36’வது புத்தகச் சந்தை-என் புதிய நூல்கள்

நேற்று புத்தகச் சந்தையில் முதல் ரவுண்ட் அடித்தேன்.

கார்களை உள்ளே அனுப்பும் கேட் வழியாக நுழைந்தால்(மூன்றாவது) விஜயவாடாவுக்கு சற்று முன்னர் நுழைவாயில் வருகிறது. திரும்பி வரும் போது வழி தெரியாமல் திண்டாடித் தெருப் பொறுக்காமல் வர முடியாது.

வழக்கப்படி முழுசும் முடிக்க முடியவில்லை.

ஜனவரியிலேயே உள்ளே ரொம்ப வெப்பமாக இருக்கிறது. ஆதாரம் சுஸ்த் ஆகி உட்கார்ந்திருந்த எழுத்தாளர் பாரா. (அவருடைய எடை குறித்து நான் சொல்ல விரும்பியதை அவரே writerpara.com இல் எழுதியிருக்கிறார்) சில தின்பண்டக் கடைகளும், விளையாட்டு சாமான் கடைகளும் மெயின் ஸ்டால்களாகவே வந்திருக்கின்றன. விரைவில் மிளகாய் பஜ்ஜி, டில்லி அப்பளக் கடைகளை எதிர்பார்க்கலாம். அப்புறம் ஜெயண்ட் வீல் மட்டுமே மீதமிருக்கும்.

பார்த்த வரை வாங்கத் தூண்டும் புத்தகங்கள் ஏதும் சிக்கவில்லை. பாக்யராஜ் பதில்கள் மற்றும் வாஷிங்டனில் திருமணம் மட்டுமே வாங்கினேன். இல்லத்தரசி நிறைய கொள்முதல் செய்தார். மூன்றாம் சுழி வலைப்பதிவாசிரியர் அப்பாதுரையை சந்தித்தேன். புத்தகச் சந்தைக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். என் பேட்டையிலேயே தங்கியிருக்கும் அவரை அங்கேதான் சந்திக்க முடிந்தது. ஆசாமி ரொம்ப பிஸி!

டிஸ்கவரி வேடியப்பனுக்கு இந்த வருஷமும் என்னை அடையாளம் தெரியவில்லை!

டி.டி.ரங்கராஜன் ஒலித் தகடுகள் சென்ற ஆண்டு முன்னூத்திச் சில்லரைக்குக் கிடைத்தன. இந்த ஆண்டு மூன்று நான்கை கம்பைன் செய்து ஆயிரத்துக்குக் குறைவாக எதுவும் வாங்க முடியாதபடி செய்து விட்டார்கள். தப்பான பிஸினஸ் டெக்னிக்.

கிழக்கு ஸ்டால்களில் என் சிலப்பதிகாரம், கதைகளின் வழியே ஜென், தன்னாட்சி (புதியது), மௌனத்தின் அலறல் (புதியது) ஆகியவை கிடைக்கின்றன. வழக்கப்படி கிழக்கு ஸ்டாலில் கூட்டம்.

Kzakku001

எதுவுமே சரியில்லை என்று ஆட்சியை குறை சொல்லித் திரிய நாட்டில் லட்சக் கணக்கான ஆசாமிகள் இருக்கிறார்கள். அரசியல் அமைப்பில் என்ன மாதிரி மாறுதல்கள் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக, எளிமையாக விளக்கியிருப்பதுடன் சில நூதனமான சுரண்டல்களையும் விளக்கியிருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால் தனது ஸ்வராஜில். அதைத்தான் தமிழில் தன்னாட்சி என்கிற பெயரில் எழுதியிருக்கிறேன். புத்தகத்தைப் படித்த சில ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் என்னுடன் அலைபேசி பாராட்டுத் தெரிவித்தார்கள். என் மொழிபெயர்ப்பை பத்ரி சாரும் வெகுவாகப் பாராட்டினார். கெஜ்ரிவாலை விமர்சனம் செய்கிறவர்களும் (நானும் அப்படியே!) வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். விலை, ஒரு பீர் பாட்டிலை விடக் குறைவு.

