விஸ்வரூபம் எடுக்கிறதா பிரச்சினை?

KAMALS~1

விஸ்வரூபம் படப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்கிற கவலை உண்டாகிறது. எதிர்க்கிறவர்களின் பிரச்சினையும் கவலையும் எனக்குப் புரியவில்லை. புதிய டிரெண்டுகளை உருவாக்குகிறவர்கள் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருப்பது புரிகிறது. கமலஹாசனின் முயற்சியால் யாருக்கும் நஷ்டம் இருக்காது என்பதே என் நம்பிக்கை. எதிர்க்கிறவர்கள் வெறும் அச்சத்தால்தான் எதிர்க்கிறார்கள் என்பது என் துணிவு. பிரச்சினைகளைச் சந்திக்கும் துணிவை கமலஹாசனுக்குக் கடவுள் அருளட்டும். அவருக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுளுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது (நன்றி : இசைஞானி)

****************************************************************************

பெண்கள் கிளர்ச்சியூட்டும் விதத்தில் ஆடைகள் அணியக் கூடாது என்று சொன்னால் பல பெண்களுக்குப் பிடிக்கவில்லை. சம உரிமை, சுதந்திரம், ஆணாதிக்கம், கன்ஸர்வேட்டிவ் என்று ஏதேதோ சொல்லி எதிர்க்கிறார்கள். தன்னைக் காத்துக் கொள்ளும் திறன் இருக்கும் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம். ஆனால் எல்லாப் பெண்களுக்குமே அந்தத் திறனும், வலிமையும் இருக்கிறதா? இல்லை என்றால் பாதுகாப்பாக இருப்பதுதானே நல்லது?

****************************************************************************

MSG

சமீபத்தில் வயலின் மேதை எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் மறைந்து விட்டார். ஹிந்துஸ்தானியும், கர்நாடக இசையும் கலந்த ஒரு இனிய மயக்கம் அவரது இசை. பரூர் ஸ்டைல் என்று சொல்லப்படும் அபூர்வமான சுவரப் பிரயோக ஸ்டைல் அவருடையது. ஒரு தாளத்துக்கு மூன்று சுரங்களாக இறங்கு வரிசையிலும் ஏறு வரிசையிலும் துரித காலத்தில் அவர் வாசிப்பது யுனீக் ஸ்டைல். ஒரு தரம் பெங்களூர் போகும் போது ரயிலில் முதல் வகுப்பு கூபேயில் அவருடன் அரட்டை அடித்துக் கொண்டு போனது மறக்க முடியாத நிகழ்ச்சி. முக்கால் வாசி நேரம் அவர் என்னைப் பேட்டி எடுப்பது போலப் பேசிக் கொண்டு வந்தது சுவாரசியம். அது குறித்து ஒரு இடுகை தனியாகப் போட வேண்டும்.

****************************************************************************

இந்த முறை புத்தகச் சந்தை மௌண்ட் ரோட் ஒய்.எம்.ஸி.ஏ மைதானத்தில் நடக்கிறது. தேதியும் 11 லிருந்து 23 வரை என்று மாற்றப்பட்டிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஸ்வராஜ் புத்தகத்தைத் தமிழில் தன்னாட்சி என்ற பெயரில் என்னை எழுதச் சொல்லி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதை எழுதி முடிக்கும் போது நிறைவாக உணர்ந்தேன். படிக்கிறவர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். எச்சரிக்கை : அது குறித்த தனிப் பதிவு விரைவில் வருகிறது!

******************************************************************************

ஆண்கள் குறித்த பெண்களின் மனப்பாங்கு குறித்து ஒரு வெண்பா முயன்றேன். அதற்கு உரை எழுத உரையாசிரியர்கள் வரவேற்கப்படுகிறார்கள் :

உனக்குப் பண்பே கிடையாது பாதகன்
கணக்குப் பண்ணும் காமுகன் – நான்
எத்தனை மோசமாய் உடை யணிந்தாலும்
சித்தனாய் ஞானியாய் நீயிரு.

Advertisements

9 comments

 1. //உனக்குப் பண்பே கிடையாது பாதகன்
  கணக்குப் பண்ணும் காமுகன் – நான்
  எத்தனை மோசமாய் உடை யணிந்தாலும்
  சித்தனாய் ஞானியாய் நீயிரு.//

  புதுக்கவிதையாகவும் நன்று!

  உனக்குப் பண்பே கிடையாது
  பாதகன் நீ
  கணக்குப் பண்ணும் காமுகன் நீ
  நான் எத்தனை மோசமாய்
  உடை யணிந்தாலும்
  சித்தனாய்
  ஞானியாய்
  நீ இரு!

 2. நீங்க தான் எழுதி இருந்தீங்க. ஜப்பான் பெண்களின் உடை பற்றி.
  அந்த ஊர்ல குற்றங்களின் விகிதம் ரொம்ப கம்மின்னு கேள்விப் பட்டேன்.

  சும்மா சொல்லனும்ன்னு தோணிச்சு…

  மத்தபடி பதிவு சூப்பர்..

 3. 5 துளிகளும் அமுதத்துளிகள்!
  //எச்சரிக்கை : அது குறித்த தனிப் பதிவு விரைவில் வருகிறது! // இந்த நகைச்சுவை உணர்வுதான் உங்களிடம் எனக்கு ரொம்பப் பிடித்தது!

 4. //பெண்கள் கிளர்ச்சியூட்டும் விதத்தில் ஆடைகள் அணியக் கூடாது //
  ஆடைகள் அணிவதும் அணியாததும் எங்கள் பிறப்புரிமை. நாங்கள் பிறந்த மேனிக்கே வருவோம். நீங்கள் யார் அதைக் கேட்க?

 5. ஆனால் தற்போதைய தகவல்கள்படி கமல் இந்த மிரட்டல்களுக்கு பயந்து விட்டார் போல் தான் தெரிகிறது. NO Pre-DTH release, as of now…

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s