எளிமையே உன் விலை என்ன?

சமீபத்தில் ஒரு கிரஹப் பிரவேச நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். வந்திருந்த ஆசாமிகளில் ஒருவர் டிவி சைஸில் ஒரு மொபைல் வைத்திருந்தார். சட்டை பேண்ட் பைகளில் அதை வைக்க முடியாமல் ஒரு ஜோல்னாப் பையில் போட்டு தோளில் மாட்டியிருந்தார். இதே ரீதியில் போய்க் கொண்டிருந்தால் மொபைல் ஃபோன்கள் சீக்கிரமே இம்மொபைல் ஃபோன்களாக ஆகி விடும் என்று தோன்றுகிறது.

 ஒரு பொருள் இன்ன சைஸில்தான் இருக்க வேண்டும் என்பது வடிவமைப்பவர்களால் பல்வேறு காரணங்களைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. தேவையான பாகங்களை உள்ளடக்க வேண்டிய அவசியம் அவற்றில் முதலாவது. உபயோகிப்பவரின் சௌகர்யம், உற்பத்திச் செலவு உள்ளிட்ட விஷயங்கள் பிறகு.

 ஆனால் சில சமயம் இந்தக் காரணங்கள் எல்லாவற்றையும் மீறி இல்லாஜிக்கலாக ஒரு சைஸை உற்பத்தியாளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு காரணம் பன்முக உபயோகம். ஒரு மொபைல் இன்றைக்கு ஆடியோ – வீடியோ பிளேயராக, டிவியாக, ரேடியோவாக, ரெக்கார்டராக, கேமிராவாக, விடியோ கேமிராவாக, லேப்டாப்பாக, அலாரம் டைம்பீஸாக, கெடிகாரமாக, ஸ்டாப் வாட்ச்சாக, ரிமோட் கண்ட்ரோலாக ம்ம்ஹூம்.. இது சொல்லி மாளாது; ஃபிரிஜ், வாஷிங் மிஷின், ஏஸி இவைகள் எனக்குத் தெரிந்து இன்னும் மொபைலில் சேர்க்கப்படவில்லை. மற்ற எல்லாமே வந்தாகி விட்டது. சிங்கப்பூரில் ஒருவர் மொபைலில் ஏதோ ஒரு பொத்தானை அழுத்த அது புளிச் என்று கொஞ்சம் செண்ட் துப்பியதாக ஞாபகம்…

 இந்தப் பன்முகங்களில் எதற்குண்டான அளவைத் தேர்ந்தெடுப்பது என்பது குழப்பமாக இருக்கலாம். ஆனால் அதற்கு மிகுதியான காரணமும் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

 மொபைல் ஃபோன்களின் சைஸை ஸ்டாண்டர்டைஸ் செய்து விடுகிறோம் என்று வையுங்கள். நூறு பேர் கூடி இருக்கும் இடத்தில் பியூன் கந்தசாமியும், பொது மேலாளர் ராகவனும் ஒரே ஃபோன்தான் உபயோகிக்கிறார்கள் என்பது மாதிரியான இமேஜ் ராகவன்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்கள் தங்களை வித்யாசமாகக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. துரதிஷ்டவசமாக மொபைல்களும் ஸ்டேட்டஸ் சிம்பல்களாக ஆகிவிட்டன.

 எவையெல்லாம் ஸ்டேட்டஸ் சிம்பல்களாக மாறுகின்றனவோ அவை விலை ஏறி விடுவது நம் தேசிய வழக்கம்.

 சில உதாரணங்களைப் பார்ப்போம்.

 அம்பாஸிட்டர், ஃபியட், ஸ்டாண்டர்ட் கஸல், மாரிஸ் மைனர் இவைகள் மட்டுமே கார்களாக ஒரு காலத்தில் இருந்தன. இம்ப்பாலா, பிளைமௌத், பென்ஸ் மாதிரியான கார்களை உபயோகித்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் பெரிய பணக்கார்களுக்கு ஏற்பட்டது. (கப்பல் மாதிரி கார்ல வந்து இறங்கினான்!) மெல்ல மெல்ல எல்லோரும் பெரிய கார்கள் உபயோகிக்க ஆரம்பிக்க, மறுபடியும் அந்த வேறு படுத்தும் உத்வேகம் எழுந்தது.

 ஃபியட் காரை விட சின்னதாக இருந்த மாருதி கார் சிக்கியது. பெரிய மனிதர்களெல்லாம் மாருதி வாங்கினார்கள். சினிமாவில் பணக்காரத் தகப்பன்கள் மாருதியில் வந்து இறங்கினார்கள். அது ஸ்டேட்டஸ் சிம்பலாயிற்று.

