லாஜிக்கே புரியல்லை

என்ன லாஜிக் என்றே புரியவில்லை. ஆனால் ஒர்க் ஔட் ஆகி விட்டது!

 நரசிம்மன் மகா கேடி. அது மட்டும் புரிந்தது. எவ்வளவு சிக்கலான பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு அவனிடம் தீர்வு இருக்கும். நேற்று அவன் சொல்லும் போது எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. என்ன லாஜிக் என்று கேட்டாலும் சொல்ல மாட்டேனென்று சொல்லி விட்டான்.

 “நான் சொன்னபடி செய். பிரமோஷன் உனக்குத்தான்” என்றான். ‘பரிசு உனக்கே, வெற்றியுடன் வா’ என்று தருமியிடம் சொல்லும் சிவபெருமான் போல ஒலித்தான்.

 “எப்படின்னு சொல்லேன், ஒரே குழப்பமா இருக்கு”

 “அதை இப்ப சொன்னேன்னா இன்னும் அதிகக் குழப்பமாயிடும். நாளைக்கு வெற்றியோட வா, சொல்றேன்”

 அவன் பிடித்தால் பிடித்த பிடிதான். மசியவே மாட்டான். சரிதான் அவன் சொன்னதைச் செய்துதான் பார்ப்போமே என்று வந்து விட்டேன். ஜெயித்தும் விட்டேன். ஆனால் இன்னமும் எப்படி என்று புரியவில்லை.

 விஷயம் இதுதான்.

 எனக்கு பிரமோஷன் வர வேண்டிய வருஷம் இது. துரதிஷ்ட வசமாக ஒரே போஸ்ட்டுக்கு ஐந்து பேர் போட்டி. எல்லாருக்கும் ஒரே  படிப்பு, ஒரே அளவு அனுபவம், எல்லாருடைய கேரியர் ரெகார்டும் ஒரே மாதிரி இருக்கிறது. எங்கள் மேனேஜருக்கும் இது மகா தலைவேதனை பிடித்த வேலை. இன்னாருக்குத்தான் தகுதி என்று அவரால் தெளிவாக முடிவு செய்யவே முடியாது. என்ன நினைத்தாரோ தெரியாது. ஐந்து பேரையும் அழைத்தார்.

 “உங்க எல்லாருக்குமே சமமான எலிஜிபிலிட்டி இருக்கு. ஆனா உங்கள்ள ஒருத்தரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். நீங்களே பேசி முடிவு பண்ணி ஒரு ஆளை ரெக்கமண்ட் பண்ண முடியுமா?” என்று கேட்டார்.

 எங்களில் ஒருத்தர் கூடப் பேசவில்லை.

 “தெரியும். உங்களால் அது முடியாது. ஆனாலும் நீங்களே தேர்ந்தெடுக்கிற ஆளுக்குத்தான் பிரமோஷன் தரப் போறேன்”

 என்ன ஒரு முரணான ஸ்டேட்மெண்ட்!

 ’உங்களால் ஒருத்தரை ரெக்கம்மெண்ட் பண்ண முடியாது, ஆனா  நீங்களே தேர்ந்தெடுக்கிற  ஒருத்தருக்குத்தான் பிரமோஷன் தரப் போறேன்’. குழப்பத்தில் அவருக்குப் பைத்தியம் கிய்த்தியம் பிடித்து விட்டதோ என்றுதான் நினைத்தேன்.

 “என்ன பண்ணணும்ன்னு சொல்றேன். நீங்க ஒவ்வொருத்தரும் உங்க அபிப்ராயப்படி உங்க அஞ்சு பேரையும் தகுதி அடிப்படைல இறங்கு வரிசைல ஒரு பட்டியலா எழுதி எனக்குத் தரணும். நம்பர் ஒன் : மிக அதிகத் தகுதி வாய்ந்தவர். நம்பர் டூ : ஒருக்கால் முதல் ஆளுக்குத் தர முடியல்லைன்னா அடுத்த பிரியாரிட்டி யாருக்கோ அவர். நம்பர் த்ரீ : இவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா அடுத்தது யாருக்கு….. இந்த மாதிரி. புரியுதா?”

 என்ன சொல்கிறார் என்பது புரிந்தது. ஏன் என்பது புரியவில்லை.

 “சார், இதை வச்சி எப்படி…..” என்று ஆரம்பித்ததுமே,

 “நோ.. நாட் நௌ” என்று வெட்டினார்.

 “மெத்தேட்ல டிஸ்ப்யூட் இருந்தா என்ன சார் பண்றது?”

 “டிஸ்ப்யூட் இருந்தா அப்புறம் சொல்றேன். சொன்னா நிச்சயம் நீங்க யாரும் லாஜிக்கலா மறுக்க முடியாது. அது ஒண்ணுதான் வழி. நாளைக்குக் காலையில உங்க லிஸ்ட்கள் எனக்கு வந்துடணும். பிரமோஷன் லெட்டர் ரெடி. உங்க லிஸ்ட்கள் வந்ததும் பேரை மட்டும் ஃபில் அப் பண்ணி உரியவர் கிட்டே குடுத்துடுவேன்”

 யாருக்குமே திருப்தியில்லை. கையைப் பிசைந்து கொண்டு நின்றோம்.

