பவர் ஸ்டாரும் விஜய் டிவியும்

சென்ற ஞாயிறு விஜய் டிவி நீயா நானாவில் வரட்டு கௌரவம் குறித்த விவாதம்.

ஒன்றரை லட்ச ரூபாய் நெக்லஸ், நாற்பதாயிரம் ரூபாய் பட்டுப் புடவை, தாம்புக் கயிறு மாதிரி செயின் என்று டைரக்ட் ஸ்டேட்டஸ் ஜம்பம் ரொம்ப சாதாரணம்.

சொல்லளவில் இருக்கும் வரட்டு கௌரவம் (அ) ஜம்பம் ஏழை, பணக்காரன், புத்திசாலி, முட்டாள் என்கிற பேதங்களைக் கடந்து பலரிடம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதை அவர்கள் வெளியிடும் விதமே அலாதி.

பிரபல கர்நாடக இசைப் பாடகி ஒருவர், “ஓட்டல்ல நீங்க ரசிச்சி சாப்பிடுகிற பண்டம் எது?” என்று நிருபர் கேட்டால்,

“நியூயார்க் ஹாலிடே இன்ல சாப்பிட்ட பிஸாவை மறக்கவே முடியாது” என்பார்.

“நீங்க ரொம்ப பிடிச்சி உடுத்தற புடவை எது?” என்று கேட்டால்

“டோக்யோல ஃபிளைட்டுக்கு ரொம்ப டைம் இருந்ததால அக்கிஹாபாரா போய் சும்மா பார்த்துகிட்டு இருந்தேன். ஒரு சாரி ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை வாங்காம இருக்கவே முடியல்லை. இன்னி வரைக்கும் என் ஃபேவரைட் சாரி அதுதான்” என்பார்.

இப்படி ஏதாவது ஒரு கேள்விக்கு வெளிநாட்டை சம்பந்தப்படுத்தாமல் இருக்கவே மாட்டார்.

பிரபல எழுத்தாளர் ஒருவர், பிரபலங்களுடன் தான் உரையாடியதை எழுதுவார். அவர் பெயர் சாமினாதன் என்று வைத்துக் கொள்ளலாம்;

“இல்லை சாமா, உனக்குத்தான் ரிஸ்க் அதிகம். நான் ஒருத்திக்கு பதில் சொன்னாப் போதும்” என்று ரஜினி சொன்னதாக எழுதுவார்.

ரஜினி மட்டுமில்லை, எல்லாருமே அவரை சாமா, சாமா என்றுதான் அழைப்பார்கள்!

இவர்கள் மட்டுமில்லை ஸ்டீஃபன் ஹாக்கிங்கை கோட் செய்கிறவர்கள், குவாண்ட்டம் கான்ஷியஸ்னஸ் குறித்துப் பேசுகிறவர்கள், தொரோ சொன்னதாக ஸ்டீஃபன் கோவே குறிப்பிட்டிருக்கும் விஷயம் தப்பு என்று விவாதிக்கிறவர்கள் என்று நிறையப் பேர் உண்டு. அது ஒரு ரகம்.

“குன் எக்ஸ்குளூஸிவை விட்டா சென்னைல வேறே சர்வீஸ் செண்ட்டரே இல்லை. ஏண்டா இந்த வண்டியை வாங்கினோம்ன்னு இருக்கு”

“ஏர் போர்ட்ல வந்து பார்த்தா பர்ஸில இருநூறு சிங்கப்பூர் டாலர் மீதமிருந்தது. அதைப் போய் எக்ஸ்சேஞ்ச் பண்ணிகிட்டிருப்பானேன்னு ஒரு ஷாம்பெய்ன் வாங்கிட்டு வந்துட்டேன் ட்யூட்டி ஃப்ரீ ஷாப்ல”

இதெல்லாம் போகட்டும்; ஆரம்பித்த இடத்துக்கு வருகிறேன். கோபி அந்த நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரை அழைத்து நோண்டிக் கொண்டிருந்தார். அவர் செய்வதெல்லாம் வரட்டு கௌரவம் என்று சுட்டிக் காட்டி, “ஏன் உங்க காமெடி இமேஜை பிரேக் பண்ணக் கூடாது?” என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.

பவர் ஸ்டார் என்கிற ஸ்ரீநிவாசன் மஹா அழுத்தக்காரர்.

“அதெல்லாம் அவசியமே இல்லை. எனக்கு பிரபலமாகணும்; ஆய்கிட்டு இருக்கேன்” என்கிற ரீதியில் பதில் சொன்னார். மேலும்,

“என்னை மட்டம் தட்டறதுக்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டிருக்கீங்க” என்று சிரித்த முகத்தோடு தேங்காய் உடைத்த மாதிரி சொன்னார்! இதைக் கேட்டு கோபி அசடு வழிய வேண்டியிருந்தது.

மேற்சொன்ன டிப்ளமேட்டிக் ஜம்பத்திற்கு கோபியும் விதிவிலக்கல்ல.

என்னென்ன மாதிரி வரட்டு கௌரவங்கள் என்பது குறித்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். தோளில் லேப்டாப் மாட்டிக் கொண்டு போவதை ஒருவர் சொன்னார். அதற்கு கோபி சொன்ன பதில்,

“நான் கூட ஏர்போர்ட்ல அடிக்கடி பார்த்திருக்கேன். பிஸினஸ்க்காகப் போற நானே எடுத்துட்டுப் போறதில்லை”

Advertisements

18 comments

 1. குரு நாதருக்கு அநேககோடி நமஸ்காரங்கள். இப்பவும் தாங்கள் அயல் தேச பிரயாணத்தில் இருந்து எழுதுவதாக கருதுகிறேன். பிரயாணம் எப்பிடி? வறட்டு ஜம்பத்தினை பற்றிய தங்களது பதிவு மிகவும் விஷேஷம்! அடியேன் அந்நிகழ்ச்சியை பற்றி எழுதிய பதிவினை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

  பவர் ஸ்டார்! – நான் பவர் ஸ்டார் பாசறை ஆள் அல்ல! wp.me/p7qTi-5v
  எனது பதிவு பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததைப்போல் எழுதி இருப்பதாக எனக்கு தோன்றினாலும், விடுவதாக் இல்லை! எப்பாடு பட்டாவது இது போன்று கம்மெண்டில் லிங்க் கொடுத்தாவது பிரபல பதிவராக ஆசை!!
  #இதுவும் ஒரு வகையில் விளம்பரமோ?

 2. //“நான் கூட ஏர்போர்ட்ல அடிக்கடி பார்த்திருக்கேன். பிஸினஸ்க்காகப் போற நானே எடுத்துட்டுப் போறதில்லை”//

  கடைசில உங்ககிட்ட லேப்டாப் இருக்கறத சூசகமா சொல்லிட்டீங்க தல… 😉 ட்ரேட்மார்க் பதிவு.

  1. தேவா, அதுல லேப்டாப்பை விட ஏர்போர்ட் அடிக்கடி போறதுதான் பீட்டர். லேப்டாப் எங்க வீட்டு பால்காரர் கூட வெச்சிருக்கார். மேலும் அது நான் சொல்வதல்ல என்பதை மணவாளன் ஏற்கனவே சொல்லிவிட்டார். நான் எப்படிப்பட்ட பீட்டர்கள் விடுவேன் என்பதும் கட்டுரையில் இருக்கிறது! 🙂

   1. பீட்டர் விடுறதுனா இங்கலிஷ் பேசுவது என்று நினைச்சுட்டிருந்தேன். நீங்க எழுதியிருக்குறத பாத்தா அப்படித் தோணலியே?

   2. பீட்டர்ன்னா இங்கிலீஷ் என்பதுதான் பொதுவான அண்டர்ஸ்டாண்டிங். நாந்தான் கொஞ்சம் ஸ்கோப்பை ஜாஸ்தி பண்ணியிருக்கேன்!

