எல்லாம்வல்ல பி.எஸ்.என்.எல்

முதன்மை அதிகாரி திரு. பாபு ஸ்ரீநிவாஸ் குமார்

பி.எஸ்.என்.எல்லின் பயிற்சி மையம் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்றிருக்கிறது. அதிகாரிகளுக்கு ஐ.எஸ்.ஓ அவேர்னஸ் பயிற்சி வகுப்பு நடத்த அழைத்திருந்தார்கள்.

 சுற்றிலும் புலவர்கள் உட்கார்ந்திருக்க உறி மீது நின்று புகை மூட்டத்தில் நடுவே எமகண்டம் பாடிய காளமேகம் போல உணர்ந்தேன். காரணம் அவர்கள் அத்தனை பேரும் ஃபேக்கல்ட்டிகள்! ஃபேக்கல்ட்டிகள் ஆபத்தான ஆசாமிகள். அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா தெரியாதா என்பதைக் கண்டு பிடிப்பது அத்தனை சுலபமல்ல. மேலும் நமக்கே இது முழுசாகத் தெரியாதோ என்று எண்ண வைக்கிற அளவு குழப்புவதில் சமர்த்தர்கள். (ஹி.. ஹி.. நான் எக்ஸம்ட்டட்!) இதை அங்கேயே அவர்களிடமே சொன்னேன்.

 அது ஒரு புறம் இருக்கட்டும்.

 பொதுவாகவே சீனியர் லெவல் ஆசாமிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்தும் போது இரண்டு சங்கடங்கள் தவிர்க்க முடியாதவை. ஒவ்வொருத்தரும் தங்கள் ஞானத்தைப் பரை சாற்றிக் கொள்வதில் குறியாக இருப்பார்கள்; பயிற்சியாளனிடம் ‘நீ பச்சா.. என் லெவலே வேறே’ என்கிற மாதிரி ஒரு தோற்றத்தை உண்டாக்க பகீரதப் பிரயர்த்தனம் பண்ணுவார்கள். தங்களுக்கு நன்றாகத் தெரிந்தவைகள் பற்றியே அடிக்கடி கேள்வி கேட்பார்கள். பதில் சொன்னால் அதில் தப்பு கண்டு பிடிப்பார்கள்.

 ஒருத்தருமே அப்படிப்பட்ட அல்ப முயற்சிகளில் இறங்காமல் இருந்தது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

 பயிற்சி மையத்தின் முதன்மை அதிகாரி திரு. பாபு ஸ்ரீனிவாஸ் குமார் ஐ.டி.எஸ்., ஒரு அபூர்வமான மனிதர். பொதுவாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.டி.எஸ் அதிகாரிகள் என்றால் எனக்குக் கொஞ்சம் உதறல். கஞ்சி போட்டு இஸ்திரி பண்ணின கதர் சட்டை மாதிரி விறைப்பாக இருப்பார்கள். I know all that என்கிற பார்வை பார்ப்பார்கள். You are a trifle thing to me என்கிற அமானுஷ்ய மெசேஜ் அவர்களிடமிருந்து நமக்கு கம்யூனிகேட் ஆகிக் கொண்டே இருக்கும்.

 இவர் கொஞ்சம் மாறுபட்ட மனிதர். மிடுக்கு மட்டும்தான் இருந்தது, விறைப்பு இல்லை.

 பயிற்சி வகுப்பு என்றதும் ஒரு மாணவனின் உற்சாகத்தோடு நோட்டு பேனாவுடன் வந்து உட்கார்ந்தார். வகுப்பு முடிகிற வரை இருந்து அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டார். (மூதேவி, உளறுகிறான். தனியாகப் பார்க்கிற போது தெளிய வைக்க வேண்டும் என்று எழுதியிருப்பாரோ?) நிறைய கேள்விகள் கேட்டார்.

 அவர் மட்டுமில்லை, எல்லோரிடமுமே இந்த சீரியஸ்னஸ் இருந்தது.

