என்கௌண்ட்டர் விவகாரம்

ஆரம்பத்திலேயே இரண்டு விஷயங்களைத் தெளிவு படுத்தி விடுகிறேன் :

 1. திருடுகிற      எல்லாரையும் போலீஸார் போட்டுத் தள்ள வேண்டும் என்பது என் கருத்தல்ல.
 2. மனித உரிமை      அமைப்புக்கள் இது போன்ற சம்பவங்களைப் பார்த்துக் கொண்டு வாயை மூடிக் கொண்டு      இருக்க வேண்டும் என்பதும் என் கருத்தல்ல.

 பட்டப் பகலில், பரபரப்பாக இருக்கிற நகர்ப்பகுதியில், மாநிலத் தலைநகரில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ஒன்றல்ல, ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு கொள்ளைகள் நடந்துள்ளன.  கொள்ளை அடித்தவர்களைச் சுற்றி வளைத்து சரணடையச் சொன்ன போது போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். இரண்டு இன்ஸ்பெக்டர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதைத் தொடர விட்டிருந்தால் ஒன்றிரண்டு போலிஸார் மரணமே அடைந்திருக்கக் கூடும்.

 இந்த நிலையில், போலீஸார் துப்பாக்கியை முதுகு சொறியப் பயன்படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தங்கள் மேல் நடக்கும் துப்பாக்கிச் சூட்டைப் பொறுத்துக் கொண்டு, எந்த வன்முறையும் இல்லாமல் போராட இது சுதந்திரப் போராட்டம் அல்ல. இது ஒரு எமெர்ஜென்ஸி சூழ்நிலை. அப்போது போய் மேஜிஸ்ட்ரேட்டிடம் ஷூட்டிங் ஆர்டர் வாங்கிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் திருடர்களே இல்லை என்றாலும் (அவர்கள்தான் திருடினார்கள் என்று வங்கி அதிகாரிகள் உறுதி செய்தாகி விட்டது வேறு விஷயம்) இது போன்ற சூழ்நிலையில் போலிஸார் திருப்பிச் சுட்டே ஆக வேண்டும். அப்படி இருட்டில், ஒரு வீட்டுக்குள் இருக்கிறவர்களைச் சுடுகிற போது இடுப்புக்குக் கீழே ஃபார்முலாவெல்லாம் நடக்காது.

 பொதுமக்களுக்கு தைரியத்தையும், குற்றவாளிகளுக்கு அச்சத்தையும் தருவது கவல்துறையின், அரசின் முதற்பொறுப்பு. கொலை கூடப் பண்ணலாம். ஆனால் அவர்களுக்கு தூக்குதண்டனை கூடாது என்று போராட ஒரு கூட்டம் இருக்கிறது. திருடுகிறவர்களை கைது பண்ணக் கூடாது என்று அவர்கள் சீக்கிரமே போராட ஆரம்பிக்கலாம். ஆஃப்டர் ஆல் இல்லாத குறையில்தானே இருபது லட்சம் திருடுகிறான். பாவம்! என்று வாதிடுவார்கள்.

 அரசாங்கம் பொதுமக்களின் பயத்தைப் போக்குகிற மாதிரி செயல்படும் போது பாராட்ட வேண்டாம், அதைக் குறை கூறாமலாவது இருக்கலாமே?

 பேர் தப்பாகிப் போன ஒரே காரணத்தால் கொல்லப்பட்டது திருடர்களே அல்ல என்கிற மாதிரி பிரச்சாரத்தை சில மஹாத்மாக்கள் செய்து வருகிறார்கள். திருடியது பேரா, ஆளா? ஆட்கள் அவர்கள்தான் என்பதை வங்கி அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள். மஹாத்மாக்கள் பிரச்சினை வேறு! திருடர்களுடன் தங்களுக்கு இருக்கும் தொடர்பு தெரிந்து விட்டால் பிழைப்பு நடக்காதே என்கிற கவலை! சமூக விரோதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகள், பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பது புதிதல்ல. அங்க அடையாளங்கள், ஊர், பேர், பிறந்த தேதி, நேரம், எந்த ஆஸ்பத்திரி, சுகப்பிரசவமா, ஆயுதக் கேஸா என்று எல்லா விவரங்களையும் தெள்ளத் தெளிவாக வைத்துக் கொண்டுதான் திருட வருவார்களா?

