இது பில்லா விமர்சனம் அல்ல

நான் சிரித்தால் தீபாவளி

இதுவரை எந்தத் திரைப்படத்தையும் நான் முன் பதிவு செய்து பார்த்ததில்லை. தொழில் கட்டாயத்தின் காரணமாக பில்லாவுக்கு முன் பதிவு செய்து பார்த்தேன். அதுவும் எங்கள் ஊர் வெற்றி தியேட்டரிலேயே..

 நான் பார்த்தது 15ம் தேதி. சீட் வரிசைகளுக்கு இடையிலிருக்கும் நடைபாதையில் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடுகிற அளவு கூட்டம். தியேட்டர் வாசலிலிருந்து, படம் ஆரம்பிக்கும் போது திரையில் சிலைடு வரை அறிவிப்புக்கள் ‘பாடல்களை மறு ஒளிபரப்பு செய்ய முடியாது என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டன.

 அஜித்துக்கு எம்.ஜி.ஆருக்கு இருந்த அளவு தீவிர ரசிகர்கள் உருவாகியிருப்பது ஆச்சரியம் தருகிறது. அஜித் படங்களை அவர் ஒரு ஆக்டராக இருக்கிற வரை பார்த்ததுடன் சரி. ஸ்டார் ஆன பிறகு (தியேட்டரில்) பார்த்ததில்லை. அஜித் டயலாக் பேசினாலே ஆரவாரம் கூச்சல். ‘பில்லாவாலே இனி வெளில வர முடியாது’ என்று திரையில் ஒருவர் சொல்லும் போது, ‘வருவாண்டா’ என்று சாமி வந்த மாதிரி ஒரு ரசிகர் கூச்சலிடுகிறார்!

 அஜித் ரசிகர்களில் பெரும்பாலோர் ஹை-டெக் ஆசாமிகள். ஆனாலும் ஒரு பாமரத்தனமான உணர்வு ரீதி அபிமானத்தைப் பார்க்க முடிவது ஆச்சரியம். இதனால்தான் அஜித் கதை, திரைக்கதை, வசனம், இசை எல்லாவற்றையும் விட தன் ரசிகர்களை அதிகம் நம்பி மட்டும் படங்கள் செய்கிறார் போலிருக்கிறது!

 இதுதான் சினிமா விமர்சனமா? என்று கேட்காதீர்கள். அதுதான் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேனே இல்லை என்று. பில்லா II வின் விமர்சனத்தை கிழக்கு பதிப்பகத்தின் ஆழம் இதழுக்கு எழுதுவதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆகவே அதை இங்கே எழுதுவது நியாயமில்லை.

 வருகிற இதழ் ‘ஆழம்’ வாங்கிப் படியுங்கள்!

5 comments

  1. படமே செம்ம மொக்க, இதில விமர்சனத்த படிக்கவேறு செய்யனுமா. ஆனாலும் உங்க வியாபார உக்தி எனக்கு ரெம்ப புடிச்சிருக்கு

நித்தில் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி