மண்பானையிலிருந்து கொஞ்சம் எஞ்சிநியரிங்

நாகப்பட்டினத்தின் பல உற்சாகங்களில் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலின் செடில் உற்சவமும் ஒன்று.

திருவிழாக் கடைகளில் அப்போதெல்லாம் கல்சட்டிக் கடைகள், பானைக் கடைகள் எல்லாம் இருக்கும். இப்போதும் இருக்கின்றனவா என்று நாகப்பட்டினத்தின் தற்காலச் சோழர்கள் சொல்லலாம்.

முக்கால் ரூபாய்க்கு நல்ல பதினைந்து லிட்டர் கொள்ளளவு இருக்கும் பானை கிடைக்கும். ஏறக்குறைய எல்லார் வீட்டிலும் ஒன்று வாங்கி வைத்து தண்ணீர் நிரப்பிக் கொண்டே இருப்பார்கள். மொண்டு மொண்டு சட்டை நனைய குடித்துக் கொண்டே இருப்போம்.

முக்கால் ரூபாய்ப் பானையில் முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு ஆராய விஷயம் இருப்பது அந்தக் காலத்தில் எனக்குத் தெரியாது. பானை கிடைக்காத காலத்தில் நிறைய சிந்தனை வருகிறது.

முதல் விஷயம் பானையை ஒரு மூலையில் மணல் குவித்து அதன் மேல்தான் வைப்பார்கள். இந்த மணற் குவியலில் ஒரு தாத்பர்யம் இருக்கிறது. அது வெறும் ஸ்டாண்ட் அல்ல. அது ஒரு பர்ஃபார்மன்ஸ் இண்டிகேட்டர். என்ன பர்ஃபார்மன்ஸ் என்று சொல்ல வேண்டுமானால் பானை வேலை செய்யும் விதத்தை முதலில் சொல்லியாக வேண்டும்.

பானை என்ன பெரிய்ய்ய சிங்க்கோ ஹைவேக் வேக்யும் பம்ப்பா, எப்படி வேலை செய்கிறது என்று படம் போட்டு விளக்க? என்று நீங்கள் நினைக்கலாம்.

பானைக்குள் இருக்கும் தண்ணீர் அதிலிருக்கும் நுண் துளைகள் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கும். (வெளியேறும் என்றால் கொட கொடவென்று டீக்கடையில் டிக்காஷன் ஊற்றுவது போல் அல்ல) அது ஒரு விதமான ஊஸிங் ஔட். பானையை ஒரு மெகா மைக்ரோ ஃபில்ட்டருக்கு ஒப்பிடலாம். ஃபில்ட்டர் என்றாலே அழுத்த மாறுபாடு இருக்கும். டிராப் எக்ராஸ் ஃபில்ட்டர் என்கிற பிரயோகம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தண்ணீர் மட்டுமல்ல, எல்லா திரவங்களுமே குறிப்பிட்ட உஷ்ணநிலையில் குறிப்பிட்ட வேப்பர் பிரஷரில் இருந்தே தீரும். குறைந்தால் ஆவியாகி அதை சரிக்கட்டிக் கொள்ளும். இது திரவங்களின் இயற்கைத் தன்மை.

வெளியேறிய தண்ணீர் உள்ளிருக்கும் தண்ணீரை விட அழுத்தம் குறைவாக இருப்பதால் அதன் வேப்பர் பிரஷரும் குறைவாகியிருக்கும். ஒவ்வொரு வேப்பர் பிரஷருக்கும் ஒரு உஷ்ணநிலை உண்டு என்பதால் வேப்பர் பிரஷர் குறையும் போது உஷ்ணநிலையும் குறையும். அதாவது, பானைக்குள் இருக்கும் நீரை விட வெளியேறிய நீர் குறைந்த உஷ்ணநிலைக்கு வந்திருக்கும். மேலும் இது ஒரு எக்ஸ்பான்ஷன் பிராஸஸ் என்பதால் விரிவடைந்து ஆவி நிலையில் இருக்கும்.

மேற்கத்தியர்கள் சார்ட் என்பதால் ஆம்பியண்ட் பிரஷரில் 20 டிகிரி இருக்கிறது.

 இந்தக் குளிர்ந்த ஆவி வெளிக்காற்றில் இருக்கும் நீராவியைக் குளிப்பித்து சின்னச் சின்ன குளிர்ந்த நீர்த் திவலைகளை பானையின் வெளிப்புறம் உண்டாக்கும். இதனால் உண்டாகும் லேயர் ஒரு இன்ஸுலேட்டராக செயல்படுவதுடன், பானைக்குள்ளிருக்கும் நீரைக் குளிர்ப்பிக்கவும் செய்யும். அழுத்த மாறுபாட்டின் கரணமாக அடுத்தடுத்து உள்ளிருந்து ஊஸிங் ஔட் ஆகிக் கொண்டே இருக்கும். ஏற்கனவே இருக்கும் திவலைகள் வழிந்தோடி கீழே கொட்டி வைத்திருக்கும் மண்ணை ஈரமாக்கும்.

 நீரின் கடினத் தன்மையைப் பொறுத்து கொஞ்ச காலத்தில் நுண் துளைகள் மெல்ல அடைபட்டுக் கொண்டே வரும். அப்படி ஆகிற போது கொட்டி வைத்திருக்கும் மண் ஈரமில்லாமல் தொடர்ந்து உலர்ந்தே இருக்கும். அப்போது பானையை மாற்றியே ஆக வேண்டும்.

