ஆனந்த விகடனில் இதயம் பேத்துகிறது!

என் விகடன் 27-06-2012

பேச்சு வருவதற்கு முன்னாலிருந்தே நான் ஆனந்த விகடன் ரசிகன்.

 எனக்கு முன்னால் யாராவது விகடனை எடுத்துக் கொண்டு விட்டால் ‘ஆந்த்வீ.. ஆந்த்வீ ‘ என்று மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படத்து பக்கோடாக் காதர் போல அலறுவேன் என்று அம்மாவும், அண்ணாக்களும் சொல்வார்கள். இதயம் பேசுகிறது வந்த ஆனந்த விகடனில் இதயம் பேத்துகிறது வும் வந்திருக்கிறது.

 ரேண்டமாக விகடன் தேர்ந்தெடுத்திருக்கும் நாலு ஆர்ட்டிக்கிள்களின் பின்னணியில் versatility யை எடுத்துணர்த்தும் நோக்கம் தெரிகிறது. வளவளவென்று நான் எழுதியதை கச்சிதமாக எடிட் செய்திருக்கிறார்கள். எடிட்டிங் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புரிகிறது.

 எழுத ஆரம்பித்த காலத்தில் எல்லாப் பத்திரிகைகளிலும் ஏதாவது ஒரு வகையில் எழுதிக் கொண்டிருந்த நான், விகடனில் மட்டும் தோன்றவில்லை. அந்தக் குறை இப்போது நிவர்த்தியாகியிருக்கிறது. விகடனில் தோன்றும் போதுதான் ஒரு எழுத்தாளனுக்கு முழுமை கிடைக்கிறது. ஜன்ம சாபல்யம்!

 விகடனுக்கும், இந்த அறிமுகத்துக்குக் சூத்திரதாரியாக இருந்த நண்பர் கிரிராமசுப்ரமணியனுக்கும் (http://www.sasariri.com/, http://paa.sasariri.com/), விகடன் ஆசிரியர் குழுவில் இருக்கும் வினோத்துக்கும் என் நன்றி. கிரி ஒரு நல்ல பாடகர். இரண்டாவது பிளாக்கில் அவருடைய இசைத் திறனை வியக்கலாம்! அவருடனான நட்பும் அவர் இசையைப் போலவே இனியது!

Advertisements

39 comments

 1. வாழ்த்துக்கள்!

  நான் என்றைக்குமே விகடன் பத்திரிகையை அவ்வளவாக ரசித்ததில்லை.. (மதன் கார்டூன்ஸ் தவிர 🙂
  அதனால் இந்த ஜன்ம சாபல்யம் பிசினசில் உடன்பாடில்லை..
  இருந்தாலும், விகடன் எனும் உயரத்தை மதிக்கிறேன். உங்களைப் பற்றி எழுதியதனால் விகடனுக்கு வேண்டுமானால் ஜன்ம சாபல்யம் என்று சொல்லுங்கள், ஏற்கிறேன்.

  1. அப்பாதுரை, கேட்கப் பெருமையாக இருக்கிறது. அப்படி ஒரு காலம் வரும், வந்தாலும் அந்த நிலைக்கு என்னைக் கொண்டு போனவர்கள் பட்டியலில் விகடனும் இருக்கும்! என்னை ஏற்றி விட்டவர்களை நான் மறப்பதே இல்லை. எழுத்தாளர் சாவியில் தொடங்கி, எஸ்.ஏ.பி சார், எழுத்தாளர் சொக்கன், பா.ரா. சார், பத்ரி சார், நண்பர் கிரி ராமசுப்ரமணியன் என்று பட்டியல் இன்று வரை நீண்டு கொண்டிருக்கிறது. இன்னும் கூட நீளலாம்!!!

 2. ஒரு சின்ன விஷயம் குறிப்பிட மறந்து விட்டீர்கள். நான் சரியாகச் சொல்கிறேனா எனத் தெரியவில்லை. “என் விகடன்-சென்னையாக” இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். கோவைப் பதிப்போ அல்லது பிரதான விகடனிலோ இருந்திருந்தால் முதலில் நான் உங்களுக்கு சொல்லி இருப்பேன்.
  -ரோமிங் ராமன்.

 3. ஆனந்த விகடன் இணைய வடிவில் இதைக் காணவில்லை என்று நினைக்கிறேன். இருந்தால், சுட்டி விவரம் அளிக்கவும்.

 4. வாழ்த்துகள்.

  விகடன் இணைப்பாக வரும் இந்தச் சின்ன சைஸ் ‘என் விகடன்’ அந்தந்த ஊரில் அந்தந்த ஊர்ப் பதிவர்களை அறிமுகப் படுத்துகிறது. விகடன் ஒரு சுவாரஸ்யமான பத்திரிகை என்பதில் சந்தேகம் இல்லை அப்பாஜி…

  1. ஸ்ரீராம், அப்பாஜி இல்லை, அப்பாதுரைஜி….. என்ன அவசரம்? என் விகடன் எந்தெந்த ஊர்களில் வருகிறது?

