கிளி ஜோஸியமும் சில சாமியார்களும்

சமீபத்தில் ஒரு பெண் துறவியைச் சந்திக்க நேர்ந்தது.

ஆசிரமம் படாடோபமே இல்லாமல் நல்ல நிசப்தமான சூழலில் எளிமையாக இருக்கிறது.. சில உம்மாச்சி சிலைகள், அழகான நந்தவனம், கூரைவேய்ந்த ஒரு தியானக் கூடம். கூட்டமும் இல்லை. ஓரிருவர்தான் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். துறவியின் குடிலும் அப்படியே. ரொம்ப லோ-மிடில் கிளாஸ் ரகம். குடிலுக்கு முன்னர் ஒரு கூரைக் கொட்டகை.

அவருக்கு வயது ஐம்பத்திச் சில்லரை இருக்கும். சின்ன பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். மார்பிலிருந்து முழங்கால் வரை குளிக்கப் போகும் பெண்கள் போல ஒரு பழைய துணியை சுற்றியிருந்தார். தலையில் ஜடாமுடி. அந்த ஜடாமுடிக்குச் சற்றும் பொருந்தாத ஒரு அமைதியான முகம்.

ரொம்பவும் டவுன் டு எர்த் பேசுகிறார். அழுத்தமான, ஆழ்ந்த குரல். நூற்றி எண்பது டெஸிபல்! சவுண்ட் சர்வீஸ் உதவியின்றி தெரு முழுக்கக் கேட்கும். எல்லாரையுமே ஒருமையில்தான் விளிக்கிறார். என்னைப் படற்கையில் குறிப்பிடும் போது ’அவன்’ என்று குறிப்பிட்டார். பெண்களை சுவாதீனமாக ’என்னடி..’ என்று அட்ரஸ் செய்கிறார். அதெல்லாம் உறுத்தலாக இல்லை. ரொம்பப் பழகின மனிதர் உரிமையோடு பேசுகிற த்வனிதான் தெரிந்தது. கொஞ்சம் மாணிக்கவாசகர், கொஞ்சம் அப்பர், கொஞ்சம் மங்கையாழ்வார், கொஞ்சம் பாரதியார் பேசுகிறார். சில செய்யுள்களை அடிபிறழாமல் சொல்லி கருத்து சொல்கிறார். மனதில் நினைக்கிற சில விஷயங்களுக்கு அவைகளை நாம் வெளியில் சொல்லாமலே பதில் சொன்னபோது சற்று வியப்பு உண்டாயிற்று.

உதாரணம்,

துறவி : கடவுளை விட குரு சக்தி வாய்ந்தவர். கடவுள் தருகிறவற்றை அவரால் நிறுத்தி வைக்க முடியும். கடவுள் தர மறுப்பதை அவரால் பெற்றுத் தர முடியும். எல்லோரும் வாழ்க்கையில் ஒரு குருவைத் தேடி அடைய வேண்டும்.

நான் : (மனதுக்குள்) தேடிகிட்டுத்தான் இருக்கேன். யாரும் கிடைக்கல்லையே..

துறவி : தேடறதுன்னா சட்டைப் பையிலிருந்து விழுந்த சில்லரையைத் தேடுவது மாதிரி இல்லை. ஆத்மார்த்தமா, ஐம்புலன்களும் ஒன்றித் தேடணும். அழுது புரண்டு நீ எங்கே இருக்கே எப்போ என் கண்ல படுவேன்னு தேடணும்..

நான் : (மனதுக்குள்) தேடி யாராவது கிடைச்சிட்டாலும்? சாமியார்ன்னு சொல்லிக்கிற ஒரு பயலும் சரியில்லை.