 மெம்ப்ரைன் ஃபில்ட்டர்கள் வருவதற்கு இதுதான் முன்னோடியாக இருந்திருக்கும் என்பது என் துணிவு.

 இப்போது தெர்மல் எஞ்சிநியர்கள் சண்டைக்கு வரலாம்; கம் ஆன்………

Advertisements

15 comments

 1. நீங்க பெரீய்ய விஞ்ஞானி பாஸ்.. தெளிவாக விளக்கியதற்கு நன்றி.. இத்தனை நாளும் இதை சிம்பிளா..”Evaporation is a Cooling Process” வெளியில இருக்குற தண்ணி ஆவியாறதால உள்ள இருக்குற தண்ணி குளிர்கிறது என்ற ஆறாம் வகுப்பு முறையிலேயே புரிஞ்சிக்கிட்டாச்சி.. அப்புறம் படிச்ச் லிண்டேஸ் ப்ராசஸ், ஜூல் தாம்சன் எஃபெக்ட், வேப்பர் ப்ரஷர் எல்லாம் கலந்து கட்டி யோசிக்கவேயில்லை…

  நெம்ப நன்றி !!

 2. ஏற்கனவே நான் சொன்னபடி, விஞ்ஞானப்பூர்வமான விஷயங்களை எளிமையாக விளக்குவதில் நீங்கள் ஒரு சுஜாதா!

 3. //திருவிழாக் கடைகளில் அப்போதெல்லாம் கல்சட்டிக் கடைகள், பானைக் கடைகள் எல்லாம் இருக்கும். இப்போதும் இருக்கின்றனவா என்று நாகப்பட்டினத்தின் தற்காலச் சோழர்கள் சொல்லலாம்.//

  கடைகள் ஒண்ணு இரண்டு விழா வேளையில் இருக்கும், ஆனா சத்திவிலாஸ் பஸ்ஸு தான் நின்னுப் போய் 30 ஆண்டு ஆகுதுங்கிறாங்க.

  //பானைக்குள் இருக்கும் தண்ணீர் அதிலிருக்கும் நுண் துளைகள் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கும். (வெளியேறும் என்றால் கொட கொடவென்று டீக்கடையில் டிக்காஷன் ஊற்றுவது போல் அல்ல) அது ஒரு விதமான ஊஸிங் ஔட். பானையை ஒரு மெகா மைக்ரோ ஃபில்ட்டருக்கு ஒப்பிடலாம். ஃபில்ட்டர் என்றாலே அழுத்த மாறுபாடு இருக்கும். டிராப் எக்ராஸ் ஃபில்ட்டர் என்கிற பிரயோகம் கேள்விப்பட்டிருப்பீர்கள்//

  சவ்வூடு பரவல் அல்லது கசிவு

 4. கடைகள் ஒண்ணு இரண்டு விழா வேளையில் இருக்கும், ஆனா சத்திவிலாஸ் பஸ்ஸு தான் நின்னுப் போய் 30 ஆண்டு ஆகுதுங்கிறாங்க.//40 aandugal kooda irukkum. nagore-naagai idaiyil Odiya MDO 3482 engira town bussukku Aladichchaan Bus nu pEru.avvalavu pErai konnurikku.Thiruvizha vin pOdhu ilavasamaga kidaikkum neer morukkum, panagathirkum inaiyE illai.

  1. நிஜம்.. மேற்சொன்ன பஸ்ஸின் விபத்துக்கள் சிலவற்றை நான் பார்த்ததுண்டு. சத்தி விலாஸ் அப்போதே சோழன் போக்குவரத்தில் ஐக்யமாகி விட்டது.

 5. ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. மணல் ஈரம் இல்லாமல் ஆனவுடன் பாணையை மாத்த வேண்டும். அதற்கப்பரம் புரிந்தது எஸ் எஸ் பெரிய படிப்புக்காரர் போல இருக்கிறது. அம்மாடி. . . என்னல்லாமோ சொல்றார். . .

 6. எங்கள் வீட்டில் பானை இல்லாததனால், (ஃப்ரிட்ஜ் தண்ணீர் ஒத்துக் கொள்வதில்லை) சில்வெர் குடத்தில் ஈரத்துணியைச் சுற்றி வைத்து குடித்துக் கொண்டிருக்கிறோம்.. பானையிலிருக்கும் நுண்துளைகளின் வழியே வரும் நீரானது அதன் வெளிப்புறச் சுவர்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதால்தான் உள்ளிருக்கும் நீர் குளிர்ந்து இருக்கிறது என நினைத்திருந்தேன். நீராவி அழுத்தத்தின் காரணமாகத்தான் இவை அனைத்தும் நடைபெறுகிறது என நன்றாக விளக்கியுள்ளீர்கள்…

  ஆமாம்………… , ஈரத்துணி சுற்றிய பாத்திரத்தில் உள்ள நீரும் குளிர்ச்சியாவது எதனால்?

 7. This is a pure Heat and Mass Transfer subject. This is how the pot shell takes out the heat of the water and the imprisoned water molecules in the pot shell take that heat out and becomes vapor.The temperature of the water is not enough to change its state from liquid to gaseous. So the heat is taken from the pot shell, thus reaches its latent heat and changes it state from liquid to gaseous .Then as you said, it cools water in the pot..More are less what you explined is o.k

 8. நல்லா இருக்கு இந்த விளக்கம். இதே போல ப்ரஷ்ஷர் குக்கர்ல அரிசி வேகற கான்செப்ட் கூட விவாதிக்கப் படலாமே..ஒரு தனி இழையா..

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s