குலுக் பாடல்களில் பொருட்செறிவு

டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் சப்ளிமெண்ட்டில் வரும் படங்களைப் பார்த்தால் உள்ளாடை விளம்பரமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்றைக்கு சினிமாக்கள் ரொம்ப கௌரவமாக இருக்கின்றன. சினிமா செய்திகளில் இருக்கும் கவர்ச்சி சினிமாக்களில் இல்லை. எழுபதுகளில் சினிமாக்களுக்கு இரண்டு விஷயம் இன்றியமையாதவை. அவைகளில் ஒன்று கற்பழிப்புக் காட்சி. எல்லாப் படங்களிலுமே இதற்காகவே தங்கைப் பாத்திரங்கள் இருக்கும். ஏழைக் குடும்பமாக இருந்தால் கூட தங்கைகள் மட்டும் செழுமையாக இருப்பார்கள். (ஒருதரம் லைட்ஸ் ஆன் வினோத் பகுதியில் செட்டில் ’நான் கிழிக்கிற ஐநூறாவது ஜாக்கெட் இது’ என்று எஸ்.வி.ராமதாஸ் சொன்னதாகப் படித்திருக்கிறேன்.)

இன்னொன்று ‘அங்கும் இங்கும்’ ஜிகினா பளபளக்க குலுக் நடிகைகள் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு. ஒரு தமாஷ் என்னவென்றால், சில சமயம் இந்தப் பாடல்களில் இருக்கும் பொருட்செறிவு சோகப் பாடல்களில் கூட இருக்காது.

முழுவதும் துறந்த ஞானியுண்டு – அந்த

ஞானியின் வரிசையில் நானுமொன்று

பாசமும் பந்தமும் துறவிக்கில்லை – எந்த

பேதமும் என்போல் அழகிக்கில்லை

என்பது சகுந்தலாவின் குலுக் பாடல்களில் ஒன்றின் வரிகள்.

இவ்வளவு இருந்தும் சினிமா செய்திகள் இடம் பெறும் பகுதிகளில் வருகிற படங்கள் ரொம்ப மடியாக இருக்கும்.

******

அமேசான் ஆன்லைனிலேயே புத்தகங்கள் லெண்டிங் செய்கிறார்களாம். புத்தகம் படிப்பதற்காகவே லைஃப் டைம் 3ஜி ப்ரீ பெய்டாக அமேசான் கிண்டில் என்கிற ரீடர்களும் வருகின்றன. எனக்குக் கூட மகன் ஒன்று வாங்கி அனுப்பியிருக்கிறான்.

எனக்கென்னவோ ஹார்ட் காபியில் படிக்கிற சௌகர்யமும் திருப்தியும் இதில் வருவதில்லை. ஒரு முக்கிய காரணம் சென்ஸ் ஆஃப் பொசெஷன். ’என்கிட்ட இன்ன புத்தகம் இருக்கிறது’ என்கிற உணர்வு டிஜிட்டல் புத்தகங்களில் இல்லை.

ஆகவே நாய் பெற்ற தெங்கம் பழமாக அந்தக் கிண்டில் சும்மா இருக்கிறது. ‘நீங்கதான் யூஸ் பண்ணல்லையே யாருக்காவது குடுத்துடலாமா?’ என்று இல்லத்தரசி கேட்டால்,

‘புஸ்க்கு.. அது அவன் எனக்காக வாங்கி அனுப்பினது’ என்று மறுத்து விடுவேன்.

******

நங்கநல்லூர் ஆஞ்சநேயரைப் பார்க்கப் போகிற எல்லாரும் கோயில் அருகே இருக்கும் கிரி டிரேடர்ஸுக்குத் தவறாமல் போகவும்.

சங்க இலக்கியங்கள் எல்லாம் உரையுடன் கிடைக்கின்றன. டி.டி.ரங்கராஜன், ஷிவ் கேரா, சுக போதானந்தா, கிரேஸி, எஸ்.வி.சேகர், சோ நாடகங்கள், டி.கே.ஜெயராமன், மகாராஜபுரம், லால்குடி….. என்று சகல ஐஸ்வர்யங்களும் ஒரே இடத்தில்!

