இது அரசியல் கட்டுரை அல்ல!

ஆரம்ப காலத்தில் இருந்தே சரித்திரப் பாடம் எனக்கு ஆவதில்லை.

இதற்கு நிறைய காரணங்கள். முழுக்க முழுக்க டப்பா அடித்தே ஆக வேண்டும் என்பது முதல் காரணம். அடுத்தது சரித்திரத்தில் மூளைக்கு வேலை இல்லை. புரிந்து கொள்ளச் சிரமமாக அதில் எதுவுமில்லை. PV = rT என்று டிரைவ் செய்கிற போது வருகிற வெற்றி உணர்வு சரித்திரத்தில் கிடைக்காது. சில நிகழ்வுகளும் அவை நடந்த காலங்களும்தான் பெரும்பாலும் சரித்திரம் உள்ளடக்கி இருப்பது.

அசோகர் மரங்கள் நட்டதும், அக்பர் ராஜபுத்திரப் பெண்ணை மணந்ததும், சந்திரகுப்தரிடம் அஷ்ட திக்குக் கஜங்களாக எட்டு புலவர்கள் இருந்ததும்(சந்திர குப்தர்தானே?) நம் வாழ்க்கைக்கு என்ன விழுமம் சேர்க்கப் போகிறது? அல்லது நம் சிந்தனையைத்தான் அது தூண்டி விடப் போகிறதா? முதலாவது பானிப்பட் போர் ஒழுங்காக நடக்காததால்தான் இரண்டாவது நடந்ததோ என்கிற மாதிரி சிந்தனைகளைத்தான் சரித்திரம் எனக்குத் தந்திருக்கிறது.

உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உண்மைகளும், புள்ளிவிவரங்களுமே சரித்திரத்தின் இலக்கணம் என்பதாக ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. உணர்வுகள் சொற்களாகத்தான் வெளிப்பட வேண்டும் என்பதில்லை. விருப்பமில்லாதவைகளை ஒதுக்கி விட்டு எழுதுவது கூட உணர்வின் வெளிப்பாடுதான். சிலரைக் கொடுங்கோல் மன்னர்கள் என்று சரித்திரம் சொல்கிறது. இது போல ஜட்ஜ்மெண்டல் வெளிப்பாடுகளில் நிச்சயம் உணர்வு தெரிகிறது.

சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கும் நிகழ்வுகளைத் தனியான நிகழ்வுகளாகப் படிப்பது நிகழ்வின் பரிமாணத்தை உணரப் போதுமானதில்லை. அவற்றுக்குக் காரணமான சம்பவங்கள், அவை நிகழ்ந்த பின் அவைகளின் விளைவாக நிகழ்ந்த சம்பவங்கள் இவற்றுடன் சேர்த்துப் படிக்கிற போதுதான் நிஜமான பரிமாணம் கிடைக்கிறது. ஆனால் அவைகளுக்குப் பொதுவாக சரித்திரத்தில் இடமில்லை. அசோகர் பௌத்த மதத்தில் நாட்டம் கொண்டது போன்ற ஒன்றிரண்டு விதி விலக்குகள் உண்டு.

தாஜ்மஹால் என்கிற கட்டிடம் நிறைய உணர்வுகளை உள்ளடக்கியது. அது ஒரு அரசனின் தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. இதனால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இருந்திருக்கப் போவதில்லை. ஆனால் அதில் அரசாங்கப் பணம் பெருமளவில் பயன்பட்டிருக்கும். இது குறித்த எதிர்மறை விமர்சனங்கள் எதுவுமே அந்தக் காலத்தில் இருந்திருக்காதா?

ஷாஜஹானுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஔரங்கசீப் குறித்து சரித்திரம் அவ்வளவு உயர்வாகச் சொல்லவில்லை. மக்களின் வரிச்சுமை அதிகமாயிற்று என்று ஒரு கருத்து உண்டு.(அக்பர் நீக்கியிருந்த ஜிஸியா வரியை ஔரங்கசீப் திரும்பக் கொண்டுவந்து கெட்ட பெயர் வாங்கிக் கொண்டார்). தாஜ்மஹால் மாதிரி ஆடம்பர செலவுகளால்தான் அவருக்கு இந்த நிர்ப்பந்தம் வந்ததோ என்னவோ! தாஜ்மஹாலும் ஷாஜஹானும் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டார்கள். ஷாஜஹான் கலைப் பிரியர் என்று பேரெடுத்து விட்டார். ஔரங்கசீப் கொடுங்கோலன் பட்டம் வாங்கி விட்டார்.

முந்தைய ஆட்சியாளர்கள் கட்டிடம் கட்டிடமாகக் கட்டி ஊதாரித் தனமாக செலவு செய்து தங்கள் பெயரைச் சரித்திரத்தில் இடம் பெறச் செய்வதும், அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் வருமானத்தை சரி செய்ய வரி விதித்தும் விலை ஏற்றியும் கெட்ட பெயர் தேடிக் கொள்வதும் சரித்திர காலத்தோடு நின்று விட்டனவா என்ன? (சரித்திர ஆசிரியர்கள் போலவே நானும் இங்கே ஒரு செலெக்டிவ் டிலீஷன் செய்திருக்கிறேன். என்னவென்று கண்டுபிடியுங்கள்)

Advertisements

13 comments

 1. ஷாஜஹானின் தாஜ்மஹால் பற்றியும், அது குறித்த ஔரங்கசீப்பின் எதிர்ப்பையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றாஇ இந்திரா பார்த்தசாரதியின் “ஔரங்கசீப்” நாடகம் படிக்க வேண்டும். விரவில் அதன் விமர்சனம் எழுத் எண்ணியுள்ளேன். ஷாஜஹான் தனது மறைவுக்குப் பின்னால வெள்ளை சலவைக் கல்லால் ஆன தாஜ் மஹாலுக்கு முன்னால் கருப்பு சலவைக் கல்லால் இன்னமொரு தாஜ் மஹால் கட்ட வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தாராம். இதுவே ஔரங்கசீப்பின் தந்தை மீதான வெறுப்புக்கு முக்கியக் காரணம்.

