மார்கழி மகா உற்சாகங்கள்

மார்கழி மாதத்து நாட்கள் காலை நாலு மணிக்கே எம்.எல்.வி யின் திருப்பாவையுடன் சுறுசுறுப்பாகத் துவங்கும் நாகப்பட்டினத்தில்.

 சுமார் ஒரு டஸன் கோயில்களில் ஒவ்வொன்றும் சில நிமிட இடைவெளியில் திருப்பாவை ஒலிபரப்பு தொடங்கும். அத்தனைக் கோயில்களுக்கு கேட்டர் செய்யுமளவு சவுண்ட் சர்வீஸ்கள் இல்லாததால் அன்பு, ஆதவன் உள்ளிட்ட ஸ்டார் ஆசாமிகள் ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களில் காண்ட்டிராக்ட். நாலு கோயில்களில் ஒரே ஆசாமி சைக்கிளில் போய் இங்கே முடிந்த ரெகார்டை அங்கே போடுவார்.

 ரெகார்ட் போடுவது என்பது எடுத்தமா போட்டமா என்பது மாதிரி சிம்ப்பிள் டாஸ்க் இல்லை. வதக் வதக் என்று சாவி கொடுக்க வேண்டும். ஊசியை மாற்ற வேண்டும். மிகச் சரியாக மூன்றரை நிமிஷத்தில் ரெகார்டைத் திருப்பிப் போட ஆள் பக்கத்தில் இருக்கும் சாத்தியங்கள் ரொம்பக் குறைவு.

 பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாட்டு முடிந்து கடைசிக் கோட்டில் ஊசி கிர்ரக் கிர்ரக் என்று தேய்த்துக் கொண்டிருக்கும். சில சமயம் சாவி இறங்கி விட்டலாச்சாரியார் படத்து ராட்சஸன் குரலில் எம்.எல்.வி பாடிக் கொண்டிருப்பார். சிலசமயம் கீறல் விழுந்து ‘பேர்பாடி.. பேர்பாடி’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும்.

 எந்தக் குறிப்பிட்ட தருணத்திலும் எந்தத் திருப்பாவை பாடுவது எந்தக் கோயில் என்பதை இருந்த இடத்தில் நின்றபடி சொல்லும் வல்லுனர்கள் இருந்தார்கள்.

 “பெருமா கோயில்ல எல்லே இளங்கிளியே போட்டுட்டான். பொங்கல் தீர்திருக்கும். சட்டையப்பர் கோயில்ல மாலே மணிவண்ணா இன்னும் வர்ல்லை. அங்க போகலாம்” என்று தெளிவான ஷெட்யூல் வைத்து பொங்கல் சாப்பிடுகிறவர்கள் உண்டு.

 வருஷம் பூரா பட்டை உரியும் வெய்யில் என்பதால் மார்கழியின் அற்பக் குளிரை டைனமோ லைட் மாதிரி தலையில் துணி கட்டிக் கொண்டு கொண்டாடுவார்கள்.

 எல்லாத் தெருவிலும் நடுவில் சாணி ஃப்ளவர் வாஸில் சொருகிய பூசணிப் பூக்களுடன் ஈஸ்ட்மென் கலர்க் கோலங்கள். கொஞ்சம் அதிகாலையில் போனால் கோலங்களைப் போடும் கலர்களையும் பார்க்கலாம்.

 நாகப்பட்டினம், ஐ மிஸ் யு!

Advertisements

12 comments

 1. ஹ்ம்ம்ம். என்ன பண்ணுவது. இங்க எங்க ஊரில் வீட்டைஸ் சுற்றி இரண்டு கோவில்கள் இருந்தாலும் திருப்பாவை காதில் விழவில்லை.
  சிலசமயம் சென்னை மிக அலுப்பாகவே இருக்கிரது. நானே கோலம் போட்டு அலங்காரம் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்:)

 2. அட.. அப்படியே ஒரு பின்னோட்டம் (Flashback) போட வச்சிட்டீகளே…!!!

  நாகபட்டினம் மட்டும் அல்ல எல்லா பட்டனததிலும்… பரமக்குடியிலும் கூட இதே கதை தான்..

