ஆக்டிவ் லிஸனிங் என்றால் என்ன?

ரகுவை எல்லாருக்கும் பிடிக்கும்.

அவனோடு அரட்டை அடிப்பது என்றால் எல்லாருக்கும் பிடித்த விஷயம். இத்தனைக்கும் அவன் ஒரு அதி புத்திசாலியோ, இனிக்க இனிக்கப் பேசுகிறவனோ கிடையாது. சரியாகச் சொன்னால் அவன் பேசுவது ரொம்பக் குறைவாக இருக்கும். பின்னே ஏன் எல்லாருக்கும் அவனைப் பிடிக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.

நாம் பேச ஆரம்பிக்கும் போதே நாற்காலியை இழுத்து முன்னால் போட்டுக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொள்வான். நம் முகத்தை நேராகப் பார்ப்பான்.

“சொல்லுங்க” என்பான் புன்னகையுடன்.

“நேத்து, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்ல வந்துகிட்டிருந்தேன்” என்று ஆரம்பிப்பேன்.

“நீங்க பாட்டுக்க ஒரு புஸ்தகம் படிச்சிகிட்டு உட்கார்ந்திருக்க மாட்டீங்களே?” என்பது முதல் ரியாக்‌ஷனாக இருக்கும்.

“கரெக்ட்” என்பேன் சந்தோஷமாக.

“சொல்லுங்க” என்பான் திரும்ப.

“எதிர்ல இருந்தவர் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் டாக்ட்டரேட் பண்ணவராம்.”

“உங்களுக்கு ஆர்கானிக் கெமிஸ்ட்ரியே ஆகாதே?”

“அட, அதெப்படி உனக்குத் தெரியும்?”

“ஆர்கானிக் கெமிஸ்ட்ரியை சாய்ஸ்ல விட்டவராச்சே நீங்க?”

இவ்வளவு போதும். உங்களுக்குத் தெரிந்திருக்கும். ரகு செய்வதற்குப் பெயர் ஆக்ட்டிவ் லிஸனிங். பதில் சொல்கிற நோக்கமோ, சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணமோ இல்லாமல் கேட்டுக் கொள்வது மட்டுமே நோக்கமாக இருப்பது. பொதுவாக இது எல்லாருக்கும் சாத்தியப்படுவதில்லை.(எனக்கும்).

இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

வேணுவுடன் பேசும் போது அனுபவம் வேறு விதமாக இருக்கும்.

’நேத்து பிருந்தாவன்ல வந்தேன்’ என்று சொன்னதுமே,

“ப்ச்.. என்ன பிருந்தாவன். முன்னயெல்லாம் ஜோலார்ப்பேட்டை, அதை விட்டா பெங்களூர்தான்னு இருந்தது. கண்ட கண்ட இடத்தில எல்லாம் நிறுத்தி லொடக்கான் வண்டி ஆயிடிச்சு. கொஞ்ச நாள்ள சதாப்திக்கும் இதே கதி ஆகப் போகுது. நம்ம ஊர்ல சூப்பர் ஃபாஸ்ட் ஓட்டுகிற அளவு டிராக்கும் இல்லை, லெவல் கிராஸிங் டிஸிப்ளினும் இல்லை. ஒருக்கால் எல்லாத்தையும் சப்வேயா மாத்…….” என்று கேப் விடாமல் எஃப்.எம்.ரேடியோ ஜாக்கி போல பேசிக் கொண்டே இருப்பார்.

அவர் எச்சில் முழுங்கும் கேப்பில் உள்ளே புகுந்து ஆர்கானிக் கெமிஸ்ட்ரி டாக்ட்ரேட்டில் ரெஸ்யூம் செய்தால்,

“கம்பஷனுக்கும், பர்னிங்குக்கும் வித்யாசம் தெரியாதவனுக்கெல்லாம் கெமிஸ்ட்ரில டாக்ட்ரேட் குடுத்துடறாங்க. நாம ஏதோ பி.ஹெச்.டி ந்னதுமே அவன் பெரிய ஆல்பர்ட் ஈன்ஸ்டின்னு நினைச்சிடறோம். ரிஸர்ச்சோட ஆர்க்கிடெக்சருக்குத்தான் டாக்ட்ரேட் தர்ராங்கன்னு நினைக்கிறேன். என் கஸின் ஒருத்தன் பழைய ரிஸ்ர்ச் ஒண்ணை எடுத்து……”

சேன்ஸே இல்லை. உங்களால் பேசவே முடியாது.

