இது சங்கரராமன் கொலை பற்றிய இடுகை அல்ல

கொலை என்றாலே மூன்று விஷயங்கள் முக்கியம். மோட்டிவ், எவிடன்ஸ், விட்னஸ். மூன்றுமே ஒரே நபரைச் சுட்டிக் காட்டினால் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றம் நிரூபிக்கப்படுகிறது.

சரி. இந்த விஷயத்தில் மோட்டிவ் இருப்பது மாதிரித்தான் தெரிகிறது. தெரிகிறது என்றால் செய்தித் தாள்களிலும், இணையத்திலும், வார மாத பத்திரிகைகளிலும் படித்ததன் வாயிலாகத் தெரிகிறது. அவை தவறாகக் கூட இருக்கலாம். அதனால்தான் மோட்டிவ் இருக்கிறது என்று சொல்லாமல் இருப்பது மாதிரித் தெரிகிறது என்று சொன்னேன்.

அடுத்தது விட்னஸ்.

ஏறக்குறைய 75% சாட்சிகள் பல்டி அடித்து விட்டதாக பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன. அவர்கள் தப்பாக ஆரம்பித்து சரியான வழிக்குப் போனார்களோ அல்லது சரியாக ஆரம்பித்து தப்பான வழிக்குப் போனார்களோ…. நமக்குத் தெரியாது. சாட்சி நிலையில் மாறுதல் இருக்கிறது என்பது மட்டுமே நமக்குப் புரிகிறது. நீதி மன்றமும் நீதிபதிகளும் திறமை படைத்தவர்கள். எங்கே ஆரம்பித்து எங்கே போயிற்று என்று கண்டுபிடித்து விடுவார்கள்.

எவிடன்ஸ்?

குற்றம் சாட்டப்பட்டவருக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் தர உத்தரவிட்டபோது அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி சொன்னதாக இந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தி ஓரளவு நினைவிருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்ட எவிடன்ஸ்கள் எல்லாம் மாறிக் கொண்டே வந்து கடைசியில் எவிடன்ஸே இல்லை என்கிற நிலைக்கு வந்து விட்டது, இது ஒரு கேஸே இல்லை என்கிற அளவில் அந்தத் தீர்ப்பு இருந்ததாக நினைவு.

எல்லாம் போகட்டும்.

வழக்கைப் பதிவு செய்த காவலதிகாரி (எதிர்க் கட்சி ஆட்சியில்) முதலில் சஸ்பென்ஷனும், பிறகு டிஸ்மிஸலும் செய்யப்பட்டார். அதற்கு அவரது சர்வீஸில் அவர் எடுத்த சில நடவடிக்கைகள் காரணம் என்பது வெளிப்படை. அதற்குப் பிறகு இறந்தும் விட்டார். அவர் இறந்த பிறகுதான் சாட்சிகள் பல்டி ஆரம்பமாயிற்று என்பது எனது அப்சர்வேஷன். இதற்கு என்ன காரணம் என்பதை நீதிமன்றமும், நீதிபதிகளும் நிச்சயம் உணர்வார்கள். அவர்கள் அனுபவம் மிக்கவர்கள்.

கொலையுண்டவருக்கு வேறு எதிரிகள் இருந்தார்களா என்பது குறித்த தகவல்கள் (at least) எனக்கு இப்போது வரை இல்லை. எதிரிகள் இருந்து அவர்கள் பெயர் வெளிவரவில்லையா, இல்லவே இல்லையா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.

இடையே நீதிபதியுடன் குற்றம் சாட்டப்பட்டவர் பேசியது போன்ற ஒலிப்பதிவுகளை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தொடர்புடைய நீதிபதியை இந்த வழக்கிலிருந்து விலக்கி வைத்து விட்டார்கள்.

மோட்டிவ் இருப்பது போல செய்திகளிலிருந்து தோன்றுகிறது. எவிடன்ஸ் இல்லை போல உச்ச நீதிமன்ற உத்தரவைப் பார்த்தால் தோன்றுகிறது. விட்னஸ்கள் பல்டி அடித்த செய்திகள் வந்தன, ஆனால் வழக்கு பதிவு செய்த காவலதிகாரி இறந்த பிறகு போலத் தோன்றுகிறது. வேறு யாருக்கும் மோட்டிவ் இல்லை போலவும் செய்திகளிலிருந்து நினைக்கத் தோன்றுகிறது.

இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது நண்பர்களே? கம் ஆன்…………… ஸ்டார்ட் மீசிக்.

Advertisements

23 comments

 1. aanmeekaththil ullavarkalukku athikaarikalum, arasiyal vaathikalum kaalil vizhundhu kumbidumbothu aananathamo aanantham. thavarai sutti kaattinaal kovamo kovam….vilaivu vanmurai….entha madaiyan sonnaan ivarkal ellaam murrum thuranthavarkal enru. paname paava panam.athai nallavarrirku payanpaduththavillai enraal…..boomarang mathiri thirumbi thaakkumm….wait and see……

 2. சங்கராச்சாரியார் குற்றமற்றவர் என்று சொல்ல வருகிறீர்கள்!
  இந்து மதம் தொடர்பான கட்டுரைகளில் உங்களிடம் நடுநிலை இல்லை என்றும் தோன்றுகிறது!

  1. அப்படியா? வேறு யாருக்கும் மோட்டிவ் இருப்பதாக இதுவரை செய்தி இல்லை என்பதற்கு இதுதான் அர்த்தமா மகேஷ்?

  2. இதைப்படித்தால் ஜவஹர் நேர்மையாகவும் பட்சபாதம் இல்லாமலும் எழுதியிருப்பதை நம்பலாம்!!
   //”….மோட்டிவ் இருப்பது போல செய்திகளிலிருந்து தோன்றுகிறது. எவிடன்ஸ் இல்லை போல உச்ச நீதிமன்ற உத்தரவைப் பார்த்தால் தோன்றுகிறது. விட்னஸ்கள் பல்டி அடித்த செய்திகள் வந்தன, ஆனால் வழக்கு பதிவு செய்த காவலதிகாரி இறந்த பிறகு போலத் தோன்றுகிறது. வேறு யாருக்கும் மோட்டிவ் இல்லை போலவும் செய்திகளிலிருந்து நினைக்கத் தோன்றுகிறது….”//

 3. ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் காலில் விழுந்து கும்பிடும்போது ஆனந்தமோ ஆனந்தம் . தவறை சுட்டி காட்டினால் கோவமோ கோவம்…. விளைவு வன்முறை…. எந்த மடையன் சொன்னான் இவர்கள் எல்லாம் முற்றும் துறந்தவர்கள் என்று. பணமே பாவ பணம். அதை நல்லவற்றிற்கு பயன்படுத்தவில்லை என்றால்…..பூமராங் மாதிரி திரும்பி தாக்கும்….wait and see……

 4. ssr சுகுமாரின் கருத்து இது தான் என நினைக்கிறேன்!
  ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் காலில் விழுந்து கும்பிடும்போது ஆனந்தமோ ஆனந்தம் . தவறை சுட்டி காட்டினால் கோவமோ கோவம்…. விளைவு வன்முறை…. எந்த மடையன் சொன்னான் இவர்கள் எல்லாம் முற்றும் துறந்தவர்கள் என்று. பணமே பாவ பணம். அதை நல்லவற்றிற்கு பயன்படுத்தவில்லை என்றால்…..பூமராங் மாதிரி திரும்பி தாக்கும்….wait and see……

 5. பல்வேறு மதங்களைச் சார்ந்த குருமார்கள் பல வழக்குகளில் சிக்கியுள்ளனர். சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், பாலியல் பலாத்கார வழக்குகளில் ஜான் ஜோசப் மற்றும் பல பாதிரியார்கள். இசைந்த பாலியல் செயல்பாட்டு (consentual sexual activity) வழக்கில் நித்தியானந்தா சிக்கினார். சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி சர்க்காரியா கமிஷன் அறிக்கையையே குப்பைக்கு அனுப்பி வைத்த நாட்டில் இது போன்ற வழக்குகள் தூசு…

  1. இரண்டே இரண்டு சாமியார்கள் தான் இரண்டு கொலை கேஸ்களில் சேர்ந்து மாட்டியுள்ளனர்; சங்கரராமன் & ஆடிடர் ராதாகிருஷ்ணன் கேஸ்கள். ஜெயேந்திரரும் விஜயேந்திரரும்!! மற்ற சாமியாரெல்லாம் அந்த அளவுக்குப்போகவில்லை இன்னும்!! இந்த இரண்டு சாமியார்களை இன்னும் மக்கள் கும்பிடுகிறார்கள்!! ஆச்சரியம்!!