 தவறு நடந்து விடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கும் சிலர் ஆட்சேபக் குரல் எழுப்புகிறார்கள். இது புரிந்து கொள்ளக் கூடியதே. சொல்லப் போனால் இது மாதிரி எதிர்ப்புகள் இல்லாவிட்டால் தவறான என்கௌண்ட்டர்களுக்கு வழிவகுத்து விடும் என்பது நிஜமே.

 ஆனால், எதிர்க்கிற எல்லோருமே சமூக நலனில் அக்கரை இருப்பவர்கள் அல்ல. கீழ்த்தரமாக அரசியல் செய்பவர்கள், திருடர்களுடன் இருந்த கூட்டணி வெளிப்பட்டு விடக் கூடாதே என்கிற பயத்தில் இருப்பவர்கள் என்று பலசாராரும் இருக்கிறார்கள்.

Advertisements

21 comments

 1. பொதுவா நீங்க சொன்னது சரிதான்…!

  கொலைகாரனை, கொல்ல முயற்ச்சிப்பவனை கொல்லலாம். தற்பாதுகாப்புக்காக.!

  ஆனால் இந்த குறிப்பிட்ட “என்கவுண்டர்” பத்தி மட்டும் சொல்லுங்க..!

  தகவல்களை முன்னமே பெற்றிருந்தும் அவர்களை உயிருடன் பிடிக்க…, -ஓரிருவரையாவது காயப்படுத்தி பிடிக்க- முயலாலது ஏன்…! ?

  அட்லீஸ்ட் இந்த மாதிரி அயல் மாநில கூட்டுக்கொள்ளையரகளை பற்றி தகவல்களையாவது பெற்றிருக்கலாம்..! as of now the other state peoples..involves in more crimes in TN. 😦

 2. I go with ur points. But answer one simple qn. If the police really were been attacked and they were forced to shoot back in need of defense of civilians and police, why didn’t they use any non-lethal weapons to capture them??
  The police had said they went with full weapons as they were told by bank employees that robbers were carrying guns. In this case they might have used rubber bullets, tear gas etc…

  This is the same case as Paramakudi riots. police literally know they are knowing commit a planned murder.

  No one has the right to take down lives of others it includes law enforcement as well….

 3. அது என்னமோ தெரியல, இதுமாதிரி மோதல்கள்-ல சரியா ஒரு அல்லது இரண்டு போலீசுக்கு மட்டும், ப்ளேடு கீறல், தோல் பிய்தல் ரேஞ்ச்-ல ஏதாவது நடந்து, பொதுமக்களுக்கு பெருத்த மனக்கஷ்டம் கொடுத்திடுது. 🙂

  ஊருக்கே தெரியும் யாரையோ குஷிப்படுத்த செய்யப்பட அதிரடி இது-ன்னு, சட்ட விரோதமானது-ன்னு. அவங்க-அவங்க தனிப்பட்ட முறையில இப்படிப்பட்ட போலீஸ் சட்டமீறல்கள்-ல துன்புறுத்தப்படும்போது பார்க்கலாம், இதே logic-க்க சொல்றாங்களா இல்ல போலீஸ் அடாவடித்தனம்-ன்னு சொல்றாங்களா-ன்னு. எதுக்கும் ஒரு தடவ ‘மௌனகுரு’ பாருங்க.

 4. //ஆனால், எதிர்க்கிற எல்லோருமே சமூக நலனில் அக்கரை இருப்பவர்கள் அல்ல. கீழ்த்தரமாக அரசியல் செய்பவர்கள், திருடர்களுடன் இருந்த கூட்டணி வெளிப்பட்டு விடக் கூடாதே என்கிற பயத்தில் இருப்பவர்கள் என்று பலசாராரும் இருக்கிறார்கள்.//

  உண்மை …

 5. இங்கு வெளியிடப்பட்ட கருத்துக்கள், நாம் காவல்துறையின் மீது வைத்துள்ள நம் எண்ணங்களை பிரதிபலிக்கின்றன.
  காவல்துறை, துறை ரீதியான செயல்பாடுகளிலிருந்து பிறழ்ந்து பல ஆண்டுகளாகிவிட்டன. அந்த துறை அரசியல்வாதிகளின் கைப்பாவையாகிவிட்டதாகவே அனைவரும் எண்ணுகின்றன.
  இன்றைய தினம் போடப்படும் அனைத்து கேஸ்களும் பழிவாங்கும் விதத்திலேயே உள்ளன.
  எனவே காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. அவர்கள் என்ன விதத்தில் நடவடிக்கை எடுத்தாலும் அதிருப்தி ஏற்படுவது சகஜமே!
  இந்த நிகழ்வு காவல்துறைக்கே ஒரு சுயபரிசோதனையாக கருதி தங்களின் தனித்திறமையை மெய்ப்பித்து குற்றங்களை தடுத்தால்….
  HATS OFF TO YOU, TN POLICE.
  உண்மையில் காவல்துறையை நம் நண்பனாக கொண்டாடுவோம்!!!

