கோடைக்கு குளுகுளு கங்கை

ரிஷிகேஷில் மே மாதக் காலை இதமாக இருக்கிறது.

காலை ஐந்தரைக்கு...

காலை ஐந்தரைக்கு…

 அதிகாலையில் பதினெட்டு அல்லது இருபது டிகிரி. பிறகு மெல்ல ஏறி உச்சி வேளையில் முப்பத்தேழு டிகிரிக்கு மேல் போவதில்லை.

கங்கையில் போனதும் மளமளவென்று இறங்குகிறவர்களுக்கு அர்ஜுணா விருது சிபாரிசு செய்யலாம். உச்சி வெயிலிலும் கங்கை நீர் சிலீரென்று பதினைந்து டிகிரியில் இருக்கிறது! முழங்கால் வரை ஐந்து நிமிடம். இடுப்புக்கு பிரமோஷன் தந்து ஒரு ஐந்து நிமிடம். தண்ணீரை அள்ளி மெல்ல மெல்ல மேலே தெளித்துக் கொண்டு அப்புறம் மார்பளவு….. இதே ரீதியில் முழு முழுக்குப் போட இருபது நிமிஷம் ஆகிறது.

வருகிறவர்கள் எல்லாரும் ஆரத்தித் தெப்பம் விட்டு சதா பூவும் தொன்னையும் பிரப்பந்தட்டும் மிதந்து போன வண்ணம் இருக்கின்றன. காசியில் நான் குளிக்க முயன்ற போது பயங்கர கலீஜாக இருந்ததன் காரணம் இப்போது தெரிகிறது. ரிஷிகேஷிலும், ஹரித்வாரிலும் விடும் ஆரத்தித் தெப்பங்கள் காசியில்தான் போய் ஷண்ட் ஆகின்றன.

குப்பையெல்லாம் அடித்துக் கொண்டு போய் விட்டு கங்கை பளிங்கு போல ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஊருக்குள் போனால் கார்ப்பரேஷன் கக்கூஸ் போல இருக்கிறது. ரிஷிகேஷ் நகராட்சி வேலையே செய்வதில்லை. தெருவெல்லாம் பன்றிகள் வேறு அலைகின்றன.

தினசரி இரண்டு வேளையோ ஒரு வேளையோ தின்றால் கூடப் போதும்; கங்கையில் இரண்டு வேளை குளித்தபடி அங்கேயே வாழ்ந்து விடலாம் என்று தோன்றுகிறது. கங்கைக் குளியல் அவ்வளவு சுகம்!

ரிஷிகேஷில் என்ன பார்ப்பது என்று இணையத்தில் குறிப்பெடுத்துப் போயிருந்தேன். அந்தப் பட்டியல்படி ராம்ஜூலா, லக்‌ஷ்மண் ஜூலா, பரமார்த் நிகேதன், கீதா பவன் என்று ஒவ்வொன்றாகப் பார்த்தோம்.

ராம்ஜூலா

ராம்ஜூலா

 ராம்ஜூலா லக்‌ஷ்மண் ஜூலா என்பதெல்லாம் கங்கையின் குறுக்கே போடப்பட்டிருக்கும் பாலங்கள். எஃகுக் கயிற்றில் தொங்க விட்டிருப்பதால் ஊஞ்சல் மாதிரி ஆடுகிறது. ஆகவே காரணப் பெயர். அதில் டூ வீலர்களை வேறு அனுமதிக்கிறார்கள்……

லக்‌ஷ்மண் ஜூலா

லக்‌ஷ்மண் ஜூலா

லக்‌ஷ்மண் ஜூலாப் பகுதியில் இருக்கும் டிரயம்பகேஷ்வர் (அப்பாடா சரியாகச் சொல்லி விட்டேன்) கோயில் கொஞ்சம் விசேஷமானது. பதிமூன்று மாடிகள்! பதிமூன்றாம் மாடி வரை போவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. (தாவு என்றால் என்ன? அகராதியில் இளைப்பறுமிடம், உறைவிடம், ஒதுக்கிடம், பாய்ச்சல் என்று ஏதேதோ அர்த்தம் இருக்கிறது. குன்ஸாக இளைப்பாறுமிடம் என்று கொள்ளலாமா?) பதிமூன்றாம் மாடியிலிருந்து லக்‌ஷ்மண் ஜூலாவைப் பார்க்கிற போது சுவாரஸ்யமாக இருக்கிறது.

