ஒரு இந்திய(னின்) கனவு

அவர் பஸ்ஸுக்காகக் காத்திருந்தார்.

பஸ் ஸ்டாப்பில் இருந்த இரண்டொருவர் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். சிலர் வணக்கம் சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் அவர் மீது கவனமின்றி தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.

பஸ் வந்தது.

கூட்டத்தோடு கூட்டமாக ஏறிக் கொண்டார்.

“நவுந்து நில்லுய்யா.. ஏன் மேல வந்து இப்படி இடிக்கிறே?” என்று அருகிலிருந்தவர் வள்ளென்று விழுந்தார்.

“சாரி.. இடமே இல்லைங்களே” என்று ஒரு சங்கடச் சிரிப்புடன் அவர் விலகி நிற்க முயன்றார்.

அவரைப் பார்த்ததும் எழுந்து இடம் தர முயன்ற ஒருவரை அருகில் இருந்தவர் சட்டையைப் பிடித்து இழுத்து சின்ன குரலில் ஏதோ சொல்ல அவர் உட்கார்ந்து விட்டார். இவர் முகத்தில் புன்னகை.

கண்டக்டர் “முன்னால போ.. முன்னால போ” என்று அதட்ட அவர் பவ்யமாக முன்னால் நகர்ந்தபடி இருந்தார். சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டார். எங்கே போகணும் என்று கண்டக்டர் கேட்கவில்லை. அவருக்குத் தெரியும்.

இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததும் இறங்கிக் கொண்டார். நேரமாகி விட்ட அவசரத்தில் பெடஸ்ட்ரியன் கிராஸிங் சிக்னல் மறைந்து வாகனங்கள் போக கிளியர் ஆனதைக் கவனிக்காமல் நடக்க ஆரம்பித்து விட்டார்.

“ஃபுய்ய்ய்ய்ங்” என்று விஸில் சப்தம் கேட்க சட்டென்று சுய நினைவு வந்து ஒதுங்கினார்.

இன்ஸ்பெக்டர் அருகில் வந்தார்.

“யோவ் பெருசு, அறிவு இருக்கா? நீ பாட்டுக்கப் போய்கிணே இருக்கே?”

“சாரி சார். ஆஃபிஸ்க்கு லேட்டாகிட்டது. பதற்றத்தில கவனிக்கல்லை”

“எந்த ஆஃபிஸ் உனக்கு?”

“இங்கதான் பக்கத்தில”

“பக்கத்திலன்னா?”

“பார்லிமெண்ட்”

இன்ஸ்பெக்டர் அவரை ஏற இறங்கப் பார்த்தார்.

“வேட்டியும் ஜிப்பாவும் போட்டுகிட்டு இப்பல்லாம் யாரும் ஆஃபிஸ் போறதில்லையே, பார்லிமெண்ட்ல நீ என்னவா இருக்கே?”

பையிலிருந்து அடையாள அட்டையை எடுத்து நீட்டினார்.

R.Krishnamurthy, Prime Minister of India என்று எழுதியிருந்தது அதில்.

Advertisements

21 comments

 1. This is very unlike you. Normally your writings carry a conviction and are earnest. But this is contrived and sure is meant for gallery, I am sure we all mix up our definitions of probity. Would you apply this to a CEO of a large company? Can he come by public transport and go through the woes of common worker? And what is the guarantee that simplicity will mean efficiency and honesty?

  1. அப்பாதுரை, கதையின் நோக்கம் அதுவல்ல என்பது சரியே. ஆனால் எளிமை நேர்மையின் வெளிப்பாடு என்பதில் எனக்கு ஐயமில்லை. நான் சொல்வது எளிமை போலக் காட்டிக் கொள்கிறவர்களை அல்ல. எளிமையாக இருப்பவர்களை.

 2. இன்று கனவாகவும், சிலருக்கு கேலியாகவும் தோன்றலாம் இந்தக் கதை. இப்படி கனவாகவும், கேலியாகவும் எண்ணப்படுபவைதான் நாளைய உலகை தீர்மானிக்கின்றன. எனக்கு இந்தக் கற்பனை மகிழ்வைத்தருகிறது. நடக்கும் ஒரு நாள். நடக்காமலேயா போகும்?