 அரசாங்க ஊழியர்கள் குறித்த என் அபிப்ராயங்களைக் கொஞ்சம் அமெண்ட், செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

 பின் குறிப்பு :

 (1)     ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற பி.எஸ்.என்.எல்லின் பயிற்சி மையத்தில் வகுப்பறைகள் ரொம்பச் சிறப்பாக இருக்கின்றன.

(2)     வெளி நிறுவனங்களுக்கும் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன; வெறும் வென்யூ மட்டும்தான் வேண்டும் என்றாலும் தருகிறார்கள்.

(3)     எனக்கு பொன்னாடை போர்த்தா விட்டாலும் இப்படித்தான் எழுதியிருப்பேன்.

Advertisements

13 comments

 1. எல்லாம் தெரிந்த ஆட்களுக்கு வகுப்பு எடுப்பதில் உள்ள சிரமத்தினை அழகாய் எழுதி உள்ளீர்கள். உங்கள் எழுத்து நடைக்கும் ஐ எஸ் ஓ தரலாம்.

 2. Jawahar Sir, I am somewhat disappointed with this post…………..don’t ask me why? I know you will, given the title, I was anxious to read a scintillating or master-blaster laughter piece…………………………..to express myself more practical, when everyone in the gallery is awaiting Sachin to blast a double-hundred minimum given the austerity of the match-occasion, he would just simply give in with a one-off 4 and get himself run out!!

  Innum theliva chollanumna, veetla oru program irukku, vadai sundal SKC ellam undu, vaappannu kooppitta mariyadaikku ponal, chchumma oru spoon sarkarai (sugar) or a few pieces of Kalkandu koduthu anuppina epdi irukkum, antha maathiri feel panren!!

  Reason, you have been rendering awful write-ups by and large, that kind of level and elevation to the audience you have insulated over the years !! Amen !! (kindly excuse the long note on my disappointment)!!

  BTW, we could at least see your picture this week, courtesy BSNL!!

 3. இது போல் அனுபவம் எனக்கும் நிறைய உண்டு…

  பி.எஸ்.என்.எல் நிறுவனம் – ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வாங்கியாச்சா…? இனி சூப்பர் தான்… அதில் உள்ளவாறு பி.எஸ்.என்.எல் நிறுவனம் நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்…

  சந்தேகம் இருந்தால் ISO குறியீட்டில் (Labels) உள்ள சில பதிவுகளை என் தளத்தில்… நேரம் இருந்தால்… மின்சாரம் இருந்தால்… வாசிக்கவும்…

  நன்றி… வாழ்த்துக்கள்…

 4. அருமை ஜவஹர்ஜி….. இயல்பான உங்கள் நகைச்சுவை கலந்த பயிற்சி முறை அனைவரையும் கவரும் என்பதில் துளியும் ஐயமில்லை…..

 5. சார்,
  நல்வாழ்துக்கள் தங்களுக்கும் பி. எஸ். என். எல். க்கும்.
  ஒரு சந்தேகம், ஸ்டான்டர்ட்லயே ஏன் இவ்ளோ ஸ்டாண்டர்ட் இருக்கு? இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டவை : ஐ எஸ் ஒ, டி எஸ் 16949 , TQM , டெமிங், இதை தவிர வேறு பலவும் இருக்குன்னு நெறைய பேர் வேற எங்க MR சொல்றார்.

  http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.in/

 6. //I know all that என்கிற பார்வை பார்ப்பார்கள். You are a trifle thing to me என்கிற அமானுஷ்ய மெசேஜ் அவர்களிடமிருந்து நமக்கு கம்யூனிகேட் ஆகிக் கொண்டே இருக்கும்.//
  ரொம்பச் சரி!

  //எனக்கு பொன்னாடை போர்த்தா விட்டாலும் இப்படித்தான் எழுதியிருப்பேன்.//
  உங்க நேர்மையை நாங்கள் சந்தேகிக்க மாட்டோம் ஜி!

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s