 குறைந்த விலைக் கார் என்று ஆரம்பித்த மாருதி சட்டென்று விலை ஏறியது. அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. உற்பத்தியை அதிகப்படுத்தினார்கள். எல்லோரும் வாங்க ஆரம்பித்தார்கள். மாருதியின் விலையில் இருபதில் ஒரு பங்கு சம்பளம் வாங்குபவர்கள் வரை எல்லாரும் வாங்க ஆரம்பித்தார்கள். மறுபடி அதே வேறுபடுத்திக் காட்டும் உத்வேகம்.

 மறுபடி பெரிய கார்கள் புகழ் பெற ஆரம்பித்தன.

 இப்போது கார் பெரிதாக இருந்தால் மட்டும் போதாது. விலையும் அதிகம் இருக்க வேண்டும் என்கிற நிலைக்கு வந்தாகி விட்டது. ஆடி, பி.எம்.டபிள்யூ, ஸ்கோடா, கலர், கிரஷ், ஜிஞ்சர் பீர் என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள். சில கார்கள் என் அசையும், அசையாத சொத்துக்கள் பிளஸ் பேங்க் பேலன்ஸ் இவைகளையெல்லாம் சேர்த்தாலும் வாங்க முடியாது என்கிற விலை விற்கின்றன.

 ஒரு சிக்ஸ் சிக்மா பிளாக் பெல்ட்டாக இருந்து கொண்டு Non-Value adding காஸ்ட்டுகளை என்னால் ஆதரிக்கவே முடியாது. மூன்றரை லட்சம் விலையுள்ள கார்களிலேயே நமக்குத் தேவையான எல்லா விஷயங்களும் இருக்கின்றன, அதற்கு மிகுதியாக கொஞ்சம் லக்ஸுரிக்களும் இருக்கின்றன.

 காரை விட்டுத் தள்ளுங்கள், அது பெரிய மனிஷ விவகாரம்.

 என் பள்ளிக் காலத்தில் பருத்தி ஆடைகள் சாமானியர்களின் ஆடை. சிந்த்தட்டிக் துணிகள் ஸ்டேட்டஸ் சிம்பலாக இருந்தன. எய்ட்டி-ட்வெண்ட்டி என்று குறிப்பிடப்பட்ட டெரிகாட்டன் சட்டைகள் பி.எம்.டபிள்யூ கனவுகளாக இருந்தன.

 இன்றைக்கு ஒரு காட்டன் சட்டை குறைந்தது ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் மூவாயிரம் வரை விற்கிறது. சிந்தட்டிக் சட்டைகள் முன்னூற்றி ஐம்பது ரூபாய்க்குக் கிடைக்கின்றன.

 காரணம் என்ன?

 ஜபர்தஸ்த் எளிமை காட்ட பணக்காரர்கள் பருத்தி ஆடைகளை அணிய ஆரம்பித்தார்கள். அவை பணக்காரர்களின் ஆடைகளாக ஆகிவிட்டன.

 இதே ஜபர்த்ஸ்த்துக்காக சீக்கிரமே பணக்காரர்கள் தங்கத்திற்கு பதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நகைகளை அணிய ஆரம்பிக்கட்டும், காருக்குப் பதில் சைக்கிளில் போகட்டும்.

 “பளைய தங்கச் சாமானுக்குப் பேரீச்சம் பழ்ழ்ழேய்” என்று கட்டைக் குரலில் கத்தியபடி மாருதி டிஸையரில் வந்து பழைய பாத்திரக்காரர்கள் இறங்குவார்கள் !

Advertisements

24 comments

 1. ஹ ஹா ஹா .. // “பளைய தங்கச் சாமானுக்குப் பேரீச்சம் பழ்ழ்ழேய்” என்று கட்டைக் குரலில் கத்தியபடி மாருதி டிஸையரில் வந்து பழைய பாத்திரக்காரர்கள் இறங்குவார்கள் !//

 2. மகாத்மா காந்தியை எளிமையானவராக மெயின்டெயின் பண்ண அரசாங்கம் நிறைய செலவழிக்கவேண்டியுள்ளது என்று ஜவாஹர்லால் நேரு ஒரு பேட்டியில் எப்பொழுதோ கூறியது ஞாபகம் வருகின்றது. (காந்தி குடித்த ஆட்டுப் பால் தருகின்ற ஆடு – அவர் எங்கு சென்றாலும் அவருடன் செல்லவேண்டியிருந்தது என்று கேள்வி!)

 3. அருமையான பதிவு, ஆக பொருளின் மதிப்பை மக்கள் நுகர்வதில் தீர்மானிக்கப்படுகின்றது. செய்கூலி, மூலப் பொருள் எல்லாம் சும்மா .. இந்த தங்கத்தின் விலை மட்டும் இறங்கவே மாட்டேங்குது…!

