”நான் பொய்யைத் தவிர வேறெதுவும் சொல்றதில்லை” என்று ஒருவர் சொல்வது ஒரு மாயச் சுழல். அது பொய் என்றால் என்ன அர்த்தம், நிஜம் என்றால் என்ன அர்த்தம் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதை நான் செய்து கொண்டிருந்த போது ஒரு போலிஷ் (போலிஸ் இல்லை) ஜோக் ஞாபகம் வந்தது.
ஒரு போலந்துக்காரரை பிஸியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
பி.டி.ஓ என்று இரண்டு பக்கமும் எழுதிய ஒரு காகிதத்தை அவரிடம் கொடுத்து விட்டால் போதும்!
************************************************************************
வேற்று மொழியிலிருந்து ஒரு கதையைத் தமிழில் எழுதும் போது அடிப்படையான சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால் என்ன ஆகும்? கீழ்வரும் வரிகளைப் படியுங்கள் :
சோட்டா சேட் ஜூனா பஸாரில் பாவு பாஜி சாப்பிட்டபடி யோசித்துக் கொண்டிருந்தான். பட்பட் வாலா அருகில் நிறுத்தி வருகிறாயா என்கிற மாதிரிப் பார்த்தான். வாஸ்வானி சிலை பக்கத்தில்தான் இருக்கிறது செளரங் லேன். அதற்குப் போய் பட்பட்டில் போவானேன்?
இதே ரீதியில் முழுப் புத்தகத்தையும் உங்களால் படிக்க முடிந்தால் நீங்கள் ஒரு முரட்டு இலக்கிய ரசிகர். ஆனால் பெரும்பாலான தமிழ் வாசகர்கள் அப்படி இல்லை.
போன வாரம் ‘வாகை சூடும் சிந்தனை’ என்றொரு புத்தகம் வாங்கினேன். அது தமிழாக்கம் செய்யப்பட்ட சுய முன்னேற்ற நூல். முழுக்க முழுக்க டிவியில் காலையில் வரும் டப்பிங் செய்த கிறிஸ்தவ நிகழ்ச்சி போலவே இருக்கிறது.
************************************************************************
அறிவகற்றும் என்கிற பதத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் அறிவில்லாமல் செய்து விடும் என்றுதான் தொண்ணூறு சதவீதம் பேர் பதில் சொல்கிறார்கள். கீழ் வரும் குறளில் அந்தப் பதம் அறிவை விசாலப்படுத்தும் என்கிற பொருளில் வருகிறது :
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
இல்லை என்கிறவர்கள் பின்னூட்டலாம்!
***********************************************************************
சளியால் காது அடைக்கிற போது எந்த மருந்தும் பயன்படாது போலிருக்கிறது. மூக்குக்கும், காதுக்கும் டிராப்ஸ் கொடுத்தார் டாக்டர். ஐந்தாறு பாட்டில் வாங்கி ஊற்றி கழுத்துவரை நிறைத்தும் பிரயோஜனமில்லை. காக்காய் மாதிரி தலையைச் சாய்த்துச் சாய்த்துத்தான் கேட்கிறேன் யாராவது பேசும் போது.
இதே பிரச்சின சில வருஷங்களுக்கு முன் வேலூரில் இருந்த போது வந்தது. அப்போது வாசன் என்று ஒரு டாக்டர், “நீங்க செவிடெல்லாம் ஆயிட மாட்டீங்க. இதுக்கு மருந்தெல்லாம் இல்லை. ஆப்பரேஷன் டூ மச். மூக்கைப் பொத்திகிட்டு எச்சல் முழுங்கிகிட்டே இருங்க, ப்ளக்குன்னு விட்டுடும். உடனே நடக்காது பொறுமையா பண்ணிகிட்டே இருங்க” என்று அட்வைஸ் செய்தது நினைவு வந்து அதை முயற்சித்தேன்.
பிளக்கென்று வலது காது திறந்தது என்னவோ நிஜம்தான்.