துறவி : இருக்கிற எல்லாரையும் இவன் சரியில்லை, அவன் சரியில்லைன்னு ஒதுக்கிடறோம். பேப்பர்ல வர்ர விஷயங்களின் அடிப்படையில் அவங்க கேரக்டரை முடிவு பண்றோம். தப்பு பண்றவங்க இருக்காங்க, இல்லைன்னு சொல்லல்லை. பண்ணாதவங்களும் இருக்காங்க. பொறுமையா, முனைப்பா தேடினா கிடைப்பாங்க

நான் : (மனதுக்குள்) சேன்ஸே இல்லை. உயிரோட இருக்கிற எவனும் லாயக்கில்லை. சிலர் முட்டாள்கள். சிலர் வியாபாரிகள். சிலர் பொறுக்கித் தனத்தை மறைக்க மாறுவேடத்தில் இருக்கிறவர்கள்.

துறவி : உயர்ந்த மனிதர் ஒருத்தர் கூடவா கிடைக்கல்லை?

நான் : (மனதுக்குள்) விவேகானந்தர்தான் அவ்வளவு உயர்ந்தவர். அவர்தான் செத்துப் போய்ட்டாரே?

துறவி : குரு உயிரோட இருக்கிறவராத்தான் இருக்கணும்ன்னு யார் சொன்னது? என் குரு சதாசிவ பிரம்மம்தானே?

இது போல இன்னும் சில மனக் குரல்களுக்கும் பதில் கிடைத்தது. அந்த நிமிஷம் கொஞ்சம் சிலிர்த்துத்தான் போனேன். ஆனால் எங்களை அடுத்து அவரைச் சந்தித்த குரூப்பிடம் பேசியதைக் கவனித்த போது அந்த சிலிர்ப்பு கொஞ்சம் ஆட்டம் கண்டது. இடம் நிசப்தமாக இருந்ததால் தூரத்திலிருந்தே கேட்க முடிந்தது.

“என்னடா பிரச்சினை உனக்கு?”

“அம்மாவும் அப்பாவும் எப்பப் பாத்தாலும் சண்டை போட்டுகிட்டே இருக்காங்க”

“அதொண்ணும் புதிசில்லையே? அதைப் பத்தி உனக்கென்ன? அவங்க சண்டை போட்டுப்பாங்க, அவங்களே கூடிப்பாங்க”

“இல்லை.. ஒரு மாதிரி வீடே நிம்மதி இல்லாம இருக்கில்ல… அதனால….”

“உன் பிரச்சினை அதில்லை. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்ங்கிற எண்ணமே அவங்களுக்கு வரல்லை”

“………………………………………………..”

“அவங்க பாத்தாலும் பாக்கல்லைன்னாலும் உனக்குன்னு பிறந்தவளை நீ சந்திக்கத்தான் போறே..”

தொடர்ந்து தடாலென்று கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணும் சப்தம்.

வரும்போது ’வேணும்ன்னா வாங்கிக்க’ என்று சில குறுந்தகடுகளை விற்றார்கள். மாதாஜி படம் பிரிண்ட் செய்த பொட்டலத்தில் விபூதி குங்குமம் தந்தார்கள். ’நவராத்திரி விழா விமரிசையாக நடக்கும்; வா’ என்று அழைத்தார்கள்.

நான் முதன்முதலில் மெயிண்டனன்ஸ் வேலையில் சேர்ந்த போது ஒரு எந்திரம் வேலை செய்யவில்லை என்கிற போது பெரிய்ய்ய புதிராக இருக்கும். ஆரம்பத்தில் பிரச்சினையைக் கண்டுபிடிக்க சில மணிநேரங்கள் கூட ஆகியிருக்கிறது. ஆனால் ஒரு வருடமோ, இரண்டு வருடங்களோ ஆன பிறகு தொட்டுப் பார்த்து, நுகர்ந்து பார்த்து, சில சமயம் வெறுமனே பார்த்தே பிரச்சினை இன்னதென்று கண்டுபிடித்து விடுகிற அளவுக்கு ஆனேன். சில சமயம் எந்திரத்தின் அருகில் போகாமல் கடந்த சில மணி நேரங்களில் என்ன ஆயிற்று என்பதை லாக் புக்கில் படித்தோ அல்லது ஆப்பரேட்டரிடம் பேசியோ கூட பிரச்சினை இன்னதென்று கண்டுபிடித்து விட முடியும்.

