அப்படி ஒரு தேவாரம் இருக்கிறதா?

தவப்புதல்வன் படத்தையும் அந்தக் காலத்தில் ரசித்துப் பார்த்திருக்கிறேன், அந்தப் படத்தின் பாடல்களும் என் அபிமானப் பாடல்களாகவே இன்று வரை இருக்கின்றன.

 ஆனால், அந்தப் படத்தில் வரும் இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலையும் அந்தக் காட்சியையும் இன்று பார்த்தால் வேறு மாதிரி சிந்தனைகள் வருகின்றன.

 அந்தக் காட்சியில் வரும் முதியவர் அக்பர் என்கிற கண்ணோட்டத்துடன் சின்ன வயதில் பார்த்தேன். அவர் ஒரு வைத்தியர் என்று இப்போது புரிகிறது. தான்சென், வைத்தியர், ஒரு இளம்(?)பெண். அந்தப் பெண் அக்பர் மகள் மெஹருன்னிஸாவாக இருக்கலாம். அவள் தான்செனுக்கு ரூட் விட்டதால்தான் அவர் இஸ்லாமியராக மதம் மாறி அவளை மணந்து கொண்டார் என்கிறது சரித்திரம். ஆகவே அது மெஹருன்னிஸா என்பது தொண்ணூறு சதவீதம் சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

 காட்சி அமைப்பைப் பார்த்தால் அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருப்பதும், பாட்டைக் கேட்டதும் குணமாகி எழுந்திருப்பதும் புரிகிறது. தான்சென் பாடியது குணமாகவா? தீபத்துக்காகவா அல்லது இரண்டுக்குமா?

 சீக்காளிக்குப் பாடியதாக சரித்திரத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. தீபத்துக்காகப் பாடியதாகவும் இல்லை. அவருடைய இசை தீபங்களை ஒளிபெறச் செய்யுமளவு சக்தி வாய்ந்தது என்று சரித்திரம் சொல்கிறது. சரி, அது ஒரு கனவுக் காட்சி; கனவுகள் சரித்திர வரையரைக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

 ஆனால்,

 ஒளி பெருங்கள் தீபங்களே, இன்னும் ஒளி வரவில்லையே பாவியா நான், ஒளி வேண்டும் என்று கெஞ்சுகிறேன் என்கிற அர்த்தத்திலெல்லாம் அந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. ஏதோ தான்சென் கெஞ்சிக் கூத்தாடி ஒளி வரவழைத்தது போல இருக்கிறது இது. சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு இசை வித்தகனை இது இழிவு படுத்துவது போலில்லை?

 இந்தக் காம்ப்ரமஸுக்கு காரணம் என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்தேன். சிவாஜி படங்களுக்கென்று சில ஸ்டாண்டர்ட் காட்சிகள் அவசியம் என்று அன்றைக்கு தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும், ஏன்… சிவாஜியும் கூட நினைத்தார்கள். தான்சென் ஒரு ஹிந்துஸ்தானி கிளாஸிக்கல் இசைக் கலைஞர். தத்தித் தகஜுண தகதிமி தகஜுண என்று குதித்து வீரு கொண்டு எழுகின்ற பாடல்களை ஹிந்துஸ்தானியில் பார்க்க சாரி கேட்க முடியாது. அதே படத்தில் வரும் போட்டிப் பாடலில் கூட ஹிந்துஸ்தானி கலைஞருக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடும் பகுதிகள் ரொம்பக் குழைவாகத்தான் இருக்கும்.

 நடிப்பது சிவாஜி என்பதால் தான்சென் ஒரு ஹிந்துஸ்தானி கலைஞர் என்பதை சௌகர்யமாக மறந்து விட்டு எம்.கே.டி. பாணி பாடல் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதை அங்கும் இங்கும் சினங்கொண்ட வேங்கை மாதிரி நடந்தபடி பாடி நடித்திருக்கிறார் சிவாஜி. இது காலத்தின் கட்டாயம். அவர் ரசிகர்கள் இதை எதிர்பார்த்தார்கள், ரசிக்கவும் செய்தார்கள்.

 திருவருட் செல்வர் படத்தில் வரும் ‘தாள் திறவாய்’ பாடல் குறித்தும் எனக்கு இதே சந்தேகம் உண்டு. தாளே திறவாய் என்கிற பொருள் வருமாறு அப்பர் தேவாரம் ஏதேனும் இருக்கிறதா என்று தேவாரப் புலிகள் பகிரலாம்.

Advertisements

7 comments

  1. //சினங்கொண்ட வேங்கை மாதிரி நடந்தபடி// நேர்ல பாத்து இருக்கீங்களா? அது சினத்துனாலதான் அப்படி நடக்குதுன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க? ஃபிகர் (லேடி வேங்கைதான்) மடியலைன்ற சோகத்துல கூட அப்படி நடந்து இருக்கலாம் இல்லியா?

  2. திருவருட் செல்வர் படக் காட்சியை கவனித்துப் பார்த்து, அதைப் பற்றி பல முறை நினைத்ததுண்டு: இந்த அளவுக்கு கூர்ந்து ரசிப்பவர்கள் உள்ளனர் என்பதை அறிய மகிழ்ச்சி. அப்பர் நீண்ட பாடலைப் பாடியவுடன் திறக்கும் தாழ் சம்பந்தர் ஒரு சிறிய விருத்தம் பாடியவுடன் மூடுவதும், அதைத் தொடர்ந்து அப்பர்- சம்பந்தர் ( அப்பர் அளவு உயரத்தில் இருப்பவர்க்கும் போட்டி-பொறாமை உண்டோ என்று எண்ணம் வரும் ) உரையாடலை a .p . நாகராஜன் லாவகமாக அமைத்திருப்பார்.
    பின்னூட்ட அன்பர் கூறியது போல், தவப் புதல்வன் படம் பார்க்க வேண்டும், தான் சென் சம்பந்தப்பட்ட செய்திகளை கவனமாக படிக்க வேண்டும் என்று ஆவல் எழுந்துள்ளது.
    மற்றும் ஒரு சுவாரஸ்மான பதிவு.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s