எல்லாவற்றையும்” ரசிப்பவர்கள் !

  சுவையாக எழுதுகிறீர்கள்.
  நிறைய எழுதுங்கள்.

  -வாழ்த்துக்களுடன்
  காவிரிமைந்தன்

 8. வெறுமனே அழ வைப்பதோ,அல்லது சிரிக்கவைப்பதோ மட்டும் இலக்கியம் ஆகாது.அவை வெறும் பொழுது போக்கு மட்டுமே!சிந்திக்க வைப்பதே இலக்கியம் ஆகும்.

  மேலும் உலகம் முழுவதும் இலக்கியம் என்பதை ஒரு கருத்தார்ந்த (serious?) எழுத்தாகவே பார்க்கின்றனர்.நகைச்சுவைக்கு இங்கு அதிக இடமில்லை.(இது சரியா தவறா என்பது வேறு விஷயம்)

  of course “Three men in a boat” (ஜெரோம் கே.ஜெரோம்)போன்ற ஓரிரண்டு விதி விலக்குகள் இருக்கவே செய்கின்றன.ஆனால் அவை விதியல்ல.

  பின் குறிப்பு:

  1.நண்பர் கடைக்கு வந்து ரொம்ப நாள் ஆகி விட்டது.முடி வேறு எக்கச்சக்கமாக வளர்ந்து விட்டது அதென்னமோ சலூன் என்றாலே நண்பர் கடைதான் நினைவுக்கு வருகிறது.ஒரு laptop சகிதம் வந்துவிட்டால் படிப்பதற்கு படிக்கவும் செய்யலாம் வந்த வேலையும் முடியும்.

  2.ஒருவேளை இலக்கியவாதிகளிடம் இந்த கட்டுரையை படிக்கசொன்னால் அவர்கள் “எங்க எழுத்தை படிப்பதும் ப்டிக்காததும் உங்கள் சுதந்திரம்.புத்தகத்தை மூடி வச்சுட்டு,சட்டையை மாட்டிகிட்டு,உங்கள் வசதிக்கு ஏற்ப பீச்சிற்கோ பார்க்கிற்கோ சென்று ஒரு பத்து ரூபாய்க்கு சுண்டல் வாங்கி மடியில் போட்டுக்கொண்டு,நிதானமாக சாப்பிட்டு கொண்டே ,சுண்டல் கட்டிய பேப்பரை பிரித்து,படித்து ரசிக்கலாமே!”என்று சொல்வார்களோ?

 9. // பிரசுரிக்கிற கதை, கட்டுரை, கவிதை எதிலுமே ஆப்டிமிஸம் கூடாது. எல்லாமே ஒப்பாரியாக இருக்க வேண்டும். படிக்கிறவர்கள் அழுது அழுது மூக்கைச் சிந்திச் சிந்தி குரங்கு மாதிரி சிவக்க வேண்டும், அல்லது ரத்தம் கொதித்து கை நடுங்கி பல் கிட்டிக் கொள்ள வேண்டும். //
  மற்ற விஷயங்கள் எப்படியோ.. மேற்படி எதிர்மறை வாதம் ரொம்ப படுத்துவதாஹ இருக்கும் . ””’நிற்க. தங்கள்
  “‘ குரங்கு போல சிவப்பது” ..என்ற உதாரணம் , ராமானுஜர் . vs .யாதவப்ராஹாசர் சண்டையை நினவு படுத்துகிறது .
  ………velu

 10. இன்னொன்று. இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புகள் தலைகாணி சைசுக்கு இருக்க வேண்டும். இதை எப்படிடா படிப்போம் என்று சோர்ந்து போகச் செய்ய வேண்டும். கொச்சை விரசம் என்று எந்த தடையும் கிடையாது. சொல்லப் போனால் அதுதான் இந்த வகை இலக்கியத்தின் உயிர்நாடி. Uncensored Abridgment என்று விளம்பரம் செய்யப் பட்டதை விளக்க ஒரு பிரபல நிறுவனம் சொன்னது: “ஆபாசத்தை அப்படியே விட்டிருக்கிறோம், போர் பகுதிகளை சுருக்கிக் கொடுத்திருக்கிறோம்!”

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s