புத்தகச் சந்தையில் வாங்கிய அளவு புத்தகங்கள் கால் மணி நேரத்துக்குள் வாங்கி விட்டோம். அங்கே வேலைக்கிருக்கும் பெண்கள் படு ஸ்மார்ட். நீங்கள் எந்தெந்த அலமாரி அருகே போய் எதையெல்லாம் பார்த்துப் பெருமூச்சு விடுகிறீர்கள் என்பதிலிருந்து உங்கள் புத்தக ரசனை தெரிந்து விடுகிறது அவர்களுக்கு. உங்கள் ஃபேவரைட் டாப்பிக்குகளில் தி பெஸ்ட்டை எடுத்து வந்து உங்களை டெம்ப்ட் செய்து விடுகிறார்கள்!

யு கேன் வின்னில் இரண்டு அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு, ஷிவ் கேராவின் சொற்பொழிவு வீடியோ அடங்கிய ஒரு சிடியும் இலவசம் என்பதைச் சொல்லி ஒரு காப்பி என்னிடம் விற்று விட்டாள்.

******

Advertisements

10 comments

 1. சார் எல்லாம் சரி! நங்கநல்லூர் கிரிக்கு தவறாம போய்க்கிட்டு இருந்தேன். ஸ்வாமிக்கு வஸ்திரம் பார்த்து எடுத்திக்கிடமான்னு கேட்டேன். ஏதோ தேட்டை போட வந்த திருட்டுப்பய மாதிரி புடிங்கிக்கிட்டாங்க.. இன்னொரு தடவை வேறு ஒரு புஸ்தகத்து. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. எனக்கு ரெண்டு சூடு. நா கெட்ட மாடு. மூனாவது சூடு வேண்டாம்னு அந்தப் பக்கம் தலை வச்சுப் படுக்கிறதில்லை.

  நேரா ஆஞ்சு.. அப்புறம் ஆத்துக்குன்னு ரூட்டை மாத்திட்டேன்.

 2. கிழிக்கிற ஐனூறாவது… அடடா.. விழா எடுக்காம விட்டாரே? 🙂 பம்மல் நாட்களில் நண்பன் பாபு செய்தது நினைவுக்கு வந்தது.. ஒரு ஜோதிலட்சுமி நடனகாட்சியை ம்யூட் பண்ணிவிட்டு டேப்பில் சட்டி சுட்டதடா பாட்டைப் போட்டான்.. டேன்சு என்னவோ பொருத்தமாகத் தான் இருந்தது..

  1. நன்றி பூமிநாதன், இந்த மாதிரி நிறையப் பேர் திருடறாங்க. உங்களைப் போல வெல்விஷர்கள் சொல்லும் போதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்குத் தொடர்பு கொண்டு அன்பாக எச்சரிக்கிறேன். நிறுத்த முடியல்லை…. உங்கள் அன்பு தொடரட்டும், நன்றி.

 3. அந்த நாட்களில் பாட்டெழுதுபவர் , கவிஞராக இருந்தார். இன்று “கொலைவெறி” பிடித்துக் கண்டதெல்லாம் பாட்டெழுதுதாம். அந்த லூசுகளுக்கு தமிழ் தெரியாத பிரதம மந்தி(ரி)யுடன் விருந்தாம்.
  இவற்றைக் கேட்டேயாக வேண்டும்.

 4. ===>”…எனக்குக் கூட மகன் ஒன்று வாங்கி அனுப்பியிருக்கிறான்…”<=== – (எனக்குள்)..ச.. ஜவ(ஹ?)ர்லால்.. என் ஏஜ் க்ரூப் என நினைத்தது மாறி .. கொஞ்சம் பெரியவர் போலத் தோன்றுகிறது…

 5. அன்பின் ஜவர்லால் – நங்க நல்லூர் கிரி டிரேடர்ஸ் 0 கிண்டில்விகடன் – குலுக் பாடல்கள் – சிந்தனைகள் அனைத்துமே அருமை – நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s