கோழியுடன் கள்ளத் தொடர்பு!

ஜோக் பகிர்ந்து கொண்டு ரொம்ப நாளாயிற்று.

 டேட்டா பேசில் இருக்கிற ஜோக்குகள் தானாக நினைவு வருவதில்லை. சிற்சில சந்தர்ப்பங்களில் அந்த சந்தர்ப்பத்தோடு தொடர்புடைய ஜோக்குகள் ஞாபகம் வரும்.

 சில நாட்களுக்கு முன்னால் சிக்ஸ் சிக்மா பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தேன். ஆப்சர்வேஷன்களை வைத்தே பல சமயம் எங்கே திருத்த வேண்டும், என்ன திருத்த வேண்டும் என்று கண்டு பிடித்து விடலாம். அதற்கு நூற்றுக் கணக்கில் டேட்டா எடுத்து கண்ட்ரோல் சார்ட்டெல்லாம் போட வேண்டாம் என்று வலியுறுத்த உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

 “ஒவ்வொரு பத்தாவது காம்போனெண்ட்டிலும் வெல்டிங் முழுமையா இல்லைன்னா என்ன அர்த்தம்? வெல்டிங் ராடு ஒன்பது காம்பனண்ட் வெல்ட் பண்ணத்தான் போதுமானதா இருக்குன்னு அர்த்தம். பத்தாவது பீஸ் வந்ததும் புது ராட் எடுக்கணும். சரிதானா, டூ யு ஆல் அக்ரீ?”

 “யெஸ் சார்”

 “சரி; முதல் காம்ப்பனண்ட்லேர்ந்து எல்லாத்திலயுமே வெல்டிங் சரியில்லை. அப்ப என்ன பண்ணுவீங்க?”

 கொஞ்ச நேரம் அமைதி.

 ஒருத்தர் எழுந்தார்.

 “சார், பத்தாவது காம்பனண்ட்ன்னா டென் மைனஸ் ஒன். ஒன்பதாவதில் ராட் மாத்தணும். முதல் காம்பனண்ட்ன்னா ஒன் மைனஸ் ஒன்………………….” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் தன் பிதற்றலை உணர்ந்து அசடு வழிந்தார்.

 ”எல்லாத்துக்கும் ஒரே மாதிரி தீர்வு சரிப்படாது என்பதும் உங்களுக்குப் புரியணும் என்கிறதுக்குத்தான் இந்த உதாரணத்தைச் சொன்னேன். சரியான தீர்வு என்னன்னு சொல்றதுக்கு முன்னால் ஒரு ஜோக் சொல்றேன்” என்று ஆரம்பித்தேன்.

 ஒரு பாரில் மூன்று நண்பர்கள் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் சொன்னான்,

 “என் பொண்டாட்டிக்கு ஒரு எலக்ட்ரீஷியன் கூட கள்ளத் தொடர்பு இருக்குடா”

 “எப்படிச் சொல்றே?” என்று கேட்டார்கள் மற்ற இருவரும்.

 “ஒருதரம் வெளியூர் போய்ட்டு வந்து பார்க்கறேன், கட்டிலுக்கு அடியில ஒரு லைன் டெஸ்டர் கிடக்கு. என் வீட்ல லைன் டெஸ்டரே கிடையாது.”

 “ஓஹோ, இதானா விஷயம்.. அப்ப என் பொண்டாட்டிக்கு ஒரு பிளம்பரோட கள்ளத் தொடர்பு இருக்கு” என்றான் மற்றவன்.

 “எப்படிச் சொல்றே?”

 “என் வீட்ல கட்டிலுக்கு அடியில ஒரு பைப் ரெஞ்ச் இருந்தது”

 கொஞ்ச நேரம் அமைதி.

 “நீ பரவாயில்லை. உன் பெண்டாட்டி பத்தினி” என்றார்கள் இருவரும் மூன்றாமவனைப் பார்த்து.

 “அதான் யோசிக்கிறேன். பத்தினின்னு நினைக்கிறதா வேறே மாதிரி நினைக்கிறதா ஒன்ணும் புரியல்லை” என்றான் மூன்றாமவன்.

 “ஏண்டா?”

 “அவளுக்கு கோழியோட கள்ளத் தொடர்பு இருக்கு மாப்ளே”

 “என்ன உளர்ரே? கோழியோடயா?”

 “ஆமாம். டெஸ்டர்ன்னா எலக்ட்ரீஷியன், பைப் ரெஞ்ச்சுன்னா பிளம்பர் அப்படித்தானே சொன்னீங்க?”

 “ஆமாம்.. உன் வீட்ல என்ன கிடைச்சது? முட்டையா?”

 “ம்ம்ஹூம் கட்டிலுக்கு அடியில கோழிப்பண்ணைக்காரன் இருந்தான்”

 இந்த ஜோக்கை சொன்னதும் விலாப்புடைக்கும் சிரிப்பினூடே சரியான சொல்யூஷன் ஓரிருவர் சொல்லி விட்டார்கள். எல்லா காம்பொனெண்ட்டிலும் வெல்டிங் சரியில்லா விட்டால் என்ன செய்ய வேண்டும்?

 நீங்கள் சொல்லுங்கள்?

Advertisements

9 comments

  1. என்னவோ தெரியலே, முதல் வரி படிக்கும்போது சிக்ஸ் சிக்மா என்பதை திரும்பத்திரும்ப ‘சில்க் ச்டிக்மா’ என்று தான் என்னால் படிக்க முடிந்தது!! காரணம் யோசித்ததில், இன்று சில்க்கின் வாழ்க்கையை வைத்து அனேகமாக எல்லா முன்னணி இயக்குனர்களும் எல்லா மொழிகளிலும் படமெடுக்க முனைந்துள்ளார்கள். ‘அழுக்கான படம்’ என்று ஒருவர் துவங்கினார், அப்படியே எல்லாரும் ஆட்டு மந்தை மாதிரி ஒரே வார்ப்பில் தம் கற்பனையை ஓட்டுகிறார்கள். அந்த ச்டிக்மாதான் என் கண்ணில் பட்டதோ என்னவோ?

    இதற்கும் உங்கள் ஜோக்கிற்கும் தொடர்பில்லை, மன்னிக்க!!

  2. சார்,
    இன்னிக்கு வியாழக்கிழமை. நீங்கதான “எதுவா இருந்தாலும் எழுதுங்க!”ன்னு சொல்லிருக்கீங்.

    எல்லாம் சரி, கோழியோட கள்ளத்தொடர்பு இருந்தா வெல்டர எதுக்கு மாத்தனும்?

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s