புத்தகச் சந்தை 2012 – திட்டங்கள்

பொதுவாக புத்தகச் சந்தைக்குப் போகும் போது எந்தத் திட்டமும் இருக்காது எனக்கு.

சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சிக்குப் போவது போல ஜஸ்ட் லைக் தட் போய்விடுவேன். அடிப்படையிலேயே என்னிடம் இருக்கும் சில குணங்கள் என்ன புத்தகம் வாங்குவது என்பதற்கு வழிகாட்டும்.

ஜெயின் அண்ட் குப்தாவின் புரொடக்‌ஷன் டெக்னாலஜி புத்தகம் போல குண்ண்ண்ண்ண்டாக இருக்கும் புத்தகங்களைக் கண்டால் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. அவைகளின் பக்கம் போக மாட்டேன். (சில விதி விலக்குகள் உண்டு. அதைப் பிறகு சொல்கிறேன்). நீஈஈஈஈஈண்ட பாராக்கள் இருக்கும் புத்தகங்களும் அலர்ஜி. அவைகளையும் பொதுவாக நிராகரித்து விடுவேன். அடுத்த லெவல் நீஈஈஈண்ட வாக்கியங்கள் :

பொதுவாக மனிதர்களின் நினைவில் பொதிந்திருக்கும் நிகழ்வுகள் காலம் கடந்து முழுமையாகவும் அது குறித்தான இதர மனிதர்களிடம் செய்த விவாதங்களின் தாக்கத்தில் உண்டான மழுப்பலான மறு-உருவாக்கம் இல்லாமலும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எண்ணிக்கையளவில் மிக அல்பமானவை என்பதை நினைவின் அடிப்படையிலான நேர்காணல்கள் செய்கிறவர்கள் மனதில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை……………..

என்கிற மாதிரி எழுதுகிற எழுத்தாளர்கள் எல்லா மொழியிலும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் விருதுகளும் வாங்கியிருக்கிறார்கள்!

அது மாதிரி வாக்கியங்கள் இருக்கும் புத்தகங்களும், சாரி, நோ!

ஐம்பது வருஷத்துக்கு முந்தைய எழுத்தாளர்கள் புத்தகம் என்றால் விசேஷ சுவாரஸ்யம். அதிலும் அவர்களின் கட்டுரைகள் என்றால் படு சுவாரஸ்யம். உதாரணம் : நாடோடி. அவர் புத்தகங்கள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

இந்த வருஷம் வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் திட்டங்களுடன் போகிறேன். நான் வாங்க விழையும் புத்தகங்கள் :

 • நாடோடியின்      கட்டுரைகள்
 • பெரிய      புராணம், ராமாயணம், மஹாபாரதத்திற்கு செய்யுள் செய்யுளாக எழுதப்பட்ட முழுமையான      உரைகள்
 • சாவியின்      இங்கே போயிருக்கிறீர்களா
 • தமிழ் கவிதை      இலக்கணம் பற்றி தெளிவாக, முழுமையாக எழுதப்பட்ட புத்தகங்கள்
 • புதுமைப்பித்தனின்      ஃபாஸிஸ்ட் ஜடாமுனி
 • குறுந்தொகை      உரையுடன்
 • ரா.பி.சேதுப்பிள்ளையின்      தமிழன் அறிவியல் முன்னோடி (புத்தகத்தின் பெயர் அதுதானா என்பதே சந்தேகம்)
 • ஆரிய-திராவிட      வரலாறுகள் (நிச்சயமாக தமிழில் அல்ல. மெக் கிரா ஹில் மாதிரி பதிப்பகங்களாக      இருந்தால் மட்டுமே)

 இன்னும் சில.

 எதெல்லாம் அகப்படுகிறது என்று பார்ப்போம்!

Advertisements

6 comments

 1. வாழ்த்துகள் சார்!

  //பெரிய புராணம், ராமாயணம், மஹாபாரதத்திற்கு செய்யுள் செய்யுளாக எழுதப்பட்ட முழுமையான உரைகள்//

  நானும் இவற்றைப் பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். சரியாகக் கிடைக்கவில்லை. பெரிய புராணம் கிடைத்தது என்றாலும் மிக அதிக விலை என்பதால் வாங்கவில்லை.

  நாடோடியின் கட்டுரைகளை எல்லாம் யாராவது பதிப்பித்திருக்கிறார்களா என்ன? அந்தக் காலத்தில் நூலகத்தில் படித்தது. நல்ல நகைச்சுவையான எழுத்து.

  அதுசரி இவ்வளவுதானா வாங்கப் போகறீங்க.

  காவல் கோட்டம், அறம் கதைகள், எக்ஸைல் இதெல்லாம்? 😉

 2. பெரிய புராணம் முழு உரை, செய்யுள் விளக்கத்துடன் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது.

  ராமாயணத்தையும் பார்த்ததாக ஞாபகம்.

 3. பொதுவாக மனிதர்களின் நினைவில் பொதிந்திருக்கும் நிகழ்வுகள் காலம் கடந்து முழுமையாகவும் அது குறித்தான இதர மனிதர்களிடம் செய்த விவாதங்களின் தாக்கத்தில் உண்டான மழுப்பலான மறு-உருவாக்கம் இல்லாமலும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எண்ணிக்கையளவில் மிக அல்பமானவை என்பதை நினைவின் அடிப்படையிலான நேர்காணல்கள் செய்கிறவர்கள் மனதில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை……………..

  சத்தியமா ஒண்ணுமே புரியவில்லை நண்பரே!
  மூணு நாலு முறை படித்திவிட்டேன்…
  என்ன சொல்லுகிறார் இவர்?

 4. சாவியின் இங்கே போயிருக்கிறீர்களா, கேரக்டர் எல்லாம் எனக்கும் பிடிக்கும். நானும் தேடி தேடிப் பாக்‌கறேன், யாரும் பப்ளிஷ் பண்ணதா தெரியலை. கண்ல பட்டா, வாங்கினிங்கன்னா வலைமூலம் தெரிவியுங்க ஜவஹர் ஸார்! உடனே ஓடிர்றேன்…

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s