 3. கோபி சம்பந்தமேயில்லாமல் கோட் போட்டுக்கொண்டு ‘நீயா நானா’ நடத்துவதுகூட ஒரு ‘இமேஜ்’-ஜுக்காகத்தானே?

  ஆடை பற்றி பேசுவோம்…. நம்மூர் தட்ப வேட்ப நிலைக்கு ஏற்ற ஆடை லுங்கி, வேட்டி தான். அதைத்தவிர்த்து வெள்ளைக்காரனிடமிருந்து கற்றுக்கொண்ட டை, கோட், சூட்டை 100 டிகிரி வெய்யிலிலும் அணிந்து அலையும் நாம், பொருத்தமாய் உடை அணியும் அரபு ஷேக்குகளை ஏளனப்பார்வை பார்ப்பதில் இருக்கு நம் போலித்தனம். இந்த போலி ஆடை வேட்கை பெரும்பான்பையான மக்கள் செய்வதால் அது போலியின்மை ஆகிவிடாது – கோபி உட்பட.

  நிகழ்ச்சி பார்த்த பிறகு, சொக்கர் சொன்னதுபோல் பவர்ஸ்டார் மிகத்தெளிவாகவே உள்ளதாக எனக்குப்படுகிறது.

  1. ராம்நாத், கோபி கோட் போடுவதும் சிவாஜி கணேசன் கோட் போட்டதும் ஒரே காரணத்துக்காகத்தான்!

 4. இந்தப் பதிவைப் படித்ததும் எல்லோரும் தன்னைத் தானே ஒருமுறை நாமும் இப்படியா என்று ஒரு முறைாவது மனதில் விமரிசித்துக்கொண்டு இருப்பார்கள். ஏதோ ஒரு விதத்திலாவது தன்னைப் பற்றி சந்தடி சாக்கில் ஒரு வார்த்தையாவது சொன்னால்தான் பேசத் தெறிந்தவர்களாக
  மனதில் நினைப்பு ஏற்படும். ஸரியோ தவறோ. என் மனதில்
  தோன்றியதை எழுதுகிறேன்.

  1. காமாட்சி மேடம், ஜம்பம் அடித்துக் கொள்வது எல்லாரிடமும் இருக்கிறது. சிலரிடம் அப்பட்டமாக, சிலரிடம் டிப்ளமேட்டிக்காக! 🙂

   1. கேட்பவர் அறிவுக்குத் தான் ஜம்பம் புலப்படுகிறது; சொல்பவர் எண்ணத்தில் அல்ல என்று நினைக்கிறேன். ஜம்பம் என்று கருதாமல் தாண்டிப்போவது முதிர்ச்சி.

   2. மிகச் சரி. சொல்பவருக்கு அற்பமாக இருப்பது கேட்பவருக்கு பெரிய விஷயமாக இருக்கலாம். அந்த வேறுபாட்டைப் பொறுத்த விஷயம்தான் ஜம்பம் என்பது மிகச் சரியானது!

 5. நேற்றுவரை நானும் பவர் ஸ்டார் ஏளனப் பார்வையுடன் தான் பார்த்தேன். ஆனால் கோபிநாத் என்கிற முட்டாளால் பவர் ஸ்டாரின் உண்மையான முகம் தெரிந்தது.

 6. ஒரு வகையில் பவர் ஸ்டாரைப் பாராட்ட வேண்டும். அவர் அடுத்தவன் பணத்தில் கிடா வெட்டுவதில்லை. தன் பணத்தைச் செலவு பண்ணி தன்னை விளம்பரம் செய்து கொள்கிறார். அதில் நமக்கு வலிக்க என்ன இருக்கிறது? கோபிநாத் நடந்து கொண்ட விதத்தினால் பவர் ஸ்டாரின் இமேஜ் கூடித்தான் இருக்கிறது என்பதே உண்மை.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s