அசத்திய பதிவர்கள் / வாசகர்கள்

சக பதிவர்கள் / வாசகர்கள் நிறையப் பேர் கலந்து கொண்டு அசத்தியிருக்கிறார்கள். அவர்களின் இன்வால்வ்மெண்ட்டுக்கு ஹேட்ஸ் ஆஃப்! வந்த பதிலகளில் நான் ரசித்த பதில்களையும், என் மனதில் இருந்த பதில்களையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

 முதல் கேள்விக்கு ஏறக்குறைய எல்லாருமே ரொம்பக் கிரியேட்டிவாக பதில் எழுதியிருக்கிறார்கள். அந்த சிச்சுவேஷன் ரொம்பப் பிடித்துப் போய்விட்டது போலிருக்கிறது!

 முதல் கேள்வி : உலகத்தில் இருக்கிற எல்லாரும் செத்துப் போய் விட்டார்கள். நீங்களும், அருகில் ஒரு அழகான பெண்ணும் மட்டும்தான் இருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அவளிடம் என்ன சொன்னால் அபத்தமாக இருக்கும்?

 மிகச் சிறந்த 2 பதில்கள் :

 1. இந்த உலகமே எதிர்த்தாலும் உன்னைக் கைவிட மாட்டேன். எழுதியவர் : கணேஷ்

 2. நாம எங்கேயாவது ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா? – எம்.ஜி. ரவிகுமார், எஸ். சிவசங்கரன்

 வேறு சில ரசனையான பதில்கள் :

 1. உலகத்திலேயே உன்னை விட அழகி யாரும் கிடையாது – ஏ. கே. மனோஜ் குமார், ராமசுப்பிரமணியன், சீதாலக்‌ஷ்மி சுப்பிரமணியன்

 2. எல்லாரையும் விட நீதான் ரொம்ப அழகா இருக்கே – அந்தமான் தமிழ் நெஞ்சன்
www.andamantamilnenjan.wordpress.com

 3. இங்கிருக்கிற பெண்களிலேயே நீதான் ரொம்ப அழகு – விஜயஷங்கர்

 4. உங்களுக்குக் கல்யாணம் ஆயிடிச்சா? – டி. கார்த்தி

 5. யாருக்காவது வெய்ட் பண்றீங்களா? – சுரேஷ் பாபு

 என் மனதில் இருந்த பதில் : உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா?

 இரண்டாவது கேள்வி : மனைவியிடம் (அல்லது கணவனிடம்) சொல்லக் கூடாதது எது?

 மன்னிக்கவும். என்னைக் கவர்ந்த விடை எதுவும் இதற்கு வரவில்லை.

 என் மனதில் இருந்த பதில் : ’இந்தக் கேள்விக்கான உண்மையான பதில்’

 மூன்றாவது கேள்வி : காதலுக்குக் கண் இல்லை என்கிற வாக்கியத்தை மட்டும் உபயோகித்து அதற்கு அர்த்தம் காதலுக்குக் கண் உண்டு என்பதுதான் என்று நிரூபிக்க வேண்டும். எப்படி?

 ஒருவர் என் மனதில் இருந்ததையே சொல்லி விட்டார். இன்னொருத்தர் வித்யாசமான ஆனாலும் ரசனையான பதிலைச் சொல்லி இருக்கிறார்.

 1. இல் lie? – சுரேஷ் பாபு.

 2. காதலுக்கு கண்கள் இல்லைன்னு பன்மைல சொல்லாத காரணத்தால், காதலுக்கு ஒரு கண் மட்டும்தான் இல்லை; இன்னொரு கண் இருக்குன்னு அர்த்தம்…  அனானி மாஸ்கி

 என் மனதில் இருந்த பதில் : கண் இல்lie. அதாவது கண் இல் என்பது பொய்.

 கலந்து கொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள். சக பதிவர்களும், வாசகர்களும் புத்திசாலிகள் என்கிற என் எண்ணம் பொய்க்கவில்லை.

 சரி, இந்த மாதிரி இசகு பிசகான கேள்விகளை என்னிடம் ஏன் நீங்கள் கேட்கக் கூடாது? உங்களுக்கு பதிலே தெரியா விட்டாலும் பரவாயில்லை. கம் ஆன், அசத்துங்கள் : kgjawarlal@yahoo.com

Advertisements

8 comments

  1. முதல் கேள்விக்கான பதில். ச்சீ, இப்படி ஓருத்தன்கூட இல்லாமல் நம்பள தவிக்கவிட்டுட்டு போய்டாங்கள. (இந்த கேள்வி ஆண்களுக்கானது மட்டுமல்லதானே?)

  2. ஸ்ரீராம் சொன்னதே நான் சொல்ல நினைத்தது.

    1. தங்கச்சி
    2. எத்தனை பணம் பதுக்கி வைத்திருக்கிறோம் என்பதை அல்லது உண்மையில் எந்த அளவுக்கு ‘நேசிக்கிறோம்’ என்பதை அல்லது ஒருவரால் இன்னொருவர் வாழ்வு எத்தனை ‘மேம்பட்டிருக்கிறது’ என்பதை

    இல்lie இஸ் neither creative nor correct, உங்க கேள்வி ரூல்ஸ் பிரகாரம். கொடுத்த வாக்கியத்தில் lie இல்லை. ஆங்கிலமும் தமிழும் கலப்பது எப்படி அதே வாக்கியத்தைத் திரும்ப உபயோகப்படுத்துவதாகும்? ஹ்ம்ம்ம். ரொம்ப எதிர்பார்த்தேன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s