சூப்பர் ஸ்டார்

1969 இல் ‘ரூப்புத் தேரா மஸ்தானா’ பாட்டை முணுமுணுக்காத உதடுகள் சொற்பம்.

 ஹிந்தியே தெரியாதவர்கள் கூட ‘கோப்பித் தேரா மச்சானா’ என்று தாங்கள் கிரகித்த விதத்தில் பாடிக் கொண்டு திரிந்தார்கள். வேற்று மொழிப் படங்களே போடாத நாகப்பட்டினம் ஸ்டார் டாக்கீஸில் ஆராதனா படம் போட்டார்கள். ராஜேஷ்கன்னா என்பவர் அவ்வளவு பவர்ஃபுல் ஸ்டார் என்பதால்தான் அவரை ஹிந்திப் படத் தயாரிப்பாளர்கள் பவர் ஹௌஸ் ஆஃப் ஹிந்தி சினிமா என்று அழைத்தார்கள்.

 சூப்பர் ஸ்டார் என்கிற சொற்றொடர் இந்திய சினிமாவுக்கு அறிமுகமாகக் காரணமாக இருந்தவர். இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார்.

 கண்ணை மூடித் திறந்து தலையை சாய்த்து நிமிர்த்தினால் போதும். ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள். என் அபிமான ஆர்.டி.பர்மனின் பல ஹிட்டுகள் ராஜேஷ்கன்னாவுக்காகப் போடப்பட்டவை. 69 வயதில் பல நடிகர்கள் பிஸியாக இருந்தார்கள், இருக்கிறார்கள். சிலர் ஹீரோவாகக் கூட நடித்தார்கள். காகாஜி என்று அழைக்கப்பட்ட ராஜேஷ் கன்னா 69 வயதில் செத்துப் போய் விட்டார். கேன்ஸர்!

 என்.டி. டிவியில் அவர் மரணச் செய்தியை அறிவித்து விட்டு ‘மோத் ஆநீகே காயே கீத்திக் தின்’ என்கிற வரியைப் போட்ட போதும், டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் தலைப்பில் ‘அச்சா தோ ஹம் சல்தேஹே’ என்று போட்டிருந்ததைப் பார்த்த போதும் இரண்டு சொட்டு கண்ணீர் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

Advertisements

9 comments

 1. ‘மோத் ஆநீகே காயே கீத்திக் தின்’ ‘அச்சா தோ ஹம் சல்தேஹே’ இரண்டு வரிகளுக்கும் அர்த்தம் ப்ளீஸ்.. எழுதறது தமிழ் ப்லாக்.. அதுல ஹிந்தி எழுதினா அர்த்தம் போடறதில்லியா??? உங்களுக்கு வந்த கண்ணீர் எங்களுக்கும் வருதான்னு பார்த்திருக்கலாமில்லியா !!

  1. பாடிக் கொண்டிருக்கும் நாளில் மரணம் வரட்டுமே என்றும், நல்லது அப்ப நான் போறேன் என்றும் என் சிற்றறிவு அர்த்தம் சொல்கிறது.

 2. ஒரு விளபரத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்தது ராஜேஷ் கன்னவா என்று மனம் ஏற்க மறுத்தது.
  ஆராதனா, கட்டி பதங் , அமர் பிரேம் , மேரே ஜீவன் சாத்தி, ஆனந்த் படங்களையும் பாடல்களையும் மறக்க முடியுமா !
  அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் .

 3. || என்.டி. டிவியில் அவர் மரணச் செய்தியை அறிவித்து விட்டு ‘மோத் ஆநீகே காயே கீத்திக் தின்’ என்கிற வரியைப் போட்ட போதும், டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் தலைப்பில் ‘அச்சா தோ ஹம் சல்தேஹே’ என்று போட்டிருந்ததைப் பார்த்த போதும்||

  ஏன் வந்தது என்று வரிகளுக்கு பொருள் தெரியாததால் புரியவில்லை..அதைக் கேட்க நினைத்த போது அப்புறம் சொல்றேன் என்று கேட்டுவிட்டார் மனிதர்..

  நீங்கள் ஜவர்லால் அல்லது ஜவஹரா?

  அல்லது பல இடங்களில் பல பெயர்களில் உலவுவீர்களா ?!
  ;))

 4. நாங்கள் “தூள் பக்கோடா…..மஸ்தானா…” என்று பள்ளி நாடகத்தில் மாற்றி பாடிய ஞாபகம்…பிர் கப் மிலோங்கே? என்ற அடுத்த வரியும் மனதை கனக்க வைக்கிறது…

 5. என் பள்ளிப் பருவத்தில் ஆராதனா பார்த்து அவரை மிக ரசித்திருக்கிறேன். நீங்கள் நினைவுகூர்ந்த விதம் நன்று. அன்னாரின் ஆன்ம சாந்திக்காக வேண்டுவோம்.

 6. அன்புள்ள ஜவஹர்,

  ராஜேஷ் கன்னாவவின் சிரித்த முகம்
  எனக்கு எப்போதும் பிடிக்கும்.
  கிட்டத்தட்ட அவர் படங்கள் அனைத்தையுமே
  பார்த்திருக்கிறேன்.

  அவர் இறந்ததில் – எனக்கு வருத்ததை விட
  கோபம் தான் அதிகம் வருகிறது.

  ராஜேஷ் கன்னா உண்மையில் மறைந்தது
  கேன்சரினால் அல்ல – குடியினால்.

  “குடி” தொலைந்தால் தான் இந்த நாடும்
  மக்களும் உருப்படுவார்கள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s