இங்கேதான் இருக்கு ஸ்பெக்ட்ரம் பணம்

ஷாப்பிங் மால்களில் சுற்றித் திரிவது கூட ஒரு யோகப் பயிற்சிதான்.

பர்ஸில் கையே வைக்காமல் வெளியே வந்து விட்டால் நீங்கள் ஆசைகளைத் துறந்த பெரும் துறவி என்பது திண்ணம். – இது ஒரு பொதுவான விதிதான்; பெங்களூர் ஷாப்பிங் மால்கள் முற்றிலும் வேறுபட்டவை.

 சென்னையிலும் ஸ்பென்ஸர், ஸ்கைவாக், சிட்டி செண்ட்டர் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றியிருக்கிறேன். சென்னையில் இரண்டு வகை மக்களைப் பார்க்கலாம். (அ) சும்மா சுற்றிவிட்டுப் போய்விடுகிறவர்கள், (ஆ) பொருட்களை வாங்குகிறவர்கள். சென்னையில் வாங்குகிறவர்களை தேவைக்கு வாங்குபவர்கள், ஆசைக்கு வாங்குகிறவர்கள், ஆடம்பரத்துக்கு வாங்குகிறவர்கள் என்று மூன்று வகைகளில் பிரித்து விடலாம்.

 பெங்களூரில் இன்னொரு ஜாதி இருக்கிறது.

 செலவு செய்பவர்கள்!

 அவர்கள் வாங்கும் பொருட்களில் தேவை, ஆசை, ஆடம்பரம் எல்லாம் கடந்து, செலவு செய்தாக வேண்டுமே என்கிற அவசரமும், பதற்றமும் மட்டுமே தெரிந்தது. என்னென்னவோ வாங்குகிறார்கள்.. விலையைப் பார்ப்பதே இல்லை. விலை என்பது வாங்கும் பொருளுக்கு ஒரு கிரைட்டீரியா என்று சொன்னால் கூட சிரிப்பார்கள் போலிருக்கிறது.

 பெங்களூர் ஃபீனிக்ஸ் ஷாப்பிங் மாலில் கொஞ்ச நேரம் சுற்றிக் கொண்டிருந்த போது ஸ்பெக்ட்ரம் பணம் பூரா பெங்களூரில்தான் புழங்குகிறதோ என்கிற சந்தேகம் வந்தது. ஃபீனிக்ஸிற்கும் இதர ஷாப்பிங் மால்களுக்கும் இருக்கும் அடிப்படை வித்யாசம், இருக்கிற ஃப்ளோர் ஏரியாவில் 25% இல்தான் கடைகள்; பாக்கி ஸ்பேஸ் பூரா விலாஆஆஆஆசமாக சும்மாவே இருக்கிறது.

இவ்வளவு இடத்தை வீணாக்கியிருப்பதிலேயே பணத் திமிர் தெரிகிறது. அந்தக் கேம்பஸில், வெளியே சும்மா இருக்கிற இடத்தை அன்னா ஹஸாரே குரூப்புக்கு உண்ணாவிரத ஷோவுக்கு வாடகைக்கு விடலாம். அப்போதும் ஒரு ஐம்பது சதுர மீட்டராவது ஃப்ரீயாக இருக்கும்.

 அங்கே இருந்த செறுப்புக் கடைகளில் என்ன விலை ரேஞ்ச் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன். (பிடிவாதமாக என் மகன் வாங்கிக் கொடுத்த) செறுப்புக்கு அவர்கள் தந்த 20% கழிவுதொகை நான் ஏற்கனவே உபயோகித்துக் கொண்டிருந்த செறுப்பின் விலையை விட 30% அதிகம்!(என்னை பெங்களூர்காரர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டாம். அறுந்த செறுப்புடன் போயிருந்தேன்) ஆயிரத்தி எண்ணூறு ரூபாய் விலையுள்ள செறுப்பை, ‘இதெல்லாம் கேஷுவல் வேர் சார். உள்ளே அந்தப் பக்கம் பாருங்க, நல்ல வெரைட்டி இருக்கு’ என்றார் கடைக்காரர்!

 புடவைக் கடைகளில் 51% கழிவு போக (சிந்தட்டிக்) புடவைகள் விலை நாலாயிரம். சரவணா ஸ்டோரில் அறுநூறு ரூபாய்க்கு விற்கும் புடவைக்கும் இதற்கும் சத்தியமாக என் புடவை ஞானசூன்யத்துக்கு வித்யாசம் தெரியவில்லை. ‘சாரி ஃபால் நல்லா இருக்கும் சார்’ என்றாள் விற்பனைப் பெண். சாரி ஃபால் ஆகாமல் இருப்பதுதானே கௌரவம் என்று கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன்.

