பாங்க் கொள்ளை தடுப்புக்கு யோசனைகள்

காவல்துறை வங்கி அதிகாரிகளை அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாக செய்தி பார்த்தேன். இது ஒரு நல்ல அணுகுமுறை. என் அறிவுக்கு எட்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 செக்யூரிட்டி      கார்ட் வைப்பது ஒரு தீர்வே அல்ல. ஏறக்குறைய எல்லா நிறுவனங்களும்      செக்யூரிட்டியை ஔட் சோர்ஸ் செய்திருக்கிறார்கள். அந்தக் காண்ட்டிராக்டர்கள்      அற்ப சொற்ப சம்பளத்திற்கு வைத்திருக்கும் கார்டுகள் எத்தியோப்பியா பிரஜைகள்      போலப் பரிதாபமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் சக்தியில் கையில் இருக்கும்      துப்பாக்கியைக் கூடத் தூக்க முடியாது. (அந்தத் துப்பாக்கியால் குருவியைக் கூட      சுட முடியாது என்பது இன்று விரல் சப்பும் குழந்தைக்குக் கூடத்      தெரிந்திருக்கிறது) ஆகவே இவர்களை ஓவர் பவர் செய்வது கொள்ளைக்காரர்களுக்கு ஒரு      பெரிய விஷயமே அல்ல.

அபாய      அறிவிப்பு சைரன்களாலும் பெரிய ஆதாயம் எதுவுமில்லை. அதன் ஒலி போலிஸ் ஸ்டேஷன்      வரை சத்தியமாகக் கேட்கப் போவதில்லை.

 அப்புறம் என்னதான்யா செய்யலாம் என்று கேட்பீர்கள். நல்ல கேள்வி.

