உங்களை யாராவது முட்டாள் என்று சொன்னால்…

பேரட்டோவின் 80-20 சித்தாந்தத்துக்கும், ஸ்டீஃபன் கோவேயின் 90-10 சித்தாந்தத்துக்கும் ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு உண்டு.

 ஒரே டேட்டாவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு கோணங்களில் அணுகச் சொல்கிறார்கள்.

 வில்ஃப்ரெட் பேரட்டோவின் சித்தாந்தப்படி, எந்த ஒரு லார்ஜ் கலெக்‌ஷன் ஆஃப் டேட்டாவிலும் கவனிக்கப்பட வேண்டியவைகளின் எண்ணிக்கை 20% ம், ஒதுக்கப்பட வேண்டியவை 80% ம் இருக்கும். இந்த சதவீதம் கொஞ்சம் ஜென்ரிக்கானது. அதனால் பொதுவாக Vital few and Trivial many என்று குறிப்பிடுவார்கள்.

 உதாரணமாக ஒரு வகுப்பில் சரியாகப் படிக்காத மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு சமூகத்தில் ஒழுக்கமில்லாதவர்கள் எண்ணிக்கை, பணக்காரர்கள் எண்ணிக்கை, பலனில்லாமல் போன கடின உழைப்புகளின் எண்ணிக்கை, தரக் கட்டுப்பாட்டில் நிராகரிக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை என்று நிறைய சொல்லலாம். அந்த குறைந்த சதவீத சமாச்சாரங்களில் கவனத்தைச் செலுத்தினால் போதும். அடுத்த சாம்ப்பிளில் பிரம்மாண்டமான முன்னேற்றத்தைச் பார்க்கலாம். இதனால்தான் பேரட்டோவின் சித்தாந்தம் எல்லா நிறுவனங்களிலும் பயன்படுகிறது.

 ஆனால் ஸ்டீஃபன் கோவே சொல்வதைப் பாருங்கள்.

 ஒருநாளில் நாம் செய்கிற காரியங்களில் 10% தான் ஆக்‌ஷன்கள். பாக்கி பூரா ரியாக்‌ஷன்கள் என்கிறார். இந்த டேட்டாவை பேரட்டோவிடம் கொடுத்தால் ஆக்‌ஷன்கள்தான் கவனிக்கப்பட வேண்டியவை என்பார். அதாவது ரியாக்‌ஷன்கள் பேரட்டோவைப் பொறுத்தவரை Trivial many ஜாதியில் சேர்ந்து விடும்.

 ஆனால் நம் செயல்களின் விளைவுக்கு (குறிப்பாக எதிர்மறை விளைவுகளுக்கு) நாம் ரியாக்ட் செய்யும் விதம்தான் காரணம்.

 ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

 “நீ ஒரு முட்டாள்” என்று யாராவது சொல்லும் போது நம்மில் எத்தனை பேர் சிரித்தபடி “தேங்க் யு” என்று சொல்கிறோம், அல்லது ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறோம்?

 நானும் கூட சும்மா இருப்பதில்லை.

 “நான் ஒரு கண்ணாடி; அதில் பார்க்கிறவர்கள் தெரிவது ஆச்சரியமில்லை” என்றுதான் சொல்வேன். இந்த ஆட்டிட்யூடால் நான் நிறைய நண்பர்களை இழந்திருக்கிறேன்.

Advertisements

5 comments

 1. உண்மைதான், இன்ஸ்டண்ட் ரியாக்‌ஷன்கள்(அதுவும் உணர்வுபூர்வமான உண்மையான ரியாக்‌ஷன்) – எப்பவுமே பிரச்னைகளை அதிகப் படுத்துகின்றன.

  கொஞ்சம் யோசித்து, எப்படி ரியாக்ட் பண்ணினால் சரியாக வரும் என்று பார்க்கலாம் என்று நினைத்ததுண்டு.

  நீங்க சொல்வதைப் பார்க்கும்போது, ரியாக்டே பண்ணமல் இருக்கணும் போல இருக்கே:)

  அன்புடன்

  திருமதி சீதாலஷ்மி சுப்ரமணியம்

 2. அவர்கள் கூற்று மிக்க சரியே
  இதை வேறு விதமாகவும் சொல்லலாமா ?
  நம் வாழ்வின் 10 சதவீத உறவுகள்தான்
  நம் வாழ்வையே தீர்மானிக்கின்றன
  ச்சிந்திக்கச் செய்துபோகும் அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s