 3. அன்பின் ஜவஹர் – நல்ல கதை – முடிவும் சரி – சிந்திக்கிறேன் – இப்படி உண்மையிலேயே நடந்தால் நன்றாக இருக்கும் – ஆனால் இந்தியாவில் நிச்சயமாக நடக்காது – நடந்தால் நன்றாக இருக்கும் – நடக்க இயலாது – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 4. இப்படி அடையாளம்தெறியாத ஒருவர் நாட்டோட பிரதமாராயிருந்தால் அது நாடல்ல சுடுகாடு. இப்படியும் விரைவில் நடக்க வாய்ப்பிருக்கிறது இன்றைய சூழலில் எந்த கட்சிகளும் பெரும்பான்மை பெறாமல் அதிகப்படியான சுயேச்சை மற்றும் மானில குறுங்கட்ச்சிகளின் உருப்பினர்கள் வெற்றிபெற்றால் இது சாத்தியமே அடுத்த நாள் யார் பிரதமர் என்பதை ஒரு நாள் முன்னதாக ID card போட்டு கொடுப்பார்கள்
  ஆதரவு திறட்டுகிற முயர்சியில் கைபொருள் அனைத்தையும் இழந்து கடைசியில் பாரளுமன்றதிற்க்கு அலுவலக நேரத்திற்க்கு முன்னதாக செல்ல வென்டும் என்றால் கால் நடையாக கூட போக நேரிடலாம் முன்னாள் பிரதமரிடம் இருந்து பொறுப்பு வாங்கினபிறகுதான் எல்லாம் கிடைக்கும். have a sweet dreams.

 5. Somehow, your story’s hero was similar to the character and caliber of (Late) Jyothi Basu of West Bengal………………who was known for his simplicity, administrative efficiency and honesty in public life!! Whether one admits or not on these lines, the equation to such a personality invokes a pleasant mood as if ‘Ah, when can we have and be blessed with such a political celebrity in India?’ Thanks, Mr Jawahar for intuitively emulating such thoughts by this story.

 6. நல்ல கற்பனை. அடையாளமே இல்லாதஒரு ஆஸாமி. ஆனால் கையிலே அடையாள அட்டை. அதையாவதுகொடுத்தீர்களே? ரோட்லே அலைஞ்சவன் எல்லாம் நாட்லே பிரதமர். யாரு எதுன்னு கண்டுபிடிக்க முடியலே!நிஜமா காலம் மாறிதான் போச்சு. இப்படி எல்லோரும் பேசிண்டு போவா!அப்படித்தானே?

 7. கனவு என்றாலும் நம்ப மறுக்கும் நம் மக்கள்!
  குறை நம்மிடம்தான் உள்ளது.
  “அவர்” பிரதமமந்திரி என்றால் simple-ஆ இருக்கக்கூடாது என்ற ஒரு பிம்பத்தை நாம் மனதில் பச்சைகுத்திக்கொண்டிருக்கிறோம். எனவேதான் “நாடல்ல சுடுகாடு” எனும் சுடு சொற்களின் பயன்பாடுகள்.
  இன்றைய பிரதமரும் பாவம்… தேர்தலில் கூட வெல்லமுடியாத நிலையில்தான் உள்ளார். இவர் பஸ்ஸில் போனால் சீட் கொடுக்ககூட எவரும் எந்திருக்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

 8. //எளிமை நேர்மையின் வெளிப்பாடு என்பதில் எனக்கு ஐயமில்லை.//
  மன்மோகன் சிங் பஸ்ஸில் போய் DSEல் பாடம் நடத்தினார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது பார்லிமெண்ட்டுக்கு எம்பிக்களுக்கான பஸ்ஸில் போனாராம். தன் சம்பளத்தில் மட்டும் வாழ்க்கை நடத்தினார். எளிமை தான். ஆனால் அவரது நேர்மை சந்தேகத்துக்கு உட்பட்டு நெடுநாட்கள் ஆகிறது. இப்போது எளிமை அவர் காட்டும் வேடிக்கை என்றாகிவிட்டது. எளிமை நேர்மையின் வெளிப்பாடு என்ற நம்பிக்கை கண்ணாடி மாளிகையில் காங்கிரசு உடைந்த போதே உடைபட்ட விஷயம் என்பது என் கருத்து.

 9. DEAR JAWHAR VERY RECENTLY I STARTED READING YOUR POSTINGS.ENJOYED MANY OF YOUR MUSINGS. THIS ONE IS SIMPLY SUPERB, AND PROFOUND-A FRIEND IS ASKING,CAN IT BE SAID ABOUTA CEO-IT SHOULD NOT BE TAKEN LITERALLY -MUST LOOK FOR THE ESSENCE.WE HAVE CEOs, POLITICIANS , AND IN EVERY LEVEL,PEOPLE OF SIMPLE LIFE AND CLEAR HEART.-

 10. I like to show you a role model in the industry in Mr.Narayanamurthy INFOSYS.Has he not proved worng many of the so called norms|?.Recently he visited Kuwait , where i live,and spoke so inspiringly and hopefully,Many Indians got very impressed,irrespective of the place from where he
  came .

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s