எறங்குய்யா கீழ

”யாருய்யாது வண்டிக்குள்ள சிகரட் பிடிக்கிறது?” கண்டக்டர் எழுந்து பஸ்ஸை ஒரு நோட்டம் விட்டார்.

எனக்கும் சிகரட் வாசனை வந்தது.

யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை.

“கேக்குறனில்ல?”

ம்ம்ஹூம். பதிலில்லை.

எழுந்து இரண்டு பக்கமும் பார்த்தபடி பஸ்ஸின் கடைசி சீட் நோக்கி நடந்தார் கண்டக்டர்.

“யோவ்.. கையைக் காட்டு”

“நா இல்லைங்க. எனக்கு அந்தப் பழக்கமே இல்லை”

தொடர்ந்து நடந்தார்.

“இங்கதான் ஸ்மெல் ஜாஸ்தியா இருக்கு. நீதானா அது?”

“அதான் நீங்க சொன்னதும் கீள போட்டுட்டேனில்ல”

“கீள போட்டியா? எந்திரிய்யா”

“எதுக்கு, அதான் போட்டுட்டேனே”

“எந்திரிங்கிறனில்ல” கோபம் பூரா சேர்த்து விசிலை அவர் ஊத டிரைவர் சட்டென்று பிரேக் போட்டார்.

“எறங்கு”

“அட என்னங்க நீங்க, கீள போட்டுட்டேன்னு சொல்றேன் அப்படியும் எறங்குன்றீங்க”

“எறங்குன்னா எறங்கிடு வீணா பிரச்சின பண்ணாத”

இப்போது பிரயாணிகள் சிலரும் சேர்ந்து கொண்டார்கள்.

“ஏங்க, எறங்கத்தான சொல்றாரு? ஃபைன் கட்டச் சொன்னாரா இல்ல போலீஸ்ல புடிச்சிக் குடுத்தாரா? எறங்குங்களேன், எங்களுக்கு லேட்டாகுதில்ல?”

பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு அமைதியாக நடந்தார் இறங்கினார்.

“வண்டிதான் ரெண்டவருக்கு ஒருதரம் நிக்கிதில்ல, எறங்கி தம் அடிக்கிறது, அதுக்குக் கூட பொறுமை இல்லாதவனெல்லாம் பஸ்ல ஏன் வர்ரான்” என்றபடி கதவை மூடினார்.

வண்டி புறப்பட்டது.

இது நடந்து ஒரு வாரமிருக்கும். விஜயபுரம் கடைத் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த போது அந்த ஆள் எதிர்ப்பட்டார். என்னை அடையாளம் கண்டு புன்னகைத்தார். நானும் சிரித்தேன்.

“ஒண்ணு கேட்டா கோபப்பட மாட்டீங்களே?” என்றேன்.

“கேளுங்க” என்றார் புன்னகை மாறாமல்.

“படிச்சவரா இருக்கீங்க. நாகரிகமா இருக்கீங்க. பஸ்ல சிகரட் பிடிக்கக் கூடாதுன்னு தெரியாதா? அட அட்லீஸ்ட் பிடிச்சா வெளிய தெரிஞ்சிடும்ன்னாவது தெரியாதா?”

“தெரியுமே”

“பின்ன ஏன் அப்டிப் பண்ணீங்க?”

“என் ஊரு கூத்தூருங்க. போனதரம் அங்க நிறுத்தச் சொல்லி கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டேன். மாட்டேன்னுட்டாரு. திருவாரூர்ல எறங்கி வந்துக்கன்னுட்டாரு. உன்ன மாதிரி ஒத்தொத்தனுக்கும் நிப்பாட்டிகிட்டு இருந்தா இது எக்ஸ்பிரஸ் பஸ் இல்லே, மாட்டு வண்டியாய்டும்ன்னு கடுப்படிச்சாரு. ராத்திரி பதினொண்ணரை மணிக்கு திருவாரூர்ல இருந்து கூத்தூருக்கு பஸ்ஸும் கிடையாது, ஆட்டோவும் வரமாட்டான். காலைல வரைக்கும் தேவுடு காக்கணும்.”

“அதனால?”

“அதனாலதான் மஞ்சக் கொல்லை வரும் போதே சிகரட்ட பத்த வெச்சேன். சரிய்யா கூத்தூர்ல இறக்கி விட்டுட்டாரு”

Advertisements

12 comments

 1. இப்போது குறுக்கு வழிகளை செயல்படுத்துபவரை விவரமானவர், smart என்றெல்லாம் பாராட்ட ஆரம்பித்துவிட்டனர். இதுதான் நம்மை நம் அடுத்த தலைமுறையினரை வழிநடத்திக்கொண்டிருக்கிறது. வரிசையில் நின்று ration பொருட்கள் வாங்கினால் அவன்/அவள் விவரமில்லாதவர்/பொழைக்கத்தெரியாதவர். “எப்படியும்” தன் காரியத்தை சாதித்துக்கொண்டால் உஷார் பார்ட்டி!

  1. ஜெயப்பிரகாஷ், நான் நாகப்பட்டினம், திருவாரூர் எல்லாம் போகும் போது இஞ்ச் இஞ்ச்சாக ரசிக்க வேண்டும் என்று நினைப்பவன், அதனால் காரில்தான் போவேன்! எங்கே வேணா எப்ப வேணா இறங்கலாம்!!

 2. கற்பனையாகச் சொல்கிறீர்கள்..
  இருந்தபோதும், நம்பகத் தன்மை கொண்டுவர முயற்சித்திருக்கிறீர்கள்..
  நல்ல கான்செப்ட் என்ற போதும்..
  நேரடி அனுபவம் என்றப் போர்வையில் முழுவதுமாக மறைக்கப்படாமல் கால் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருப்பது போன்று உணர்கிறேன் இந்தப் பதிவை.

 3. முதல்ல நெடு வழியை கையாண்டு அது ஒத்து வராத நிலையில் சிகரட் வழிக்கு சென்றிருக்கிறார். இதில் என்னைப் பொறுத்த வரை நெடு வழிக்கும் சுருக்கு வழிக்கும் உள்ள வித்தியாசத்தை தான் நான் காண்கிறேன். சரி தவறு என்கிற வித்தியாசம் அல்ல. சமயோஜித புத்தி அவ்வளவே. Smartness vs crookedness

 4. சாமர்த்தியம் எல்லாம் சரியே, ஆனா, ஒரு தடவைக்கு மட்டும்தானே இது செல்லுபடியாகும். அடுத்த தடவையில் கண்டக்டர் ரொம்ப ஸ்மார்ட் ஆகிடுவாரே!

 5. ஜெயப்பிரகாஷ், நான் நாகப்பட்டினம், திருவாரூர் எல்லாம் போகும் போது இஞ்ச் இஞ்ச்சாக ரசிக்க வேண்டும் என்று நினைப்பவன், அதனால் காரில்தான் போவேன்! எங்கே வேணா எப்ப வேணா இறங்கலாம்!!

  Neenga நாகப்பட்டினம், திருவாரூர் எல்லாம் எப்படி Rasipperagal enpathay “மார்கழி மகா உற்சாகங்கள்” pathivil paartha Ninaivu he he he!!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s