  அந்தமானில் இதை மீண்டும் கொணர செய்த பிரயத்தனம் இவ்வருடமும் கை கூடவில்லை..

 3. //“பெருமா கோயில்ல எல்லே இளங்கிளியே போட்டுட்டான். பொங்கல் தீர்திருக்கும். சட்டையப்பர் கோயில்ல மாலே மணிவண்ணா இன்னும் வர்ல்லை. அங்க போகலாம்” என்று தெளிவான ஷெட்யூல் வைத்து பொங்கல் சாப்பிடுகிறவர்கள் உண்டு.//
  அருமை!

 4. என்னா ஜவஹர் ஸாரே, ச்சும்மா ‘ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே?’ என்று எங்கள் மலரும் நினைவுகளையும் ஆட்டோவே இல்லாத அந்தக்காலத்து கும்பகோணத்து அக்கிரஹார ஆட்டோகிராப்களை கிளறிவிட்டீர்களே? ஏன் இந்தக் கண்ணாமூச்சிக் கொலவெறி உங்களுக்கு?

  அருமை, அருமை. உங்கள் நினைவுப் பதிவு மிக மிக அருமை. எனக்கும் எங்கள் குடந்தையின் அய்யங்கார் தெரு, மேட்டுத்தெரு, சோலையப்பன் தெரு, சகோஜி ரகோஜி பண்டிதர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, டபீர் தெரு என்று அந்தக்கால மார்கழி மாத அதிகாலை நினைவுகளும், சிவன் கோயில் மாவிலையில் 5 மணிக்கு கிட்டும் நெய் வார்த்த பொங்கலும் சாரங்கபாணி கோயில் சர்க்கரைப்பொங்கலும் திருவாதிரைக் களியும் தெருவெல்லாம் வண்ணக்கோலமிட்டு பூசணி அல்லது பரங்கிப்பூவில் (சாணிகளுக்கு நடுவே)வண்ண மயில் தோகைவிரித்து ஆடுமாறு அந்தக்காலத்து அக்கிரஹார மயில்கள் குயில்கள் (பாட்டுப்பாடிக்கொண்டே) தேவதைகளை நம் கண் முன்னே கொண்டு வருவார்களே…………………ஹூம், எல்லாம் போச்சு, அத்தனையும் வெறும் கனவாகவே வெற்று விரக்தி நினைவுகளாகவே இருக்கிறதே, என் செய்வேன், சக்கர ராஜா (சக்கரபாணி கோயில் அதிகாலைத் திருப்பாவை திருவெம்பாவைப் பாசுரங்கள் காதில் ஒலிக்குமே, ரீங்காரமிடுமே அந்த ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் மீண்டும் என்று காண்போம்?

  Thanks to have facilitated me to rewind my sweet nostalgic moments and relive those moments again now in 2011!! Hats off, Jawaharji!!

 5. எங்க ஊரில் பெரிய complication ஒண்ணும் இல்ல. ஒரு கோயில்ல எம் எல் வின்னா இன்னொரு கோயில்ல கணிர் குரலில் ‘சீர்காழியின் விநாயகனே’…ஆனால் ஒரு நாளும் படுக்கையை பிரிந்து பொங்கல் தேடிப் போன வரலாறு எனக்கில்லை. நகர வாழ்வுக்கு மாறிய பிறகு எல்லாமே போச் !!!

 6. உலகத்திலேயே முக்கியமான வேலையாக, கோல நோட்டு மெயிடெயின் செய்ததுண்டு. காலை 10 மணிக்கு மேல், அக்கம்பக்கத்து வீடுகளில் போட்டிருக்கும் கோலங்களைப் பார்வையிட, மேற்கொண்ட நடைப் பயணம், கற்றுக் கொண்ட வண்ணப்பொடி காம்பினேஷன்கள், ஒரு பார்வையிலேயே கோலப் புள்ளிகளை எண்ணி, வீட்டுக்கு வந்து, அதை என்னுடைய நோட் புக்கில் அப்டேட் செய்தது, ஹும், அதுவும் ஒரு பொற்காலம்.

  எங்களையும் ரீவைண்ட் பண்ணிப் பார்க்க வைத்த பதிவிற்கு மிக்க நன்றி.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s