 2. உங்கள் தாத்தாவின் தாத்தா பெயரை தெரிந்து கொள்வதும் கூட ஒருவகையில் வரலாறுதான் என்று “லேட்டஸ்ட் டி.ஆர்” சசிகுமார் அவரது படத்தில் வசனம் பேசியுள்ளாரே..?! 🙂

 3. //சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கும் நிகழ்வுகளைத் தனியான நிகழ்வுகளாகப் படிப்பது நிகழ்வின் பரிமாணத்தை உணரப் போதுமானதில்லை. அவற்றுக்குக் காரணமான சம்பவங்கள், அவை நிகழ்ந்த பின் அவைகளின் விளைவாக நிகழ்ந்த சம்பவங்கள் இவற்றுடன் சேர்த்துப் படிக்கிற போதுதான் நிஜமான பரிமாணம் கிடைக்கிறது.//
  Very true. I would like to quote a personal experience here.
  I was trying to learn some details on Rash Behari Bose,a key person in founding Indian Army. However the details did not register quickly for me.
  A couple of days later,when i watched Siraichalai movie,Delhi Ganesh character casually makes a reference to the leader and the key incident he was involved in.
  That way the detail set in my mind easily 🙂
  Oliyum OLiyum played a role for me

 4. எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் சில அரசர்கள் அதிகச் செலவு செய்வதும், நிதி குவிந்து கிடந்தாலும் சில அரசர்கள் வரி மேல் வரி விதிப்பதும் இப்போதும் தொடர்கிறது!

 5. முந்தைய ஆட்சியாளர்கள் கட்டிடம் கட்டிடமாகக் கட்டி ஊதாரித் தனமாக செலவு செய்து தங்கள் பெயரைச் சரித்திரத்தில் இடம் பெறச் செய்வதும், அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் வருமானத்தை சரி செய்ய வரி விதித்தும் விலை ஏற்றியும் கெட்ட பெயர் தேடிக் கொள்வதும் சரித்திர காலத்தோடு நின்று விட்டனவா என்ன?
  ookey! Okey
  old history +++
  latest trendla
  comparision – good lines!!!

  ha ha keep it up!!!

 6. //நானும் இங்கே ஒரு செலெக்டிவ் டிலீஷன் செய்திருக்கிறேன். என்னவென்று கண்டுபிடியுங்கள்//
  முஸ்லிமல்லாதவர்களுக்கு ஜிஸியா போல, முஸ்லிம்களுக்கு ஜகாத் – கரெக்டா?

  ஜிஸியாவைச் சொல்லும் சரித்திர ஆசிரியர்கள் பெரும்பாலோனோர், ஜகாத்தை ”செலெக்டிவ் டிலீஷன் ” செய்துவிடுகிறார்கள். அப்படித்தானே? :-))))))))

 7. //சரித்திர ஆசிரியர்கள் போலவே நானும் இங்கே ஒரு செலெக்டிவ் டிலீஷன் செய்திருக்கிறேன். என்னவென்று கண்டுபிடியுங்கள்//
  “முழுக்க முழுக்க டப்பா அடித்தே ஆக வேண்டும் என்பது முதல் காரணம். அடுத்தது சரித்திரத்தில் மூளைக்கு வேலை இல்லை. புரிந்து கொள்ளச் சிரமமாக அதில் எதுவுமில்லை.”

  ஆக, சரித்திரப் பாடம் உங்களுக்கு ஔரங்கசீப் மாதிரி.
  PV = rT ஷாஜஹான் மாதிரி. சரியா ஜவஹர் பாதுஷா? 🙂

 8. என்னை கேட்டால் காதலின் நினைவு சின்னம் தாஜ்மஹால் என்பது மிக தவறு என்றே கூறுவேன்,
  ஏனென்றால் எனக்கு தெரிந்த சரித்திரப்படி :

  சஜஹானின் ஏழு மனைவிகளில் நாலாவது மனைவிதான் இந்த மும்தாஜ்

  ஷாஜஹான் மும்தாஜை கல்யாணம் செய்வதற்காகவே மும்தாஜின் முன்னாள் கணவனை கொன்றது யாருக்காவது தெரியுமா!!

  மும்தாஜ் தனது பதினாலாவது பிரசவத்தின் போதுதான் இறந்தார் …

  மும்தாஜ் இறந்ததும் அவரின் தங்கையை மணந்தார் ஷாஜஹான் ….

  இதில் எங்கிருக்கிறது காதல் ?? தாஜ்மஹால் காதலின் நினைவு சின்னமல்ல

  ஷாஜஹானின் நினைவு சின்னம் ….

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s