 “உங்க சாய்ஸுக்கு விடணும்ன்னுதான் இந்த மெத்தேட். இஷ்டமில்லைன்னா சொல்லுங்க, நானே ஒரு ஆளை செலக்ட் பண்ணிடறேன். அப்புறம் வருத்தப் படக் கூடாது”

 இப்படிச் சொல்லும் போது என்ன பண்ணுவது? பார்த்து விடுவோம் நம் அதிர்ஷ்டத்தை என்று ஒப்புக் கொண்டோம். நேராக நரஸிம்மனிடம்தான் போனேன். நரஸிம்மன்  ஒரு மேனேஜ்மெண்ட் கன்ஸல்டண்ட். எவ்வளவு சிக்கலான மேனேஜ்மெண்ட் பிரச்சினைக்கும் தீர்வு சொல்லி விடுவான். விஷயத்தைச் சொன்னதும் கொஞ்ச நேரம் யோசித்தான்.

 “உன் லிஸ்ட் ரெடியா?” என்றான்.

 “இல்லையே இன்னும்?”

 “உன் பேரை எத்தனாவதா போடப் போறே?”

 “லூஸா நீ? ஃபர்ஸ்ட் எழுதப் போறது என் பேர்தான்”

 “ஒர்க் ஔட் ஆகாது”

 “பின்னே எத்தனாவதா என் பேரைப் போடணும்? அஞ்சாவதா? ஆஹா தியாகின்னு எனக்குத் தூக்கிக் குடுத்துடுவாங்களா பிரமோஷனை?”

 “செக்கண்ட் பிளேஸில் உன் பேரைப் போடு”

 “என்ன உளர்ரே?”

 “நமக்குப் புரியாததெல்லாம் உளறல்ங்கிற உன் ஐடியாவை முதல்ல மாத்திக்க”

 “சரி, எனக்குப் புரியல்லை; சொல்லு”

 அதற்கப்புறம் நடந்ததை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன். இப்போது அவனைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன். பார்த்ததுமே,

 “கங்கிராஜுலேஷன்ஸ்” என்றான்.

 “எப்பிட்றா?” என்றேன் தாங்க முடியாமல்.

 “சிம்பிள் மை டியர் வாட்ஸன்” என்றபடி அமர்த்தலாக சிகரட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டான்.

 (சிகரட் குடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது என்று சப் டைட்டில் போட நேரமில்லை)

 “சொல்லு”

 “நாம எடுத்தது ஒரு ரிஸ்க்தான். ஆனா கேல்குலேட்டட் ரிஸ்க். ஜெயிக்க வாய்ப்பிருக்கிற ரிஸ்க்”

 “அதான் ஜெயிச்சிட்டமே, இன்னும் ஏன் கன்ஸல்டண்ட் மாதிரி பேசிகிட்டு இருக்கே. விஷயத்தைச் சொல்லு”

 “ஒருக்கால் உன்னை நம்பர் ஒன்னா போட்டிருந்தா யாரை நம்பர் டூவா போட்டிருப்பே?”

 “மதுவை”

 “ஏன்?”

 “தப்பித் தவறி எனக்குக் கிடைக்கல்லைன்னா அவனைத்தான் என்னால பாஸா ஏத்துக்க முடியும்”

 “யு காட் தி பாயிண்ட். ஒவ்வொருத்தரும் யாரை செக்கண்ட் பிளேஸில்  போடறாங்களோ அவங்களை பாஸா ஏத்துக்கத் தயாரா இருக்காங்கன்னு அர்த்தம். சரிதானே?”

 “சரிதான்”

 “உன்னைத் தவிர மீதி நாலு  பேர்ல குறைஞ்ச பட்சம் இரண்டு பேர் உன்னை பாஸா ஏத்துக்கிற மைண்ட் செட்ல இருப்பாங்களா?”

 “கண்டிப்பா”

 “அப்ப நீயும் உன் பேரை செக்கண்டா போட்டா மூணு ஓட்டு கிடைக்கும் உனக்கு. சரிதானே?”

 “சரிதான்”

 “அதான் நடந்திருக்கு. அஞ்சுல மூணு ஓட்டு கிடைச்சிருக்கு உனக்கு”

Advertisements

25 comments

 1. அன்பின் ஜவர்லால் – நல்ல டெக்னிக் – ஆக பதவி உயர்வு கிடைத்து விட்டது – பலே பலே ! – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

   1. அன்பின் ஜவஹர் – ஆக மொத்தம் கடவுள் தான் கை கொடுத்திருக்கிறார் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. பொதுவா பிரச்சனை பண்ணுகிறவர்கிட்டேயே அதை தீர்க்கும் பொறுப்பைத் தரச்சொல்வர். உ.ம் திருடனையே காவலாளியாக நியமிப்பது!
  இந்த கதையில் பிரச்சனைக்கே பிரச்சனையாயிடுச்சு! ஸோ, பிரச்சனைக்கு கிடைத்தது பொருப்பு!
  சரிதானே?

 3. இப்படி கூட நடக்குதா நாட்டுல. ஐடியா நல்ல இருக்கு நீங்களே மண்டயபிசிகொங்க. அப்படின்னு உடலாம்.

 4. வணக்கம்…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_9.html) சென்று பார்க்கவும்… நன்றி…

எதுவா இருந்தாலும் எழுதுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s