My book

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்பது எப்படிப்பட்ட பேத்தல் என்பது தெரிய வேண்டுமானால் மௌனத்தின் அலறல் படியுங்கள். இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஒரு அரசியல் ரீதியான பகுப்பு என்று நினைக்கிறவர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். எத்தனை மரணம், எவ்வளவு ரத்தம், எத்தனை அனாதைகள், எவ்வளவு சொத்துக்கள் பறி போயின, எத்தனை உறவுகள் பிரிந்தன! பிரிவினையில் சம்பந்தப்பட்ட மக்களின் நேரடிப் பேட்டிகள் நிறைய இடம் பெற்றுள்ளன. மிக மிக முக்கியமான பகுதி அப்போது குழந்தைகளாக இருந்தவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மனநிலைகள்….. ஊர்வசி புட்டாலியாவின் வித்யாசமான வரலாற்று நூல்; அதைத் தமிழில் செய்தது என் பெருமை.

இரண்டுமே கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

ஓக்கே ஃபிரெண்ட்ஸ். மற்றவை என் இரண்டாவது ரவுண்டுக்குப் பிறகு..

பொங்கல் வாழ்த்துக்கள்.

Advertisements

17 comments

 1. புதுப்புத்தகங்களுக்கு நல்வரவு. இனிய பாராட்டுகள். அதென்ன ஜவஹர்லால் என்ற பெயரை ஜவர்லால் என்று போட்டு இருக்கிறார்கள் அட்டையில்.

  வடமொழி வேணாமுன்னா? அப்ப ‘ஜ’???? ஙே….

  1. துளசி மேடம், என் பேரே ஜவர்லால்தான். எங்கப்பாவே பல்லாண்டுகளுக்கு முன்னர் ஜவஹர்லாலை ஜவர்லால் ஆக்கிவிட்டார்! நியூமராலஜி! 🙂

   1. ஆஹா…. வெற்றிகளுக்குக் காரணம் நியூமராலஜிதானா:-)))ha))

    ஆங்கிலத்தில் இன்னும் ha இருக்கு haha haha (ச்சும்மா)

    இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

   2. துளசிஜி.. வெற்றின்னு சொல்லிக்க நான் இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கு! சந்தோஷம்தான் வெற்றின்னா நான் நிச்சயம் வெற்றி பெற்றவன். எப்பவுமே சந்தோஷமாக இருக்கிறேன்! 🙂

 2. உங்களது இரண்டு மொழிபெயர்ப்பு புத்தகங்களையுமே படிக்க வேண்டும். ஒன்று பழைய வரலாறு.
  இன்னொன்று அர்விந்த் கேஜ்ரிவால் அவர்களின் புத்தகம். புதிய இந்தியா பிறக்க அர்விந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை ஒளியாக இருக்கிறார். அவரது செயல் திட்டம் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன்.
  புத்தக வெளியீட்டிற்கு பாராட்டுக்கள்.

  1. ரஞ்சனிஜி.. இந்த நல்ல வாய்ப்பைத் தந்த கிழக்கு பதிப்பகத்தைத்தான் நாம் இருவருமே பாராட்ட வேண்டும்.

 3. வாழ்த்துகள்!

  8 கோடி பேர் வாழுகின்ற தமிழகத்தில், ஒரு நூலின் 1200 படிகளை விற்பனை செய்ய ஒரு நூலாசிரியரருக்கு 15 ஆண்டுகளானதாகவும், மக்கள் புத்தகங்களுக்காக செலவிடுவதில்லை, வீடுகளில் படிப்பதற்கு தனி அறை கிடையாது, நூல்களைப் படிப்பதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிப்பதில்லை, இலக்கியம் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லை, எழுதியது விற்பனையாகாத போது எழுத்தாளன் சோர்ந்து விடுகிறான் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சல்மா.