 1. அக்கவுண்ட்      ஹோல்டர்கள் தவிர வேறு வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாத அமைப்பு அவசியம்.      அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு அடையாள அட்டை தந்து அதை ஸ்வைப் செய்தால்தான்      திறக்கிற மாதிரி கதவுகள் அமைக்க வேண்டும். இந்தக் கதவில் கண்ணாடி இருக்கக்      கூடாது. முழுக்க முழுக்க ஸ்டீல் கதவாக இருக்க வேண்டும். அக்கவுண்ட்      ஹோல்டர்கள் தவிர வேறு யாராக இருந்தாலும் (வேறு நுழைவாயில் வழியாகப் போகிற      மாதிரி) தனியாக அமைக்கப்பட்டிருக்கும் அறையில்தான் ஊழியர்கள் அவர்களைச்      சந்திக்க வேண்டும். புது அக்கவுண்ட்டாக இருந்தாலும் இதே முறைதான்.
 2. ஜெர்மன்      ஷெபர்ட், அல்சேஷன் மாதிரி ராட்சஸ நாய்கள் வளர்க்கப்பட வேண்டும். பிஸ்கட்டைப்      பார்த்தாலே பாய்ந்து பிடுங்கித் தின்கிற அளவு பஞ்சத்தில் அதை வளர்க்கக்      கூடாது. அதன் ஆரோக்யமான வளர்ப்புக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.      செக்யூரிட்டி கார்டைப் பார்த்து பயப்படாதவன் கூட இதற்கு நிச்சயம்      பயப்படுவான். இந்த நாய்களை லாக்கர் அருகிலேயே நிறுத்தி வைக்க வேண்டும்.
 3. சர்வீலியன்ஸ்      கேமிராவுக்கு முகத்தைக் காட்டாமல் உள்ளே நுழைய முடியாதபடி வாசற்புறம் ஒரு      கேமிரா அவசியம். அது பதிவாகிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு ஸ்பேர் காமிரா      அவசியம். பழுதானால் சில மணி நேரங்களுக்குள் சரி செய்தாக வேண்டும்.
 4. எந்நேரத்திலும்      வங்கிக்குள் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.      ஐந்து வாடிக்கையாளர்களுக்கு அதிகமாக உள்ளே ஆட்கள் அனுமதிக்கப்படக் கூடாது.      (இந்த ஐந்து என்பது தெய்வீக எண்ணிக்கை அல்ல. வங்கி ஊழியர்களின் எண்ணிகையைப்      பொறுத்து இதை மாற்றிக் கொள்ளலாம். ஐடியா என்னவென்றால் ஊழியர்கள் எல்லாரும்      சேர்ந்து விரோதிகளை ஓவர்பவர் செய்ய முடிய வேண்டும் என்பதே)
 5. எல்லா      வங்கிகளிலும் மெடல் டிட்டக்ட்டர் கேட்கள் அவசியம். அதைக் கடந்துதான் உள்ளே      பிரவேசிக்க முடிய வேண்டும். இல்லையென்றால் கதவு திறக்காது என்று இருக்க      வேண்டும்.
 6. எல்லா      ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தான பயிற்சி      வகுப்புகள் நடத்த வேண்டும். கொஞ்ச காலத்துக்கு ஒருமுறை ரெஃப்ரஷர்      வகுப்புக்களும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
 7. எல்லா      ஊழியர்களும் ஒரே சமயம் உணவருந்தப் போகக் கூடாது. பேட்ச் பேட்சாகத்தான் போக      வேண்டும். உணவு இடைவேளையின் போது உள்ளே வாடிக்கையாளர்களுக்கு அனுமதி இருக்கக்      கூடாது.
 8. பாதுகாப்பு      தொடர்பான விஷயங்களில் காஸ்ட் கண்ட்ரோல் செய்யவே கூடாது. இதை ஏன் சொல்கிறேன்      என்றால் எனக்குத் தெரிந்த ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் அதன் மேலாளர் (அவர்      முன்னாள் ராணுவ அதிகாரி வேறு!) காஸ்ட் கண்ட்ரோல் என்று செக்யூரிட்டிக்களின்      எண்ணிகையைக் குறைத்து விட்டார்.
 9. ஒவ்வொரு      வங்கிக்கும் அருகிலிருக்கும் காவல் நிலையத்துடன் தொடர்பு கொள்ளும் ஹாட்லைன்      ஃபோன்கள் அவசியம். ரிஸீவரை எடுத்ததுமே எதிர்முனையில் மணி ஒலிக்கிற மாதிரி      அமைப்புகள் மிக எளிதாக செய்ய முடியும்.
 10. இவைகளுடன் கூட      ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் பாதுகாப்புச் சாதனங்கள் அமைக்க முடியும். ஒரு சில      ஐடியாக்களை அடுத்த பதிவில் சொல்ல உத்தேசம்.

ஐநூறாவது இடுகை கொஞ்சம் உருப்படியாக இருக்கட்டுமே என்கிற ஆவலில் எழுதப்பட்டது.

Advertisements

18 comments

 1. //ஐநூறாவது இடுகை கொஞ்சம் உருப்படியாக இருக்கட்டுமே என்கிற ஆவலில் எழுதப்பட்டது.// க க க போ….

  வங்கிக்குள் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது,, நாய்கள் வளர்ப்பு போன்றவற்றை நமது நாட்டில் செயல்படுத்த முடியாதே எனத் தோன்றும் என் எண்ணத்தின் காரணமாக அவற்றில் உடன்பட மறுக்கிறேன்..

  இருப்பினும் மிக அருமையான & அவசியமான பதிவு..

  500க்கு வாழ்த்துகள்….

 2. 500 adichalum studay -a Nikkirar paaru NAMMA AALU!!!!!!
  HAH! HAAH!! HAAA!!!