ஆனால் பச்சக் என்று இடது காது அடைத்துக் கொண்டு விட்டது!
நல்ல பதிவு.
நன்றி.
உடல் மண்ணுக்கு…. உயிர் தமிழுக்கு…. இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு…..
சார்
உங்கள் ரசனை பிரமாதம் சார்.
அருமை.
ஒரு யோசனை சொல்ல ஆசை. தயவுசெய்து பொடியன் என்று கருதி என் கருத்தை கடாசி விட்டு விடாதீர்கள்.
நானும், முப்பது வயது வரை, உங்கள் மாதிரியே, தலையை சாய்த்து சாய்த்துத் தான் கேட்பேன் சளியால் ஆட்கொண்ட போதெல்லாம். கடந்த பத்து வருஷமாக, அன்றாடம் காலை பத்து / பதினைந்து நிமிஷம் நல்ல எண்ணை இரு ஸ்பூன் வாயில் வைத்துக் கொப்பளித்து துப்பி வந்ததில், உள்ளே பல மாற்றம். அந்த சளி தொந்தரவு இல்லை. உள்ளே சுரப்பிகளின் ஊற்றுகளையும் மூக்கின் வழி உள்ளே உள்ள சதைக் கோளங்களையும், இது சரி செய்கிறது.
தமாஷ் என்று இதையும் கிண்டல் செய்து விடாதீர்கள்.
தயவு செய்து முயலவும்.
இரு மாதம் ஆகலாம், பலன் தெரிய.
ஆனால், உபயோகமாக இருக்கும்.
வணங்கி மகிழ்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.
Perth, Australia.
நன்றி ஸ்ரீனி.. முயற்சிக்கிறேன்.
அருமையான, கருத்துள்ள பதிவு. நன்றி நண்பரே!
என் தளத்தில்:
“இரண்டாம் பகுதி – அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?”
அகற்றம் என்ற சொல்லுக்கு அகலம்-பரப்பு-விரிதல் என்றெல்லாம் பொருள் உள்ளது.அதே போல அகற்று என்பதும் TO REMOVE என்றும் EXPAND என்றும் பொருள் கூறப்படுகிறது!! கொஞ்சமே தமிழைப் பிடித்தவர்களுக்கும் சுவாரஸ்யமான தகவல்!!
(நன்றி: தமிழ் அகராதிகள்)
அருமையான, கருத்துள்ள பதிவு. நன்றி நண்பரே!
please read my tamil kavithaigal in http://www.rishvan.com
பிளக்கென்று வலது காது திறந்தது என்னவோ நிஜம்தான்.
ஆனால் பச்சக் என்று இடது காது அடைத்துக் கொண்டு விட்டது
OOVORU VINAIKKUM ORU EDHIR VINAY UNDU- HA HAAA!
JAY
chew bubble cum or yarn.. you will feel relief immediately
உங்கள் பதிவு ஒன்றை வேறொரு தளத்தில் பார்த்தேன்.. உங்களுக்கு எந்த க்ரெடிட்டும் கொடுக்காமல்.. நீங்கள் பார்த்தீர்களா?
http://www.enayamthahir.com/2011/12/blog-post_7146.html
தகவலுக்கு நன்றி பந்து சார். முன்னேயெல்லாம் ரொம்ப பர்டிகுலரா ஸ்கேன் பண்ணிகிட்டு இருந்தேன். பிளாக் ஐடி மட்டுமாவது போடுங்கப்பான்னு சொல்லிகிட்டு இருந்தேன். இப்ப பண்றதில்லை. மறுபடி ஆரம்பிக்கணும் போலிருக்கு.
Interesting .
ஒரு போலந்துக்காரரை/ namma aalay பிஸியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
பி.டி.ஓ என்று இரண்டு பக்கமும் எழுதிய ஒரு காகிதத்தை / or indha posting”i print aditu அவரிடம் கொடுத்து விட்டால் போதும்
ha haa haaah!