புத்தகச் சந்தை-2012, கொஞ்சம் சுய விளம்பரம்

என்னதான் உபயோகமான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், சுய முன்னேற்ற நூல்கள் என்றால் சிலருக்கு அலர்ஜி. அவர்களுக்கும் கருத்துக்கள் போய்ச் சேர வேண்டுமே, என்ன செய்வது?

 அதை ஒரு நாவல் வடிவத்தில் எழுதி விட்டால் போயிற்று!

 கதை நகர்ந்து கொண்டே இருக்கும். கதையினூடே சுய முன்னேற்றக் கருத்துக்களும் வந்து கொண்டிருக்கும். ஆங்காங்கே சின்ன குட்டிக கதைகள், சில நகைச்சுவைத் துணுக்குகள்.

 போதாதா சுவாரஸ்யத்திற்கு?

 ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தமிழர்களின் பெருமிதங்களில் ஒன்று. அதைப் படிக்கிற ஆசை இருந்தாலும் சில பயங்கள். அந்த இலக்கண, இலக்கிய நடை புரியுமா? பக்கத்தில் அகராதி வைத்துக் கொண்டே படிக்க வேண்டுமா? ஏகப்பட்ட பக்கங்கள் இருக்குமே, எப்படிப் பொறுமையாகப் படிப்பது? சுவாரஸ்யமாக இருக்குமா?

 கவலையை விடுங்கள்.

 எளிய நடை. பள்ளிக்கூடப் பையனுக்குக் கூடப் புரியும். ஒன்றன் பின் ஒன்றாக சம்பவங்கள், விறுவிறுப்பகப் போய்க் கொண்டே இருக்கும். மொத்தம் 130 பக்கங்கள்தான். முழு சிலப்பதிகாரமும் சுவாரஸ்யமான நாவலாக… ரூ.80/= க்கு.

 திருக்குறள் உரைகள் படித்துச் சலித்திருப்பீர்கள்.

 ஒவ்வொரு குறளாக, அதற்கு அர்த்தமாக…. இப்படித் தனித் தனியாகப் படித்தால் சொல்லப்பட்ட கருத்து என்ன என்று எப்படித் தெரிந்து கொள்வது?

 ஒவ்வொரு அதிகாரத்தையும் தொகுத்து ஒரு கட்டுரை. அந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களின் கோர்வையாக. விலை ரூ.160/=

 ஜென் கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

 ஆனால் ஒவ்வொரு கதையும் என்ன நீதியைச் சொல்கிறது என்பது பல கதைகளில் புதிராக இருக்கும். அந்த நீதியைச் சுருக்கமாக, சுவையாக சில சமயம் நகைச்சுவையாகச் சொல்லி எழுதப்பட்ட கதைகள். ஜென்னை முழுதாகப் புரிந்து கொள்ள மிகச் சிறந்த புத்தகம்.

 கதைகளின் வழியே ஜென். விலை ரூ.115/=

 மேற்சொன்ன எல்லாப் புத்தகங்களும் புத்தகச் சந்தையில் F-7, கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலில் கிடைக்கும்.

Advertisements

8 comments

  1. அன்பின் ஜவர்லால் – தகவலுக்கு நன்றி – சென்னை வரும் போது வாங்க முயல்கிறேன். கிழக்குப் பதிப்பகத் தளைத்தில் கிடைத்தால் இணையம் மூலமாகவே வாங்கி விடுகிறேன். – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    1. மதுரையின் பிரபல புத்தகக் கடைகளில் நிச்சயம் இருக்கும். லேட்டஸ்ட் புத்தகம் மட்டும் சற்றுத் தாமதம் ஆகலாம்! 🙂

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s