நல்ல குழந்தை பிறக்க ஐடியா

”அப்பாடா.. ரிடையர் ஆயாச்சு. இனிமே நிம்மதி”

 “என்ன இப்படி அலுத்துக்கறீங்க, ஜட்ஜ் வேலைதானே பார்த்தீங்க?”

 “ஜட்ஜ் வேலை அத்தனை சுலபமில்லை”

 “என்ன, சுத்தியால மேஜைல டொக் டொக்ன்னு ரெண்டு தட்டு தட்டி ஈ.பி.கோ. செக்‌ஷன் ஸோ அண்ட் ஸோ படி ஆறு வருஷ சிறைத் தண்டனை எட்ஸட்ரா சொல்றது அவ்வளவு கஷ்டமா?”

 “நாம சொல்ற ஒவ்வொரு தீர்ப்பும் பின்னால வேற கேஸ்கள்ள ரெஃபர் செய்யப்படும். அதனால பேட் ப்ரீஸிடண்ட் ஏற்படுத்துகிற மாதிரி எந்தத் தீர்ப்பும் இருந்துடக் கூடாதே என்கிற டென்ஷன் இருக்கும்”

 “அவ்வளவு வாதங்கள், சாட்சிகள், எவிடன்ஸ், மோட்டிவ் எல்லாம் தாண்டி தப்பு பண்ணுகிற மாதிரி அமையுமா?”

 “அமையாது, ஆனா அது எதுவுமே சரியா கிடைக்காத போது பல கேஸ்களைத் தள்ளுபடி பண்ண வேண்டியிருக்கும். அந்த சமயம் ஒருத்தன் தப்பு பண்ணியிருக்கான்னு நம்ம உள்ளுணர்வுக்குத் தெரிஞ்சிருந்தாலும் எதுவும் பண்ண முடியாது.”

 “அந்த மாதிரி ஒரு கேஸ் பத்தி சோ தன்னுடைய வக்கீல் கேரியரில் நடந்த ஒரு அனுபவத்தைச் சொன்னது ஞாபகம் வருது”

 “என்னது?”

 “ஒரு கம்பெனி மேனேஜர் தனக்கு டெஸிஷன் மேக்கிங் பவரே கிடையாது. தான் பண்ணதாச் சொல்ற தப்பான டெஸிஷனுக்கெல்லாம் டாப் மேனேஜ்மெண்ட்தான் காரணம். தான் வெறும் கிளார்க்காத்தான் இருந்ததா ஆர்க்யூ பண்ணாராம். போஸ்ட் பாக்ஸ் நம்பர் கொடுத்து ஒரு மேனேஜர் போஸ்ட்டுக்கு விளம்பரம் கொடுக்கச் சொன்னாராம் சோ. அதுக்கு அப்ளை பண்ண அந்த ஆசாமி, தான் தான் எல்லா முடிவுகளும் எடுக்கிறது. என்னாலேதான் மொத்தக் கம்பெனியும் ஓடுதுன்னு எல்லாம் எழுதி அப்ளை பண்ணியிருக்கார். அதையே ஆதாரமா காட்டி ஜெயிச்சிட்டாங்களாம்”

 “இதை எதுக்கு சொல்றே?”

 “இல்லே, எந்த ஆதாரமும் கிடைக்காத போதுன்னு சொன்னீங்களே, சில நேரம் இப்படி ஆதாரங்களை தந்திரமா உருவாக்க முடியும்ன்னு சொன்னேன்”

 “எனக்கு அப்படி எந்த அனுபவமும் இல்லை. இன்னொரு முக்கிய கஷ்டமும் இருக்கு”

 “என்னது?”

 “மன்மதலீலை ஈஸ்வர ஐயர் கேரக்டர் போல பல விஷயங்கள் நம்ம மண்டைல ஏறிக்கும். பல கொலைகள், பல துரோகங்கள்…… அதை இறக்கி வைக்கிறது அவ்வளவு சுலபமில்லை”

 “அது மெல்ல மெல்லப் பழகிடாதா?”

 “வாஸ்தவம்தான், ஆனா பழகும் போது ரிட்டையர் ஆயிடுவோம்”

 “சரி.. காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா?”