  2.ஜெர்மன் ஷெபர்ட், அல்சேஷன் மாதிரி ராட்சஸ நாய்கள் வளர்க்கப்பட வேண்டும். பிஸ்கட்டைப் பார்த்தாலே பாய்ந்து பிடுங்கித் தின்கிற அளவு பஞ்சத்தில் அதை வளர்க்கக் கூடாது. அதன் ஆரோக்யமான வளர்ப்புக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். செக்யூரிட்டி கார்டைப் பார்த்து பயப்படாதவன் கூட இதற்கு நிச்சயம் பயப்படுவான். இந்த நாய்களை லாக்கர் அருகிலேயே நிறுத்தி வைக்க வேண்டும்.

  Vivek Joke: NEENGA PATTAYA Podu-veengaloo! ILLA KOTTAI-YA Poodu-veengalo! IPPA ADHU “VITTAYA (by product)”
  podapogirathy!!! be ready!!!

  Idhukku pesaamey Ellorukkum (atleast Manager, cashier-kku) Thuppakki suda TRAINING & AUTHORISATION tharalamey.
  (enna aagathavanai pootu-thalli-vittal, perum Pirac-chinai.)

  Idhu pola, Thoothukudi-il oru Bank-il ippavum irruppathaaga kelvip-patten.

  Unmaya!!!! Sollungappu!!!! Sollunga!!!!

 3. இவ்வளவு கஷ்டப் படுவதை விட நாங்க சுவிஸ் பாங்குல கணக்கு ஆரம்பிச்சுடலாம் என்று இருக்கின்றோம். இதுவரையிலும் சுவிஸ் பாங்க எதையும் யாரும் கொள்ளை அடித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை கொள்ளைக்காரர்கள்தான் அங்கே அக்கவுண்ட் ஹோல்டர்களோ?

 4. சச்சின் மைதானத்தில் (ஆடுகளத்தில்) நூறாவது சதமடிக்க சுமார் ஒரு வருடமாகத் திக்கித் திணறிக்கொண்டிருக்கிறார். அடிப்பாரா மாட்டாரா என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஜோரான காத்திருப்பின் இடையே சத்தம் போடாமல் பிளாக்கில் ஐந்து சதமடிக்கும் எங்கள் ஜவஹர் அவர்களுக்கு ஒரு சலாம்!! கூடவே 500 ஓ’வும் போடுவோம்!! தொடருங்கள் ஜவஹர் அவர்களே. வாழ்க, வளர்க!!

 5. “பிடுங்கித்தின்னும் நாய்கள்” என்பதைப் படித்த உடன் ஒரு முக்கியமான விஷயத்தினையும் சேர்க்கலாம் என தோன்றியது.. அரசியல்வாதிகள் & அல்லக்கைகள் அனைவரும் எல்லா பாதுகாப்பு பரிசோதனை மற்றும் வரிசை முறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்பதே அது (எந்த ரூல்ஸ் என்றாலும் அது பொதுமக்களுக்கு மட்டுமே என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது).. அரை சஹஸ்ர வாழ்த்துக்கள்…

 6. ஐநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!
  பணமுள்ளவர்களுக்குதான் இந்த பிரச்சனையெல்லாம்.
  பணத்தை கண்டுப்டித்ததின் காரணத்தாலேயே இவ்வளவும்.
  பேசாமல் பண்டமாற்று முறையை அமல்படுத்திவிடலாம்.
  பேங்க்கும் தேவையில்லை கொள்ளையும் போகாது நாயும் வேண்டாம்

 7. 500ஆ! தீவிர உழைப்புக்கும் தளராமைக்கும் வாழ்த்துக்கள் ஜவஹர்!

  செக்யூரிடி விவரமெல்லாம் தெரிஞ்சுகிட்ட போலீஸ்காரர் அடுத்து என்ன செய்வாருனு யோசிக்க வைக்குது.

 8. ஐநூறுக்கு வாழ்த்துக்கள்.

  அல்செஷனும் ஜெர்மன் ஷெப்பெர்டும் ஒன்றுதான் என நினைக்கிறேன். உண்மையா?

  நாய்க்குப் பயந்து வாடிக்கையாளர்கள் வேறு பேங்குக்கு போகாவிட்டால் சரி.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s