 4. //சிங்கப்பூரில் ஒருவர் மொபைலில் ஏதோ ஒரு பொத்தானை அழுத்த அது புளிச் என்று கொஞ்சம் செண்ட் துப்பியதாக ஞாபகம்…// அட…இது புதுசா இருக்கே..?! 🙂 அந்த மொபைல்ல தூக்கறோம்.

 5. //இதே ரீதியில் போய்க் கொண்டிருந்தால் மொபைல் ஃபோன்கள் சீக்கிரமே இம்மொபைல் ஃபோன்களாக ஆகி விடும் என்று தோன்றுகிறது.//இம்மொபைல் ஆகிவிடும் இம்மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு……….. ரொம்பக் கஷ்டம்

  // ஒரு சிக்ஸ் சிக்மா பிளாக் பெல்ட்டாக இருந்து கொண்டு Non-Value adding காஸ்ட்டுகளை என்னால் ஆதரிக்கவே முடியாது.// போர்டு மீட்டிங்கே ஆனாலும் பெருமைக்கு எருமை பேய்ப்பதை எதிர்த்து QC காரர்கள் ஓட்டு மட்டும்தான் விழும். ப்ளாக் பெல்ட் இருக்கிறதென்று சண்டையா போடமுடியும்!!

  //பளைய தங்கச் சாமானுக்குப் பேரீச்சம் பழ்ழ்ழேய்// சூப்பர்…..

  //மகாத்மா காந்தியை எளிமையானவராக மெயின்டெயின் பண்ண அரசாங்கம் நிறைய செலவழிக்கவேண்டியுள்ளது என்று ஜவாஹர்லால் நேரு ஒரு பேட்டியில் எப்பொழுதோ கூறியது ஞாபகம் வருகின்றது.// பண்டிதர் அரசு அமைத்த போது காந்தியார் காலமாகிவிட்டாரே??

   1. சார்,
    வாட்? மகாத்மா காந்தி இறந்துட்டாரா?

    Btw, மேலே உள்ள பின்னூட்டத்தில் தகவல் பிழை உள்ளது, மகாத்மா அவர்கள் இறந்தது 1948 ல். மேலும், அவரது எளிமையின் செலவு பற்றி பகடி செய்தவர் கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள் – அதுவும் சுதந்திரத்திற்கு முன்னரே என்றும் படித்த நினைவு.

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

 6. //ஸ்டேட்டஸ் சிம்பல்களாக மாறுகின்றனவோ ..//
  //சைஸை ஸ்டாண்டர்டைஸ் செய்து //

  அதுக்காகவே இது; இதுக்காகவே அது கதை தான். ஸ்டேட்டஸ் சிம்பல்களுக்காகவே பல விஷயங்களை ஸ்டாண்டர்டைஸ் செய்ய முடியவில்லை..

  மொபைலைப் பொருத்த மட்டில் சிறிசாகப் போகக் போக விலை ஜாஸ்தி, உள்ளீடு விஷயங்களும் ஜாஸ்தி என்கிற நிலை வர வேண்டும்.

 7. Non-Value adding காஸ்ட்டுகளை என்னால் ஆதரிக்கவே முடியாது….

  Recently I bought IPHONE 4S with IOS6..gtalk, google map, google latitude, itunes etc etc are not working. Basically I am isolated from rest all other platform mobiles.

  Battery drains within few hours..to increase the batter life…I changed network mode form 3G to 2G…I disabled location based services, reduced the screen brightness…avoided using Bluetooth hands-free…turned off push services..etc etc..

  Now my mobile looks like iphone and performs like NOKIA 1100

  எளிமையே உன் விலை என்ன?… AED 2399.00 or INR 36000

  எங்களுக்கெல்லாம் சிக்ஸ் சிக்மா ப்ளாக் பெல்ட் சரிவராது சார்….karate ப்ளாக் பெல்ட் மாஸ்டர் வந்து நம்ப கேப்டன் மாத்ரி உதைச்சாதான் சரிவரும்……

 8. //சுதந்திரம் கிடைத்தது 1947; காந்தி இறந்தது 1950 என்பதை நினைவில் கொள்ளவும்.//
  சுதந்திரம் கிடைத்து 5 மாதங்களில் காந்தியார் காலம் ஆகிவிட்டது. http://en.wikipedia.org/wiki/Assassination_of_Mohandas_Karamchand_Gandhi
  1948 ஜனவரி 30 அன்று இறந்தார்.
  இந்தக் குறுகிய காலத்திலேயே காந்தியார் செலவுமிக்க எளியவர் என்று நேரு எப்படித் தெளிந்தார் என்பதே என் ஐயம்.
  Yep, Nehru was PM from 15-Aug-1947 to 27-May-1964.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s