 “ஏன் சாத்தியமில்லை?”

 “ஒரு கற்பழிப்புக் கேஸூக்கு தண்டனை கொடுத்தா அடுத்து கற்பழிப்பே நடக்காதா?”

 “அதெப்படி? மந்திரத்துல மாங்காய் வந்தது மாதிரி அப்படி எப்படிப் பண்ண முடியும்?”

 “முடியணுமே.. நாங்கள்ளாம் ஐ.எஸ்.ஓ., டி.எஸ். இதுல எல்லாம் ஒரு தப்பு நடக்கும் போது அனலைஸ் பண்ணி, ரூட் காஸ் கண்டு பிடிச்சி அதுக்கு மிஸ்டேக் ப்ரூஃபிங் பண்ணுவோம். அந்தத் தப்பு திரும்ப நடக்கவே நடக்காது”

 “அப்படிப் பண்ணியும் தடுக்க முடியாதது இருக்குமில்லையா?”

 “இருக்கும்”

 “அப்ப என்ன பண்ணுவீங்க?”

 “அப்ப பிராஸஸையே மாத்திடுவோம், அல்லது டூலிங்கை மாத்திடுவோம்”

 “புரியல்லை”

 “இப்போ, கேஸ்டிங் முறைல ஒரு பொருள் தயாரிக்கிறோம்ன்னு வைங்க. அதில டிஃபெக்ட் வந்தா டெம்ப்பரேச்சர், டைம், போர் பண்ற ஸ்பீட்ன்னு நிறைய ஃபேக்டர்ஸ் இருக்கும். அது எதுவுமே பலன் குடுக்கல்லைனா பிரஷர் டை கேஸ்டிங்கா பிராஸஸை மாத்துவோம். அல்லது மோல்டை மாத்துவோம். தப்பு எலிமினேட் ஆகிற வரைக்கும் விட மாட்டோம்.”

 “சரி நீதித் துறைல என்ன பண்ணலாம்ங்கிறே?”

 “ஒரு ஹண்ட்ரட் ரேப்பிங் கேஸஸை எடுத்து அனலைஸ் பண்ணலாம். ரூட் காஸ்ன்னு பார்த்தா ஒரு ஐந்தாறு காஸஸ்தான் இருக்கும். ஒவ்வொண்ணும் பல தரம் ரிப்பீட் ஆகி இருக்கும். எது டாமினண்ட்ன்னு பார்க்கலாம்…..”

 “வெய்ட்.. வெய்ட்.. வெய்ட்…. ரேப்பிங்ன்னா அடிப்படையா ஆட்டிட்யூட்தான் பிரச்சினை.”

 “யாரோட ஆட்டிட்யூட்?”

 “ரேப் பண்றவன் ஆட்டிட்யூட்தான்”

 “ரேப் பண்ணப்பட்டவங்க ஆட்டிட்யூட்ல பிரச்சினையே கிடையாதா?”

 “நல்ல ஆட்டிட்யூட் இருக்கிறவன் எப்படிப்பட்ட தப்பான ஆட்டிட்யூடையும் ஓவர்கம் பண்ண முடியும்.”

 “நீங்க சொல்றதைப் பார்த்தா பிறக்கிற ஒவ்வொரு பிரஜையும் மாமனிதர்களா இருந்தாத்தான் முடியும்”

 “அதைப் பண்ண முடியாதா?”

 “எப்படி?”

 “நீ சொன்ன அதே பிராஸஸ்தான். கர்ப்பம் தரிச்ச ஒவ்வொரு தாயையும், குழந்தை பிறக்கிற வரை நல்ல விஷயங்களையே கேட்டு அந்தக் குழந்தையைக் கருவில் வளர்த்தா இது சாத்தியம்தான்”

 “புராணத்தில் சொல்றதை எல்லாம் நம்பறீங்களா?”

 “அவசியமில்லை. கருவுற்றிருக்கிற பெண்கள் எப்பவும் வேதனையில் இருந்தால் அதனுடைய பாதிப்பு குழந்தைகளுக்கு இருக்கும்ன்னு டாக்டர்கள் சொல்றாங்க அதை நம்பலாம் இல்லையா?”

 “நம்பலாமே..”