இங்கெல்லாம் பொருள் வாங்குபவர்களை சிம்பாலிக்காகச் சொல்கிறார்களோ?

 ரெஸ்டாரண்ட்டில் மட்டும், சென்னை ஓட்டல்களின் பகல் கொள்ளையை விட அதிக வித்யாசமில்லை. அமெரிக்க ஃபுட் கோர்ட்களிலும் அதே விலைதான் என்று இல்லத்தரசி தெரிவித்தார். வேலைக்கு இருக்கும் கோர்காலேண்ட் பையன்களுக்கு சாதா தோசை, ரவா தோசை, மசால் தோசை இவற்றுக்கிடையே இருக்கும் வேறுபாடுகள் தெரியாததால் அடிக்கடி தப்பு டெலிவரி செய்கிறார்கள். எங்களிடம் அவன் செய்த தப்பில் ஓட்டலுக்கு அறுபது ரூபாய் நஷ்டம்.

Advertisements

13 comments

 1. சார்
  நீங்கள் ஒரு மஹான்.
  துல்லியமாக எழுதி இருக்கிறீர்கள்.
  கடைக்கு உள்ளே உலா வரும் போது வரும் வயத்தெரிச்சலை அனுபவித்து வார்த்தைகளில் சுருக்கமாக நாசூக்காக கொட்டி உள்ளீர்கள். இன்னமும் நீங்கள் விலாவாரியாக எழுத ஏகப்பட்ட சங்கதிகள் இருக்கு.
  நன்றி சார்.
  வணக்கம்.
  வாழ்க வளமுடன்
  அன்புடன்
  ஸ்ரீனிவாசன்.

  1. துளசிஜி, அவ்வப்போது வரும் ஆம்பிகுய்ட்டிகளில் இதுவும் ஒன்று. ஆனால் செறுப்பு என்பதன் சரியான பொருளை எழுதியிருக்கிறீர்கள், நன்றி!

 2. தேங்க்ஸுங்க! நான் துறவி தான். பர்ஸில் கை வைக்காமலே சுற்றி வருவேன்.

  நமக்கு எல்லா ஏரியாவும் தெரிந்த இடங்கள் என்பதால் , விலை குறித்து தெரிந்து இருப்பதால், எந்த சாமான்கைளை எங்கே கிடைக்கும் என்று தெரிந்து இருப்பதால், மால்களில் சட்டென்று வாங்க முடிவதில்லை.

  பலருக்கு, புது இடம், நேரம் போதாது, அதிகம் செலவழிந்தாலும் போகட்டும் என்று வாங்குவார்கள்.

  சில சமயங்களில் , வெறிச்சோடு கிடக்கும் கடைகளை பார்த்தால், எதற்காக இவ்வளவு மின்சார ம் வீணாக்கி, அந்த, இளைஞர்கள் அதிக காற்றோட்டம் இல்லாத இடத்தில் அடைந்து கிடக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன்.

  1. //சில சமயங்களில் , வெறிச்சோடு கிடக்கும் கடைகளை பார்த்தால், எதற்காக இவ்வளவு மின்சார ம் வீணாக்கி, அந்த, இளைஞர்கள் அதிக காற்றோட்டம் இல்லாத இடத்தில் அடைந்து கிடக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன்.// நானும்!

 3. முன்னாட்களில் கோவில் கலாசாரம் இருந்தது. இப்போது பணக்கலாசாரம் மிகுந்துவிட்டது.

  உறவினர்களுக்குள்ளயே பங்களூரில் வாங்குவது ஒஸ்தியா,மும்பையில் வாங்குவது ஒஸ்தியா என்ற விவாதம் எழுகிறது.

 4. ////சில சமயங்களில் , வெறிச்சோடு கிடக்கும் கடைகளை பார்த்தால், எதற்காக இவ்வளவு மின்சார ம் வீணாக்கி, அந்த, இளைஞர்கள் அதிக காற்றோட்டம் இல்லாத இடத்தில் அடைந்து கிடக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன்.// நானும்!//

  அந்தக் கடைகளுக்கு டார்கெட்டே ஒரு நாளைக்கு ஒண்ணு அல்லது வாரத்துக்கு மூணு கஸ்டமர்தான். தவறி நாம நொழஞ்சோமோ – விழ வேண்டியதுதான், வெலையைகேட்டு – மயங்கி

 5. இங்கெல்லாம் பொருள் வாங்குபவர்களை சிம்பாலிக்காகச் சொல்கிறார்களோ?

  thala unga photovila with and without NEENGA>>>……

  in other words…. unga 2 photos-mey SUUUPPPEEER!!!!!!!!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s