சம்பந்தப்பட்ட ஆப்பரேட்டர்கள் வியந்து போவார்கள்.

விஷயம் இதுதான். ஒரு குறிப்பிட்ட எந்திரத்தில் எழக்கூடிய பிரச்சினைகள் ஒரு சைக்கிள் கம்ப்ளீட் ஆக குறிப்பிட்ட காலம் ஆகும். சின்ன எந்திரம் என்றால் சில வாரங்கள், கொஞ்சம் பெரிதென்றால் மாதங்கள், இன்னும் பெரிதென்றால் வருடங்கள்.

மனிதர்களும் அப்படித்தான்.

மக்களின் பிரச்சினைகள் ஒரு சிறிய பட்டியலில் அடங்கிவிடக் கூடியவை. கல்யாணம் ஆகவில்லை. பொண்டாட்டி அல்லது புருஷன் சரியில்லை. குழந்தை இல்லை. வேலை கிடைக்கவில்லை. வீடு வாங்கவில்லை…. இத்யாதி. வயது, கல்வித் தகுதி, குடும்பச் சூழல், முகபாவம் இவைகளை வைத்து தினசரி முப்பது நாற்பது பேர்களைச் சந்திக்கும் ஒருவர் என்ன பிரச்சினை என்பதை ஊகிப்பது பெரிய விஷயமல்ல என்று தோன்றுகிறது. கொஞ்சம் பிராக்டிக்கல் சைக்காலஜி தெரிந்திருக்க வேண்டும்.

கிளி ஜோஸியக்காரர்கள் நாற்பது வயதைக் கடந்த சில ஆசாமிகளுக்கு ‘அவ எண்ணம் சரியில்ல.. கொஞ்சம் விலகியே இரு. இல்லைன்னா உன் பொண்டாட்டிக்கு சக்களத்தியா வந்துடுவா’ என்று சொல்லி நூறு ரூபாய் லக்கி பிரைஸ் அடிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

நான் சந்தித்த மாதாஜி ஒரு உன்னதமான ஆத்மாவாகக் கூட இருக்கலாம். என் ஆராய்ச்சிப் புத்தி என்னை இப்படியெல்லாம் நினைக்க வைக்கிறது.

உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே?

19 comments

  1. Not sure if you will agree with my views, anyway here it goes: I had a chance to visit Putabarthi in Nov 1983 on the very day Shri Sai Baba’s 58th birthday anniversary celebrations were going on; I was 19 then; two people whom I have gone with were ardent devotees of Baba and I couldn’t resist my utter dismay with the kind of events and celebrations going on there for and in the name of Baba; Exactly 20 years later, I had a chance to visit Baba’s Mandir in Raja Annamalaipuram and there was a live relay of some event from Puttabarthi then; Sitting over 30 minutes approx, I couldn’t probably explain what’s going on in me………emotionally per se (I shall not call it a spiritual elation or something like that). Perhaps, I started accepting facts as facts when it comes to spirituality after that…………………….!! Perhaps I would say age and gaining a kind of maturity over the years induces a level of confidence (or no confidence either) in such aspects of life.!!

    Once having attended a discourse for 10 minutes on Bagwan Kalki, I could not resist questing certain things to the Podium; Despite maintaining a decent behavior, I was forced to quit that place………….no harms or offenses meant to anyone!!

    I think our own inner sense and conscience and rational thinking largely guides us through. The more we succumb to emotional pressure and anxiety on any event displays the courage or lack of it!!

    My 2 cents worth of views though!!