13 மாடி டிரயம்ப்பகேஷ்வர் கோயில்

13 மாடி டிரயம்ப்பகேஷ்வர் கோயில்

அதிக பட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் ரிஷிகேஷில் பார்க்க ஏதுமில்லை. ஹரித்வாரிலும் அனுதினமும் ஆர்பாட்டமாக நடக்கும் கங்கா ஆரத்தி தவிர பார்க்க ஏதுமில்லை. சண்டி தேவி கோயிலும் மானஸ தேவி கோயிலும் ரொம்ப விசேஷம் என்றார்கள். வயிற்றில் புளி கரைக்க கேபிள் காரில் போனோம். உச்சிக்குப் போய்ப் பார்த்தால் வரலக்‌ஷ்மி விரதத்துக்கு சொம்பில் வரைவது போல ஒரு முகம் மட்டும்தான் உம்மாச்சி!

வயிற்றில் புளி கரைக்க....

வயிற்றில் புளி கரைக்க….

அதற்கப்புறம் முஸூரி….

 ஐந்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. கெம்ப்பி நீர் வீழ்ச்சியில் குளிப்பதும் தேக்கி வைத்திருக்கும் நீரில் ஜலக்கிரீடை செய்வதும் ஒரு சுகானுபவம்.

கெம்ப்பி ஃபால்ஸின் ஒரு தோற்றம்

கெம்ப்பி ஃபால்ஸின் ஒரு தோற்றம்

போட்டிங்கில் ஏமாற்றி விட்டார்கள். கெம்ப்பி லேக் என்கிற பேரைப் பார்த்து ஊட்டி, கொடைக்கானல் ரேஞ்சில் ஒரு ஏரியை எதிர்பார்த்துப் போனால் டீ கப்பில் தண்ணீர் ஊற்றி வைத்தது மாதிரி தம்மாத்தூண்டு லேக்!

temp Lake

Advertisements

10 comments

 1. அன்பின் ஜவர்லால் – படங்கள் அத்தனையும் கண்ணைக் கவர்கின்றன – அருமை அருமை – இயல்பான நடையில் ஒவ்வொரு ப்டத்தினையும் – இடத்தினையும் அதன் பெருமைகளையும் வர்ணித்து எழுதியது நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. ஸ்ரீ த்ரியம்ப்கேஷ்வர் ஆலயம் நான் பார்க்கலை. ரிப்பேர் வேலை நடந்துக்கிட்டு இருந்துச்சு அப்போ!

  ரெண்டு நாளுக்கு மேல் பார்க்க அங்கே ஒன்னுமில்லைன்னாலும் கங்கையைப் பார்த்தால் மட்டும் அலுக்கவே இல்லை.!
  இன்னொருமுறை போகணும் என்ற ஆவல் இன்னுமிருக்கு.

  ஆஞ்சநேயரின் அம்மாவைப் பார்க்கலையா?

  1. பார்த்தோம் துளசிஜி.. மானசதேவி, சண்டிதேவி பார்க்கிறப்போ அவங்களையும் தரிசனம் பண்ணோம். இந்தியாவையும் வெளிநாட்டையும் ஒரு ரௌண்ட் அடிக்கிறதிலே நீங்க என்னைக் காட்டிலும் சீனியர் மட்டுமில்லை, என்னை விட எக்ஸ்டென்ஸிவா பார்த்திருக்கீங்க! 🙂

 3. அன்புள்ள ஜவஹர்,
  அப்புறமான பதிவு. //உச்சி வெயிலிலும் கங்கை நீர் சிலீரென்று பதினைந்து டிகிரியில் இருக்கிறது! முழங்கால் வரை ஐந்து நிமிடம். இடுப்புக்கு பிரமோஷன் தந்து ஒரு ஐந்து நிமிடம். தண்ணீரை அள்ளி மெல்ல மெல்ல மேலே தெளித்துக் கொண்டு அப்புறம் மார்பளவு….. இதே ரீதியில் முழு முழுக்குப் போட இருபது நிமிஷம் ஆகிறது.// என்ற வரிகளைப் படிக்கும் போதே கங்கையில் இறங்கியதைப் போல கீழிருந்து மேலாக உடல் குளிர்கிறது. நீங்கள் ஏன் இப்போது அடிக்கடி எழுதுவதில்லை? தயவு செய்து எழுதுங்கள். உங்கள் எழுத்துக்கள் எனக்கு (எங்களுக்கு) மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
  -கே.கே.மகேஷ்

 4. உங்களுடைய இந்தப் பக்கத்தை தலை முழுகிவிட்டீர்களோ என்று நினைத்தேன்…. கங்கையில் முங்கப் போயிருக்கிறீர்கள் என்று இப்பத்தான் தெரிந்தது…. குளிச்சுட்டு, மடியா, மடி நிறைய கொண்டு வந்திருக்கறதை, மடை திறந்த வெள்ளம் பொல் கொட்டுங்கோ…..

 5. வணக்கம்…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_5.html) சென்று பார்க்கவும்… நன்றி…

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s