பகுத்தறிவும் வாலில்லாக் குரங்குகளும்

பகுத்தறிவு என்பது ஒரு extra-human நிலையோ, superhuman நிலையோ அல்ல. It is quite human.

வாலில்லாக் குரங்குகளுக்கு ஏறக்குறைய மனிதர்கள் அளவு அறிவும் உணர்வுகளும் இருப்பதாகச் சொல்வார்கள். பகுத்தறிவைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் வால் முளைப்பது நின்று போனது என்று சொல்லலாம். இந்த நிலையின் அடுத்த பரிமாணம்தான் மனிதன் என்பதும் ஒரு பொதுவான நம்பிக்கை. Sensory organ கள் தருகிற இன்புட்களை எந்த பிராஸஸிங்கும் செய்யாமல் அப்படியே எடுத்துக் கொள்வது ஐந்தறிவு நிலை. அவைகளைப் பிராஸஸ் செய்து ஒரு அவுட்புட் டிர்ரைவ் செய்வது மனிதநிலை. இந்த பிராஸஸிங்தான் பகுத்தறிவு செய்கிற வேலை. ஆறாவது அறிவு.

இதற்கு மேற்பட்ட ஒருநிலை என்று ஒன்று இல்லாவிட்டால் கொஞ்ச காலத்தில் பழையபடி முந்தைய பரிமாணமான வாலில்லாக் குரங்கு நிலைக்குப் போய் விடுகிற அபாயம் உண்டு.(Darvin!) அதே சமயம் இந்த மேற்பட்ட நிலை மெல்ல வளர்ந்து கொண்டு போனால் மனிதனுக்கு அடுத்த பரிமாணத்தை அடையும் சாத்தியமும் இருக்கிறது.

அந்த மேற்பட்ட நிலை எல்லோருக்குமே கொஞ்சம் இருக்கிறது. Instinct என்கிற இன்புட்தான் அந்த அடுத்த நிலை. Instinct என்பது எந்த sensory organ லிருந்தும் வருவதல்ல. Decision making பற்றிச் சொல்லும் போது இந்த instinct க்கு ஒரு முக்கிய இடம் தருகிறார்கள்.

ஒரு முடிவை எடுப்பதற்கான எல்லா இன்புட்களும் இருந்துவிட்டால், வாலில்லாக் குரங்கே அந்த முடிவை எடுத்துவிட முடியும். சில இன்புட்கள் இல்லாதிருக்கும் போதுதான் மனிதன் தேவை. அப்போது கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும், கொஞ்சம் instinct ஐப் பயன்படுத்த வேண்டும். எந்த விஷயத்தில் எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம் என்று தீர்மானிக்க இந்த instinct பயன்படும். (குறிப்பு : இந்த instinct ஃபேக்டர் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகம்!)

இந்த instinct அறிவு, அனுபவம் இவற்றாலும் வரலாம், அல்லது இது தவறாகப் போகாது என்கிற நம்பிக்கையிலும் வரலாம். அறிவு வளர்ச்சி என்பது ஞான யோகம். அனுபவம் என்பது கர்ம யோகம். நம்பிக்கை என்பது சரணாகதி, அதாவது பக்தி யோகம்.

அறிவை வளர்த்துக் கொள்ள நிறையக் கற்க வேண்டும் அதற்குக் கால அவகாசம் நிறைய அவசியம். அனுபவம் என்பதும் காலத்தின் அளவைத்தான் குறிக்கும். சரணாகதி உடம்பில் வலிமை இருக்கும் வரை வராது. அதனால்தான் பொதுவாக பக்தி யோகம் முதுமையில் வருகிறது. (அப்போதும் இல்லாமலும் இருப்பதுண்டு சிலருக்கு!)

எனக்கு instinct வேண்டும்; ஆனால் காத்திருக்க முடியாது, என்கிறவர்களுக்கு ஏதாவது இருக்கிறதா?

ஆம்.

அது என்ன?

தெரிந்து கொள்ள எத்தனை பேர் ஆவலாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகே இதற்கு பதில் சொல்லப் போகிறேன்.

Advertisements

16 comments

 1. அன்பின் ஜவஹர் சார்,
  காத்திருக்கவே முடியாது என்பதல்ல… எதற்கும் செயலாக்க காலம் ஒன்று இருப்பதால், தேவைப்படும் காலம் வரைக் காத்திருக்கிறேன். ஆனால், நிச்சியம் தெரிந்தாக வேண்டும்.

 2. // எனக்கு instinct வேண்டும்; ஆனால் காத்திருக்க முடியாது, என்கிறவர்களுக்கு ஏதாவது இருக்கிறதா?
  ஆம்.
  அது என்ன? //

  எனக்கு தோன்றியது : அவுட் சோர்சிங்!! i.e. அவுட் சோர்சிங் டு சாமியார், கிளிஜோசியர், குடுகுடுப்பையார், (பகுத்தறிவு / பகுத்தறிவில்லாத)கட்சித் தலைவர் and லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ரூபாய்க்கு பத்து பைசா (மாச) வட்டி தர்ற ஃபைனான்ஸ் கம்பெனி.

 3. சின்ன வயசுல ஒரு சமயம் நண்பனோட ஊருக்கு போனப்போ அந்த கிராமத்து பஸ் ஸ்டாண்டுல ஒரு குடுகுடுப்பாண்டி நின்னுக்கிட்டிருந்தான். என் கிட்ட வந்த அவன் ஒரு கைல வேல்னும் மறுகைல மயில்னும் நினைச்சுக்கச் சொன்னான். முதல்ல வலது கை வேல், இடது கை மயில்னு நினைச்சவன், பின்னாடி வேணும்னே மாத்தி நினைச்சேன்.

  நான் முதல்ல நினைச்சதைச் சொன்ன அவன், பின்னாடி மாத்தி நினைச்சதையும் சொன்னான். ஏதாவது சாப்பிடக் குடுன்னு கேட்டான். பைல இருந்த சில்லறையக் கொடுத்தேன். ஆனா எனக்கு ஆச்சரியம் தாங்கலை. எப்படி அவன் சரியா சொன்னான்னு. அவன் கிட்டயே கேட்டேன். ‘எல்லாம் ஜக்கம்மா சொல்றா… எல்லாம் ஜக்கம்மா சொல்றா…’ அப்படின்னு சொன்னவன், என்னைப் பத்தி, என் குடும்பத்தைப் பத்தியும் கொஞ்சம் சொல்லிட்டு சிரிச்சிக்கிட்டே போயிட்டான்.

  இன்னைக்கு mind reading, thought readingனு எல்லாம் சொல்றோம். இதை அன்னைக்கே அவன் செஞ்சு காண்பிச்சான். எப்படி? அவன் எழுதப் படிக்கத் தெரியாதவங்கறது நிச்சயம்..

  அந்தக் கூட்டத்துல என்னை அவன் ஏன் செலக்ட் பண்ணினா அதுவும் தெரியலை..

  am waiting sir

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s