  2. சார்.. எனக்கு நிறைய நிறைய இருக்கிறது. ஒரு பெரிய தொடரே எழுதலாம் என்று எண்ணும் அளவிற்கு. சாதாரண கிராமத்து கோடங்கிகள், குறி சொல்லிகள்,குடுகுடுப்பாண்டிகள், சாமியாடிகளிலிருந்து உயர்ந்த பீட ஆசாமிகள் வரை சந்தித்திருக்கிறேன். நிறைய அதிசய விஷயங்கள் சொல்லியிருக்கிறார்கள். இவர்களில் உளவியல் அறிந்த டுபாக்கூர்களும் இருக்கிறார்கள்.

    என்னைப் பொருத்தவரை அதிகம் பேசாதவரே அல்லது தேவையில்லாமல் பேசாதவரே சிறந்தவர். அதற்காக பேசுபவர்களையும் ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால் மனிதனுக்கு அப்படி ஒரு பற்று கோல் தேவையாக இருக்கிறது.

  3. சார்,
    எனக்கு என்னவோ இப்ப கொஞ்ச நாளா இந்த 6 சிக்மா டீம (BB, MBB) பார்த்தாலே போஸ்ட் மார்ட்டம் பண்ற டாக்டர பாக்காறாப்போல இருக்கு. காரணம் தான் சொல்லாமலேயே தெரிஞ்சிருக்குமே இந்நேரம்.

    கிளிஜோசியக்காரருக்கு கட்டம் சரியில்லைன்னு நினைக்கிறேன்.

    சரி போகட்டும், நாடி வருவோர்க்கு நாடி ஜோதிடம் பார்க்கப்படும்னு எதாவது போர்டு போடற ஐடியால இருக்கீங்களா.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

  4. Happiness Unlimited, Soul Connections, Going Beyond, Healer Within…. these are not the Titles of any Hollywood Movies. But the titles of TV programmes on Spirituality offered by Brahma Kumaris under AWAKENING WITH BRAHMAKUMARIS. These are in the form of discussion between
    ex.Bollywood Hero Suresh Oberoi and Sister Shivani of Brahmakumaris who herself is an Electronic Engineer Gold Medalist. The explanation given by Brahmakumaris on spirituality is very clear, logical, easy to understand. One has to experience and see. Honestly, it is superb….! Headlines Today, Aastha, Sanskar are some channels telecasting this programme on daily basis.

  5. கல்வித் தகுதி, குடும்பச் சூழல், முகபாவம் இவைகளை வைத்து தினசரி முப்பது நாற்பது பேர்களைச் சந்திக்கும் ஒருவர் என்ன பிரச்சினை என்பதை ஊகிப்பது பெரிய விஷயமல்ல என்று தோன்றுகிறது. கொஞ்சம் பிராக்டிக்கல் சைக்காலஜி தெரிந்திருக்க வேண்டும்.

    என் எண்ணமும் இதுதான் ..

  6. உங்களோட மற்ற பதிவுகளை (சுஜாதா) பார்த்துட்டு, நீங்களும் இதெல்லாம் கண்ணை மூடிட்டு நம்பறவர்னு தப்பா நினைச்சுட்டேன்.. நல்லா அனலைஸ் பண்ணி இருக்கீங்க…

  7. அன்புடையீர் தங்கள் மனதில் ஏற்பட்ட கேள்விகளுக்கு பெண் துறவி பதில் சொன்னார்களே அதுதான் சாஸ்வதம்.
    தங்களது மன ஓட்டங்களும் அந்த துறவியின் மன ஓட்டமும் ஒரே அலைவரிசையில் சில மணித்துளிகள் ஒன்றாக இருந்தததால் அவா்களால் பதில் சொல்ல முடிந்தது.
    இதுதான் மனது ஒன்றிப்போவது என்பது.
    எதிலும் ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும்.
    வேலைக்கு போகிறோம்.மாத முடிவில் சம்பளம் தருவார்கள் என்ற நம்பிக்கைதானே.
    அம்மா எனது தந்தைக்குத்தான் பெற்றார் என்பதும் நம்பிக்கைதானே.
    வீட்டை விட்டு வெளியே வருகிறோம்.மறுபடியும் வீட்டுக்குப் போவோம் என்ற நம்பிக்கைதானே.
    வாழ்க வளமுடன்.
    கொச்சின் தேவதாஸ்