 6. ஜவர்லால்,அவர்கள் கொள்ளையர்களாவே உறுதி செய்யப்பட்டாலும் வர்களது தொடர்புகள் பற்றிய எந்த விவரமும் வெளிவராவண்ணன் அவர்களைக் கொன்றாகி விட்டது…அது முழுக்கத் தவறுதானே??

 7. //ஆனால், எதிர்க்கிற எல்லோருமே சமூக நலனில் அக்கரை இருப்பவர்கள் அல்ல. கீழ்த்தரமாக அரசியல் செய்பவர்கள், திருடர்களுடன் இருந்த கூட்டணி வெளிப்பட்டு விடக் கூடாதே என்கிற பயத்தில் இருப்பவர்கள் என்று பலசாராரும் இருக்கிறார்கள்.// இதை நான் எதிர்கிறேன்……

  இந்த என்கௌன்ட்டர் நடந்த இடம்… என்னது விட்டிருக்கு அருகில் தான்…. (300 அடி தூரம் தான்) நான் இரவு 12 .30 வரை முழித்து கொண்டு தான் இருந்தேன்….. என்னக்கு அவர்கள் கூறுவது போல்… ஒலி பெருக்கி முலம் எந்த எச்சரிக்கையும் செய்ய வில்லை….. ஒரு மணி நேரதிற்கு மேல் துப்பாக்கி சண்டை நடந்தது என்றால் கண்டிப்பாக என்னக்கு சத்தம் கேட்டு இருக்கும்…. அன்னால் இல்லை…. இதை பற்றி நானும் ஒரு பதிவு பொது இருக்கிறேன்…. பார்த்து விட்டு கருத்து சொல்லவும்…..

  http://wheretheworldisgoing.blogspot.in/2012/02/encounter.html

 8. //இந்த நிலையில், போலீஸார் துப்பாக்கியை முதுகு சொறியப் பயன்படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை//

  போலிசு சொல்றதை அப்படியே நம்பும் அப்பாவியா நீங்கள்.

  வளர்ப்பு மகன் மீதே தேவைப்படும் போது கஞ்சா கேஸ் போடுவாங்க சார், நக்கீரன் கோபாலை தீவிரவாதி ஆக்கி ஜட்டியோடு உட்கார வைத்தார்கள் சார்,

  🙂

  15 லட்சம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தவர்களுக்கு என்கவுண்ட்ர், பேனா முனையால் 60 கோடி லபக்கியவர்களுக்கு பெங்களூரில் குளு குளு வசதியுடன் கோர்ட்.

 9. வேலை பளுவின் காரணமாக ரெம்ப நாளைக்கு பிறகு தான் உங்கள் பக்கத்திற்கு வருகிறேன். இவ்ளோ அப்பாவியா சார் நீங்க. ப்ரோபபிளிட்டி படி பார்த்தால் கூட உண்மையான என்கௌண்டர்- க்கு சாத்தியமே இல்லையே. அப்பட்டமான மனித உரிமை மீறல். உண்மை கசிந்துகூட விடக்கூடாது என்ற கொலைவெறி.

  கொள்ளையர்கள் செய்தது நியாயப்படுத்த முடியாது என்றாலும் விசாரணை ondru endru thevaiye illai enbathu sarvaathigaaram தான்

  1. ப்ரோபபிளிடியில் என்ன தெரிந்தது? எத்தனை பெரிய சாம்பிள் எடுத்து ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்கு பார்த்தீர்கள்? உண்மையான என்கோவ்ன்ட்டர் இல்லை என்பது உங்களுக்கு எப்படிதெரியும்? என்ன அத்தாட்சி? கொள்ளைக்காரனும் கொலைகாரனும் தான் ‘மனிதனா’? என்ன அவர்களுக்குத்தான் உரிமை உண்டோ?? போலீஸ் காரர் மனிதர் இல்லையோ?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s