இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண டிப்ஸ்

BSNL ன் ராஜிவ் காந்தி நினைவு தொழிற்பயிற்சி மையத்தின் தலைவர் திரு. பாபு ஸ்ரீநிவாஸ் ரெயின்போ FM (101.4) இல் வேலைவாய்ப்புகள் மற்றும் அவை தொடர்பான பயிற்சிகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். மாணவர் ஒருவர் In Plant Training இல் Campus Interview வை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்தும் பயிற்சி தருமாறு விண்ணப்பம் செய்து கொண்டார். திரு. பாபு ஸ்ரீநிவாஸ் இதை உடனடியாக ஒரு ஆலோசனையாக ஏற்றுக் கொண்டார்.

எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை இது குறித்து எழுதியிருந்தார். உட்கார்ந்தவுடன் ஃபைலை நீட்டாதீர்கள், கேட்ட பிறகு கொடுங்கள்; தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லுங்கள்; கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்; அவர்கள் நிறுவனம் குறித்து உங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைக் கேளுங்கள்… என்பது மாதிரி விஷயங்கள் சொல்லியிருந்தார்.

நானும் கூட அவ்வப்போது இண்டர்வியூ கமிட்டியில் இருந்திருக்கிறேன். கேண்டிடேட்டைக் கவனிப்பதை விட இண்டர்வியூ செய்பவர்களை அதிகம் கவனிப்பேன். வந்தவனுக்கு என்ன தெரியும் அல்லது தெரிய வேண்டும் என்பதை விடத் தனக்கு என்னென்ன தெரியும் என்று காண்பித்துக் கொள்ளும் அவசரம் அவர்களிடம் தெரியும். பொதுவாக அழகன் படத்து எ ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ் ஆட்டிட்யூட் அவர்களிடம் தெரியும்.

சிங்க்ரோ ஹைவாக் வேக்யூம் பம்ப் எப்படி வேலை செய்கிறது?

ஆக்டேன் வேல்யூவை எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்?

கார்பன் ஒரு கண்டக்டரா?

என்பது மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்டு கேண்டிடேட்டின் முழியைப் பிதுங்கச் செய்து கொண்டிருப்பார்கள். அவ்வப்போது தங்கள் பாஸையும் யூனிட் ஹெட்டையும் பெருமையாக ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். இது மாதிரி ஆசாமிகளை எப்படி ஃபேஸ் செய்வது என்று டிரைனிங் கொடுப்பது அசாத்தியம். ஒரு இண்டர்வியூ பேனல் மெம்பராக எதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று என்னால் சொல்ல முடியும்.

சூயிங்-கம் மென்றபடி வருவது, சொல்வதற்கு முன்னாலேயே உட்கார்வது, கால் மேல் கால் போட்டு உட்கார்வது இதெல்லாம் இருந்தால் அவர்களின் ஆட்டிட்யூடைக் கொஞ்சம் ஆழ்ந்து செக் செய்ய ஆரம்பிப்பேன். தலை முடியை பிளீச் செய்வது, ஸ்ட்ரைட்டனிங் என்கிற பெயரில் வேற்றுக் கிரகத்து ஆசாமி போல வருவது, காரே பூரே என்று கட்டிங் செய்து கொள்வது, ஒற்றைக் காதில் கடுக்கன் என்பது போன்ற கோமாளித்தனங்கள் இருந்தால் ஆட்டிட்யூடுக்கு உடனே சைஃபர் மார்க் போட்டு விடுவேன். மேற்சொன்ன கந்தர்கோலங்களுக்கு அவர்கள் சொல்லும் பெயர் இன் திங்! என்னைப் பொறுத்தவரை இன் திங் இருந்தாலே அவன் அவுட் ஆஃப் தி திங்.