  8. அருமையான, நன்கு விவாதிக்கப்பட வேண்டிய பதிவு.
    உங்களுக்கு பெரிய கட்டுரையாக தனி மெயிலில் அனுப்புகிறேன், மின்சாரம் இருக்கும் போது.
    இந்த அற்புதமான பதிவை எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். எனது நண்பர்களும் நன்கு விவாதிக்க கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி திரு Jawahar சார்.

  9. விவாதிக்க கூடிய பொருளா இது? உணர வேண்டிய விஷயத்தை பேசுகிறோம் .கேட்டால் பேசுவதால் புரிந்து கொள்ள இயலும் என சொல்கிறோம் .தண்ணீர் என்பதை அறிவின் (அறிவியல்) ரீதீயாக h2o. என படித்து மூலக்கூறுகளை புரிந்து கொண்டால் தாகம் அடங்கிடுமா என்ன !
    எத்தனையோ மகான்கள் எண்ணற்ற பாதைகள் ஆனால் இந்தப் பாதையை நான் பின்பற்ற இயலாது என்றுணர்வதுக்கு கூட சில காலமும் சில தூரமும் அதில் பயணிக்க வேண்டும்

    1. வாங்குகிறவர்கள் மட்டுமே கடைக்குப் போவதில்லை. விற்கிறவர்களும் போவார்கள். விண்டோ ஷாப்பிங் செய்பவர்களும் போவார்கள்! 🙂

  10. எனக்கு நேர்ந்ததுபோல் யாருக்கும் நேர்ந்திருக்குமா என்பது சந்தேகமே , ***”தோள்பட்டை வலி”** காரணமாக அவதிப்பட்ட நான் (ஜிமிர்க்கு சென்றதால் வந்தது ) எனக்கு தெரிந்த அணைத்து எலும்பு முறிவு மருத்துவர்களையும் , வைத்தியர்களையும் சந்தித்தேன், தீர்வு கிடைக்கவில்லை ,

    நண்பன் ஒருவன் கூறினான் , முகம் பார்த்து குறி சொல்லும் பெண் ஒருவர் இருக்கிறார் என்று , எனக்கு இதிலெல்லாம் சிறிதளவும் நம்பிக்கை கிடையாது என்று அவனுக்கும் தெரியும் என்னை கட்டாயபடுத்தி அழைத்துக்கொண்டு சென்றான் , போகிற வழிகளிலெல்லாம் அவர்களை பற்றி பெருமையாக கூறிக்கொண்டே வந்தான் ,.

    முகவரி தெரியாமல் மிகுந்த சிரமத்தில் அந்த வீட்டை அடைந்தோம்.. ஓலை வீடு திண்ணையில் கொஞ்சம் திருநீர் கொஞ்சம் குங்குமம் .. அந்த வீட்டில் யாருமில்லை, கும்மிருட்டு ஒரு பேய் வீட்டிற்க்குள் புகுந்த அன்பவம், பக்கத்தில் வீடுகளில்லை கொஞ்சம் தூரத்தில் ஒரு பெண் தண்ணீர் குடத்துடன் , ,,..

    அருகில் சென்று விசாரித்தோம்,. அவர் கூறியதை கெட்டி சிரிப்பதா அழுவாத என்று தெரிய வில்லை ., நானும் நண்பனும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்தோம் .,. அவர் என்ன சொன்னார் தெரியுமா ? தோள்பட்டை வலி காரணமாக அவர் மருத்துவரை பார்க்க சென்றிருக்கிறார் …//

அஞா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி