காதலர்களுக்குப் பிடிக்காத அறிவுரைகள்

 1. காதலா career ஆ என்கிற நிலை வாழ்க்கையில் வந்தால்      யோசனை செய்யாமல் career ஐத் தேர்ந்தெடுங்கள். இல்லையென்றால் பிற்காலத்தில்,      ‘உன் முகரைக்காக career ஐ எல்லாம் உதறிட்டு வந்த என்னை ஜோட்டால……’ மாதிரி      வசனங்கள் தவிர்க்க முடியாததாகும்.
 2.  லைட் கம்பம் பார்த்த நாய்க்கு மூச்சா வருவது மாதிரி      யாரைப் பார்த்தாலும் வருவதல்ல காதல். யாராவது ஒருவர் சம்மதித்து விட்டால்      போதும் என்று நினைக்க வேண்டாம். யார் மீது காதல் வந்தாலும் உடனே போய்ச்      சொல்லி விட வேண்டாம். கொஞ்ச காலம் காத்திருங்கள். வேறு யார் மீதும் காதல்      வரவில்லை என்றால் அப்புறமாகப் போய்ச் சொல்லுங்கள்.
 3.  மூட்டை தூக்கியாவது அரை வயிறுக் கஞ்சி ஊத்துவேன்,      தலையை அடகு வச்சியாவது காப்பாத்துவேன் ரகக் காதல்களுக்கு உடனடியாக குட் பை      சொல்லுங்கள். இப்படிப் பேசுகிறவர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை இருக்காது.
 4.  திடீரென்று வீட்டிலிருந்து சொம்பு காணாமல் போன      மாதிரி காணாமல் போகாதீர்கள். வீட்டில் சொல்லி, ஒருவேளை அவர்களுக்கு சம்மதம்      இல்லை என்றால் சம்மதத்தை மீறி கல்யாணம் செய்து கொள்ளும் உறுதி இருப்பதைச்      சொல்லி விட்டுக் காத்திருங்கள். அவர்களே ஏற்பாடு செய்வார்கள்.
 5.  தன்னிச்சையாக ஒருவரைப் பிடித்திருந்தால் மட்டுமே      காதலியுங்கள். ’நீ இல்லாவிட்டால் எலிப் பாஷாணம் குடித்து செத்துப் போவேன்’      என்கிற மாதிரி பிளாக் மெயில்களுக்கு பயந்து காதலிக்காதீர்கள். பின்னால்      வாழ்க்கை நரகமாக இருக்கும்.
 6.  யாராவது ஒருவர் சம்பாதித்தால் கூடப் போதும் என்பது      சரிதான், ஆனால் அந்த ஒருவர் ஆணாக இருக்கட்டும். இதைச் சொல்வதற்குக் காரணம்      ஆணாதிக்கம் அல்ல. ஆண்களுக்குத்தான் சந்தேகப்படும் புத்தி அதிகம். அதிலும்      வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தாலோ, தாழ்வு மனப்பான்மை இருந்தாலோ சந்தேகம்      இன்னும் வலுவாக வந்து தொலைக்கும்.
 7.  யாராவது பிரபோஸ் செய்யும் போது உங்களுக்கு சம்மதம்      இல்லை என்றால் காறித் துப்பி தலையில் சாணி கரைத்து ஊற்றித்தான் அதைச் சொல்ல      வேண்டும் என்பதில்லை. அஸெர்ட்டிவாக ஆனால் உறுதியாக உங்களுக்குச் சம்மதம்      இல்லை என்பதைச் சொல்லுங்கள். காரணம் என்னவாக இருந்தாலும் இன்ன காரணத்தால்      பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.
 8.  பெற்றோர் வழக்கமாகக் கேட்கும் கேள்வி, ‘இத்தனைநாள்      உனக்கு பார்த்துப் பார்த்து எல்லாம் செஞ்ச எங்களை விட அவன் உசத்தியாப்      போய்ட்டானா?’. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் கல்லுளி மங்கி மாதிரி      இருந்தால் அவர்களுக்கு இன்னும் ஏறும். ‘இல்லை, அப்படி இருந்தால் அவன் கூட      ஏற்கனவே ஓடிப் போயிருப்பேன்’ என்று சொல்லுங்கள். கொஞ்சம் யோசிப்பார்கள்.
 9.  காதல் தோற்று விட்டால் உடனே ஒரு நாலு முழ வேட்டியோ,      புடவையோ எடுத்துக் கொண்டு சீலிங் ஃபேனைத் தேட வேண்டாம். பல்லைக் கடித்துக்      கொண்டு மூன்று நாட்கள் இருங்கள். நாலாம் நாள் கண்டிப்பாக ஐடியா மாறும்.
 10.  லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட். பொது இடங்களில்,      முக்கியமாக குழந்தைகள் நடமாடும் இடங்களில், இசகு பிசகான நிலையில்      உட்காராதீர்கள்.
Advertisements

21 comments

 1. என்ன நண்பரே,
  Butter cutter இதெல்லாம் உங்கள் அனுபவம் என்கிறாறே, அப்படியா?
  பத்துக்கு பத்து மார்க் கொடுக்கிறேன் நான். மிகவும் அருமை!

 2. //லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட். பொது இடங்களில், முக்கியமாக குழந்தைகள் நடமாடும் இடங்களில், இசகு பிசகான நிலையில் உட்காராதீர்கள்.//
  : )

 3. யாரைப் பார்த்தாலும் வருவதல்ல காதல் -right sir

  யாராவது ஒருவர் சம்மதித்து விட்டால் போதும் என்று நினைக்க வேண்டாம் – correct sir

  யார் மீது காதல் வந்தாலும் உடனே போய்ச் சொல்லி விட வேண்டாம்.-correct sir

  கொஞ்ச காலம் காத்திருங்கள் – okey sir

  வேறு யார் மீதும் காதல்வரவில்லை என்றால் ….???????
  (what is the meaning of first Line thala….?????)

  அப்புறமாகப் போய்ச் சொல்லுங்கள்
  vadivelu style: AAndavaa!!! mMUDIYALA!!!

 4. தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க எல்ல்லோருக்கும், லிங்க் ஃபார்வேர்ட் பண்ணி, படிக்க சொல்லிட்டேன்!!!

  அன்புடன்

  சீதாலஷ்மி சுப்ரமணியம்

 5. அந்த ஆறாவது பாயின்ட் எனக்கும் உடன்பாடு ஆனால் வேறு காரணத்திற்க்காக(வும்). ஒரு தாய் இருந்து வளர்க்கும் பிள்ளையைப் போன்று தந்தை வளர்ப்பில் இருக்காது என்பது திண்ணம் (சொற்ப விதிவிலக்குகள் உண்டு). என் வளர்ச்சியின் முழுப்பங்கும் என் தாய்க்குத்தான் என்பதை எங்கு வேண்டுமென்றாலும் கூறத்தயங்க மாட்டேன். உண்மையிலேயே தாய்மையுடன் பேணி வளர்த்தல் என்பது எதைக்கொண்டும் ஈடுசெய்ய இயலாதது.

 6. ஜவர்லால்! நீங்க பெரிய சிந்தனையாளர் மட்டுமல்ல! பெரிய எழுத்தாளர் கூட!! வாழ்க உங்கள் எழுத்து!! வளர்க உங்கள் blogspot!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s