உங்களுக்கு ஒரு சவால்…!

பொதுவாக வாசகர்கள்தான் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்பார்கள். என் சக பதிவர்கள் மற்றும் வாசகர்கள் குறித்து எப்போதுமே எனக்கு சற்று உயர்வான அபிப்ராயம் உண்டு. சற்றுக் கூடுதலான ஐ.க்யூ உள்ளவர்கள் எல்லாருமே.

 ஆகவே ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு.

 சிறிய அளவில் ஆரம்பிப்போம். ஆதரவு நன்றாக இருந்தால் கொஞ்சம் எக்ஸ்பாண்ட் செய்து கொள்வோம். ரெடியா?

 ஆட்ட விதிகள் :

 கீழ்க்காணும் கேள்விகளுக்கு யாரும் சற்றும் எதிர்பார்த்திராத பதில்கள் தேவை. ஒரே வாக்கியத்தில் பதில் இருக்க வேண்டும். பதிலைப் பின்னூட்டமாகப் போடாதீர்கள். kgjawarlal@yahoo.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இரண்டே நாள்தான் டைம். மூன்றாம் நாள் சிறந்த பதில்களுடன் என் பதில்களும் இடம் பெறும். என் மனதில் இருக்கும் பதிலைச் சொல்கிறவர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு!

 கம் ஆன், அசத்துங்கள்!

 1. உலகத்தில் இருக்கிற எல்லாரும் செத்துப் போய் விட்டார்கள். நீங்களும், அருகில் ஒரு அழகான பெண்ணும் மட்டும்தான் இருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அவளிடம் என்ன சொன்னால் அபத்தமாக இருக்கும்?

 2. மனைவியிடம் (அல்லது கணவனிடம்) சொல்லக் கூடாதது எது?

 3. காதலுக்குக் கண் இல்லை என்கிற வாக்கியத்தை மட்டும் உபயோகித்து அதற்கு அர்த்தம் காதலுக்குக் கண் உண்டு என்பதுதான் என்று நிரூபிக்க வேண்டும். எப்படி?

Advertisements

3 comments

 1. //என் சக பதிவர்கள் மற்றும் வாசகர்கள் குறித்து எப்போதுமே எனக்கு சற்று உயர்வான அபிப்ராயம் உண்டு. சற்றுக் கூடுதலான ஐ.க்யூ உள்ளவர்கள் எல்லாருமே.//

  உங்கள் நம்பிக்கைக்கு நன்றி.

  முயற்சி செய்கிறேன்.

  அன்புடன்

  சீதாலஷ்மி சுப்ரமணியம்

 2. பதிவுலயே போடுறேன் ஜவஹர் – இரண்டு நாள் பொறுத்து.
  மூணாவது கேள்வி ரொம்பக் குடையுதே?

  உங்க பதில் என்னவாக இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆவலாயிடுச்சு 🙂

  IAF GDO தேர்வு கடைசிச் சுற்றில் ஏறக்குறைய உல்டாவாக கேள்வி கேட்டார்கள்.
  :assume you believe in adam and eve ..
  :ok
  :what do you think adam said to eve, when they discovered they were opposite genders (நம்ப மாட்டீர்கள்.. அந்த நாளிலும் இன்டர்வ்யூ கமிட்டி ரொம்ப forward)
  அன்றைக்கு நான் சொன்ன பதில் கொஞ்சம் பச்சையாக இருந்தது என்று தனிமையில் சந்தித்த போது ஒரு நடுவர் சொன்னார்.
  வருஷக்கணக்கா சுத்தி இதே கேள்வி வேற ரூபத்துல வருதே?

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s