காதல் கோட்டை

நாகப்பட்டினத்தில் கும்பலாக ஊர் சுற்றிய எங்கள் கூட்டத்தில் சில சீனியர்களும் இருந்தார்கள்.

சிதம்பரத்தில் அண்ணாமலையில் படிக்கும் அவர்கள் சனி, ஞாயிறுகளில் மட்டும் நாகப்பட்டினம் வருவார்கள். கடற்கரை மணலில் உட்கார்ந்து ராத்திரி ஒன்பது மணி வரை அரட்டைக் கச்சேரி நடக்கும். உள்ளூரில், பள்ளிக் கூட லெவலில் இருந்த நாங்கள் சைட் அடிக்கிற மட்டில் திருப்திப் பட்டுக் கொள்ளும் ஜாதி. சீனியர் ஆசாமிகள் கொஞ்சம் அட்வான்ஸ்ட் வென்ச்சர்கள் முயற்சித்தவர்கள்.

அதில் அசோக் என்று ஒருத்தன் இருந்தான். பார்க்க சொல்லத்தான் நினைக்கிறேன் படத்துக் கமலஹாசன் மாதிரி இருப்பான். அதே போலவே ‘யூ டோண்ட் நோ’ என்று ஸ்டைலாகப் பாடி பெண்களின் ரெஸ்பான்ஸை சோதிப்பான். சட்டைக் கை மடிப்பில் சிசர் சிகரெட் ஒளித்து வைத்திருப்பான். சாண்டாக்கில் நெருப்புப் பெட்டியின் பக்கவாட்டுப் பாகம் ஒட்டி வைத்திருப்பான். சட்டையின் பட்டியில் தீக்குச்சி வைத்திருப்பான். எடுத்து பர்க்கிளி விளம்பரத்தில் ரவிச்சந்திரன் போல ஸ்டைலாகப் பற்ற வைப்பான். நாங்கள் அழியாத கோலங்கள் படத்து சிறுவர்கள் மாதிரி பார்த்துக் கொண்டிருப்போம்.

அவன் தன்னுடைய காதல் வென்ச்சர்களை அவ்வப்போது அவிழ்த்து உதறுவான். எத்தனை தூரம் நிஜம் எவ்வளவு புளுகு என்று கண்டு பிடிப்பது சிரமமாக இருக்கும். ஆனால் படு சுவாரஸ்யமாக இருக்கும். ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு, அப்புறம் மெல்ல மெல்ல சப்ஜெக்ட்டை நோக்கி நகர்வது பன்ச்சான முடிவு என்று ரொம்ப கட்டுக் கோப்பாக இருக்கும். தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறியும் சீரீஸில் ஆர்வமிக்கவன்.

 ஒரு தரம் லைபிரரியில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்திருக்கிறான். அதில் ஆங்காங்கே பென்ஸிலால் குறிப்புகள் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்திருக்கிறான். (எழுதியது ஒரு பெண்தான் என்பதை சப்ஸ்டான்ஷியேட் செய்ய ஒரு ஹேண்ட் ரைட்டிங் அனாலிஸிஸே செய்து தீஸிஸ் எழுதுவான், அதெல்லாம் இங்கே வேண்டாம்)

 புத்தகம் புதிது. அதுவரை ஒரே ஆள்தான் படித்திருந்தார்கள். அந்த டோக்கன் நம்பரை மனதில் பதிய வைத்துக் கொண்டு லைப்ரேரியன் அசந்திருக்கும் போது கார்டை உருவி பேரையும் முகவரியையும் பார்த்து விட்டான்.

 ராதா, 5, சட்டையப்பர் தெற்கு மடவிளாகம்.

 மனதுக்குள் ஜெயச்சித்ராவும், ஜெயசுதாவும் ஸ்லோ மோஷனில் பறக்க சட்டையப்பர் தெற்கு மடவிளாகத்துக்கு பீடு நடை!

 துரதிஷ்டவசமாக அந்த வீடு ஒரு ஸ்டோர். எட்டுக் குடித்தனங்கள். மொத்தம் மூன்று ராதாக்கள். முதல் ராதா அரை இஞ்ச் தடிமனில் கண்ணாடி போட்டு காலைத் தேய்த்துத் தேய்த்து வந்த எழுபது வயதுப் பாட்டி. சர்வ சத்தியமாக அந்த ராதாவால் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையே படிக்க முடியாது என்பதால் ரிஜெக்டெட். அடுத்த ராதா அரைஞாண் கயிற்றில் ஆலிலை அணிந்த அம்மண ராதா.

 “வேறே ராதான்னு யாருமில்லையே? எங்கே வேலை பாக்கறா?”

 யாருக்குத் தெரியும்! பதில் சொல்வதற்குள் ஒரு அரை டிக்கெட் குறுக்கிட்டு,

 “மாமி, கடசீ போர்ஷன் ராதாவா இருக்கும்” என்றது.

 “ஓ… இருக்கும்.. இருக்கும்…. இப்ப வர்ர நேரம்தான் திண்ணைல செத்த உக்காருங்கோ”

 திண்ணையில் உட்கார்ந்து கொண்டு எப்படி உரையாடலை ஆரம்பிப்பது என்றெல்லாம் மனசுக்குள் ஒத்திகை பார்த்திருக்கிறான்.

 “நான் கூட …………………………………… வின் ரசிகந்தான். நீங்க எழுதியிருந்த காமெண்ட்டெல்லாம் அப்படியே என் மனசிலும் தோணிச்சு. நீங்களே ஒரு எழுத்தாளராகலாம் போலிருக்கே…………”

 தெருவில் கொலுசு சத்தம் அல்லது வளையல் சத்தம் கேட்கிற போதெல்லாம் படபடப்புடன் பார்த்தபடி காத்திருக்க கொஞ்ச நேரத்தில் வந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. அவரும் பார்த்ததும் புன்னகைத்து விட்டு,

 “அடேடே.. உங்களை லைபிரரியில அடிக்கடி பார்ப்பெனே? யாரைப் பார்க்க வந்தீங்க?” என்று கேட்டிருக்கிறார்.

 “இங்கே.. ராதான்னு….”

 “நாந்தான் ராதா”

 “நீங்களா?” என்ன இது வில்லங்கம்!

 “ஆமாம், நாந்தான். ராதாகிருஷ்ணன் என் பேரு. ராதா, ராதான்னுதான் கூப்பிடுவாங்க”

Advertisements

9 comments

 1. ஹ..ஹ….ஹா…. ஆம்பளைங்களிலும் பொம்பள பிள்ளை மாதிரி கையெழுத்து உள்ளவர்களும் இருக்கிறார்கள்…. – என்னை மாதிரி ! !

 2. //ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு, அப்புறம் மெல்ல மெல்ல சப்ஜெக்ட்டை நோக்கி நகர்வது. பன்ச்சான முடிவு// இது உங்கள் கதைக்கு நீங்களே எழுதிய கமெண்ட்… # இதுதான் என் கமெண்ட்.

 3. ASHOK…………
  NEENGATHAN(EY???)…..
  idhu nijamagavey ungal (nagapattina)
  இதயம் (anubhavam) பேத்துகிறது !
  hahaahaaa!!

  Melum sila peyargal “Kalyani” “Anbu” “azaku”

  En-comment: “ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு, அப்புறம் மெல்ல மெல்ல சப்ஜெக்ட்டை நோக்கி நகர்வது. பன்ச்சான முடிவு”

  STEADY-A EIRUKKINGA THALA.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s