சரி போகட்டும், இதுவும் ஒரு மாதிரி இன்வால்வ்மெண்ட் என்று வைத்துக் கொள்ளலாம். இன்னும் சிலர் வெறுமனே ‘ம்ம்ம்.. ம்ம்ம்’ என்று புறா மாதிரி சப்தம் மட்டும் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். கையில் இந்தியன் எக்ஸ்பிரஸ், கண்ணில் என்.டி.டி.வி என்று உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பார்வை கூட உங்கள் பக்கம் திரும்பாது. முடிந்தால் ’சென்செக்ஸ் ஃபார்ட்டி ஃபோர் பாயிண்ட்ஸ் ஏறியிருக்கு’ என்று உங்களுக்கு ஆகாத சப்ஜெக்ட்டுக்கு ரிடைரக்ட் செய்ய முயல்வார்கள்.

‘அவரோட அரட்டை அடிக்கிறதுன்னா ரொம்ப ஜாலியா இருக்கும்ங்க’ என்று யாரை எல்லாரும் சொல்கிறார்களோ, அவர் உங்களை அரட்டை அடிக்க அனுமதிக்கிறவர் என்று அர்த்தம்.

Advertisements

13 comments

 1. //அவரோட அரட்டை அடிக்கிறதுன்னா ரொம்ப ஜாலியா இருக்கும்ங்க’ என்று யாரை எல்லாரும் சொல்கிறார்களோ, அவர் உங்களை அரட்டை அடிக்க அனுமதிக்கிறவர் என்று அர்த்தம்.//
  அட…. ஆமா!

 2. சிறந்த பதிவுகள்

  * அந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா
  * A – கிளாஸ் ஜோக்ஸ்
  * நெஞ்சைத் தொட்ட ஜோக்!
  * டாக்டர் – குழந்தை – ஆணுறை
  * பெண் குளிப்பது…

  //இதை எடுத்து விடவும். உங்கள் ப்ளாக்கில் உள்ள சிறந்த கட்டுரைகளை நிறைய
  பேர் படிக்காமல் போய் விட வாய்ப்பு உள்ளது.//

 3. ஜவகர்
  நீங்கள் ஆக்டிவ் லிஸனிங் பற்றி சொல்றீங்க! அனால் நான் ஒண்ணு சொல்லட்டுமா?
  நான் உங்கள் பதிவை வாசிப்பதற்கு காரணமே அதில் இருக்கும் ஒரு “ஆக்டிவ்னெஸ்” தான்.
  ஏதோ ஒரு பாலியகால நண்பன் என்னுடன் பேசுவதுபோல இருக்கும் உங்கள் எழுத்து.
  மிகவும் அருமை. KEEP IT UP

 4. அருமையான பதிவு. உறவினர்கள், பெற்ற குழந்தைகளிடமாவது ஆக்டிவ்வாக லிஸன் பண்ணுவது அவசியம்.

   1. இல்லை ஸ்ரீதர், நல்ல விஷயங்களை எல்லாருமே பொறுமையாகப் படிப்பார்கள், எழுதுகிற விதத்தில் எழுதினால்!

 5. சிலரிடம், “ உங்க பேர் என்னங்க ?”ன்னு கேட்டாக் கூட, ஒரு மணி நேரம் அவர் பேசிக்கிட்டே இருப்பாரு… ஏண்டா கேட்டோம்னு ஆகிடும்….இவரை எந்த ரகத்தில் சேர்ப்பது…?

 6. ACTIVE LISTENING
  One type of “inducing” others to talk more

  “He! He!! (sila) Sales People — seivathu”
  “idhu oru Defenseive starategy of Negotiating”

  IDHU PATTHI ELUDHA NIRAYA IRUKKIRATHU SIR
  (ORU BOOK-EY ELUTHALAM)
  Sariya sir?

  Happy Republic day!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s