  புத்தகக் கண்காட்சி: எதற்காக?
  http://www.hooraan.blogspot.com/2013/01/blog-post.html

  1. //8 கோடி பேர் வாழுகின்ற தமிழகத்தில், ஒரு நூலின் 1200 படிகளை விற்பனை செய்ய ஒரு நூலாசிரியரருக்கு 15 ஆண்டுகளானதாகவும்// இன்று இல்லை. கிழக்கு பதிப்பகம் போன்ற பெயர் பெற்ற ஸ்தாபனத்தால் என் போன்ற சாதாரண எழுத்தாளர்கள் புத்தகங்களையே அதைக் காட்டிலும் அதிகமாக ஒரே ஆண்டில் விற்க முடிகிறது. நல்ல பிராண்ட் நேம் இருந்தால் சாத்தியம்! 🙂

 4. //நேற்று புத்தகச் சந்தையில் முதல் ரவுண்ட் அடித்தேன்.//
  கார்லயேவா?!
  //திரும்பி வரும் போது வழி தெரியாமல் திண்டாடித் தெருப் பொறுக்காமல் வர முடியாது.//
  ஒரு ஜி பி எஸ் வாங்கிடுங்க.

  //ஆதாரம் சுஸ்த் ஆகி உட்கார்ந்திருந்த எழுத்தாளர் பாரா.//
  சென்டிகிரேட் வெப்பமானி மாதிரி சொல்றீங்க.:-) அவர் என்னவோ தான் ஒரு பார(ரா)மானிங்கற மாதிரிதான் சொல்லிக்கிறார் அவரோட தளம் / சிலேட்டு ல.

  //பார்த்த வரை வாங்கத் தூண்டும் புத்தகங்கள் ஏதும் சிக்கவில்லை// //இல்லத்தரசி நிறைய கொள்முதல் செய்தார்.//
  ஏதும் உள்குத்து? 🙂

  //இந்த ஆண்டு மூன்று நான்கை கம்பைன் செய்து ஆயிரத்துக்குக் குறைவாக எதுவும் வாங்க முடியாதபடி செய்து விட்டார்கள். தப்பான பிஸினஸ் டெக்னிக்.//
  இந்த வரி உங்களோட டிபிகல் டச்!

  //கிழக்கு ஸ்டால்களில் என் சிலப்பதிகாரம், கதைகளின் வழியே ஜென், தன்னாட்சி (புதியது), மௌனத்தின் அலறல் (புதியது) ஆகியவை கிடைக்கின்றன. வழக்கப்படி கிழக்கு ஸ்டாலில் கூட்டம்.//
  வாழ்த்துக்கள் பல உங்களுக்கும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும்.

  //விலை, ஒரு பீர் பாட்டிலை விடக் குறைவு.// தமிழக வாசனை??!!

  //கெஜ்ரிவாலை விமர்சனம் செய்கிறவர்களும் (நானும் அப்படியே!)//
  ஏன் சார்? அவரும் உங்கள மாதிரியே பிரச்சினை சீர்தூக்கல் –> தீர்வு டைப் ஆள்தானே?

  //கத்தியின்றி ரத்தமின்றி ………………..குழந்தைகளாக இருந்தவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மனநிலைகள்….. //
  வரலாற்று சோகம் 😦

  //மற்றவை என் இரண்டாவது ரவுண்டுக்குப் பிறகு.. //
  வெய்ட்டிங்.

  உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

  1. யோவ்.. இரண்டாவது ரௌண்டுன்னாலே ஒரே அர்த்தம்தானா! அப்படியே இருந்தாலும் இரண்டாவது ரௌண்டில நிதானம் தவறுமா? 🙂

 5. தன்னாட்சி புத்தகம் படித்து முடித்துவிட்டேன். நல்ல மொழி நடை. கடைசி பக்கத்தில் பஞ்சாயத்தில் செய்யும் சோதனை முயற்சிகளைப் பற்றி கருத்துகளை அனுப்பவும் என்று சொல்லிவிட்டு, எந்த முகவரியுமே (ஈமெயில், அஞ்சல், தொலைபேசி எண்) தரவில்லையே. எதாவது ஸ்டிக்கர் ஒட்டித் தர ஏற்பாடு செய்யுங்களேன்.

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s