 5. வாசகர் கடிதம் TO வாசகருக்குக் கடிதம்

  வாசகர் கடிதம் மூலம் எழுத்துப்பணி தொடங்கினாய் நீ,
  “வகைதொகை” இல்லாமல் பதிக்கின்றாய் இன்று நீ ,
  முதல் கதை பதிவிற்கு சாவியைக் கைகொண்டாய்,
  ஏழு முறை குமுதத்தில் அடுதடுத்துப் பதியச்செய்தாய்.

  வலைப்பூவில் கலக்குகலக்கி ஏராளமாய் “அடி” வாங்கினாய்,
  விகடனாரையும் எழுத வைத்து உனை அண்ணாந்து பார்க்க வைத்தாய்.
  நாம் அண்ணாந்து பார்த்து வியந்த சுஜாதாவை நேர்கண்டாய் .
  உன் எழுத்தில் அவர் முகத்தை உனை அறியாமல் நீ கலந்தாய்.

  கிழக்கு ஒளி வெளிச்சத்தில் திறமை காட்டி “நாடறிந்தாய்”
  மாற்றான் நூல் எழுத்துபணியிலும் உன் கை மணம் வீசிச் செய்தாய்,
  லட்சம் பிரதியில் என்பெயர் ரென மகிழ்ந்தாய் அன்று ,
  பலகோடி வாசகர் வாழ்த்துமழையில் நீ இன்று .

  “வாகைப்பூ மாலை என்றும் உன் கழுத்துக்கு
  வலைபூவின் முதல்வன் பதவி நிரந்தரம் உனக்கு” .-இப்படி
  கிரோம்பேட்டை வீதியெங்கும் டிஜிட்டல் பேனர் வைத்திருபேன் ,
  ட்ராபிக்(ராமசாமி)பயத்தால் வாழ்த்தோடு நிறுத்திக்கொண்டேன்.
  …—.வேலு

 6. நான் எப்போதுமே உங்கள் எழுத்துக்களை வியப்போடு வாசிப்பேன்…விகடன் இப்போதுதான் இதயத்தின் லப்டப்பைக் கேட்டதோ என்னவோ. வேலு அவர்களின் கவிதை உங்களைப் பற்றி அதிகம் அறிய வைத்தது. ஸந்தோஷம்.
  மோதிரக்கையால் ஆசிகள் என்று கொள்ளலாம்.விகடன் பதிவை.

 7. அன்புள்ள நண்பர் ஜவஹர்,

  நீண்ட நாட்களாயிற்று உங்களுடன் பகிர்ந்து கொண்டு.

  உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்து/பார்த்துக்
  கொண்டே தான் இருக்கிறேன்.
  பின்னூட்டம் தான் போட முடியவில்லை.
  கொஞ்சம் யோசிக்க வேண்டும் -.
  உங்களிடம் ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும் !
  எனவே தள்ளிக்கொண்டே போனது.

  இந்த வார விகடனை இன்று தான் படித்தேன்.
  முதல் வேலையாக –
  உங்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று
  நினைத்துக் கொண்டே தான் வலையைத் திறந்தேன்.

  உளமார்ந்த வாழ்த்துக்கள்.
  இப்போதெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொண்டு விட்டது
  போல் தோன்றுகிறது.
  நிறைய எழுதுங்கள்.
  உங்கள் எழுத்தை ரசிக்க நிறைய பேர் இருக்கிறோம்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 8. Just came to my mind, let me share it before I forget. Earlier days couple of years ago, I used to think it is Sujatha Sir (late Writer) who is writing on a nick name here…………………….after surfing through several blogs, I realized it is different person!! Perhaps, the content, style of posting as well as the your theme picture somewhat gave me that opinion.

 9. சார்,

  நீங்க சொல்ற ( ஜன்ம சாபல்யம்!) விகடன் எல்லாம் இப்ப இல்லை.
  But, heartly congratulation and your blog deserve it and much more ..
  All the best.

 10. எனக்கு முன்னால் யாராவது விகடனை எடுத்துக் கொண்டு விட்டால் ‘ஆந்த்வீ.. ஆந்த்வீ ‘ என்று மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படத்து பக்கோடாக் காதர் போல அலறுவேன் என்று அம்மாவும், அண்ணாக்களும் சொல்வார்கள். இதயம் பேசுகிறது வந்த ஆனந்த விகடனில் இதயம் பேத்துகிறது வும் வந்திருக்கிறது.

 11. எனக்கு முன்னால் யாராவது விகடனை எடுத்துக் கொண்டு விட்டால் ‘ஆந்த்வீ.. ஆந்த்வீ ‘ என்று மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படத்து பக்கோடாக் காதர் போல அலறுவேன் என்று அம்மாவும், அண்ணாக்களும் சொல்வார்கள். இதயம் பேசுகிறது வந்த ஆனந்த விகடனில் இதயம் பேத்துகிறது வும் வந்திருக்கிறது.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s