Advertisements

9 comments

 1. தனது பலத்தையும், முக்கியமாக பலவீனங்களை மறைக்காமல், தைரியமாக உண்மை சொல்பவரை தேர்ந்தெடுத்து உள்ளேன்… இப்போது தேர்ந்தெடுக்க சொல்கிறேன்…

 2. சார்… நீங்க பணிபுரிந்த industry-ல் நடப்பதை வைத்து சொல்லியிருக்கிறீர்கள். நான் ITல் பணி புரிகிறேன். இண்டர்வியூவிற்கு வரும் முன் Job Description தருவார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு தான் கேள்வி கேட்பார்கள். JDயில் இருப்பது 100% என்றால் கேள்வி கேட்பது 50% தான் இருக்கும். அதற்கே கேண்டிடேட் டான்ஸ் ஆடுவார்கள்.

 3. //இண்டர்வியூவிற்கு வரும் முன் Job Description தருவார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு தான் கேள்வி கேட்பார்கள்.//
  நீங்கள் சொல்வதற்கு நேர்மாறான பட்டறிவு எனக்கு. கடந்த சில மாதங்களாக வேறு வேலை தேடியதில், ~10 இடங்களில் தொலைபேசி நேர்காணல் செய்து நொந்து போனேன்.

  அடிப்படையே தெரியாமல் நான் திறமையாக வடிவமைத்து இயங்கும் மென்பொருள்களைக்கூட கிண்டலடிப்பது, பதில் சொல்லமுடியாதபடி கேள்வியின் அடிப்படையை மாற்றிக்கொண்டே இருப்பது என்று பலவிதமான சேட்டை செய்யும் ஆட்களை எதிர்கொண்டேன். இன்றுதான் ஒரு வேலை உறுதியாகி உள்ளது. அதனால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் இதைப்பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்..

 4. I have crossed over the days of examinations and interviews! But reading your article is a very new experience for me! Even though much earlier, I had attended some interviews before joining an additional course, the questions asked were a little bit relevant, pointing to my subject and not much fo dilly dallying with various incoherent and irrational topics! Reading this article gives a perfect insight of the irony and sarcasm a fresher has to face, for getting a job! Both amusing and pathetic, you have highlighted the incidences in such a notable manner, that one should read and get himself prepared for all the unforeseen! Education and good knowledge alone is not enough, I understand. Smart thinking and logical reasoning, to get over the worst is more essential. Very humourous and thoughtful article. Without your permission, I had shared!

 5. //சொல்வதற்கு முன்னாலேயே // இது கொஞ்சம் ஓல்ட் ஸ்டைல் என எண்ணுகிறேன். இப்ப யாரும் இதை அதிகம் எதிர்பார்ப்பது இல்லை. அதே போல் காதில் கடுக்கன் அவரவர் விருப்பம்.. இதில் கம்பெனி தலையிடுவது தவறு என எண்ணுகிறேன். அதனால் கம்பெனிக்கு பிரச்சனை இருந்தால் ஒழிய கம்பெனி தலையிடக் கூடாது

 6. சார்,
  அது என்னவோ தெரியல, இந்த பதிவோட தலைப்ப பார்த்தவுடனேயே எதாவது கமெண்ட் கண்டிப்பா போடணும்னு கை பரபரங்குது…..

  இந்த 5-10 நிமிஷத்துல என்ன, எப்படி புரியுதுங்கறது இன்னமும் ஒரு மர்மமாகவே இருக்கு. ஆனா இதுவரைக்கும் அட்டெண்ட் பண்ணதுல அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாம இண்டர்வியு த்ரு பண்ணியிருக்கேன்.

  ஒரு சில இண்டெர்வியுவில சும்மா அப்படியே பிடிச்சு பிக் அப் பண்ணி ஒன்றரை ரெண்டு மணி நேரம் ஒரு ரௌண்ட்ல போட்டு ஒரு தாளிப்பு தாளிச்சு எடுத்து விடுறாங்களே அதோட தாத்பர்யம் என்ன சார்?

  http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s