 “அதோட கான்வர்ஸை எடுத்துக்க. கருவுற்றிருக்கும் பெண்கள் எப்பவும் சந்தோஷமா இருந்தா குழந்தையின் மனநிலை நல்லா இருக்கும்ன்னு எடுத்துக்கலாமா?”

 “ஆமாம்….”

 ”அப்படிச் செஞ்சி அரசாங்கம் நல்ல பிரஜைகளை உருவாக்கலாமே”

 “நல்ல ஐடியா.. அதுக்கு யார் இனிடியேட்டிவ் எடுக்கிறது”

 “யாராவது எடுத்தா சொல்லு. நான் வந்து ஹெல்ப் பண்றேன்”

Advertisements

15 comments

 1. பலதும் கலந்து கட்டி அடிச்சிருக்கிங்க, நீதிபதியாக இருந்த அனுபவம் இருக்கா ? ஐயோ பட்டிமன்றத்தில் ? என்று தானே கேட்டேன்.
  🙂

  வீட்டுல கூட அவ்வாறு இருக்க ஆண்களுக்கு உரிமை இல்லையாம். 🙂

 2. போஸ்ட் பாக்ஸ் நம்பர் கொடுத்து ஒரு மேனேஜர் போஸ்ட்டுக்கு விளம்பரம் கொடுக்கச் சொன்னாராம் சோ. அதுக்கு அப்ளை பண்ண அந்த ஆசாமி, தான் தான் எல்லா முடிவுகளும் எடுக்கிறது. என்னாலேதான் மொத்தக் கம்பெனியும் ஓடுதுன்னு எல்லாம் எழுதி அப்ளை பண்ணியிருக்கார். அதையே ஆதாரமா காட்டி ஜெயிச்சிட்டாங்களாம்”
  புரீல கொஞ்சம் விளக்கி சொல்லுங்க ?

  1. அது ஒரு டிராப். எந்தக் கம்பெனி தனக்கு பவரே தரல்லைன்னு சொன்னாரோ, அந்தக் கம்பெனியில் தான் சகல அதிகாரங்களும் படைத்தவர்ன்னு தன் கையாலேயே எழுதி மாட்டிகிட்டாராம் அந்த ஆள்; விளம்பரம் கொடுத்தது வேறே கம்பெனி என்கிற நினைப்பில்.

 3. கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தில் மட்டுமே நாம் ஆதிக்கம் செலுத்த முடியுமெனவும், குழந்தையின் ( வளர்ந்த பிறகு) குணத்தில் ஆதிக்கம் செலுத்துவது (தாயையும் சேர்த்து) சமூகமெனவும் நான் நினைக்கிறேன்…

 4. பல விஷயங்களைச் சொல்லியிருகிறீர்கள்.
  நீங்கள் சொன்ன ப்ராசஸ் சேன்ஜ் காரணமாகத்தான் சட்டத்திலும், விதிகளிலும் செகஷன்கள், பாராக்கள், உப பார்கள் கூடுகின்றன. இந்த மாற்றங்களே புது ஓட்டைகளையும் உருவாக்குகின்றன. மீண்டும் கூடுதல் பாராக்கள்; சங்கிலி தொடர்கிறது. சட்டம் நீஈளமாகிறது. முழு மறு பதிவு நடைபெறுவதில்லை. நூறு ஆண்டுக் காலச் சட்டங்கள் முற்றிலுமாக திருப்பி எழுதப்பட வேண்டும். குற்ற இயல் சட்டங்கள் முக்கியமாக.

  1. நான் சஜஸ்ட் செய்யும் பிராஸஸ் சேஞ்ச் தண்டனைகளில் அல்ல. குற்றத் தடுப்புக்கு அரசாங்கம் எடுத்து வரும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில்.

 5. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கில அது நல்ல அவர் ஆவதும் தியவர் ஆவதும் அன்னை வளர்ப்பினில.. பொய்யா?

 6. ஒருவரின் குண நலன்களைத்தீர்மானிப்பதில் சுற்றுப்புற சூழ்நிலைகளும் காரணமாக அமையுமா? where he lives? how he lives? who are his friends போன்ற காரணிகளும் கணக்கில் எடுதுக்கொள்ளப்படவேண்டும்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s