ஒரு வார்த்தைக்குள் இத்தனை விஷயமா?

”பசித்திருன்னு வள்ளலார் சொன்னதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?”

“அதுவும் தெரியும், நீ என்ன சொல்லப் போறேன்னும் தெரியும்”

“ஒண்ணொண்ணா சொல்லு”

“பசித்திருன்னா அறிவார்ந்த விஷயங்களுக்காகப் பசித்திருன்னு அர்த்தம்”

“சரி.. நான் என்ன சொல்ல வந்தேன்?”

“பசித்திருன்னா எதையாவது தின்னுகிட்டே இருன்னு அர்த்தமில்லைன்னு சொல்ல வந்தே”

“தப்பு. நான் சொல்ல வந்தது அது இல்லை”

“சரி, நீ சொல்ல வந்ததையும் நானே சொல்லிட்டேனே?”

“முழுசா சொல்லல்லையே?”

“முழுசான்னா?”

“இப்போ, நீ பசியா இருக்கே. யாராவது சாப்பிடக் குடுக்கறாங்க. என்ன ஆகும்?”

“இது என்ன கேள்வி, பசி ஆறும்”

“அப்புறம் பசிக்கவே பசிக்காதா?”

“அப்படி இருந்தாத்தான் நல்லா இருக்குமே. சாப்ட்டது ஜீரணமானா திரும்பப் பசிக்கும்”

“ஜீரணம் ஆகல்லைன்னா?”

“ஆகல்லைன்னா வயித்தை வலிக்கும், வயித்தால போகும் சில சமயம் ஜுரம் கூட வரும். மூணு நாலு நாளைக்கு எதுவும் சாப்பிடவே முடியாது”

“எப்ப அந்த மாதிரி ஆகும்?”

“தப்பான உணவைச் சாப்பிட்டா அப்படி ஆகும்”

“சீக்கிரம் ஜீரணமாகிற உணவைச் சாப்பிட்டா?”

“அஞ்சாறு மணி நேரத்தில் ஜீரணமாகி மறுபடி பசிக்கும்”

“அது மட்டும்தானா?”

“சரி, சக்கையெல்லாம் மலமா மாறி வெளியேறும். அப்படி வெளியேறினாத்தான் பசிக்கும்”

“அதாவது தப்பான உணவைச் சாப்பிடக் கூடாது. சரியான உணவைச் சாப்பிட்டாலும் சக்கை வெளியேறணும். அப்பத்தான் மறுபடி பசிக்கும், திரும்ப சாப்பிடலாம்; அப்படித்தானே?”

“பெரிய்ய கண்டு பிடிப்பு. அப்படித்தான்”

“அப்போ அறிவுப் பசிக்கும் நிஜமான அறிவார்ந்த விஷயங்களைத்தான் சாப்பிட்டுப் பசியாறணும். அதுலயும் சக்கைகள் இருக்கும்; அதை வெளியேற்றி சத்தை மட்டும் வெச்சிக்கணும். அப்பத்தான் பசிக்கும். தப்பான விஷயங்கள் ஜீரணமாகாம நமக்குத் தொந்தரவு தர்ரது மட்டுமில்லை, மேலும் நல்ல விஷயங்களைத் தெரிஞ்சிக்கிறதையும் தாமதப்படுத்தும். சரிதானா?”

“அட.. பசித்திருங்கிற வார்த்தையில இவ்வளவு விஷயம் இருக்கா?”

“இன்னும் கூட இருக்கு”

“என்னது?”

“பசித்து + இரு ந்னு அர்த்தம் எடுத்தா இந்த அர்த்தம். பசி + திரு ந்னு அர்த்தம் எடுத்தா இன்னொரு அர்த்தம்”

“அதென்ன?”

“திருன்னா செல்வம். பசியே ஒரு செல்வம். வேளா வேளைக்குப் பசிக்கிறதே ஒரு செல்வம். பசியே இல்லைன்னு தவிக்கிறவன் எத்தனை பேர் இருக்கான் தெரியுமா?”

“அது சரி. கழிந்திருன்னு சொன்னா கழியறதே ஒரு செல்வம்ன்னு சொல்வியோ?”

“இல்லை. கழிந்திரு அப்டீன்னா, கழிந்த பிறகும் இரு… அதாவது….”

“புரியுது. கழிஞ்சதும் எழுந்து வந்துடாதே. இன்னும் கூடக் கழிய வேண்டியிருக்கும்ன்னு அர்த்தம்”

“இல்லை. நீ போனப்புறமும் உன் புகழ் நிலைத்து இருக்கிறதுதான் கழிந்திரு”

“சூப்பர்பா….”

“என்ன தேடறே?”

“பின்னாலே ஒளிவட்டம் தெரியுதான்னு பார்க்கறேன்”

“ஆக்ச்சுவலா ஒளி ஏன் வட்டமா இருக்கு தெரியுமா?”

“ஐய்யய்யோ… இன்னைக்கு இது போதும்; என்னை விட்டுடு”

Advertisements

5 comments

 1. நண்பர்களும், சொந்தங்களும் படித்த, படிக்க இருக்கிறவர்களுக்கு நல்ல புத்திமதி கூறுதல் சிறு வயது முதல் தொடர்ந்தா அறிவுப்பசியும், வாழ்க்கையை நிர்ணயிக்கும் திடமான மனமும் கிட்டும்.

  அமெரிக்கா போன்ற வெளிநாடு சென்ற இளைஞர்கள் பல வித கட்டுபாடற்ற செயல்களில் ஈடுபட்டு கெட்டுப்போகிறார்கள். நம் நாட்டில் இது கிடையாதே என்ற எண்ணமும், எப்படியாவது ஈகோ ( மற்றவர்கள் முன், நான் பெரியது ) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை வீணடிக்கிறது!

  நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வது,, அவர்கள் கடமை..

  நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பது நிலை..

 2. ஐய்யய்யோ இன்னிக்கு இது போதும் என்று பிச்சிக்கிட்டு ஓடினா பின்னாடியே விஜயஷங்கர் வந்து ….
  உனக்கு வேணும்… உனக்கு வேணும் (வடிவேலு ஸ்டைலில்)

 3. Sir, Post date and Comments date is coming in Tamil month. (AAdi) – But it is not matching with the actual tamil date ….
  You noticed it ? Or any purpose behind it..?

  As ususal, nice article – to simulate our thinking and living style… Thank you sir… Keep going please..!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s