கழுத்தறுக்கும் மின்சார வாரியம்

”முடிஞ்சதா?” என்கிறார்கள் வெளியில் இருந்தவர்கள் ஆர்வமாக.

 “ஒருவழியா முடிஞ்சது சார். மூணு நாளா அலைச்சல். சந்தோஷமா இருக்கு” என்கிறார் வெளியில் வருபவர். அவர் முகத்தில் மூன்று நாள் மலச்சிக்கல் சரியான திருப்தி.

 இது மாதிரி உரையாடல்கள் நடந்த இடம் பிரசவ ஆஸ்பத்திரியோ விண்வெளி ஆராய்ச்சி நிலையமோ அல்ல. மின்சார வாரிய அலுவலகம்.

 ரீடிங் எடுத்து எட்டாவது நாள் போய் க்யூவில் நின்றேன். இரண்டு மணி நேரம் வெய்யிலில் நின்று கௌண்ட்டர் அருகே போனதும்,

 “இன்னும் எண்ட்ரி ஆகல்லை. நாளைக்கு வாங்க” என்று கார்டை விசிறி அடித்து விட்டு “நெக்ஸ்ட்” என்றார்.

 அவர் சொன்ன அந்த ‘நாளைக்கும்’ ஆகவில்லை. சர்வர் டௌனாம். அதனால் எண்ட்ரி பண்ண முடியவில்லையாம். வந்தவர்களில் பலர் அங்கிருந்தவர்களை சம்ஹாரம் செய்து விடுவது போல் உடம்பெல்லாம் பதறினார்கள்.

 எனக்கு அவர்கள் மேல் கோபம் வரவில்லை. ஹப்புக்குப் போகும் பவர் ஆஃப் பண்ணியிருந்தால் நெட்வொர்க் கிடைக்காது என்பது கூடத் தெரியாத பரிதாபத்துக்குரியவர்கள். நெட்வொர்க் கிடைக்கவில்லை என்றதும் ஹப்பை குச்சியால் தட்டுகிறார்கள். கம்ப்யூட்டர் ஹேங்க் ஆனால் ரீஸ்டார்ட் செய்ய அஞ்சுகிறார்கள்.

 மின்சார வாரியத்தில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் செய்கிற பிரகஸ்பதிகள் யாரோ; அவர்கள் அரசாங்க ஊழியர்களா, ஔட் சோர்ஸ் பன்ணியிருக்கிறார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியது. கால் காசு பெறாத ஒரு வேலையை உருப்படியாக அவர்கள் செய்ய முடியாததால் சென்னை நகரெங்கும் லட்சக் கணக்கானவர்கள் வெய்யிலில் செத்தார்கள். எங்கள் ஊரில் மயங்கி விழுந்த இரண்டு முதியவர்களை சோடா கொடுத்து வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு வந்தேன்.

 பவர் கட் கழுத்தறுப்பைப் பொறுத்துக் கொண்டோம். இல்லாத பவருக்கு அதிக கட்டணத்தையும் பொறுத்துக் கொண்டோம். அதைக் கட்டுவதற்குக் கூடவா இவ்வளவு சாக வேண்டும்?

 பொதுமக்களுக்கு இவ்வளவு நரக வேதனையைக் கொடுத்த அந்த சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இது முதல் தரமல்ல.

Advertisements

12 comments

 1. அருமை சார். இங்கு தபால் நிலையங்களில் EB bills வாங்குகிறார்கள். EB Server சரியாக இயங்குவதில்லை. அதனால் இவர்களால் வாங்க முடியவில்லை. நாம் கால் கடுக்க நின்று பின்பு திரும்பி வர வேண்டியதிருக்கிறது.
  இந்த பதிவை எனது பக்கத்தில் பதிந்திருக்கிறேன்.
  நன்றி சார்.

 2. அன்பின் ஜவர்லால் …. இங்கும் அதே நிலைமை தான். போதாக்குறைக்கு இரண்டு இடங்களில் வாங்கிக் கொண்டிருந்த இ பீ ஆஃபீஸ் இப்பொழுது ஒரே ஆஃபீஸாக மாற்றப்பட்டு விட்டது. கூட்டம் தள்ளிச் சாய்கிறது. இந்த ஆபீஸுக்கும் மின் வெட்டு உண்டு. இன்வெர்ட்டர் ஜெனெரேட்டர் வாங்குவதர்கு அதிகாரம் இல்லையாம். என்ன செய்யலாம்………..

 3. நான் நெட்டிலே, நெட் பாங்கிங் மூலமாக மின் கட்டணத்தை செலுத்திவிடுகின்றேன். கடந்த (4?) பல ஆண்டுகளாக பிரச்னை ஏதுமில்லை.

 4. குற்றாலத்திலிருக்கும் நானே என் வீட்டிற்க்கும் புங்கம்பட்டி என்ற கிராமத்திலிருக்கும் என் தந்தை வீட்டிற்க்கும் இணையம் வழியாக கட்டிவிடுகிறேன் சிட்டியிலிருக்கும் ஹப் பற்றி எழுதும் நீங்கள் இன்னும் வரிசையில் நிற்பது ஆச்சரியமாக உள்ளது…

 5. ஆறு வற்றி இருந்தால்
  தண்ணீர் கொடுக்க கடலை கேட்கலாம்

  ஆனால் ……

  அந்த கடலில் தண்ணீர்(EB – Power) ………..
  (சிவாஜி வசனம் — thanga patakkam திரைப்படம்)

  நினைவில் வந்து ……..
  ஓ என் கடவுளே!

 6. இன்று என் விகடன் பத்திரிக்கையில் – வலையோசை பகுதியில் – உங்கள் ப்ளாக் பதிவுகள் பார்த்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு.

  வாழ்த்துக்கள்

  அன்புடன்

  சீதாலஷ்மி சுப்ரமணியம்

  1. நன்றி சீதாலக்‌ஷ்மி மேடம். உங்களைப் போன்ற வெல் விஷர்ஸ் இருப்பதால் இது போன்ற சிறப்புக்கள் தொடர்ந்து பெற முடிகிறது.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s