   1. குற்றம் பெருசாக பெருசாக (எல்லாம் உள்ள மக்களுக்கு) தண்டனை சிறுசாகும்னு சொல்ல வரீங்க..

 6. அதான் சொல்றாங்களே
  ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்
  ஒரே ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாது என்று.
  அதனால்தான் அஜ்மல் கஸாப் கூட சிக்கன் பிரியானி சாப்பிட்டுகொண்டு இருப்பது.
  நல்ல law
  நல்ல ஜனநாயகம்
  ரொம்ப நல்ல மக்கள்

 7. Mr. Jawahar – I a a regular follower of your blog though I never made a comment. However in this article 1. I think you could have not touched this subject and 2. Your arguments and presentation is not clear – not up to the Jawahar standards I would say . You have different view points in a confusing way. 3. You have given a very little subset of the details leaving behind the prime factors [ Hindu Mission Hospitals ].

 8. சாமியார்களோ பாதிரியார்களோ யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுக்கப்படவேண்டும். சொல்லப்ப்போனால் சாமானியர்களைவிட இவர்களுக்கு அதிக தண்டனை கொடுக்கவேண்டும்.
  சங்கரராமன் கொலைவழக்கில் கருணாநிதி சங்கராச்சாரியாருக்கு ஆதாரவாக இருக்கிறார் என்று தெரிகிறது.

 9. சாட்சி இல்லாமல் கொலை செய்துட்டா யாருமே குற்றவாளி இல்லை, அதே போல் சாட்சியை விலைக்கு வாங்கிட்டாலும் யாருமே குற்றவாளி இல்லை, இதுக்கெல்லாம் கையாலாகதவன் கொலை செய்து மாட்டிக் கொள்ளக் கூடாது 🙂

 10. “….கோர்ட்டில் ‘இது ஒரு கேசே இல்லை’ என்கிற அளவில் தீர்ப்பு இருந்ததாக நினைவு… ”
  சாரி, ஜவஹர் சார், உங்கள் நினைவு சற்று மங்கி உள்ளது. கீழே காணும் பதிவுகள் விக்கிபீடியாவில் காஞ்சி மடம் என்கிற பக்கத்தில் உள்ளன:-
  During the bail hearings, Justice R. Balasubramanian of the Madras High Court observed:
  “materials relied upon by the prosecution… would prima facie constitute reasonable grounds to believe’ that the petitioner is shown to be guilty of an offence punishable with death or imprisonment for life.”[11]
  However, in a subsequent appeal to the Supreme Court, bail was granted, with the court observing that:
  No worthwhile prima facie evidence apart from the alleged confessions have been brought to our notice to show that the petitioner along with other accused was party to a conspiracy[11]
  The Supreme Court also agreed to shift the trial to Pondicherry, after the defence argued that the media attention and other factors in Tamil Nadu made a fair trial impossible there.
  ஆகவே, உச்ச நீதிமன்றத்தில் prima facie சான்று கோர்ட்டில் கொடுக்கப்படவில்லை என்றுதான் தீர்ப்பு! அதுவும், பெயில் கொடுப்பதற்காகத்தான். மற்றப்படி கேஸ் தொடர அனுமதி கொடுக்கப்பட்டது, (sessions நீதிமன்றத்தில்). சென்னை நீதிமன்றத்தில் இருமுறை பெயில் மறுக்கப்பட்டது enbathum unmai. Evidences did not change from time to time as you have wrongly stated!! Witnesses did make somersault, of course 83 out of 189 witnesses as of today! Now Sankararaman’s wife and son have petitioned சென்னை high court to shift the trial from Pondicherry to Chennai. They have also alleged that they were threatened by the defendants into becoming hostile during the Pondy trial.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s